நாஸாவால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப பட்ட விண்கலம் “க்யூராஸிட்டி” 2012 தரையிறங்கியிருந்தாலும் செவ்வாயில் 687பூமி நாட்கள் தான் செவ்வாயில் ஒரு வருடம் என்பதால் இப்போதுதான் அது இறங்கிய முதலாண்டு கொண்டாடபட்டது. செல்போன்களில் தன்னைத்தானே படமெடுத்துக்கொண்டு பேஸ்புக்கில் போட்டுகொள்ளும் செல்பிக்கள் போல க்யூராஸிட்டியும் அந்த ஆண்டுவிழா நாளில் தன்னை படமெடுத்து நாசாவிற்கு அனுப்பியிருக்கும் செய்தியைப் படித்த போது 2012ல் அது செவ்வாயில் தரையிறங்கிய நாளில் நிகழந்தது நினைவில் நிழலாடியது. அன்று எனது சுவடுகளில் பதிந்தது இது
உயர்ந்த மனிதன்
இன்று(11/08/12) மதியம் 1.மணிக்கு ஒரு போன்
வந்தது. இஸ் மிஸ்டர் ரமணன் தேர்?
என்பதை தொடர்ந்து “ஐ ஆம் சிங் காலிங் ஃபிரம் யூ எஸ்
என சொன்னதை கேட்ட என் மனைவி மீரா போனை கொடுக்க “சிங்? ஃபரம்
வேர் என ? கேட்டு குழம்பிய நான் அவர்
தன்பெயரைச்சொன்னவுடன் நேற்றிரவு (10/11/12) அனுப்பிய
ஈ மெயில் பளிச்சென்று நினைவுக்கு வர மகிழ்ச்சியில் பதறிப் போனேன், பல
ஆண்டுகள் ஆராய்ச்சிகளுக்கு பின்னர் பல ஆயிரம் கோடி செலவில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்ட
க்யூராரிஸிட்டி விண்வெளிகலம் 8 மாத பயணத்திற்கு (57 கோடி கீமீ) பின்னர் பத்திரமா செவ்வாய்
கிரகத்தில் தரையிறங்க ஒரு டிசைனை வடிவமைத்து செய்லாக்கிய ஸ்பேஸ் ஸைண்டிஸ்ட் டாகடர் குருகிருபால் சிங் தான் அவர்.
செவ்வாய் கிரக விண்கல செய்திகளை கவனித்து வந்த
போது ஒரேஒரு வரியில் இவரது பெயரை பார்த்தேன். இந்தியப் பெயராக இருக்கிறதே
இவரைப்பற்றி எழுதலாமே (பத்திரிகையாளன் புத்தி) என விபரங்கள் தேட ஆரம்பித்தேன், கூகுள், யாகூ, ஃபேஸ்புக்
எதிலும் சிக்கவில்லை.நாஸா வெப் ஸைட்டிலும் மேய்ந்து பார்த்தேன். ஒன்றும் தேறாததால்
நாஸா பிரஸ் யூனிட்டுக்கு ஒரு மெயில் அனுப்பினேன்.. அவர்களும் ஒன்றும்
கண்டுகொள்ளவில்லை. மீண்டும் அலசி நாஸாவின் தலமை விஞ்ஞானிகளிண் டைரக்டரியில்
இருந்த் சிங் பெயர்களை வடிகட்டி ஒருவருக்கு நேற்றிரவு ஒரு மெயில் அனுப்பினேன். அதற்கு தான் இன்று
அவருடைய போன். நான் அனுப்பிய ஈ மெயில் உண்மையானதுதான?-
ஸ்பாம் இல்லையே? என்பதை உறுதி செய்துகொள்வதற்காக
போன்செய்ததாக சொன்னவர் மிக அன்புடன் பேசி கொண்டிருந்தார். எப்படி என்னால் அந்த
ஈ மெயில் ஐடி தொடர்பு கொள்ள முடிந்தது (அது கிடைத்தது தனிக்கதை) என
ஆச்சரியபட்டார். அவர் பெயர் வந்திருக்கும் செய்தியை இந்துவிலிருந்து படித்து
காட்டியபோது சந்தோஷப்பட்டார். 23 வருடங்கள் நாஸாவில் வேலை செய்வதையும், பெற்றோர்கள் டெல்லியில் இருப்பதையும் சொன்னார். நான் கேட்ட விபரங்களையும் அவர் படத்தையும் உடனே
மெயிலில் அனுப்பியும் வைத்தார். இதன் கிழே அந்த மெயிலையும் பதிவு
செய்திருக்கிறேன்.
இவரது படத்தையும், விபரங்களையும்
நேரடியாக முதலில் பெறறிருக்கும் ஒரே இந்திய் பத்திரிகையாளர் நான்தான். எனபதைவிட மிக
சந்தோஷமான விஷயம் மிகப்பெரிய பொறுப்பிலிருக்கும் இந்த மனிதரை, ஒரு
சக இந்தியனின், பத்திரிகையாளானை மதித்து மிக எளிமையாக அன்புடன் பேசி உதவிய ஒரு
உயர்ந்த மனிதனை இன்று தெரிந்து கொண்டது தான்.
ரமணன்
------------------------------------------------------------------------------------------------------------
Inbox
gurkirpal singh ✆ brensim@prodigy.net
14:14 (8 hours ago) to me
Dear Ramanan:
I had the pleasure of speaking with you a few minutes ago.
Thank you for the very kind words. I am sending the material that you had
requested - brief bio, a picture (attached JPEG), and a brief description of my
contributions to the Curiosity mission. I am hoping that this will serve your
purpose. Let me know if I missed anything. Please note that additional
information regarding the mission may be obtained from the Landing Press Kit at
http://mars.jpl.nasa.gov/msl/news/newsroom. I would be grateful if you could acknowledge this e-mail.
Best regards,
Gurkirpal
Bio
========================================================================
|
Dear Ramanan:
Thank you for
your acknowledgement, and diligence in putting the substance on paper. You
can't imagine the satisfaction I received by noting the appeal the magazine has
among the youth. I hope that the news of this achievement would inspire someone
somewhere just as it inspired me several years go when I was a youth of
impressionable age. This has been my aim all along when I first decided to
respond to your request. I very sincerely appreciate your efforts
in doing the necessary legwork to probe the connection further . As
you might surmise, I know not a word of Tamil, but I would be sure to have my
Tamil friends here help me digest the attachments you were kind enough to send.
Thanks again.
Regards,
Gurkirpal
புதிய தலைமுறையில் வெளியான “அந்த 7 நிமிடங்கள்” கட்டுரையை இங்கே கிளிக் செய்தால் பார்க்கலாம்
http://ramananvsv.blogspot.in/2012/08/7.html