18/3/13

ராஜம்மாவின் குதிரை


கனவுகள் காணும் மனிதர்கள் அதிகம் நிறைந்திருக்கும் இடங்களில் குதிரைபந்தய மைதானமும் ஒன்று. தான் தேர்ந்தெடுத்த குதிரை ஜெயிக்க, பணம்கட்டியவர்கள், தங்கள் கணிப்புகள் சரியாக இருக்கவேண்டுமென்று புக்கிகள், தன் திறமையை பதிவுசெய்ய துடிக்கும் ஜாக்கிகள், தங்கள் குதிரை முதலில் வரும் கெளரவத்தை பெற குதிரைகளின் உரிமையாளர்கள் என பலரும் தங்கள் ஆசைகளை கனவாக கண்டுகொண்டிருக்கும் இடம் குதிரை பந்தைய மைதானம்.  இவைகளிலிருந்து மாறுபட்டு அங்கே ஒரு பெண  மாறுதலான ஒரு கனவை கண்டுகொண்டிருந்தார். ஒரு ரேஸ் குதிரைக்கு உரிமையளாரக வேண்டும் என்பதே அது.
 10 ஆண்டுகளுக்கு முன்னால் பங்களூரு ரேஸ்கிளப்பில் குதிரை பந்தைய  ”பெட்” டிக்கெட்கள் விற்கும் கவுண்ட்டரில் டிக்கெட் விற்கும் பணியில் சேர்ந்தவர் ராஜம்மா. நிரந்திரமில்லாத அந்த பணியில் வேலை செய்த நாட்களில் நாளனொன்ருக்கு 50 ரூபாய் சம்பளம்.. அதே ரேஸ்கிளப்பில் கால்நடை மருத்துவ பிரிவில் பணியாற்றிய வெங்கடேஷுடன் திருமணம் இரண்டு குழந்தைகள் என வாழ்க்கையுடன் தொடர்ந்து கொண்டிருந்தது இவரது கனவு. குதிரை ரேஸ்களில் சிலர் பெரும்பணம் சம்பாதிப்பதும் பலர் பணம் இழப்பதையும் தினசரி கண்டுவந்த ராஜம்மா கவனித்தஒரு விஷயம். எல்லா ரேஸ்களிலும் எதாவது ஒரு அளவில் பணம் சம்பாதிப்பது குதிரைகளின் சொந்த காரர்கள்மட்டுமே என்பது. இது அவருக்கு ஒரு குதிரையை சொந்தமாக வாங்க வேண்டுமென்ற எண்ணத்தை தூண்டியது ரேஸ்குதிரைகள் என்பது மிக விலையுயர்ந்தது, வாங்குவது அவ்வளவு எளிதல்லை என்பது அவருக்கு தெரியும். ஆனாலும் துணிவுடன் அதைப்பற்றி கனவுகள்  காண ஆரம்பித்தார். ஆசையை கேட்ட பலர்  -குடும்பத்தினர் உள்பட  சொன்னது “பைத்தியகாரி” லட்சாதிபதிகள் கூட யோசிக்க தயங்கும் விஷயம் இது. உனக்கு கனவில் மட்டுமே சாத்தியம் என சொன்னவர்கள் தான் அதிகம். ராஜம்மா மனம் தளரவில்லை தன் லட்சிய கனவை நனவாக்கும் திட்டங்களில் இறங்கினார். குதிரை வாங்க தேவையான பணத்தை சேர்க்க இந்த டிக்கெட் கவுண்ட்டர் வேலை உதவாது எனபதால் ஒரு சொந்த தொழில் செய்ய திட்டமிட்டு தன்னை தயாரித்து கொண்டார்.கிராமபெண்ணான நானும் உழைப்பினால் ஒரு பேஷனான நகர பெண்ணாகி சாதிக்க முடியம் என நம்பினேன். என்று சொல்லும் இவர்  இருந்த சொற்ப சேமிப்பில் ஒராண்டு பியூட்டிஷியன் கோர்ஸ் படித்து பட்டயம் வாங்கிய பின்னர் கடன் வாங்கி ஒரு பார்லரை துவக்கி சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். கைகள் கஸ்டமரை அழகுபடுத்திகொண்டிருந்தாலும் கண்களில் தன் சொந்த குதிரை ரேஸில் ஒடும் கனவுகாட்சிகள் தான் ஒடிக்கொண்டிருந்தது. ஆறு ஆண்டில் இவர் சேமித்த பணம் 3 லட்சம். ”மிக கட்டுமையான சாவலாக இருந்த விஷயம் இது. பார்லரில் ஒரே மாதரியான நிரந்த வருமானமில்லை சிலமாதங்களில் கடன் தவனையை கட்ட கூட தவறியிருக்கிறேன் ஆனால் லாபமாக கிடைத்த ஒவ்வொரு ரூபாயையும் குதிரை வாங்க சேமித்தேன்” என்று சொல்லும் இவர் இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆகுமோ என எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் சதீஷ் என்ற  குதிரை பயிற்சியாளார் தன் குதிரையின் மதிப்பில் கால் பங்கை விற்க போகும் தகவல்  கிடைத்தது. ரேஸ்குதிரைகள் மிக விலையுள்ளதாக இருப்பதால் அவற்றின் உரிமையை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் பங்கை மட்டும் மற்றவர்களுக்கு விற்கலாம். தனி உரிமையாளர்களும் ஒரு பகுதி பங்கை விற்று  பணமாக்கி கொள்ளாலாம். இது ரேஸ்கிளப்பின் விதி முறைகளுக்கு உட்பட்டது அந்த பயிற்சியாளாரை அறிமுகமில்லாதால் தனக்கு தெரிந்த ஒரு குதிரையின் சொந்த காரரின் உதவியுடன் சதீஷிடம் தனக்கு அந்த பங்கை தனக்கு தரும்படி கேட்டார் ராஜம்மா. யாராவது மற்றொரு ரேஸ்கிளப் மெம்பர் பங்கை விலைக்கு கேட்பதை எதிர்பாத்துகொண்டிருந்த சதிஷ் இந்த சதாரண பெண்ணின் வேண்டுகோளினால் திகைத்துபோனார். முடியாது என மறுத்தும் விட்டார். காரணம் சமூக அந்தஸ்த்து இல்லை. கஷட்டபட்டு சேமித்த தன் முழுசேமிப்பையும்  இந்த பெண் இதில் மூதலீடு செய்து விட்ட பின் குதிரை அதை சம்பாதித்து கொடுக்க முடியாவிட்டால் தன் அத்தனை சேமிப்பை இழக்கும் ஆபத்தான நிலைக்கு தள்ளபட்டுவிடுவார் என்பதால். ஆனால் சொந்த குதிரை கனவால் துரத்தபட்டு கொண்டிருந்த ராஜம்மா நம்பிக்கையுடன் தினசரி சதீஷின் குதிரை லாயத்திற்கு வந்து காத்திருந்து அவரை சந்தித்து கேட்டுகொண்டே இருந்தார். தளராத தன்னமிக்கை மிக்க இந்த பெண்ணின் வேண்டுகோள் அவர் மனதை மாற்றியது. குதிரையின் மதிப்பில் கால்பங்கை செலுத்தி  பணக்காரர்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் பங்களூர் ரேஸ் கிளப்பின் குதிரைகள் சொந்தகார்கள் பட்டியைலில் இடம் பெற்றறார் ராஜம்மா.  

