அடுத்த
மாதம் உங்களுடைய 90வது பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும்?. சொல்லுங்கள் என கிழவரின் மகன், மகள், பேரக்குழந்தைகள் கொண்ட அந்த
சந்தோஷமான பெரிய குடும்பத்தினர் கேட்டனர். ”பரிசெல்லாம் வேண்டாம். அன்று எல்லோரும்
வந்துவிடுங்கள் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது” என்றார் தாத்தா.
அவர்
1989லிருந்து 93 வரை அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியாக
இருந்த ஜார்ஜ் புஷ். பின்னாளில்இவரது மகன் புஷ்ஷும் ஜனாதிபதியாக இருந்த்தால் இவரை சீனியர் புஷ் என பத்திரிகைகள் அழைக்கின்றன.
குடும்பத்தினர் சென்ற பின் புஷ் தன் மனைவியிடம்
சொன்னது “ அன்று நான் பாரசூட்டின் மூலம் குதிக்க
விரும்புகிறேன். நண்பர்களிடம் சொல்லி ஏற்பாடுகள் செய் விஷயம் ரகசியமாக இருக்கட்டும் என்றார். .
அவருக்கு உயர் ரத்த அழுத்தம், நெஞ்சில் சளிகட்டுதல்,சர்க்கரை
போன்ற தொல்லைகள் இருப்பதால் இது ஆபத்தான முயற்சி
வேண்டாம் என்றார்கள் டாக்டர்கள். முன்னாள் ஜனாதிபதி இத்தகைய செயல்களில் ஈடுபடுவது அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பிரச்சனைகளை எழுப்பும்
என ராணுவ அதிகாரிகள் சொன்னார்கள். இம்மாதிரி சாகஸ செயல்களுக்கு அவருக்கு இன்ஷ்யூரன்ஸ்
இல்லை என்றார்கள் அவரது இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகாரர்கள்.
புஷ்
தாத்தா எதைப்பற்றியும் கவலைப்படாமல் நண்பர்களின் உதவியுடன் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.,
அவரின் உடல் நிலை, வானிலை போன்றவற்றால் எந்த
நிமிடத்திலும் திட்டம் கைவிடப்படலாம் என்பதால். நிகழ்ச்சி பொதுமக்களுக்கு அறிவிக்க
படவில்லை. ஆனாலும் ஒரு சிலருக்கே தெரிந்த விஷயம்
மெல்ல கசிந்துவிட்டது. புஷ் வேறு தனது டிவிட்டரில் இங்கு பருவ நிலை இதமாக இருக்கிறது. பாராசூட்டில் குதிக்கலாம்
போலிருக்கிறது என கோடிகாட்டியிருந்தார்.
பிறந்த நாள் அன்று காலை அவரது விடுமுறைகால வீட்டு தோட்டத்தில் 6 மகன், மகள்,
14 பேர குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் ,உறவினர்கள், நண்பர்கள், என 200பேர் கேக் வெட்டி ஹாப்பி பெர்த்டே பாடிய பின்னர். காத்திருந்த
ஹெலிகாப்டரில் அவரது சக்கர நாற்காலியிலிருந்து
ஏற்றபட்டார். ஆம்!. கடந்த இரண்டு ஆண்டுகளாக
அவர் நடமாடுவது சக்கர நாற்காலியில் தான். தக்க
உடைய அணிந்து கொண்டு ஹெலிகாப்டர் 6000 அடி உயரத்தை தாண்டியதும் பாராசூட்டுடன் குதிக்க
தயாராக இருந்தார் புஷ்
செய்தி பேஸ்புக், டிவிட்டர் மூலம் பரவியிருந்ததால், திட்டமிட்டபடி இறங்க வேண்டிய இடமான
உள்ளூர் சர்ச்சின் பின்னாலுள்ள புல் வெளியில்
ஆவலுடன் மக்கள் கூட்டம். வெள்ளை ஆரஞ்சு
நிற பாரசூட் வானில் விரிய ஆரம்பித்ததிலுருந்து
இறங்கும் வரை நகர மக்களின் ஆராவாரமும் கைதட்டலும்
தொடர்ந்தது.
பத்திரமாக
தரையிறங்கினார் புஷ். அவரது முழங்காலுக்கு கீழே கால்கள் செயல்படுவதில்லை இல்லையாதாலால்,
அவரால் தறையிறாங்கியவுடன் பாரசூட்டுடன் ஓடவோ அல்லது நடக்கவோ முடியாமல் முன் புறமாக
விழுந்து பாராசூட்டால் சில நிமிடங்கள் இழுத்து செல்லபட்டார். இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்த அமெரிக்க விமான
படையினர் பாதுகாப்புகாக உடன் பாராசூட்டில் பறந்து வந்தவர்கள் உடனே பாய்ந்து உதவிசெய்து
அவரை சக்கர நாற்காலியில் உட்கார வைத்துவிட்டனர்.
”ஆச்சரியமான தாத்தாதான். ஆனால் எனக்கு
பயமாக இருந்ததால் கண்களை மூடி.க்கொண்டுவிட்டேன்” என்றார் சிறுவயது கொள்ளு பேத்திகளில்
ஒருவர்.
”அப்பா
உங்கள் சாதனைகளில் இது முக்கியமானது. நான் கூட இதுபோல செய்யப்போகிறேன்” என்றார். மகன்
புஷ். (இதை கிண்டலடித்து அமெரிக்காவில் நிறைய ஜோக்குகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன) எல்லாவற்றையும் ஒரு யூகேஜி குழந்தையின் சிரிப்போடு
ஏற்றுகொண்ட புஷ் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டார்.
பிறந்த
நாளுக்கு ஏன் இந்த பாரச்சூட் குதிப்பு?. ஜார்ஜ்
புஷ் இரண்டாவது உலகப்போரில் பணியாற்றிய அதிகாரி. ஒரு கட்டத்தில் சுட்டுவிழ்த்தபட்ட விமானத்திலிருந்து பாராசூட்டின்
மூலம் குதித்து வினாடி நேரத்தில் உயிர்தப்பியவர். டென்னிஸ் கோல்ப், பேஸ்கட்பால் என எல்லாவிளையாட்டிலும்
ஆர்வம் கொண்டவர். வெள்ளை மாளிகையில் வசித்தபோது ஜனாதிபதி ஜாகிங்க்காக தனி பாதை அமைத்தவர்,தனது
80 பிறந்தாநாளின் போதும் விமானத்திலிருந்து குதித்தவர். மனத்தளவில் நான் ஃபிட்டாக இருக்கிறேன்
என்பதை சோதித்துகொள்ளவும், காட்ட விரும்பினேன் என்கிறார்.
”இதை உங்கள் வாழ்நாள் சாதனையாக பதிவு செய்திருக்கிறீர்கள்”
என சொன்ன ஒரு நண்பரிடம், “ வாழ்க்கையை அதற்குள் முடித்துவிடாதீர்கள். 95 வது பிறந்தநாளுக்கு 7000 அடியிலிருந்து குதிக்க
போகிறார்” என்று சொன்னவர் புஷ்ஷின் மனைவி பார்பாரா
புஷ்
ரமணன்
(கல்கி 6/7/14)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்