11-1-14
இன்று
கீரின் ஏக்கர்ஸ் கிளப் பில் சக்தி பாடினார். ஒரே வார்த்தை அற்புதம். 1 மணி நேரத்திற்கும்
மேல் நடந்த அருமையான கச்சேரி. தமிழ் பாடல்,கன்னட
கீர்த்தனை என எல்லாமே சூப்பர். ஆங்கில ஒப்ரா
(OPERA) பாடலைப் பாடி அதை ஒரு கர்நாடக ராகத்துடன் தமிழ்பாடலாக பாடி முடித்தார். . இந்த பெண்ணிடம்
நிறைய விஷயமிருக்கிறது. AR ரஹ்மான் கேட்கவேண்டும்.
கச்சேரியின் கடைசியில்
முத்தைத் தரு பக்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண
முக்திக்குஒரு வித்து குருபர என ஓதும்
என்ற
அருணகிரிநாதரின் திருப்புகழலிலிருந்து பாடியது தான் ஹைலைட். தமிழ்பாடகர்களே பல்லை உடைக்கும்
இந்த பதிகத்தை பாடத்தயங்கும் ஒரு பாடல் இது. இதை இந்த
ஆஸ்திரேலிய பெண் அனாயசயமாக பாடியது ஆச்சரியமான விஷயம்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்