புதிய தலைமுறை 31/07/14 இதழலில் எழுதியது.
உலக பொருளாதாரத்தில் பிரிக்ச் நாடுகளின் பங்களிப்பு 20 %. இந்த நாடுகளின் மொத்த அன்னிய் செலாவணியின் கையிருப்பு 16000 டிரில்லியன் அமெரிக்க டாலார்கள். (ஒரு டிரில்லியன் =10,000கோடி)
“சீனா தூங்கிக்கொண்டே இருக்கட்டும். அது கண்விழித்து
விட்டால் உலகையே உலுக்கிவிடும்” என்று மாவீரன் நெப்போலியன் ஒரு முறை சொன்னார்.
ஆனால்
சீனா கண்விழித்து விட்டது. நெப்போலியன் சொன்னது போலவே அதன் பொருளாதார வளர்ச்சியை பார்த்து
உலகமே அதிர்ச்சியடைந்து வருகிறது. இந்த அசுரத்தனமான வளர்ச்சிக்கான பல்வேறு காரணங்களை உலகெங்கும் நிபுணர்கள்
அலசி ஆராயந்துகொண்டிருக்கின்றனர். அந்த முடிவுகளை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சீனா
ஆச்சரியங்களை தொடர்ந்து அளித்துகொண்டே இருக்கிறது. கடந்த வாரம் பிரேசிலில் நடந்து முடிந்த பிரிக் நாடுகளின்
மாநாட்டில் அறிவிக்க பட்ட முக்கிய முடிவான ”பிரிக் நாடுகளின் கூட்டமைப்பு உலக வங்கிக்கு நிகராக ஒரு வங்கியை நிறுவப்போகிறது”
என்பது அதில் ஒன்று.
2001ல்
நியூயார்க் நகரை சேர்ந்த ’கோல்டுமேன் சாக்ஸ்’ என்ற சர்வ தேச பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம்
வெளியிட்ட ஒரு அறிக்கை உலகின் பொருளாதார கண்ணோட்த்தில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
அந்த அறிக்கையில்தான் முதன் முதலில் பிரிக் (BRIC) என்ற சொல் பயன்படுத்தபடுகிறது. பயன்படுத்தியவர்
அறிக்கையை தயாரித்த ஜிம் ஓ நில்.பிரேசில்.ரஷ்யா,இந்தியா சீனா போன்ற நாடுகளை பொருளாரீதியாக வகைப்படுத்தி அதன் ஆங்கில பெயர்களின் முதல் எழுத்துகளை
ஒன்று சேர்த்து பிர்க் நாடுகள் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கையில். இந்த நாடுகள் அடுத்த 50 ஆண்டுகளில் பொருளாதாரத்தில்
மிக வளர்ச்சி அடையும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அடுத்தபடி ஜப்பான் ஜெர்மனியை
முந்திக்கொண்டு இந்தியா 3வது இடத்தை அடையும் எனகுறிப்பிட்டிருந்தார். இந்த நாடுகள்
ஒருங்கிணைந்த வளர்ச்சி அமெரிக்காவின் வளர்ச்சியைவிடவும்
அதிகமாகிவிடும் என்றும் அந்த அறிக்கை சொல்லியது.
ஒரு
முக்கியமான அறிக்கையாக மட்டும் பேசபட்டுகொண்டிருந்த இதற்கு செயல் வடிவம் கொடுக்க
(BRIC) என்ற அமைப்பை உருவாக்க்கும் முயற்சியை முதலில் எடுத்தவர் அன்றைய இந்திய பிரதமர்
மன்மோகன்சிங். 2006ல் நியூயார்க்கில் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் நாலு நாடுகளுடையே துவங்கிய பேச்சுக்கள் இரண்டாண்டுகளில் 4 முறைகள் தொடர்ந்து 2008ல் ரஷ்யாவில் நடந்த முதல் மாநாட்டில் அமைப்பு ரீதியாக BRIC உருவானது..2010ல் தென் ஆப்பிரிக்கா இணைந்த்து,. அதனால் BRIC என்பது BRICS ஆனதைத் தொடர்ந்து உறுப்பினர் நாடுகளில் ஆண்டுதோறும்
மாநாடுகள் நடந்த பின்னர் இம்முறை 6 வது மாநாடு
பிரேசிலில் சமீபத்தில் நடந்தது. அதில் எடுக்க
பட்ட ஒரு முக்கிய முடிவு உலக பொருளாதாரத்தில்
ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது வல்லுனார்களின்
கணிப்பு.
அதுதான் ”பிரிக்கின் வளர்ச்சி வங்கி”. மொத்த மூதலீடு 100 பில்லியன் டாலர்கள். அவசர நிலை
நேர்ந்தால் பயன்படுத்திகொள்ள ஒரு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ரிசர்வ் நிதியாக
ஒதுக்க பட்டிருக்கிறது. முதலீட்டை
உறுப்பு நாடுகள் சம அளவில் ஆண்டு தவணைகளாக கொண்டுவரும். கடன் வசதிகள் 2016ல் துவங்கும்.
