16/6/13

இன்னும் ஒரு காந்தியாக..

குஜராத் பயணம் 1

     
அஹமதாபாத்திலிருந்து காரில்போய் பஞ்ச துவாரக்களையும் அதில் ஒன்று ராஜ்ஸ்த்தான் எல்லயில் இருப்பதால் அதனருகிலிருக்கும் புஷ்கர் பார்க்க  7 நாள் பயண திட்டம். துவாரகா அருகில் இருக்கும் சோமநாத் கோவிலை பார்க்க போகும் 7 மணிநேர பயனத்திற்கு முன் அஹமதாபாத்தில் சில மணிகளை செலவிட்டு போகலாம் என்று முதலில் போன இடம் அண்ணல் காந்தி அடிகள் வாழ்ந்த சபர்மதி சேவாஸ்ரம். அந்த இடத்தை மீயூசியமாக மாற்றியிருக்கிறார்கள்.

ஓடுவேயந்த தாழ்வாரம் வடிவில்  கான்கீட்டில் வடிவமைக்கபட்ட 6 பட்டை வடிவ கூடம். இயற்கையான வெளிச்சம் வரும்படியான சுழலில் நிறைய படங்கள் காந்தியின் இந்த தேசத்தின் கதையை சொல்லுகிறது. நிறைய நேரமும், பொறுமையும் சரித்திர நேசிக்கும் தன்மையும் வேண்டும். சில படங்கள் இதுவரை நாம் எங்குமே பார்க்காதது. காந்தியின், அவர்பற்றிய புத்தகங்கள் நிறைந்த நூலகம் இருக்கிறது. ஆராய்சியளர்களுக்கு மட்டும்தான் அனுமதியாம்.
வெளியே பெரிய தோட்டம். காந்திகாலத்தில் பெரிய திடலாக இருந்திருக்கும் போல. ஆஸ்ரமத்தை ஒட்டிய படி சமர்மதி நதி போகிறது. இப்போது அதை லண்டன் தேம்ஸ் அளவிற்கு அழகுபடுத்த  முதல்வர் மோடி திட்டமிட்டிருக்கும் வேலைகள் நடப்பதால் நதி எங்கியோ திருப்ப பட்டு காய்ந்து கிடக்கிறது. அதை நோக்கியிருக்கும் பிராத்தனை திடல். இது காந்தியின் வாழக்கையில் முக்கிய இடம். பல விஷயங்கள் அறிவிக்கபட்ட இடம் என்ற குறிப்பை நிறுத்தியிருக்கிறர்கள். அவர் வாழ்ந்த ஹிருத்ய குஞ் வீட்டை பார்த்தவுடன் அதை முதன்முதலில் பார்த்த ஆட்டன்ப்ரோவின் காந்தி படம் நினைவிற்கு வந்தது.உள்ளே பார்த்தபோது இந்த சின்ன இடத்திலிருந்தா இந்த மனிதன் உலகத்தையே கவனிக்க செய்தார் என ஆச்சரியமாக இருந்தது. நுழையுமிட்த்தில் ஒருவர் ராட்டையில் நூல் நூற்றுகொண்டிருந்தார். ஸ்ரீவில்லிப்தூர் வீட்டில் என் தாத்தா டாக்டர் நாராயண அய்யர் தினமும் நூற்று அந்த நூலை கதர் கடையில் கொடுத்து கதர் துணி வாங்கி அதை தானே சட்டையாக தைத்துபோட்டுகொள்வது நினைவலைகளாக தொட்டுபோனது. வெளியே
சற்று தள்ளி வினோபாவே வாழந்த இடத்தை  பார்த்த்தும் ஒரு கணம் மூச்சே நின்றுவிட்டது. எவ்வளவு எளிமையான வாழ்க்கையை நமது தலைவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்?.
ஓவ்வொரு இந்தியனும் இதை பார்க்கவேண்டும் தன் குழந்தைகளுக்கு காட்டவேண்டும் என தோன்றுகிறது. பணம்கொட்டும் குஜராத் மாநிலம் இதை இன்னும் வெளிநாடுகளில் இருக்கும் நினைவுதலங்கள் போல சிறப்பாக அமைக்கலாம். ஒலி ஓளிகாட்சி,காதில் மாட்டிக்கொள்ளும் வசதியுடன் விளக்க உரை தரும் சிடிபேளையர்கள், கதைகள் சொல்லும் கைடுகள் என நிறைய செய்யலாம். காந்தி சம்பந்த பட்ட சினிமாபடங்களை காட்டும் காட்சிகூடம் அமைக்கலாம். காந்தியை பிடிக்காத பிஜேபிகாரகள் செய்யாவிட்டால் கூட   ஒரு காந்தியாக வரப்போகும் ராகுல் காந்தியாவது செய்யவாரா?செய்ய வேண்டுமம்
அஹமதபாத்தை ரொம்பவும்  மாற்றிகொண்டிருக்கிறார்கள்.பஸ்க்கு தனிபாதை-டிராக்,

நகரின் நடுவே ஒடும் நதியை அழகாக்குவது, பரோடாவை இணக்க எக்ஸ்பிரஸ்வே எல்லாம். இதில் கார்களுக்கும் பஸ்களுக்கும் மட்டுமே அனுமதி. மீனிமம் ஸ்பீடு 100கிமீ.ரோடில் நடந்தால் 1000 ருபாய் பைன் அல்லது ஜெயில். அஹமதாபாத்திலும் சோம்நாத் போகும் வழியில் பார்த்தவைகளில் சில படங்களை இந்த பக்கத்தின் மேலுள்ள பயாஸ்கோப்பை கிளிக் செய்து open in new window வை கிளிக் செய்தால்  ஸ்லைட் ஷோவில் பார்க்கலாம்
1 கருத்து :

  1. ஜெய்சங்கர் பங்களூர்17 ஜூன், 2013 அன்று AM 7:44

    ஆவலாக இருக்கிறேன். ஏன் சிறு கட்டுரைகளாகவே எழுதுகிறீர்கள்? மோடியை சந்தித்தீர்களா? இங்கு கல்கி வருவதில்லை. கட்டுரை வெளியானால் அனுப்பவும்
    ஜெய்சங்கர்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்