             
அதிவேக புயல் (super storm) என்ற அந்த அழகான செம்பழுப்பு வண்ண குதிரை ராஜம்மாவின் ராசியினாலோ என்னவோ பங்கொண்ட முதல் பந்தையத்திலேயே பட்டையை கிளப்பிற்று. மிக ஸ்டைலாக முதலில் வந்து நின்றது. தொடர்ந்து குதிரைரேஸ்களின்மிககெளரமாக கருதப்படும் கவர்னர் கப் ரேஸில் முதலில் வந்துஜெயித்தது. தொடர்ந்து பங்களூர், மைசூர் டெர்பிகளிலும் இரண்டாவது இடத்தில் வென்றது. கடந்த மாதம் மும்பாயில் இந்தியாவில் மிகச்சிறந்த குதிரைகள் மட்டுமே பங்கேற்ற இந்தியா டெர்பி பந்தயத்தில் முதலிடம் பெற்று புதிய சாதனையை படைத்திருக்கிறது. அந்த ரேசினால் கிடைத்த பரிசுப்பணம் 1.8 கோடிரூபாய்கள். பல குதிரைகள் வைத்திருக்கும் விஜய் மல்லையா இந்தியா டெர்பியில் பரிசு பெற 5 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது.  பலகுதிரை உரிமையாளாருக்கு இது இன்னும் கைகெட்டாத கனவு. ராஜம்மாவின் முதல் குதிரை இதை சாதித்திருக்கிறது.
ஒவ்வோரு ரேசுக்குபின்னரும் தன் குதிரைக்கு திருஷ்டி கழித்து பூஜை செய்யும் ராஜம்மா ”வெற்றி என் தலைக்குள் போய்விடகூடாது என்பதில் கவனமாகயிருக்கிறேன் ரேஸ்வெறியினால் அழிந்த குடுபங்களையும் எனக்கு தெரியும் சில நாட்கள் இடைவெளிக்கு பின்னர் முடிந்தால் இன்னும் ஒரு குதிரையில் முதலீடு செய்வேன். என் குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்கு தேவையான தை சம்மாதித்த பின் விலகிவிடுவேன்” என்கிறார்.
கனவு காண்பவர்களின் ஆசைகள் குதிரைகளானால் எந்த உயரத்திலும் பறக்கலாம் எனபது ஆங்கிலத்தில் பகற்கனவு காண்பவர்களை பற்றி கிண்டலாக சொல்லபடும் வாசகம். ஆனால் இதை உண்மையாகவும் செய்ய முடியம் என்று காட்டியிருப்பவர் ராஜம்மா.                                                          

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்