தலமை அலுவலகம் சீனாவின் ஷ்யாங்க் நகரில் இயங்கும் வங்கியின் முதல் தலைவர் இந்தியராக இருப்பார் என்று மாநாட்டில்
முடிவு செய்யபட்டது.
கூட்டாக சில நாடுகள் ஒரு வளர்ச்சி வங்கியை ஏற்படுத்திகொள்வது அவ்வளவு பெரிய விஷயமா என கேட்கிறீர்களா? ஆம். இது நாடுகளுக்கிடையே பரஸ்பரம் கடனுதவிக்காக உருவாக்கபட்டிருக்கும் ஒரு சதாரண நிதி ஆணையம் மட்டுமில்லை.
அதைவிட வலிமையாக இயங்கபோகும் இன்னொரு உலக வங்கி.
உலகளவில் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்த
உறுப்பினர் நாடுகளுக்கு கடன் வழங்கும் நிதி ஆணையம் ஐஎம்எஃ(IMF) ஆனால் உறுப்பு நாடுகளுக்கு கடன் உரிமை பெறும் இருந்தாலும்
அது பல விதிமுறைகளுக்கு உட்பட்டது. மேலும் கடன் வசதி அந்த நாடு செலுத்தியிருக்கும்
முதலில் செலுத்தியிருக்கும் மூலதனத்தின் அடிப்படையில்
தான் இருக்கும். கூடுதல் நிதி பெற வங்கியின்
நிபந்தனைகளை ஏற்கவேண்டும் இந்த நிபந்தனைகள் உறுப்பு நாட்டின் பொருளாதார சீரமைப்பு என்ற
பெயரில் கட்டளையாகவே இடப்படும். அதிக மூலதனமிட்டிருப்பதால் இந்த உலக வங்கியில் அமெரிக்க
நாட்டின் விருப்பு/வெறுப்புகளே அதன் கட்டளைகளில் பிரதிபலித்து கொண்டிருந்தது. இது கடன்
பெறும் நாடுகளின் சுதந்திரத்தையும் பொருளாதாரத்தையும்,
அன்னிய செலாவணி இருப்பையும் பாதிக்கும் விஷயமாக இருந்தது. மேலும் அமெரிக்கர்கள் தங்கள்
டாலரை வலுவாக்க இந்த வங்கியை மறைமுகமாக பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள் சுருக்கமாக சொல்லவதானால் அமெரிக்க அண்ணனின் நாட்டமை அதிகமாக இருந்தது. உலகின் பல நாடுகள் இந்த நிலைக்கு
ஒரு மாற்று ஏற்படுத்துவது பற்றி கடந்த சில ஆண்டுகளாக ஆலோசித்து கொண்டிருந்தன. வசதியாக
வந்து சேர்ந்த்து பிரிக் நாடுகளுக்கு எழுந்த அதே எண்ணம்.
. உலக பொருளாதாரத்தில் மெல்ல பிரிக்நாடுகள் ஒரு வலிமையான இடத்தை அடைந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு (பெட்டியில்
செய்தி படங்கள்) பிரிக் அமைப்பு மூலம் இந்த வங்கியை ஏற்படுத்துவதில் இந்தியா தீவீரமாக இருந்து இன்று வெற்றிபெற்றிருக்கிறது.
IMF
வழங்கும் கடன் வசதியை பிரிக் அமைப்பில் சேரும் எல்லா நாடுகளும் இந்த வங்கியிலிருந்து பெறமுடியும்.
உறுப்பினாரக வரிசையில் காத்திருப்பது இந்தோனிஷியா,துருக்கி, அர்ஜெண்டைனா ஈரான், நைஜிரியா
போன்ற நாடுகள். பிரிக் வங்கி கடனுதவியையும் தாண்டி உறுப்பு நாடுகளிடையே நடைபெறும் ஏற்றுமதி
இறக்குமதி பரிவர்த்தனைகளை கணக்கிட்டு இறுதியில் நிகரமாக வரும் தொகையை அந்தந்த நாட்டுக்கு பட்டுவாடா அல்லது வசூல் செய்யும் ஒருமுறையையும் கொண்டுவரப்போகிறார்கள். இது
முறையாக செயல்பட்டு நிலைத்து நிற்குமானால்
உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் குறையும். வளரும் நாடுகளின் பொருளாதாரம்
அமெரிக்க பொருளாதார விழ்ச்சிகளினால் பாதிக்காது.
சீனாவின் வளர்ச்சி வேகத்தை பார்க்கும் போது
2050க்குள் அமெரிக்காவை பின் தள்ளி பொருளாதார உலகின் முதல் நாடாகவிடும் என ஒரு கணிப்பு
கூறுகிறது. பிரிக் வளர்ச்சி வங்கி அதன் முதல் படியோ?
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்