.
இந்த கங்கைக்கரை இந்துகளுக்கு
மட்டும் புனிதமானதல்ல. சமணர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள்
மூஸ்லிம்கள் ஆகிய அனைவருக்கும் மிக முக்கியமான தலம். மஹாபாரத
காலம் முதல் இன்றுவரை போற்றபடும் இந்த கங்கைக்கரையின் மஹோன்னதம் பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். பெர்ஷியாவிலிருந்து கஜினி படையெடுத்து
வந்து இந்த நகரத்தை அழித்தபோது அவருடன் வந்த அமைச்சர்களில் ஒருவரான அல்-பைரனி என்பவர். அனைத்து மதத்தினரையும் ஈர்க்கும் இந்த நகரிலேயே தங்கி விட்டார். காரணம் இந்த சக்தி வாய்ந்த நகரில்
ஒரு மசூதி எழுப்பி மூஸ்லீம் இனத்தவர் வழிபட வழிசெய்ய விரும்பினார். இதை 1019ம் ஆண்டு
தனதுகுறிப்பில் எழுதியிருக்கிறார்.
இப்படி காலங்காலமாக எந்த மதத்தவரையும் தன்னை நோக்கி பயணிக்க செய்த கங்கைக்கரைதான் சித்தார்த்தன்
புத்தராகும் முன் வந்த தங்கிய முதல்
இடம். மன்னன் சித்தார்த்தன் துயரங்களைப் பார்த்து கலங்கி ஞானம் அடையும் வழியை தேடினாரோ, அல்லது சமீபத்திய ஆய்வுகள் சொல்லுவது
போல அவருடைய நாட்டில் எழுந்த நதி நீர்பிரச்ச்னையை தீர்க்க எழவிருந்த போரை விரும்பாமல் துறவறம் பூண
புறபட்டாரோ - வந்த இடம்
இந்த கங்கையின் கரை. நேப்பாளத்திலிருந்து இங்கு வரை நடந்திருக்கிறார். உடன் வந்தவர் அவரது பணியாளர் சன்னா. கடலென விரிந்திருக்கும் கங்கையின்
கரையில் வழிபாட்டுக்கு பின் அமர்ந்து தன் உதவியாளரிடம்
“இந்த கங்கையில் குளிப்பதால் முக்தி கிடைக்கும் என நினைக்கிறாயா?
என கேட்கிறார். சில நொடிகளுக்கு பின் அவரே அது உண்மையானால் இந்த நதியிலிருக்கும் மீன்களும்
இறால்களும், சிப்பிகளும்
முக்தி அடைந்து அந்த இனம் இல்லாமலே போயிருக்குமே என சொல்லிக்கொண்டு எழுந்து. ஞானத்தை தேடி அலைந்த அந்த இளைஞன் உடலை வருத்தி கடும் தவம் செய்யும் வழியை நாடி நடக்க ஆரம்பிக்கிறார். மான்கள் துள்ளி ஓடும் ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியை தேர்ந்தெடுத்து
அங்கு தன் தவத்தை துவக்குகிறார். அது தான் இன்று சாரநாத். அழைக்கப்படும் ரிஷிபட்டினம். பல ஆண்டுகள் பலரிஷிகள் கடும் தவமிருந்து
தங்கள் உடலை துறந்து முக்கி அடைந்த இடம் அது. காசி நகரிலிருந்து 10 கீ மீ தூரத்திலிருக்கும் சாரநாத்திற்கு
இப்போது வந்திருக்கிறோம். இந்தியாவிற்கும் புத்தமதத்திற்கும்
இருக்கும் தொடர்புகளை உலகுச்சொல்ல உதவிய இடம் இதுதான்.
பரந்த ஒரு பசும் புல்வெளிகளின் நடுவே ,
அகழ்வாய்வு ஆராய்ச்சியின் அடையாளங்களான கண்டுபிடிக்கப்பட்ட இடிபாடுகள்,
சிறிய ஸ்தூபிகளின் அடிப்பகுதிகள்,பெரியபிராகாரங்களின்
அடையாளங்கள் என நிறைந்திருக்கும் பகுதியின்
நீண்ட பாதையை கடந்து வந்த பின் நாம் பார்ப்பது சாரநாத் ஸ்தூபி. இபோது இந்த ஸ்தூபி தூண் வடிவில் இல்லை. வட்டவடிவில் .
