ஒரு நல்ல புத்தகத்தை வாசிப்பது என்பது ஒரு சுகமான
அனுபவம், அதைவிட சுகமானது அதை யாராவது உணர்ச்சி பொங்க படிக்க, ரசித்து கேட்பது. கல்கியின் அமர காவியமான பொன்னியின் செல்வனின் அத்தனை
கதாபாத்திரங்களும் அவர் எழுதிய வார்த்தைகளை அப்படியே பேசுகின்றன. கதாசிரியரின் வர்ணனைகள்
சொல்ல படும்போது அந்த காட்சிகள் கண்முன்னே விரிகிறது ஸ்ரீகாந்த் சீனிவாசா தயாரித்திருக்கும் ஆடியோ புத்தகத்தில். கடந்த சில ஆண்டுகளாக ஆங்கில புத்தகங்களைபோலநல்ல
தமிழ் புத்தகங்களும் ஆடியோ புத்தகமாக சி. டி
வடிவில் வெளிவருகின்றன. ஆனால் ஸ்ரீகாந்த் தயாரிப்பு இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடிய
ஆடியோ புக் வகையைசேர்ந்தது.
ஸ்ரீகாந்த்
அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் சான்பிரான்ஸிஸ் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக வசிப்பவர்.
மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரியாக பணி. பாரதியின் கவிதைகள் நாடகம், தமிழசை போன்ற
பலவற்றில் ஆர்வம்கொண்டவர். பாரதி தமிழ் மன்ற தலைவர். ”ஸ்ரீ” என்று
பாப்புலராக அறியபட்டிருக்கும் இவரது முகம் மட்டுமில்லை குரலும் அங்கிருக்கும்
தமிழர்கள் அனைவருக்கும் பரிச்சியமானது., காரணம்.
நகரிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலை கழகம் நடத்தும் பண்பலை ரேடியோ நிலையத்தின் தமிழ்
சேவைக்காக ஒவ்வொரு புதன் கிழமையும் 3 மணி நிகழ்ச்சியை தயாரித்து, தொகுத்துவழங்குபவர்
இவர்தான். அதில் பாடல். நேர்காணல். நாடகம், தமிழகத்திலிருந்துவரும் பிரமுகர்களின் பேட்டி
எல்லாம் உண்டு. கடந்த 11 ஆண்டுகளாக இதை செய்து வருகிறார்.
ஆடியோ
புத்தக ஐடியா எப்படி வந்தது? வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழை
முறையாக கற்பதில்லை. பல குடும்பங்களில் நன்றாக
புரிந்தாலும் கூட தமிழில் பேசுவது கூட குறைந்து வருகிறது.. அவர்களை கவர, படிக்க முடியாத
நிலையில் இருக்கும் முதியோரின் வசதிக்காக இதைச்செய்தால் என்ன என்ற எண்ணம் எழுந்தது.
தமிழ் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம், ஆர்வம் நம்பிக்கையை தந்தது. என்று சொல்லுகிறார்.
ஆடியோ புத்தகம் எனறால் செய்தி வாசிப்பது போலிருக்கும் என்ற எண்ணத்தை மாற்றுகிறது இவரது படைப்பு.. நாவலின்
நடையில்,
காட்சி விவரிப்புக்கு ஒரு
குரலையும்,
கதாபாத்திரங்கள் பேசுவதற்கு பல வகையான குரல்களையும் பயன்படுத்தி. கல்கியின், "பொன்னியின் செல்வன்' நூலில் வரும், பெண்பாத்திரங்கள் உள்பட
40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, இவர் மட்டுமே பேசி
அசத்தியுள்ளார். பேசியிருப்பவர் ஒரே நபர் என்பது சொன்னால் தான்
தெரியும் அந்த அளவிற்கு பாத்திரங்களுக்கேற்ற கச்சிதமான குரல் மாடுலேஷன். நாவல் முழுவதும் பாத்திரங்கள் தொடர்ந்து அதே குரலில்
பேசுகிறார்கள். 75 மணி நேரம் ஓடும் இந்த ஆடியோ புத்தகம் 5 பகுதிகளானது. இதைப்போல பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் ஆடியோ புத்தகங்களையும் தயாரித்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்..
நிறைய மனழுத்தம் கொடுக்ககூடிய பரப்பரபான பணியுடனும் பயணங்களுக்குமிடையே ஸ்ரீகாந்த்தால் இதை எப்படி செய்ய முடிந்த்தது? ஆர்வம்,
சாதிக்கவேண்டும் என்றவெறி, அன்பு மனைவி ஜானகியின் ஒத்துழைப்பு என்கிறார், வீட்டிலேயே
ஒரு சின்ன ஆடியோ ஸ்டுடியோ அமைத்துகொண்டு இரண்டு வருடங்கள் நீண்ட இரவுகளிலும்,அத்தனை
விடுமுறைநாட்களிலும் உழைத்திருக்கிறார்.
ஐ போன், ஐபேட், டேபிளட்
என எதில் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ளகூடிய வசதியுள்ளது.. கட்டணம்? மிக மிக
குறைவு, 120 ரூபாய் ஆன்லைனைல் செலுத்தினால்
போதும் ஒரு புத்தகத்தை டௌன்லோட் செய்துகொள்ளாலாம். (www.tamilaudiobooks.com)விற்பனை எப்படியிருக்கிறது?
உலகின் பல மூலைகளிலிருக்கும் தமிழர்கள் வாங்குகிறார்கள்.
விற்பனையைவிட “என் தந்தைக்கு அவரது இளமை காலத்தை
திருப்பி கொடுத்திருக்கிறீர்கள்” ஆடியோ புத்தகத்தை
கேட்ட என் அம்மா அழுதுவிட்டார்” போன்ற வார்த்தைகள் தான் மிகுந்த சந்தோஷத்தை தருகிறது என்கிறார்.
“ஸ்ரீ” இவரது அடுத்த பிராஜெக்ட் தமிழ் தாத்தாவின் “ என் சரித்திரம்”
கல்கியின் அமர காவியங்களுக்கு தனது குரலால் உயிருட்டி உலகமெங்கும்
ஒலிக்க செய்திருக்கும் இந்த மனிதரின் பணி மகத்தானது.
-ஆதித்தியா (ரமணன்)
கல்கியில் உங்கள் கட்டுரையை படித்தவுட்னேயே டவுன்லோட் செய்தேன். அருமையாக இருக்கிறது. நண்பர்களுக்கு லிங்க் அனுப்பியிருக்கிறேன். அதில் உவே சா சாம்பிளும் இருக்கிறது. தாங்க்ஸ்
பதிலளிநீக்குபாலா மாண்ட்ரியல்
ஒரு தனி மனிதனின் முயற்சி என்றறியும் போது, இது மகத்தான சாதனை என்றுதான் சொல்லவேண்டும் . "ஸ்ரீ" க்கு எமது வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு