இன்று
மதியம் ஒரு போன் “ என்
பெயர் நடராஜன் பள்ளித்தலமையாசிரியர். ஊட்டியிலிருந்து பேசுகிறேன், உங்கள்
கடைசிகோடு புத்தகம் படித்து கடந்த இரண்டு
நாட்களாக அதன் தாக்கத்தில் இருக்கிறேன்.
அருமையான புத்தகம்,
நேற்று வகுப்பில் மாணவர்களுக்கு
இந்திய மேப்பை காட்டி அது
பற்றி பேசினேன்” என்றார். எழுதுபவனுக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்?
சந்தோஷமான
அதிர்ச்சி. கடந்த வாரம் சன்
டிவியில் ”வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில்
ராஜாவும் பாரதிபாஸ்கரும் கடைசிக்கோடு புத்தகத்தை விமர்சித்திருக்கிறார்கள். அதைப்பார்த்த உடனே திரு நாடராஜன், ராஜாவை தொடர்பு
கொண்டு கவிதாவெளீயிடு என்பதை அறிந்து பிரசுரத்தினை தொடர்பு
கொண்டு புத்தகம் வாங்கி படித்து பின் எனக்கு போன் செய்திருக்கிறார். அந்த நிகழ்ச்சிபற்றி எனக்கு தெரியாதால் நான் அன்று பார்க்கவில்லை. இன்றுதான் யூ டுபில் பார்த்தேன்
.
அந்த விமர்சனத்தை இங்கே கிளிக் செய்து யூ டூயூபில் பார்க்கலாம்
.
அந்த விமர்சனத்தை இங்கே கிளிக் செய்து யூ டூயூபில் பார்க்கலாம்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்