ஒரு உடைந்த செங்கல் கட்டித்தின் வட்ட அடிப்பகுதியைபோல 50 அடி உயர்ந்திருக்கிறது. கற்களாலான அடிப்பகுதியில் சில சிற்பங்களும்
புத்தர் உருவங்களும் இருக்கிறது
கிமு 600 லியே சாரநாத் சமணர்களுக்கு ஞானம் அருளுமிடமாகயிருந்திருக்கிறது. சமண தீர்த்தங்கர்களில் மூவர் வாழ்ந்து உயிர் துறந்த இடம் இது. இதற்கு 300 ஆண்டுகளுக்கு பின்னர் தான் சித்தார்த்தன்
இந்த இடத்திற்குதான் காசியிலிருந்து கடும்
தவம் செய்து ஞானம் அடையும் வழியை தேடி வந்திருக்கிறார். பின்னர் சமணர்களுடன் சேர்ந்து உடலை
வருத்தி கடும்தவம் செய்வதினால் உடல் மட்டுமேநலிந்துபோகிறது ஞானம் எதுவும் அடைய முடியாது
என்பதை உணர்ந்து தனியாக தவம் செய்ய கயாவிற்கு
பயணம் செய்து, போதியின்
அடியில் தவம் செய்து ஞானம் பெற்று புத்தராகி இதே சாரநாத்துக்கு திரும்பி தன்னுடன் தவத்திலிருந்த 5 சமணர்களுக்கு தான் உணர்ந்ததை
போதித்து மனம் மாற்றுகிறார். இந்த மனமாற்றத்தில் பிறந்ததுதான்
பெளத்தம். அதனால் இந்த இடம் தான் புத்தமார்க்கத்தின் பிறப்பிடமாக
அறியப்படுகிறது.
பின் நாளில் புத்தர் தன் முதல் 5 சீடர்களை பெற்ற இடம்,
தான் பெற்ற ஞானத்தை மக்களுக்கு எடுத்து சொல்லி முதல் உறையாற்றிய இடம்
என்பதை கெளரவிக்க மன்னர் அசோகர் எழுப்பிய சின்னம்
இது. இந்த இடம் புத்த மத்த்தினருக்கும் மிகமுக்கியமான புனிதஸ்தலம்,
வாழ்நாளில் ஒருமுறையாவது வர விரும்பும் இடம். அணி
அணியாக ஜப்பானியர், சீனர், ஸ்ரீலங்கர் வந்து
அமைதியாக வளாகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து பிரார்த்திக்கிறார்கள், சிறிது மண் எடுத்து பத்திரப்படுத்திகொள்கிறார்கள். புத்தர்
வாழ்ந்த காலத்தில் இது அவர்கள் மார்க்கத்தின் தலமைப்பீடமாகவும், சீடர்களுக்கு போதிக்கும் கல்விக்கூடமாகவும் இருந்திருக்கிறது. ஆனால் சுல்தான்களில் படையெடுப்பால்
கால் வெள்ளத்தில் கரைந்து காணமல்போன புத்தமதத்தினால் இந்த இடமும் மறக்க பட்டு சாரநாத் மடிந்து கொண்டிருந்தது. இதை
நமக்கு கண்டுபிடித்து புத்தரின் சரித்திரத்தை அறிய உதவியவர் ஒர் ஆங்கிலேலே அதிகாரி. அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற அந்த
ஆய்வாளருக்கு நாம் என்றென்றும் நன்றி சொல்ல
கடமைபட்டிருக்கிறோம். இந்த மனிதனின் முயற்சியில்லை என்றால் இன்று
சாரநாத் இருக்கிறத்தில் தொழிற்சாலைகளோ அடுக்குமாடி கட்டிடங்களோ எழுந்திருக்கும்.
இவர் இந்த ஸ்தூபியை பற்றி அறிந்தது ஒரு எதிர்பாராத ஆச்சரியம்.
