இந்த ஆண்டு அமுத சுரபி தீபாவளி மலர் வெளியிட்டிருக்கும் எனது கட்டுரை
சென்னை தீவுதிடலின் எதிரில்
கடலை பார்த்து சற்றே கழுத்தை சாய்த்து கம்பீரமாக தன்மீது வாளூடன் அமர்ந்திருக்கும் ஒரு வீரனுடன் கடந்த 175 ஆண்டுகளாக நிற்கிறது. கிரேக்க பாணியில் வடிவமைக்கபட்ட அந்த
குதிரை சிலை. உலகில் குதிரை மீது மனிதர் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலைகள் ஐந்து இடங்களில் மட்டுமே இருக்கிறது. மன்னர்களுக்கு
மட்டுமே அளிக்கபட்ட இந்த கெளரவம் இந்தியாவில்
ஒரு ஆங்கில கவர்னருக்கு அளிக்கபட்டிருக்கிறது,
அவர் தாமஸ் மன்றோ. இந்தியாவில்
ஒரு சிப்பாயாக வாழ்க்கையைத் தொடங்கி,
12 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பிறகு, நிர்வாகப்
பணிக்கு மாற்றம் செய்யப்பட்டவர் தாமஸ் மன்றோ. தனது கடின உழைப்பால் முன்னேறி ஆளுனராக
உயர்ந்தவர். 1820 முதல் 1827 வரை சென்னை
மாநில கவர்னாராகயிருந்தவர். தனது நேர்மையான நிர்வாகத்தால் மக்கள் மனதில் இடம்
பெற்றிருந்த ஒரு சில ஆங்கிலேய அதிகாரிகளில் இவரும் ஒருவர் . இன்றுள்ள
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின்
பெரும்பான்மையான பகுதியும் திருப்பத்தூர் பகுதியும் ஒன்றாக பாராமகால் என்று அறிய பட்டபகுதியில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, கலைக்டராக இருந்தவர். மாவட்டம் முழுவதும் குதிரையில் அலைந்து திரிந்து விவசாயிகளின் உண்மை
நிலைமையை நேரடியாக அறிந்துகொண்ட மன்றோ. விவசாயிகளின் வரிச்சுமையை மாற்றி அமைக்க முற்பட்டவர்.தன் பதவிகாலம் முடிந்ததும் இங்கிலாந்து செல்லும் முன்
தன்பணியாற்றிய கடப்பா பகுதியில் பயணம் செய்தபோது
1827ல் இறந்துபோனார். இவர்அந்த பகுதியிலிருக்கும் ராகவேந்திரர் சமாதியில்
வழிபட்டபோது அவர் இவருக்கு காட்சி கொடுத்தாதாக அரசு குறிப்புகளில்
பதிவாகியிருக்கிறது. இப்போதும், கடப்பாவில்
உள்ள ஒரு அனுமார் கோயிலில் ராமர் சீதை படங்களுடன் தாமஸ் மன்றோவின் படமும்
இருக்கிறது. அங்கே, தினமும் நடக்கும் பூஜையில் மன்றோ
படத்துக்கும் தீபாராதனை காட்டப்படுகிறது.
மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்த இந்த
அதிகாரிக்கு மக்களிடம் நன்கொடை பெற்று ஒரு
சிலை வைக்கமுடிவு செய்யபட்டவுடன் இங்கிலாந்தின் எஃப்
சான்ட்ரீ என்ற புகழ்பெற்ற சிற்பி நியமிக்கபடுகிறார். மாடலுக்கான அரபிகுதிரையை
4ம் ஜார்ஜ் மன்னரின் லாயத்திலிருந்து தேர்ந்தெடுத்து பணியை செய்யத அந்த கலைஞன் சந்தித்த அடுத்த சவால் மன்றோவின்
முழு உருவபடம் எதுமில்லாததினால் கிடைத்த மார்பளவு
படத்திலிருந்து உருவாக்கவேண்டியிருந்தது
இந்த 6 டன்
எடையுள்ள சிலை முதலில் பிளாஸ்ட் ஆப் பாரிஸ்ஸில் வடிவமைக்கபட்டு பின்னர் வெண்கலத்தில்
வார்க்கபட்டிருக்கிறது. குதிரை, வால்பகுதி,
மன்றோவின்உருவம், வாள்இருக்கும்பகுதி என 5 தனிதனிப்பகுதிகளாக கப்பலில் கொண்டுவரபட்டு இங்கு இணைக்கபட்டிருக்கிறது. அன்று சென்னையில் பெரிய அளவில் துறைமுகமேஇல்லாத
நிலையில் கப்பலிலிருந்து சிறுபடகுகளில் பகுதிகளாக
கரைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த 15 அடி சிலையை மேலும் கம்பீரமாக்க 25 அடியில்
ஒரு பீடம் உள்ளூர் கலைஞர்களின் உதவியுடன் செய்திருக்கிறது
ஆங்கிலேய நிறுவனம்.
