டெல்லி மிருக காட்சி சாலையில் நிகழந்த கொடூரத்தின் செய்திகளைப்பார்த்தபோது சில ஆண்டுகளுக்கு முன் பாங்காங்க் சபாரி யில் எனக்கு நேர்ந்த அனுபவமும் அதை எழுதியதும் நினைவில் வந்தது.
மெல்லப்போய்க்கொண்டிருந்த கார்
சட்டென்று நின்றது. படக்கென்ற சத்ததுடன் அது காரின் முன்புறம் தாவி பானட்டில் அமர்ந்து
கொண்டது. காரின் உள்ளே அதுவரை பேசிக்கொண்டே வந்தவர்களின் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.
டிரைவர் செய்வதறியாது எஞ்ஞினை ஆப் செய்துவிட்டார். ரோடைபார்த்து உட்கார்ந்திருந்த அது
மெல்ல திரும்பி பார்த்து காரின் வைப்பரை காலால் நோண்ட ஆரம்பித்தது.பின்சீட்டிலிருந்த
உள்ளூர் நண்பர் மெல்ல நழுவி சீட்டின் இடையில் பதுங்குகிறார்.மற்றவர் பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறார்.
தாய்லாந்துகார டிரைவர் பையிலிருந்த புத்தர் படத்தை எடுத்துகையில் வைத்துக்கொண்டு கண்களை
மூடி அழத்தொடங்குகிறார். முன் சீட்டில் பயத்தில் உரைந்துபோயிருந்த நான் கண்ணாடிக்கு
வெளியே சில அங்குல துராத்தில் குளோசப்பில்
தெரியும் அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரே அடியில் இந்த கண்னாடியை நொறுக்கினால்
அடுத்தவினாடி நாம்காலி என்ற நிலையில் கண்முன்னே கலடைஸ்கோப்பாக மனைவி, குழந்தைகள்.அப்பா,
தம்பி எலோரும் வந்துபோகிறார்கள்.செய்ய முயற்சிக்கும் பிராத்தனைகள் எல்லாம் மறந்துபோகிறது. எங்களுக்கு மரணத்தின் நுனியை தொட்டுகாட்டி கொண்டிருக்கும்
அந்த புலி அதைப்பற்றி கவலைப்பாடமல் எழுந்து திரும்பி உட்கார்ந்து ரோட்டை பார்த்துகொண்டிருந்தது.
பாங்காங் நருக்கு வெளியே இருக்கிறது சபாரி வோர்ல்ட்., டால்பின் ஷோ நடைபெறும் மரையின்
லாண்ட், பலவண்ண பறவைகள் நிறைந்த பேர்ட்ஸ் லாண்ட் என180 எக்கரில் பறந்து விரிந்திருப்பது.
இயற்கை சுழலில் மிருகங்கள் சுதந்திரமாக திரிகிறது. தங்களிருப்பிடத்திலிருந்து சட்டென்று வெளியே வரமுடியாத
அமைப்பில் கொடிய மிருகங்கள். நட்பாக பழகும் மிருகங்கள் எல்லாம். வாழுமிடம். 20மைல் நீண்ட அந்த
ரோடில் நமது காரிலேயோ அல்லது அவர்களின் பஸ்லியோ
போகலாம். காரைவிட வேகமாகச்செல்லும் நெருப்புகோழி, கார் கண்ணாடிக்கு அருகில் வந்து ஹலோ
சொல்லுகிறது. உயரமான ஒலைக் குடைகளின்கீழிருக்கும் ஒட்டைசிவிங்கி மெல்ல வந்து காரின்
டாப்பை மூக்கால் தொடுகிறது. கைகெட்டும் தூரத்தில் காண்டாமிருகம்
இப்படி ஒரு புதிய அனுபத்திலில்
அந்த சபாரி பார்க்குக்குள் போனபோது தான் இது நிகழ்ந்தது. டிக்கட்டுடன் தரும் பாதுகாப்பு
குறிப்பில் விபத்துகள் நிகழ வாய்ப்பில்லை.அப்படி நேர்ந்தால் பைனாகுலரில் கவனித்துக்கொண்டிருக்கும்
மார்ஷல்கள் வந்து மிருகத்தை வெளியேற்றிவிடுவார்கள் என்றும் நாம் செய்யகூடாதவைகளையும்
பட்டியிலிட்டிருக்கிறார்கள். அதில் முக்கியமானது கத்தாதீர்கள்காரைவிட்டு இறங்காதீர்கள்.ஹாரன்
அடிக்காதீர்கள் போட்டோ எடுக்காதிர்கள் என்பன.
ஐந்துநிமிடத்திற்குள் ஒருவித வினாத
ஒலியுடன் வந்தது வெள்ளை வேன். துப்பாக்கிகளுடன் கார்டுகள். வேனுக்குமுன்னே பொருத்தப்பட்ட
ஒரு கிரேன். உள்ளேயிருந்து டிரைவர் இயக்குக்கிறார்.
எதோ ஒரு வளையத்தை தூக்கிப்போட்டவுடன் காரின்மேல்
புலி எழுந்து நின்றது. உடனே கிரேனிலிருந்து கயிறுடன் தொங்கிய அரைவளைய கொக்கியை அதன் வயற்றில் மாட்டி இறுக்கி
அப்படியே தூக்கி அருகிலுள்ள அதனிடத்தில் விட்டுவிட்டார்கள். அது மெல்ல நடந்து போய் தூங்க ஆரம்பித்துவிட்டது
இது எல்லாம் நடந்தது ஐந்து நிமிடத்திற்குள் தான்.ஆனால் அது எங்கள் வாழ்க்கையின் மிக நீண்ட............ நிமிடங்கள். அருகில் வந்த அந்த கார்டு நமது காரின் கண்ணாடியை தட்டி இறக்கச்சொல்லி “ அவர் புதிதாக சேர்க்க பட்டிருக்கும் குட்டி. சில நாட்களில் பழகிவிடுவார். நீங்கள் பயப்படாமல் போங்கள்” மற்றவைகளையும் போய்ப் பாருங்கள் என்றார். ஆனால் நாங்கள் போனது -சாபரியிலிருந்து வெளியே செல்லும் கேட்டிற்கு.
இது எல்லாம் நடந்தது ஐந்து நிமிடத்திற்குள் தான்.ஆனால் அது எங்கள் வாழ்க்கையின் மிக நீண்ட............ நிமிடங்கள். அருகில் வந்த அந்த கார்டு நமது காரின் கண்ணாடியை தட்டி இறக்கச்சொல்லி “ அவர் புதிதாக சேர்க்க பட்டிருக்கும் குட்டி. சில நாட்களில் பழகிவிடுவார். நீங்கள் பயப்படாமல் போங்கள்” மற்றவைகளையும் போய்ப் பாருங்கள் என்றார். ஆனால் நாங்கள் போனது -சாபரியிலிருந்து வெளியே செல்லும் கேட்டிற்கு.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்