முன்னாள் அமைச்சர் நட்வார்சிங்கும், முன்னாள்
செயலாளர் சஞ்யைபாருவாவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சித்து
எழுதியிருக்கும் புத்தகங்கள் வெளியாயிருக்கும் இந்த நேரத்தில், மன்மோகன் சிங்கின் வாழ்க்கையின்
ஒரு பகுதியை சொல்லும் புத்தகம் ”மன்மோகன் –குருஷரன்
பற்றிய மிக தனிப்பட்ட விஷய்ங்கள்” (Strictly
Personal: Manmohan and Gursharan). வெளியாகியிருக்கிறது. எழுதியிருப்பவர் முன்னாள்
பிரதமரின் இரண்டாவது மகள் தாமன் சிங்.
மன்மோகன் தம்பதியினருக்கு 3 மகள்கள். மூவரும் தங்கள் படிப்பால் திறனால் தத்தம் துறைகளில் உயரங்களை தொட்டவர்கள். மீடியாக்களின் வெளிச்சங்கங்களை
தவிர்த்தவர்கள். முதல் மகள் உப்பிந்தர் சிங் பல்கலைகழக
பேராசிரியை. மூன்றாவது மகள் அமிர்த் சிங் சர்வ தேச மனித
உரிமை சட்டங்களில் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணி செய்துகொண்டிருப்பவர்.
இரண்டாவது
மகள் தாமன் டெல்லிகல்லூரியில் கணிதமும், குஜராத் ஆனந்த்
மேலாண்மைகல்லூரியில் நிர்வாகமும் படித்தவர். ஆசிரியையாக இருந்தவர். இதுவரை 6 புத்தகங்கள்
எழுதியிருக்கும் நூலாசிரியர். கணவர் போலீஸ் அதிகாரி. இரண்டு குழந்தைகள். தன் குடும்பத்துடன் தனியாக டெல்லியில் வசிக்கும் இவர் தன் சகோதரிகளைப் போல
மிக எளிமையானவர். செல்போன் வைத்துகொள்லவில்லை. கார் ஓட்ட டிரைவர் கிடையாது.
தனது தந்தை
மற்றும் தாயாருடன் பேசியபோது கிடைத்த தகவல்களை, தான் நேரடியாக பார்த்த
தகவல்களை தொகுத்து இந்த நூலை எழுதியுள்ளார் தாமன் சிங். நூலில்
மன்மோகன் சிங்கின் இளமை காலம் முதல் கூறப்பட்டுள்ள சுவாரசியமான பல தகவல்கள்:
1948ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமிர்தசரசில் உள்ள கால்சா
கல்லூரியில் எப்.எஸ்.சி. படிப்பில் மன்மோகன் சிங்கை சேர்த்தார் அவருடைய தந்தை.
தனது தந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப அவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். ஆனால், அது பிடிக்காமல் பாதியிலேயே நிறுத்தினார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற தீவிர தாகத்தால், பொருளாதாரம் குறித்த படிப்பை மேற்கொண்டார். பிறகு தந்தையின் வியாபாரத்தில் சேர நினைத்தார். ஆனால் அங்கு டீ வாங்கி தருவது, குடிக்க தண்ணீர் தருவது போன்ற வேலையே அவருக்கு தரப்பட்டது. அது பிடிக்காததால், படிப்புதான் முக்கியம் என்று உணர்ந்தார். அதைத் தொடர்ந்து 1948 செப்டம்பர் மாதம் இந்துக் கல்லூரியில் சேர்ந்தார். வறுமை குறித்து தனக்கிருந்த கவலை, சில நாடுகள் பணக்கார நாடாகவும், பல நாடுகள் ஏழை நாடாகவும் இருப்பது ஏன் என்ற கேள்வி, அவரை பொருளாதார படிப்பை தேர்ந்தெடுக்க வைத்தது.பொருளாதாரத்தை சிற்ப்பாக படித்து ஒரு சிறந்த அரசு அதிகாரியாகவேண்டும் என்பது அவரின் கனவாகயிருந்தது.

பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்
படித்தபோது,
செலவுக்கு போதிய பணம் இல்லாமல் தவித்தார். ஆண்டுக்கு
ஆன படிப்பு செலவு 600 பவுன் பஞ்சாப் பல்கலைகழகம் 160 பவுன் ஸ்காலர்ஷிப் கொடுத்திருந்தது. மீதி பணம் அவர்
தந்தை அனுப்பவது. அது உரிய நேரத்தில் வராது. அதனால் வெளியில் சாப்பிடவே
மாட்டார்.