.இந்த சிலையை படைத்த சிற்பியிடம் ஏறி அமர்வதற்கு சேணத்திலிருந்து
தொங்கும் கால்வைக்கும் வளையங்கள் இல்லையே
என அவரது சிறுவயது
மகன் கேட்டதால் தற்கொலை செய்துகொண்டுவிட்டாதாக சொல்லப்படுவது
ஒரு வளமான கற்பனை கதை என்கிறார்
வி. ஸ்ரீராம். இவர் சென்னை நகரின்
பாரம்பரியத்தை பற்றி ஆராயந்து கட்டுரைகள்
எழுதியிருப்பவர். படைத்த
சிற்பி சான்ட்ரீ பல ஆண்டுகளுக்கு
பின்னர் இதய நோயால் இறந்ததற்கான
குறிப்புகள் இருக்கின்றன என்கிறார் இவர். செம்மொழி
மாநாட்டிற்கு முன்
ஆங்கிலேயர்களின்
பெயரில் இருந்த தெருக்களை மாற்றியபோது இந்த
சிலையையும் எடுக்க தீர்மானித்திருந்த
அரசின் முடிவு எதனாலோ
கைவிடபட்டது
40 ஆண்டுகாலம் உதவிகலைக்டெர் முதல் கவர்னர் வரை நேர்மையாக
ஊழல்புரியாத அதிகாரியாக பணியாற்றிய தாம்ஸ் மன்றோ அன்றைய ஆட்சியில் துளிர்விட துவங்கிய லஞ்சம் பற்றி 1795ல் எழுதிய குறிப்பு இது
“இந்தியாவின் வறுமைக்கு முக்கியக் காரணம், அரசு இயந்திரத்தின் நிர்வாகக் குளறுபடிகளே. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரே முறைகேடான செயல்களுக்கு துணை நின்றால், அவரால் எப்படி ஒரு நேர்மையான நிர்வாகத்தை நடத்த முடியும் "கலெக்டர்கள் தாங்கள் பதவிக்கு வந்து சில ஆண்டுகளிலேயே சொத்துகளைக் குவித்துவிடுகிறார்கள். வருவாய்க்கு மேல் டாம்பீகமாகச் செலவு செய்கிறார்கள். நாட்டைச் சுரண்டும் கலெக்டர் (அன்றைக்கு அமைச்சர்கள் கிடையாது; கலெக்டர்கள்தான் ஆட்சியாளர்கள்) நாடு எப்படி முன்னேறும்?”
“இந்தியாவின் வறுமைக்கு முக்கியக் காரணம், அரசு இயந்திரத்தின் நிர்வாகக் குளறுபடிகளே. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரே முறைகேடான செயல்களுக்கு துணை நின்றால், அவரால் எப்படி ஒரு நேர்மையான நிர்வாகத்தை நடத்த முடியும் "கலெக்டர்கள் தாங்கள் பதவிக்கு வந்து சில ஆண்டுகளிலேயே சொத்துகளைக் குவித்துவிடுகிறார்கள். வருவாய்க்கு மேல் டாம்பீகமாகச் செலவு செய்கிறார்கள். நாட்டைச் சுரண்டும் கலெக்டர் (அன்றைக்கு அமைச்சர்கள் கிடையாது; கலெக்டர்கள்தான் ஆட்சியாளர்கள்) நாடு எப்படி முன்னேறும்?”
மூதறிஞர் ராஜாஜி
பதவிஏற்கும் முன் தன்னை சந்திக்கவரும் இளம்
அதிகாரிகளுக்கு நிர்வாகத்தில் மன்றோவின் அணுகுமுறை பற்றி படிக்க
சொல்லுவாராம்.
அதிகாரிகளுக்கு நிர்வாகத்தில் மன்றோவின் அணுகுமுறை பற்றி படிக்க
சொல்லுவாராம்.
பொதுவாழ்வில் தூய்மைக்கும் நிர்வாகத்தில் நேர்மைக்கும் குரல்
கொடுத்த
முதல் மனிதன் இவர் என அறியும்போது மக்கள் வரிப் பணத்தில் இல்லாமல்
நன்கொடைகள் மூலம் எழுப்பபட்ட இந்த சிலை இன்னும் கம்பீரமாக
தெரிகிறது.
முதல் மனிதன் இவர் என அறியும்போது மக்கள் வரிப் பணத்தில் இல்லாமல்
நன்கொடைகள் மூலம் எழுப்பபட்ட இந்த சிலை இன்னும் கம்பீரமாக
தெரிகிறது.