1794ல் காசியில் மன்னர் ஆட்சி இருந்தாலும் மற்ற பல ஸமஸ்தான்ங்களைப்போல
ஆங்கிலேயரின் ஆதிக்கமும் நுழைந்துகொண்டிருந்த காலம் அது. காசி நகரில் ஏதேனும் கட்டிடம் கட்டவேண்டுமானால்
இந்த இடிபாடுகளுக்கிடயே இருக்கும் தரமான செங்கற்களை எடுத்து செல்வார்கள். காசி அரசவை அமைச்சர் தன் வீட்டு கட்டிடத்திற்காக இந்த இடிபாடுகளின் மேல்பகுதியை உடைத்து தரமான நன்கு
சூடப்பட்ட முழு செங்கற்களை எடுத்துவரச்சொன்னர். அதை செய்து கொண்டிருந்தவர்கள்
கண்டது ஒரு பெட்டியையும் அதனுள் ஒரு மரகத புத்தர் சிலை மற்றும் சில ஆபரணங்களையும். அதிர்ந்து போன அமைச்சர். மன்னரிடம் சொல்ல அவர் ஆங்கிலேயர்களிடம் கூற உடனே யாரும் இடிக்கூடாது என்ற ஆணையுடன்
ஆராய்ச்சி துவங்குகிறது. போதிய பணம் ஒதுக்காத பிரிட்டிஷ் அரசுடன்
போராடி இங்கிலாந்திலிருந்து நிபுணர்களை வரவழைத்து அகழ்வாரய்ச்சியை தொடர்ந்து நமது சரித்திரத்தை
மீட்டெடுத்து கொடுத்திருக்கிறார் இந்த ஆங்கிலேயர்.
இந்த சரித்திர சான்றுகள் கிடைத்த இடத்திலியே ஒரு அருங்காட்சியகம் நிறுவியிருக்கிறார்கள். இம்மாதிரி சான்றுகள் இருக்குமிடத்திலியே
காட்சியகம் இருப்பது சில இடங்களில் மட்டுமே. மிக அழகாக நிர்வகிக்கபடும்
இந்த காட்சியகத்தில்தான் முதல்முதலாக கண்டெடுக்கபட்ட
புத்தரின் சிலை இருக்கிறது. அதுவரை அனைவரும் பார்த்த புத்தர் உருவம் ஓவியர்களின்
கற்பனையில் பிறந்தவை அசோகர் நிறுவிய இந்த ஸ்தூபியின் முன்னால் நின்று கொண்டிருந்த வெற்றித்தூண் இன்று 6 பகுதிகளாக
உடைந்த நிலையில் இருக்கிறது. அதன் தலையில் இருந்த நான்கு சிங்களும்
சக்கரமும் உள்ள சிலைதான் நம் தேசிய சின்னமாக அறிவிக்கபட்டிருக்கிறது. நான்கு திக்குகளுக்கும் புதிய மார்க்கத்தை
பரப்ப புத்தர் இந்த இடத்திலிருந்துதான் சீடர்களை அனுப்பினார் என்பதை உணர்த்த எழுந்த சின்னம் இது அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்த உடனே நம்மை அசத்தி நிற்க வைப்பது
இந்த கம்பீரமான சின்னம்தான்,
ராஜஸ்தான் பகுதியில் காணப்படும் ஸாண்ட் ஸ்டோன் என்ற வகை சலவைக்கல்லில்
பழுப்பு நிறத்தில் தொட்டு பார்க்க அழைக்கும் வழவழப்புடன் பளீசென்றிருக்கிறது.
கவிழ்த்த தமாரை மலர் பீடத்தில் மான், சக்கரம்,
யானை சிற்பங்களுடன் இருக்கிறது. சக்கரத்தில் காணப்படும் 36 ஆரக்கால்கள் , நமது தேசிய சின்னத்தில் 24 தானே? என்ற கேள்வியை எழுப்பிற்று.
அந்த சிலையின் வடிவமைப்பும் கம்பீரமும் இது தேசிய சின்னமானது சரிதான்
என்ற எண்ணவைக்கிறது. நல்ல வேளை இது ஒரு மதம் சார்ந்தது, அஹிம்சையை போதித்த
தேசத்திற்கு ஏன் சிங்கங்கள்? என யாரும் அப்போது போராடவில்லை. காட்சியகத்திற்குள் இருக்கும் புத்தர்
சிலைகள் அற்புதமானவை. மெல்லிய ஆடை, விரல்நகங்கள்
கூட நுட்பமாக வடிக்கபட்டிருக்கின்றன.
தலைப்பைச் சேருங்கள் |
அருகில் புத்தருக்கு ஒரு கோவில். உள்ளே தங்கத்திலான புத்தர். வளாகம் முழுவதும் ஜப்பனிய, சீன பாலி மொழிகளில் வாசகங்கள் பெரிய பெரிய கல்வெட்டுகளாக
படிக்க வசதியாக சாய்வாக நிறுத்தபட்டிருக்கிறது. நாம் பார்க்க
மட்டுமே செய்கிறோம். கம்பீரமான ஒரு மணி. புத்த பூர்ணிமா அன்று மட்டும் தான் ஒலிப்பார்களாம். முதல் 5 சீடர்களுக்கு
உபதேசம் செய்த காட்சி சிலையாக்கப்பட்டிருக்கிறது.
