உங்கள் ஈ மெயில், பேஸ்புக், டிவிட்டர், பிளாக்இண்டர்நெட்டில் அனுப்படும் போட்டோக்கள், ஸைக்ப்பில்
பேசுவது, யூடூபில் பார்ப்பது, அனுப்புவது எதுவாக இருந்தாலும் அமெரிக்க உளவுதுறையால் எப்போது வேண்டுமானாலும் உங்கள் இண்ட்ர்னெட்டின் சர்வரிலிருந்து நேரிடையாக
பெற்று பார்க்க முடியும். தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும். அதற்கான அதிகாரமும் அத்தனை வசதிகளும் அவர்களிடமிருக்கிறது. . ஆப்பிள், மைக்ரோசாப்ட். குகூள், யாகூ போன்ற எல்லா நிறுவனங்களும் இதற்கு உதவ ஒப்பந்தம்
செய்து கொண்டிருக்கின்றன,இந்த திட்டத்திற்கு
பிரிசம்”PRISM என்று பெயர் ”உலகம் முழுவமுள்ள தனி மனிதர்களின் சுதந்திரத்தில் தலையிடும் மிகப்பெரிய குறுக்கீடு, மனித உரிமை மீறல்
இது என்ற அதிர்ச்சியான தகவலை கடந்த வாரம் அமெரிக்காவின் புகழ் பெற்ற தினசரி கார்டியன்”
வெளியிட்டிருக்கிறது கார்டியன் இதழ் அதன் நம்பகமான செய்திகளுக்கும், ஆணித்தரமான தலையங்களுக்கும்
பெயர் பெற்றது. தொடர்ந்து வாஷிங்டன் போஸ்ட் தினசரியும் இது பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
NSA நேஷனல் தேசீய ஏஜென்ஸி என்பது அமெரிக்க உளவு துறையின்
ஒரு அங்கம் 1952லேயே துவக்கபட்ட இது முதல் 20 ஆண்டுகள் எங்கிருந்து இயங்குகிறது எனபதே தெரியாத அளவிற்கு ரகசியமானதாக இருந்தது. NSA என்றால் ”நோ ஸ்ச் ஏஜென்சி” என்று கூட கிண்டல் செய்யபட்டது. 1975ல் ”இது வெளிநாடுகளில் அமெரிக்க பாதுகாப்புக்கு ஏதிராக நடவடிக்கைகளில் ஈடுபடும் சந்தேகத்திற்குரிய நபர்களின் செய்தி தொடர்புகளை கண்காணிக்கிறது. அமெரிக்க மக்களின் தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவதில்லை” என்று இதன் அன்றைய தலைவர் அமெரிக்க நாடளுமன்றத்தில் ஆஜாராகி தெரிவித்தார். ஆனால் இந்த நிறுவனம்தான் இப்போது அமெரிக்கா மட்டுமில்லை உலகம் முழுவதும் உள்ள அத்தனை பேரின் அந்தரங்களுக்குள் ஊடூருவும் சர்வ வல்லமை பெற்றிருக்கிறது.. இது அமெரிக்க அதிபரின் அனுமதியையும் பெற்றிருக்கிறது என்கிறது கார்டியன். NSA இன்று ஆண்டுக்கு 20 கோடி டாலர் பட்ஜெட்டில் 1000பேருக்கு மேல் பணியாற்றும்-(பலர் ராணுவ சேவை எனற போர்வையில்) - நிறுவனம். பல வெளிநாடுகளில் அலுவலகங்கள் எனஇன்று உலகின் மிகப்பெரிய கண்காணிப்பு நிறுவனமாக பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது. இதன் கண்காணிப்பு பட்டியலில் 5 வது இடத்தில் இருப்பது இந்தியா. கடந்த மார்ச் மாதம்மட்டும் இவர்கள் ஆராய்ந்திருப்பது 63 லட்சம் இந்திய செய்திகளை!

அமெரிக்க
சட்டத்தின் படிஒரு அமெரிக்கரின் அல்லது வெளிநாட்டாவரின்
போன் அல்லது எந்த ஒரு செய்தி தொடர்புகளை கண்காணிக்க வேண்டுமானால் அரசு அதற்கென மட்டுமே இயங்கும் ஒரு கோர்ட்டில் ரகசிய
ஆணையை வாரண்ட்டாக பெற வேண்டும். இது செனட்
கமிட்டிக்கு தெரிவிக்கபடும். ஆனால் இப்போது இது NSA வின் நடவடிக்கைகளுக்கு பொருந்தாது
என அமெரிக்க அதிபர் விசேஷ அதிகாரம் அளித்திருக்கிறார்.
அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானலும் யாருடைய கணக்கையும் கண்காணிக்க முடியும். இந்த
அதிகாரம் புஷ் அதிபராக இருந்தபோது வழங்கபட்டது. ஒபாமா அதன் ஆயூட்காலத்தை இப்போது நீடித்திருக்கிறார்.
ஒபாமா தன் முதல் தேர்தலில்”புஷ் நிர்வாகத்தில்
அமெரிக்க மக்களின் தனி உரிமைகளில் அரசாங்கத்தின் தலையீடுகளை” கண்டித்தவர்.
செய்தி வெளியாகி ஊடகங்கள் கலக்கி கொண்டிருந்தபோது
, ”பிரிஸமா ?” அப்படி ஒன்றும் எங்களுக்கு தெரியாதே!. நாங்கள் கோர்ட் கேட்கும்
தகவல்களை மட்டுமே கொடுப்போம். எங்கள் வாடிக்கையாளர்களின் செய்திகளை நாங்கள் யாருடனும்
பகிர்ந்து கொள்வதில்லை என எல்லா இண்ட்ர்நெட் சேவை நிறுவனங்களும் தெரிவித்தன. எல்லா
கம்பெனிகளின் அறிக்கைகளூம் ஒரே மாதிரியான வாசகங்களை கொண்டிருப்பதிலிருந்தே உண்மை புரிய
வில்லையா? என கேட்கிறது வாஷிங்டன் போஸ்ட்.
கார்டியன் வெளியிட்ட செய்திகள் முழுவது உண்மையில்லை என சொல்லும் NSA வின் தலைவர்
கண்காணிக்க படுவதை மறுக்க வில்லை. அமெரிக்க
அதிபர் ஓபாமா ”தேச நலனுக்காக செய்யபடும் விஷயங்களில்
எந்த நிர்வாகமும் 100% வீத பாதுகாப்பும்,
100% தனிஉரிமையையும் 0% யாருக்கு தொல்லையில்லாத
வாழக்கையை எல்லோருக்கும் அளிக்க முடியாது” என்று சொல்லியிருப்பது அவரின் ஆசியுடன் தான் இந்த விஷயங்கள்
நடைபெறுகிறது என்பதை உறுதி செய்கிறது. பிரிஸம் பிரிவினருக்கு பயிற்சி அளிக்க தயாரிக்க
பட்டிருந்த 41 ஸ்லைட்(power point slides) கள் கார்டியனிடம் சிக்கியதால் வெளிச்சதிற்கு
வந்த விஷயம் இது. எப்படி இந்த அதி ரகசிய ஆவணம்
லீக் ஆனது? என்பதை விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கபட்டிருக்கிறது. மக்கள் நலன் கருதி
சொன்னது நான் தான் என எட்வர்ட் என்பவர் அறிவித்திருக்கிறார். இவர் முன்னாள் ஊழியர்.
இணையஉலக
வாசிகள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். அமெரிக்காவில் எதிர்க்ட்சிகள் நாடளுமன்றத்தில்
எழுப்ப காத்திருக்கின்றன. மீடியாக்கள்எதிர் குரல் எழுப்பிகொண்டிருக்கின்றன. இந்தியாவில்
அகில இந்திய சேவை வழங்குவோர் சங்கம், அமைச்சர் கபில் சிபிலை சந்தித்து பிரச்சனை குறித்து
பேசவிருக்கிறார்கள்.
ஏது
எப்படியோ இனி மெயில் எழுதும்போது பேஸ்புக் கமெண்ட் போடும்போது ஜாக்கிரதையாக (தலைவர் ஒபாமா வாழ்க?) எழுதுங்கள். பெரிய அண்ணன் பார்த்து கொண்டிருக்கிறார்,
பதிலளிநீக்குRama Moorthy
15:55 (2 hours ago)
to me
Hi Ramanan
good presentation
Glad to know English book by Maalan
Congrats and wishes for more success
vsr
2013/6/23 Ram