கிரிக்கெட் விளையாட்டுக்கும், அதன் வீர்ர்களுக்கும் கிடைக்கும் புகழும் பணமும் மற்ற விளையாட்டுகளுக்கு கிடைப்பது இல்லை. அதற்கான முயற்சிகளும் எடுப்பதில்லை. என்பது கடந்த சில ஆண்டுகளாக நாம் கேட்கும் குரல். இப்போது நமது புட்பால் வீர்ர்களுக்கும் அத்தகைய வாய்ப்புகள் உருவாகியிருக்கிறது. கிரிக்கெட் இன்று ஒரு பணம்காய்க்கும் மரமாக வளர முக்கிய காரணம் ஐபிஎல். ஒரு விளையாட்டை எப்படி வெற்றிகரமான பிஸினஸாக செய்யலாம் என்பதை செய்து செய்துகாட்டியவர்கள் இவர்கள்.
இப்போது அதைப்போல கால்பந்தாட்டத்தையும் செய்ய, சில ஆரம்ப பிரச்னைகள், சண்டைகளுக்கு பின்னர் ஐபிலை போல இந்தியன் சூப்பர்லீக் உருவானது.(ஐஎஸ்எல்) இதை நிர்வகிக்க ஒரு கம்பெனியின் பாணியில் அமைக்கபட்டிருக்கும் புட்பால் ஸ்போர்ட்ஸ் டெவல்ப்மெண்ட். டின் தலைவர் திருமதி நீதா அம்பானி. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனம் நடத்தும் அத்தனை மேட்ச்களின், விளம்பரம், டிவிஓளிபரப்பு, போன்ற சகல் உரிமைகளையும் 700கோடி களுக்கு வாங்கியிருக்கிறது ரிலெயன்ஸ் நிறுவனம்.
இந்த ஐஎஸ் எல்லின் நோக்கம் புதிய லீக் டீம்களை அமைத்து, அந்தடீம்கள் உலக புகழ்பெற்ற ஆட்டகார்களை ஏலத்தில் எடுத்து அவைகளுடன் நம் வீர்ர்களும் இணைந்து விளையாடும் மேட்ச்களினால் இந்திய கால்பந்துவிளையாட்டின் தரத்தை உலக தரத்துக்கு உயர்த்தும் என்று அறிவிக்கபட்டிருக்கிறது. அறிவிக்கபடாவிட்டாலும் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இதில் இருக்கும் ’பணம்’. விளையாட்டுவீர்ர்கள், லீக்கின் உரிமையாளர்கள், விளையாட்டு நடக்கும் நகரிலுள்ள கால்பந்து சங்கங்கள், உலகெங்கும் டிவியில் மாட்சுகளை ஒளிபரப்ப உரிமை பெற்றிருக்கும் நிறுவனங்கள் அனைவருக்கும் பெரும் அளவில் பணம் கொட்டப்போகிறது.
அதில் எட்டு நகர அணிகளுக்கான உரிமை ஏலத்தின் மூலம் முடிவு செய்யபட்டது. . கிரிக்கெட் பிரபலங்களும்,சினிமா நடிகர்களும், அணிகளை வாங்கியுள்ளனர். சில அணிகளில் உள்ளூர் நிறுவனக்களுடன் வெளிநாட்டு கால்பந்து லீக்களும் பங்குதாரர்களாகயிருக்கின்றனர். மிக்குறுகிய காலத்தில் இந்த ஏல அறிவிப்பின், முடிவுகளின் மூலம் ஐஎஸ்எல் மிக பணக்கார நிறுவனமாகியது.
சச்சின் டெண்டூல்கர் கொச்சி அணியையும் சவுரவ் கங்கூலி கொல்கத்தா அணியையும் வேறு சிலருடன் இணைந்து வாங்கியுள்ளனர். சென்னை அணியின் உரிமையாளர்கள் இந்தி நடிகர் அபிஷேக் பச்சன், கிரிக்கெட் கேப்டன் டோனி கெளஹாத்தி அணியை ஜான் ஆப்பிரஹாம்,ரந்தீர்கபூர், ஹிர்திக் ரோஷன் இணைந்து ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள்
அக்டோபர் முதல் டிசம்பர் வரை 8 இந்திய நகரங்களில் நடக்கும் 61 மேட்ச்களில் உலக கோப்பை கலபந்து விளையாட்டில் பங்கேற்க தகுதி பெற்ற 49 வீர்ர்கள் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள். விளையாட்டு தொடரை 10 நாடுகளில் ஸ்டார் நேரிடையாக ஒளிபரப்புகிறது.