அதில் முற்றும் துறந்த புத்தருக்கும் அவர் சீடர்களுக்கும் பளபளக்கும் பட்டாடை. கோவிலின் பின்னே ஒரு ஆலமரம். புத்தகயாவிலிருந்து கொண்டுவந்த கிளை மரமாக வளர்க்கபட்டிருக்கிறது. தொட அனுமதியில்லை.
அதில் முற்றும் துறந்த புத்தருக்கும் அவர் சீடர்களுக்கும் பளபளக்கும் பட்டாடை. கோவிலின் பின்னே ஒரு ஆலமரம். புத்தகயாவிலிருந்து கொண்டுவந்த கிளை மரமாக வளர்க்கபட்டிருக்கிறது. தொட அனுமதியில்லை.
உருவ வழிபாடு அவசியமில்லை என்று
சொன்னவர் புத்தர். அவரையே கடவுளாக்கி வழிபடும் முறை எப்படி
தோன்றியிருக்கும்? என சிந்தித்துக் கொண்டே காசி நகர் திரும்புகிறோம்.
மாலையில் பனாராஸ் புடவைகள் வாங்குவதைப்பற்றி பஸ்சில் பலர் பேசிகொண்டிருக்கிறார்கள். நாம் காசியில் வேறு என்ன பார்க்கலாம் என யோசித்து கொண்டிருக்கிறோம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தர் தன் மனைவி மற்றும் குழந்தையை விட்டுவிட்டு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் இரவோடு இரவாக அரண்மனையை விட்டு வெளியேறினார். ஒரு கணவனாக, மன்னனாக தனது பொறுப்புகளை சரிவர செய்யாமல் இப்படி செய்தது சரியா?
புத்தரின் அந்த செய்கையை ஒரு சதாரண மனிதனின் செயலாக
நீங்கள் பார்க்கீறீர்கள். அதனால் இப்படி கேட்கிறீர்கள். சித்தார்த்னாக அவதரிக்கும்
முன்னரே கருவிலிருக்கும்போதே பிறக்கும் குழந்தை
துறவியாவான் என்பது அவருடைய தாய்க்கு ஒரு கனவின் மூலம் தெரிந்தது. குழந்தை பிறந்த 7 நாளில் தாய் இறந்துபோனதால் இது பலருக்கு
தெரியாது. அவர் புத்தர்
ஆகும் முன்னரே மிகசிறிய வயதிலேயே உயர்ந்த சிந்தனைகளும் பல நடைமுறைகளை தவறு என்று சொல்லும் துணிவுடனும்
இருந்தார். அந்த காலகட்டத்தில் சரி என்று நம்பப்பட்ட விஷயங்களை மறுத்தவர் அவர்.
உதராணமாக மனிதஉயிர்களை கொல்லுவது
தவறு என்று சொன்னார். இப்படிபட்டவன் எப்படி அரசனாக கடமை
ஆற்றி போர் செய்ய முடியும்?. ஒரு வேடனின் அம்பினால் தாக்கப்பட்ட
பறவை இவர் காலடியில் விழுந்த போது அதை காப்பற்றினார். வேட்டையாடியது வேடனுக்கு சொந்தம்
என்பதை மறுத்து காப்பாற்றியவனுக்குதான் சொந்தம் என விதியை மாற்றினார். இப்படி பட்ட ஒரு மனிதன் எப்படி எல்லோருரையும்
போல சாதாரண மனிதாக இருக்கமுடியும்.? பெரிய சக்தியாக உருவாகப்போகும் மேன்மையான மனிதர்கள் இப்படி குடும்பத்தை பிரிந்ததை
நீங்கள் பல மஹானின் வாழ்க்கையில் பார்த்திருப்பீர்களே?
புத்தன் செய்தது சரியா என்று யோசிப்பதை விட இப்படி யோசியுங்களேன். 2000 வருடங்களுக்கு பின்னரும் அவர்
செய்த விஷயங்களைப் பற்றி அவர் உருவாக்கிய கோட்பாடுகள் எல்லாம் பற்றி நாம் பேசுவது அவர் புத்தர் ஆனதினால் தானே?.
எல்லா மன்னர்களையும் போல அவரும் நாடு, மனைவி,
குழந்தைகளுடன் வாழ்ந்திருந்தால் இன்று நாம் அந்த சித்தார்த்தனைப் பற்றி
பேசுவோமா?.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்