14/8/14

சத்தமில்லாமல் ஒரு சாதனைஇமயமலையின் மடியில் திரிகூட மலைச்சரிவிவில் 5200 அடி உயரத்தில் ஜம்முவிலிருந்து 50 கீமீ தொலைவில் இருக்கிறது வைஷ்ணோதேவி கோவில். ஆண்டுக்கு  50 லட்சம் பக்கதர்களை ஈர்க்கும் இந்த கோவிலுக்கு   செல்ல ரயில் வசதி கடந்த மாதம் தான் துவக்க பட்டிருக்கிறது.  அருகில் இருக்கும் கத்ரா  என்ற நகரத்தின் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் திறந்துவைக்கும் அளவுக்கு இந்த கிராம ஸ்டேஷனுக்கு என்ன முக்கியத்துவம்.?

 ஜம்மூ காஷமீர பகுதிகளில் ரயில் பாதைகள் என்பது நாட்டின் விடுதலைக்கு முன்பிருந்தே பேசபட்டக்கொண்டிருக்கும் ஒரு விஷயம். ஆனால் நிதி நிலைமை,அரசியல், தீவரவாதிகள் அதீதமானபனி, குளிர் போன்ற பல பிரச்னைகளினால் எந்த முன்னேற்றமும் காணமலிருந்தது.   கடந்த சில ஆண்டுகளாக மிக அமைதியாக  கடும் சவாலான இந்த பணிகளை, உலக சாதனைகளை படைக்கும்  அளவில் செய்து கொண்டிருக்கிறது இந்திய ரயில்வேயின் பொறியியல் துறை. ஜம்முவிலிருந்து கத்ராவின் அருகிலுள்ள  ராணுவ கேந்திர
மான உதம்பூர் என்ற நகர் வரை சில ஆண்டுகளுக்கு முன்னரே ரயில் பாதைகள் அமைக்கபட்டுவிட்டாலும் அங்கிருந்து கத்ரா வரையான் 26 கீமி  தூர பாதை போட 4 ஆண்டுகளாகின.  காரணம் இந்த இடைப்பட்ட தூரத்திலிருக்கும் மலைகளும் கணவாய்களும்.  7 பெரிய, 29 சிறிய பாலங்கள் ஒரு 11 கீமி தூரத்திற்கு ஒரேகுகைப்பாதை (டனல்) 22 வளைவுகள், மலைகளுக்கிடையே குறுகிய இடைவெளி (ஒரு இடத்தில் 25 அடிகள் மட்டுமே)  என சவால்கள் நிறைந்த பணி இது. நிச்சியம் முடியாது என வெளிநாட்டு நிற்வனங்கள் கூட ஏற்க தயங்கிய பணி இது.  மொத்த செலவு இந்த 26 கீமிக்கு 1130 கோடி ரூபாய்கள்.

 இந்திய ரயிவேயின் சவாலான பணி இதோடு நிற்கவில்லை. பாராமுல்லா என்ற ஜம்மூவின் மற்றொரு எல்லை வரை  தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த பாதையில்   இரண்டு உயர்ந்த மலைகளுக்கு இடையே சென்னாப் என்ற நதி ஒடுகிறது 4000 அடி அகலத்தில் இருக்கும் இந்த நதியின் இருப்புறமும் இருக்கும் இரண்டு மலைகளை இணைத்து ஒரு பாலம் அமைக்கிறார்கள். நதியின் நீர் மட்டத்திலிருந்து  1200 அடி உயரத்தில் நிறுவபட்டுக்கொண்டிருக்கும் இந்த பாலம் இரண்டு மலைகளையும்  இணைக்கும் ஒரு பிரமாண்டமான வில் போன்ற அமைப்பின் மீது  ரயில் பாதை அமையப்போகிறது. முடிந்த பின் இதுதான் உலகின் மிக உயரமான இடத்தில் இருக்கும் ரயில் பாதையாக இருக்கும். பாலம் துவங்கும் இடத்திலும் முடியும் இடத்திலும் மலையை குடைந்த குகை பாதைகள்.