ஒவ்வொரு டீமிலும் 22 ஆட்டகார்கள். இவர்களில்; 7 வெளிநாட்டு வீர்ர்கள், 14 இந்திய வீர்ரகள். ஒரு சர்வதேச புகழ்பெற்ற அடையாள” ஆட்டவீர்ர், இவர்கள் டீம்களால் மிக அதிக பணம் கொடுத்து ஏலத்தில் எடுக்கபட்டவர்கள். வெளிநாட்டு ஆட்டகார்களில் மிக அதிகமாக ஏடுக்கபட்ட ஏலம் 750,000 டாலர்கள்(4,5 கோடி) இந்திய விளையாட்டு வீர்ர்களில் அதிகம் பெற்றது 85 லட்சம்
வண்ணமையமான தொடக்க விழாவுடன் அமர்க்களமாக தொடங்கிய நாளில் நடந்த முதல் போட்டியே ரசிகர்களை மகிழ்ச்சியைலாழ்த்தியது. “ இந்திய கால்பந்து வரலாற்றில் இது மிகப்பெரிய தருணம். இந்த தொடரால் இந்தியாவில் மிகப்பெரிய கால் பந்து புரட்சி ஏற்படும் என நம்புகிறேன். இதில் எனக்கும் பங்கு இருக்கிறது என்பதில் பெருமை அடைகிறேன். ஓட்டு மொத்த தேசமும் இந்த தொடரை ஆதரிக்க வேண்டும் என்றார் அந்த விழாவில் பங்கேற்ற சச்சின் தண்டுல்கர். இந்த அணிகளில் ஒன்றைத்தவிர, மற்ற அனைத்துக்கும் வெளிநாட்டு வீர்ர்கள் தான் கேப்டன் மற்றும் கோச். இவர்கள் வழிகாட்டுதலில் நம் வீர்ர்கள் உலகதரத்துக்கு உயர்வர்கள். உலக கோப்பை மேட்சகளில் டிவியில் நாம் பார்த்த பிரபலங்கள் நமது நகரங்களில் விளையாடுகிறார்கள் என்பதால் கால்பந்து ரசிகர்களிடையே ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. இந்த தொடரில் சமீபத்தில் சென்னையில் கோவா அணிக்கும் சென்னை அணிக்கும் நேரு ஸ்டேடியத்தில் நடந்த போட்டியின் போது 10,000 பேர் பார்க்க கூடிய ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. சென்னை கால்பந்து ரசிகர்களின் ஆர்வத்தையும் பக்தியையும் அன்று பார்க்க முடிந்தது. இந்த தொடரில் முதல்கோல் அடித்த பெருமையை பெற்றவர் இந்திய வீர்ர் ப்ல்வந்து சிங். தொடர்ந்து சென்னை அணிக்காக ஆடிய பிரேசில் ஆட்டகாரர் எலோனோ புளூமர் பிரமாதமாக ஆடினார். 42 வது நிமிடத்தில் கிடைத்த ஃபிரி கிக் வாய்ப்பில் அவர் அடித்த கோலினால் தான் சென்னை அணி அன்று வென்றது. பரபரப்பான அந்த வினாடிகளுக்கு பின்னர் ஸ்டேடியத்தில் எழுந்த ஆரவாரத்தில் , கேட்ட ”சூப்பர் கோல் மச்சி” என்ற கமெண்ட் புரிண்டிருக்காவிட்டாலும் அந்த வெளிநாட்டு வீர்ருக்கு சென்னை ரசிகரிகளின் சந்தோஷம் புரிந்திருக்கும்
இந்த தொடர் இந்திய கால்பந்தாட்த்தின் தரத்தை உயர்த்தை நல்ல வாய்ப்பு, நம் வீர்ர்கள் புதிய டெக்கினிக்களையும் வெளிநாட்டு விளையாட்டுவீர்ர்களின் அணுகுமுறைகளையும் அறிந்து கொள்ள அருமையான் வாய்ப்பு என சொல்லபடுகிறது.
பிரபலங்களைக் கொண்டு வருவதால் மட்டுமே கால்பந்து விளையாட்டு இந்தியாவில் பெரும் வெற்றி அடையும் எனக் கூற முடியாது என்கிறார் இந்திய அணிக்காக எட்டு ஆண்டுகள் விளையாடியுள்ள சபீர் பாஷா. இவர் சென்னை மேட்சுக்கு சர்வதேச மைபின் பார்வையாளாரக வந்திருந்தார்.
ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள நாடுகளின் கால்பந்து சங்கங்களில் எட்டு வயது முதல் சிறுவர்களை தேர்ந்த்டுத்து தொடர்ந்து பயிற்சி அளித்து சிறந்த வீர்ர்களாக உருவாக்குகிறார்கள். அதை நாம் செய்ய வேண்டும் இந்த டீம் கள் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். என்கிறார் இவர்.
ஐஎஸ்ஸின் நோக்கம் வெறும் மேட்ச்கள் நடத்துவதுமட்டுமில்லை. ஒவ்வொரு டீமும் அவர்கள் பகுதியில் அகடமிகளை நிறுவி முறையாக கால்பந்தாட்டாத்தை கற்பித்து வீர்ர்களை உருவாக்குவதும் ஒரு லட்சியம் என்று அறிவித்திருக்கிறார் அதன் தலைவர் நீனா அம்பானி.
அறிவிப்பும், ஆரம்பமும் அமர்க்களமாக இருக்கிறது. செய்வார்களா? அல்லது ஐபிஎல் யைப்போல விளம்பரமும், வியாபாரமாக ஆகபோகிறதா? \ஆட்டகார்களின் ஆட்டத்தைமட்டுமில்லை, ஆட்டுவிப்போரின் ஆட்டத்ஹையும் -காண இந்திய கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்