14/3/13

”மாத்தி யோசித்த” ஒரு மருத்துவர்


தெளிவான தொலைநோக்கும், அந்த இலக்கை அடைய செம்மையான திட்டமிடலும் வெற்றிவாயிலுக்கு அழைத்துசெல்லும் பாதைகள் என்பது பெரிய நிறுவனங்களின் சாதனையாளார்களின் வாழ்க்கை நமக்கு சொல்லும்பாடம். ஆனால் இந்திய மருத்துவதுறையில் புதிய பாதைகளை அறிமுகபடுத்தி அந்த துறையின் முகத்தையையே மாற்றி அமைத்திருப்பவர்  டாக்டர் பிரதாப் ரெட்டி.  ஒரு மருத்துவ மனை எல்லா பிரிவுகளுடனும் வசதிகளுடன் இயங்குவது என்பது அரசுத்துறை மருத்துவ மனைகள்  அல்லது மதசார்புதொண்டு நிருவனங்கள் மட்டுமே  என்று நீண்ட நாட்கள் நிலவி வந்த  வந்த நிலையை மாற்றி தனியார் கார்பெர்ட் மருத்துவமனைகள் என்ற புதிய பாதையை இந்த தேசத்திற்கு அறிமுகபடுத்தியவர்  தமிழ்நாட்டை சேர்ந்த இந்த டாக்டர்.
30 ஆண்டுகளுக்கு  முன் சென்னையில்  பலவிசேஷ சிகிச்சை பிரிவுகளுடன் துவங்கிய ஒரு அப்பலோ மருத்துவமனை இன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 22 நகரங்களில் 54 மருத்துவமனைகள்,1600 பார்மசிகள்,60 கிளினிக்கள் 11 நர்சிங் கல்லூரிகள், 1000கோடி பிஸினஸ், 65000 பணியாளார்கள் என மிகபிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது.  “இன்றைக்கு  கார்பரேட் மருத்துவமனைகள்  என்பது ஆச்சரியபடக்கூடிய  ஒரு விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் இந்தமாதிரி ஒரு யோசனையை நான் சொன்னபோது எச்சரித்தவர்களும், ஏளனம் செய்தவர்களும் தான் அதிகம்.” என்று சொல்லுகிறார் தான் கடந்துவந்த பாதையில் பல சவால்களையும்,திருப்புமுனைகளையும் சந்திருக்கும்  டாக்டர் பிராதாப் ரெட்டி..
அனைத்து மக்களுக்கும் நல்ல மருத்துவவசதிகள் என்பது அரசின் கடமை. அதை தனியார் வசம் தந்தது தவறு என வாதிடுவர்களும் கூட தயங்காமல் ஒப்புகொள்ளும் ஒருவிஷயம் அப்போலோ பிராதப் ரெட்டி அடிகோலிய பாதையில் தான் இன்று நாட்டில் பல கார்பரேட் மருத்துவமனைகள் தோன்றி  நடுத்தர மக்களின்  மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்திருப்பதையும்  வெளி நாடுகளிலிருந்து கூட சிகிச்சை பெற இந்தியா வரும் அளவிற்கு தனியார் மருத்துவ மனைகளில் சிகைச்சைகளின் தரம் உயர்ந்திருக்கிறது என்பது. 
அரசாங்க மருத்துவமனைபோல எல்லா வசதிகளுடன்  ஒரு தனியார் மருத்துவமனை என்பதை நினைத்துகூட பார்க்கமுடியாத சுழலில், 30 ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகையும்,பிரச்ச்னைகளும் பெருகிவரும்  கட்டத்தில் ,அரசாங்காத்தினால் மட்டுமே மக்களின் மருத்துவ தேவைகளை  முழுமையாக பூர்த்தி செய்துவிட முடியாது என்பதால் கொள்கை மாற்றத்தின் அவசியத்தை புரிய வைக்க அரசுடன், இதற்கு வழங்கும் கடன்கள் பாதுகாப்பானாது என்று கடன்உதவி செய்யவைக்க  வங்கிகளுடன்,  வெளிநாட்டில் கிடைக்கும் அளவிற்கு நல்ல சிகிச்சை கிடைக்குமா என்று சந்தேகபட்ட  நோயாளிகளுடன் என பல முனைகளில் பல விதமாக போராட வேண்டியிருந்தது  என சொல்லும்  டாக்டர் பிரதாப் ரெட்டி, தங்கள் மருத்துவ குழும வளர்ச்சியினால்  வெளிநாட்டில் பணிசெய்துகொண்டிருந்த பல திறமையான டாக்டர்கள் இந்தியா திரும்பியிருக்கின்றனர். என்பதை சுட்டிகாடுகிறார். சாதனைகளை செய்ய துவங்க வயது தடையில்லை என்பதையும் நிருபித்தவர் இவர். 