-அமெரிககாவிலிருந்து ஜனனி ஸ்ரீராம்
இந்தியாவிலிருந்து அரசியல் தலைவர்கள், பிரதமர் போன்றவர்கள் வரும்போது
இங்குள்ள இந்திய சங்கங்கள் வரவேற்பு கொடுப்பதும் கூட்டங்களுக்கும் டின்னர்களுக்கும்
ஏற்பாடு செய்வது வழக்கம். ஆனால் இம்முறை பிரதமர்
மோடியின் வருகைக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
அனேகமாக எல்லா அமெரிக்க மாநிலத்தில் வசிக்கும் பல இந்தியர்களும் இந்திய அமைப்புகளும் மோடியின்
கூட்டத்தில் பங்கேற்க ஆவலாக இருக்கிறார்கள்.
இம்மாதிரி கூட்டங்களுக்கு நியூயார்க் அல்லது வாஷிங்டன் நகரங்களில் உள்ள அமைப்புகள் அறிவிப்பு வெளியிடும். ஆனால் இம்முறை
மிகப்பெரிய அளவில் பங்கேற்பாளார்களை எதிர்பார்ப்பதால் எல்லா மாநில இந்திய சங்கங்களின் பிரதிநிதிகளை இணைத்து
இண்டோ-அமெரிக்கன் கம்யூனிட்டி பௌண்டேஷன் என்ற
அமைப்பு ஒன்று இதற்காகவே நிறுவபட்டது. 20க்க்கும் மேற்பட்ட தமிழ் சங்களும் இதில் அடக்கம் இவர்கள்
இந்த வரவேற்புக்கு அமைத்திருக்கும் கமிட்டியில் அமெரிக்க குஜராத்திகள் அதிகம் என்றாலும் 2 மூஸ்லீம்கள்,
2 கிருத்துவர்கள், ஒரு சீக்கியர் என முழு இந்திய முகத்தை காட்டியிருக்கிறார்கள். கமிட்டியில்
இருக்கும் ஒரே தமிழர் அமெரிக்க தமிழ் சங்க
தலைவர் பிர்காஷ் எம் ஸ்வாமி.
இவர்கள் இந்தியசங்களின் நெட் ஒர்க்கில் தனி வெப்ஸைட் செய்திகள் அறிவிப்புகள் என கலக்கிவிட்டார்கள்.
வெள்ளை மாளிகைக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் எவரும் இரண்டுநாள் தங்கியதில்லை, மோடி இருக்கும் 3 நாட்களில் 26 மீட்டிங்கள், வாஷிங்டனில் ஹோட்டலில் இல்லாமல் வெள்ளை மாளிகைக்கு எதிரிலுள்ள பிளேர்
ஹவுஸில் தங்குவது, இரண்டுநாள் வெள்ளை மாளிகை
விஜயம் அதில் ஒரு நாள் ஒபாமா குடும்பத்தினர் தரும் தனி விருந்து.- என்பதெல்லாம் இங்கு மிகப்பெரிய கெளரவமாக பார்க்கபடும்
விஷயங்கள்
இந்திய பிரதமர் பேசப்போகும் கூட்டத்தில் பங்குபெறப்போகிறவரகள் பதிவு செய்துகொண்டு அனுமதி
பாஸ்கள் பெற வேண்டும் என அறிவித்திருந்தார்கள். நீயூயார்க்கில் மோடி அமெரிக்க இந்தியர்களிடம் பேசப்போகும் மாடிஸன் சதுக்கத்தில்
30,00 பேர் அமரலாம். ஆனால் இது வரை பதிவு செய்திருப்பவர்கள் 50,000 பேர். அதனால் (லாட்ரி) குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அனுமதி டிக்கெட்களை வழங்க போகிறார்கள். பதிவு செய்தவர்கள் பிட்ஸ்பர்க்
வெங்கடசலாபதியை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி டிக்கெட் லாட்ரி நடப்பது இதுவே முதல் முறை. பதிவு செய்திருப்பவர்கள் இங்குள்ள படேல்கள் மட்டும்
இல்லை. எல்லா மாநில இந்தியர்களும். குறிப்பாக நம்ம ஊர் சாப்ட்வேர் டெக்கிகள் 30-40 வயதுக்காரகள்
தான் அதிகம். என்கிறார் நீயூயார்க் அருகிலுள்ள
டெலவேர் மாநில பகுதி தமிழ் சங்க தலவர் திரு முத்துமணி. கலிபோர்னியா பகுதியில் வாழும் இலங்கை தமிழர்களும்
பெருமளவில் பதிவு செய்திருக்கிறார்கள்
எல்லோருக்கும் மோடி என்னபேசப்போகிறார் என்பதைவிட
மோடியை நேரில் பார்க்கவேண்டும் முடிந்தால் ஒரு படம் எடுத்துகொள்ளவேண்டும் என்பதில்
ஆர்வமாகயிருக்கிறார்கள். அவர் போடும் அரைக்கை ஜாக்கெட்கள் பேஷன் ஸெட்மெண்ட் ஆகி விற்று தள்ளுகிறது
நீயூயார்க்கில்
ஐக்கிய நாடு சபையில் பேச வரும் மோடிக்கு நம்மூர் ஸ்டைலில் ஒரு பேரணியுடன் வரவேற்பு
ஏற்பாடு செய்திருக்கிறார்கள் இதற்காக அண்டை மாநிலங்களிலிருந்து பல பெரிய பஸ்களில் வரப்போகிறார்கள். அதற்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன.
அமெரிக்க
சட்ட விதிகளின்படி மதங்களின் சுதந்திரதிற்கு எதிரான கொள்கைகள் கொண்ட வெளிநாட்டவர் என்பதால்
10 ஆண்டுகளாக விசா வழங்க மறுத்த தேசத்திற்கு ஒரு நாட்டின் பிரதமராக வரவேற்கபடுவதால் அமெரிக்க வாழ் இந்தியர்களின் பெரும்
உற்சாகமாக இருப்பது பற்றி இதுவரை எந்த
இந்திய தலைவரின் வருகைக்கும் முக்கியத்துவம் தராத
இங்குள்ள பத்திரிகைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன..
(நன்றி கல்கி 27/09/14 இதழ்)
என்னது பஸ்களா? பிரியாணியும் உண்டா? தமிழ்நாட்டுதலைகள் அங்கேயும் போய்ட்டங்களா?
பதிலளிநீக்கு