அந்த பல்கலை கழகத்திதல் படிக்கும்போது பல்கலை வளாகத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் உணவையே சாப்பிடுவார். அதற்கும் பணம் இல்லாத நேரத்தில் ஒரு நாளைக்கு ஒரே ஒரு சாக்லெட் மட்டும் சாப்பிடுவார். மாதம் 25 பவுண்ட் கடன் தருவதாக சொன்ன நண்பர் தந்த பணம் 3 பவுன் மட்டுமே. வறுமையை தனது வாழ்க்கையில் உணர்ந்தவர் மன்மோகன் சிங். மிக நெருங்கிய நண்பர்களுடன் பேசும்போது, மிகவும் ஜாலியான நபர் அவர். ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப் பெயர் வைத்தே அழைப்பார். நகைச்சுவை உணர்வு அவருக்கு அதிகம். என்று எழுதியிருக்கும் தாமல்சிங் இந்த விபரங்களை சேகரிக்கபட்ட கஷ்ட்டத்தையும் சொல்லுகிறார். நணபர்களிடம் ஜோக் அடித்துகொண்டிருக்கும் அப்பா- வார்த்தைகளை மிக சிக்கனமாகத்தான் குடுமப்த்தினரிடம் உபயோகிப்பவர். ஒரு மகளாக அறிந்ததைவிட இந்த நூலாசிரியராக அவரைப்பற்றி அறிந்ததுதான் அதிகம்

நாட்டுக்காக சேவையாற்றிய அவர், அரசியல்,
அரசு வாழ்க்கைக்கே தன்னை பெரிதும் அர்ப்பணித்து கொண்டார். குடும்ப வேலைகளில் அவர் ஈடுபட்டதில்லை. முட்டை
வேகவைப்பது, டி.வி.யை ஆன் செய்வது போன்ற சின்ன சின்ன வேலைகள் கூட அவர் செய்தது இல்லை.
வீட்டுக்கு வரும்போதே ஒரு பெரிய பையில் கோப்புகள் வரும். தனது படுக்கையில் உட்கார்ந்து அந்த கோப்புகளை பார்ப்பார். அவ்வாறு கோப்புகள் இல்லாவிட்டால், புத்தகத்தை
எடுத்துக் கொள்வார் அதுவும் ஒரு பொருளாதார
புத்தகமாகத்தான் இருக்கும். என்று நூலில் தாமன் சிங் எழுதுகிறார்.
மன்மோகனும்
அவரது மனைவியும் எப்படி வாழக்கையின் எல்லா
கால கட்டங்களிலும் சந்தோஷமாக இருந்தார்கள் என்பதை எளிய ஆங்கிலத்தில் மெல்லிய
நகைச்சுவையுடன் விவரிக்கும் தாமல் இந்த புத்தகத்தில் அவர் பிரதமாராக இருந்த 10 ஆண்டு
காலத்தைப்பற்றி எதுவும் நேரிடையாக எழுதவில்லை. ஆனால் சில
இடங்களில் கோடுகாட்டபடுகிறது. இந்திரா காந்தி எமர்ஜென்சியை அறிவித்த போது அடைந்த அதிர்ச்சி, ஒரே நாள் இரவில் நிதிமந்திரியானது, ராகுலின் ஆவேச பேச்சு (காபினட் முடிவை கிழித்தது) வெளியானபோது அவர்
அமெரிக்காவிலிருந்து திரும்பிகொண்டிருந்தார். ராஜினாமா செய்துவிட்டு மீண்டும்
ஆசிரியர் பணிக்கு திரும்புங்கள் என ஒரு
நண்பர் சொன்னபோது எனக்கு நிறைய பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்று சொன்னது.
தன் அமைச்சர்களுக்காக பொறுப்பேற்றது பற்றியெல்லாம் மிகவும் மெல்லிய
இழையாகச் சொல்லபட்டிருக்கிறது.
புத்தக அறிமுக விழாவில் மன்மோகன் பிரதமராக இருந்த காலத்தை பற்றி எழுதவீர்களா? எனக்கேட்டதற்கு
தாமல் சொன்ன பதில் ”சுதந்திர
இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான அந்த கட்டங்கள் பற்றி அப்பா எழுதினால்தான்
சரியாக இருக்கும். ஒரு நாள் அவரே எழுதுவார் என நம்புகிறேன் என்றார்.
(கல்கி 7/9/14 இதழில்)
(கல்கி 7/9/14 இதழில்)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்