70களின் துவக்கத்திலேயே  அமெரிக்கா சென்று பெரிய மருத்துவமனைகளில் பணி புரிந்து ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையின் தலமை பொறுப்பில் இருந்து பல ஆயிரம் டாலர்கள் சமபளம் பெற்றுகொண்டிருந்த இதய நோய்சிகிச்சை ஸ்பெஷலிஸ்ட் பிராதாப்ரெட்டி  1982ல் தமிழ் நாட்டுக்கு திரும்பி  சென்னையில் அப்பலோவை துவக்கியபோது வயது 50. வசதியான ஒய்வுகால வாழ்க்கையை திட்டமிட்டிருக்க வேண்டிய இவர்  இந்திய மருத்துவதுறையில் புரட்சிகரமான மாறுதல்கள் பற்றி சிந்தித்திருக்கிறார். சீரிய முறையில் திட்டமிட்டு கடுமையாக உழைத்திருக்கிறார். 1983ல் சென்னையில் முதல் மருத்துமனையை திறந்து வைக்க அன்றைய குடியரசு தலைவர் ஒதுக்கியிருந்த நேரம் 20 நிமிடங்கள். ஆனால் நிறுவபட்டிருந்த வசதிகளை  நான் விளக்கி மருத்துவமனைமுழுவதையும் சுற்றிகாட்டிய போது இரண்டுமணிநேரம் இருந்து பலகேள்விகள் கேட்தை இப்போதும் நினைகூறும் இந்த 80 வயது இளைஞரின் சுறுசுறுப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. 1000கோடிகளுக்குமேல் பிசினஸ் செய்யும் குழுமத்தின் தலவராக இருந்தாலும்  சென்னையில் இருக்கும் நாட்களில் காலை 9 மணிக்கு மருத்தமனையிலிருக்கிறார். அவசியமான போது ஆப்ரேஷன்களிலும் பங்கேற்கிறார்.
இந்திய மருத்துவ துறையில் தனியார்பங்களிப்பு  பெருமளவில் வளரவும் அதற்கான நடைமுறைகள் சீராக அமையவும் இவர் ஆற்றிய பணிகளுக்காக 2010ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது பெற்றவர்.  இவரது 4 மகள் களும் அப்போலா  மருத்துவ குழுமத்தின் சிலபிரிவுகளை நிர்வகிக்கிறார்கள். 20 ஆண்டுகளாக பணிசெய்துகொண்டிருக்கிறேன் ஆனாலும் சில சமயங்களில் தந்தையுடைய வேகத்திற்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஈடு கொடுக்க முடிவதில்லை என்கிறார் திருமதி பீரித்தி ரெட்டி. இவர் அப்போலா குழுமத்தின் நிர்வாக இயக்குனர்.  குடும்பத்தின் 3வது தலைமுறையும் இப்போது குழுமத்தின் பணிகளில் பங்கேற்கத்வங்கியிருக்கிறது.. . ஒருநாள் 5 நிமிடம் லேட்டானல் கூட  தாத்தாவின் நேரந்தவறாமை நினைவில் வந்து  குற்ற உணர்வு மேலிடுகிறது என்கிறார் பிராதப்ரெட்டியின் பேத்தி உபஸானா. 
குழுமத்தின் ஹைதிராபாத் பிரிவில் பணியாற்றும் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம்சரண் தேஜாவை (நடிகர் சீரஞ்ஜிவி யின் மகன்)  திருமணம் செய்துகொண்டிருப்பவர். கார்ப்ரேட் மருத்துவமனைகளின் கட்டணங்கள் நடுத்தரமக்கள் சமாளிக்க முடியாத  அளவில் அதிகமாகவே யிருக்கிறதே ஏன்? என்ற நம் கேள்விக்கு அடைப்படை கட்டுமான செலவீனங்கள, சர்வதேச தரம்,தொடர்ந்து உயரும் மருந்துகளின், உபகரணங்களின் விலைகள் போன்றவைகள் தான் காரணம். ஆனல் இன்னும் சில ஆண்டுகளில் இம்மாதிரி கார்பேரேட் மருத்துவமனைகள் அதிக அளவில் பெருகும்போதும் இன்ஷ்யூரன்ஸ் வசதிகள் அதிகரிக்கும்போதும் மருத்துவ செலவுகள் குறையும் வாய்ப்புகள் அதிகம் எனகிறார். இந்திய மருத்துவ துறையை புதிய பாதையில் பயணிக்க வைத்திருக்கும்  இந்த டாக்டர்.

kalaki 17/03/13

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்