 குதுப்மினாரை விட 5 மடங்கும், பாரிஸ் ஈஃபில் டவரைவிடவும் அதிக உயரத்தில் இருக்கும். இந்த இடத்தில் பாலமும் அதில் ரயில் பயணமும் பாதுகாப்பாக இருக்குமா என்பது குறித்து  ஐஐடி, ராணுவ ஆராய்ச்சிமையங்கள், தனியார் நிறுவனங்கள் 6 ஆண்டுகள் ஆராய்ந்திருக்கிறார்கள். அந்த கணவாயில் காற்றுகாலங்களில் பயங்கரமான காற்று வீசும். அதனால் காற்றின் வேகத்தை கண்காணிக்கும் கம்யூட்டர்கள் கருவிகள் பொருத்தபட்டிருக்கும் இந்த பாலம் அம்மாதிரி சமயங்களில் ரயிலை செல்ல அனுமதிக்காது.  26000 டன் ஸ்டீல் பயன்படுத்தி கட்டபடும் இந்த பாலத்திற்கு எளிதில் பெயிண்ட் அடிக்கமுடியாதால் 35 வருடத்திற்கு நிற்கும் ஒரு புதுவகை பெயிண்டை பயன்படுத்தபோகிறார்கள்.
உலக பொறியிற்சாதனைகளைல் ஒன்றாக நிறக் போகிற இந்த பாலம் முழுக்கமுழுக்க இந்திய தொழிநுட்பத்தினால் ஆனது.  ஆலோசனைகள் அன்னிய நிறுவனங்களிடமிருந்து பெறபட்டாலும் கட்டுமானம், நிர்வாகம் கொங்கன் ரெயில்வேயினுடையது. பல மலைகள குடைந்து ரயில் பாதைகள் அமைத்த அனுபவம் மிக்கவர்கள்.
பல ஆயிரம்கோடிகள் செலவில் உருவாகும் இந்த பாலம் எல்லைபகுதியில், தீவரவாதிஅளின் அச்சுறுத்தல்கள் நிறைந்த பகுதியில் இருப்பாதால் தொடர்ந்து  இந்திய ராணுவத்தின் கண்காணிப்பில் இருக்கும்.அடுத்த முறை ரயில் பயணத்தின் போது வசதி குறைவுகள் பிரச்சனைகளை பற்றி விமர்சிக்கும் முன் ஒரு கணம்  நமது ரயில்வேயின் இந்த சாதனையையும், கடுமையாக உழைக்கும் பொரியிலாளர்களையும்  நினைத்து பாருங்கள்  நன்றி   சொல்லுங்கள்.

10/08/14 கல்கியிலிருந்து...


3 கருத்துகள் :

 1. ரகுநாத் ஜாம்ஷெட்பூர்14 ஆகஸ்ட், 2014 அன்று AM 11:28

  இதுவரை தெரியாத விஷயம். ஒரு உலக ரெகார்ட்டாகப் போகும் விஷயத்தை இதுவரை ஏன் பத்திரிகைகளில் வரவில்லை என்று ஆச்சையமாக இருக்கிறது. ந்னறி சார். அம்மாவிற்கு படித்து காட்டினேன். அவ்ர் ஒரு ரெயிவே என்ஞ்னியரின் மனைவி என்பதால் மிகுந்த சந்தோஷப்பட்டார்கள்
  ரகுநாத் ஜாம்ஷ்ட்பூர்

  பதிலளிநீக்கு
 2. சத்தமில்லாமல் ஒரு சாதனை- பிரமிப்பாக இருக்கிறது . (தீவிரவாத அச்சுறுத்தல்கள் இயற்கையின்சீற்றங்கள் ) இதை கட்டி காப்பாற்ற வேண்ண்டுமே என்ற கவலையும் இருக்கின்றது

  பதிலளிநீக்கு
 3. இதில் பயணம் செய்வது மிகவும் த்ரில் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதய பலவீனமானவர்கள் இந்தப் பாதையில் பயணம் செய்ய முடியாது. அம்மா...டி!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்