5/11/14

அலிபாபாவும் 40 டாலர்களும்





இன்று உலகம் முழுவதும் வேகமாக பரவிக்கொண்டிருப்பது ”இ காமர்ஸ்” என்று அறிமுகமாகி இன்று ஆன்லைன்  ஷாப்பிங் என்ற விஷயம் . இந்த துறையின் வளர்ச்சி கடந்த ஆண்டில் மட்டும் 300% மேல் இன்னும் வரும் ஆண்டுகளில் இன்னும் வேகமாக வளரும் என கணித்திருக்கிறார்கள்
அபிரிதமான அன்னிய மூதலீடுகளால் உலகில் பொருளாதார நிலையில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் சீனாவில் இந்த வர்த்தகம் இருக்கிறது. இதில் முன்னணி நிறுவனமான அலிபாபா நிறுவனம் அன்னிய நேரடி முதலீட்டு சந்தையில் பங்குகளை வெளியிட அனுமதிகள் பெற்று நீயூயார்க் பங்கு சந்தையில் தனது டாலர் பங்குகளை கடந்த மாதம்  வெளியிட்டது.   IPOவின் (முதலில் பொதுமக்களுக்கு வழங்கபடும் விலை) துவக்கவிலையாக 40 டாலர்களாக பட்டியலிடபட்டிருந்தது.  மார்க்கெட் துவங்கிய சில நிமிடங்களில் ஜிவ் வென்று விலை ஏறி 93.8 டாலர்களில் நாளின் விற்பனை முடிந்தது. மொத்தம் விற்றபங்குகளின் மதிப்பு 25 பில்லியண்டாலர்கள். இது பங்கு மார்க்கெட்டில் ஒரு  உலக சாதனை. இதுவரை எந்த கம்பெனியின் பங்கு இந்த வேகத்தில் உயர்ந்ததில்லை.விற்றதில்லை.
இதன் மூலம் அலிபாபா நிறுவனத்தின்  நிகர மதிப்பு ஒரே நாளில் 231 பில்லியன் டாலர்கள் உயர்ந்தது. அதன் நிறுவனர் ஜாக் மா வின் பங்குகளின் மதிப்பு 26.5 பில்லியன் டாலர்கள். (ஒரு பில்லியன் என்பது100 கோடிகள்). இந்த் பங்கு வெளியிடு மூலம் ஜாக் மா ஆசியா பணக்காரர்கள் பட்டியலில் 3 வது இடத்திலிருக்கும் முகேஷ் அம்பானியையும்,  இரண்டாவது இடத்திலிருக்கும் சினாவின் லீஷா கீ  என்ற தொழிலதிபரையும்  ஒரே பாய்ச்சலில் தாண்டி ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்துக்கு வந்துவிட்டார்.
 ஒரு  சீன நிருவனம் முதன் முதலில் அமெரிக்க பங்குசந்தையில் இறங்கும் போது எப்படி இத்தகைய வரவேற்பு என்பதை உலக பொருளாதார மற்றும் பங்குசந்தை ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராயத்துவங்கிவிட்டன.
 உலகில் மிகஅதிகமான இண்டர்னெட் இணைப்புகள் கொண்ட சீனாவில்   ஆன்லைன் வர்த்தகத்தை அறிமுகபடுத்தி அதை மிக வேகமாக வளர்ந்து பல சாதனைகளை படைத்தவர்கள் இந்த.அலிபாபா. 40க்கும்மேற்பட்டபொருட்களை 140க்கும்மேற்பட்ட நாடுகளில் விற்கிறார்கள். நாளொன்ருக்கு ஒரு ல்ட்சம்பேர்கள் இவர்கள் தளத்தை பார்வையிடுகிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங்கில் சில புதிய முறைகளை அறிமுகபடுத்தியவர்கள். இண்டெர்னெட்டில்  பொருளை பார்த்து பணம் செலுத்திய பின் உங்கள் பகுதியிலிருக்கும் கடையில் அதை பெறலாம். இதன் விலை கடையில் வாங்குவதை விட குறைவாக இருக்கும்.(சில பொருட்கள் 50%கூட) கடையில் பொருளை பார்த்தபின் பிடிக்காவிட்டால் பணம் வாபஸ்.  விழாக்க்காலங்களில் கடைக்கே போக வேண்டாம். கல்லூரி, பள்ளி அலுவலக கட்டிடங்களில் கொட்டி குவித்து வைக்கிறார்கள். வீட்டுக்கு போகும்போது பொருளை எடுத்து செல்ல்லாம்.  இப்படி பல புதிய ஐடியாக்களுடன் இப்போது இவர்கள் சீனாவின் கிராமங்களை குறிவைத்திருக்கிறார்கள். அடுத்த இரண்டாண்டில் 1000 நகரங்களில் 10,000 கிராமங்களிலும் எங்களது பொருள்வழங்கும் செண்டர்கள் (கடைகள் இல்லை)  துவக்கபடும் என அறிவித்திருக்கிறார்கள் இதன் மூலம்  அலிபாபா நிறுவனம் ஆன்லைன் ஷாப்பிங்கில் உலகின் முதல் நிறுவனமாக உயரும் என்கிறது ஒரு கணிப்பு. அமோசான்,  இ பே  போன்ற ஆன்லைன் நிறுவனங்களைவிட இவர்கள் மலிவான விலைக்கு பொருட்களை தருவதுதான் என்பதும் ஒரு கணிப்பு

ஒரு சாதாரண ஆங்கில ஆசிரியராக இருந்த ஜாக் மா . வேலையை விட்டு துணிவுடன் தொழில் துவங்கியவர். அலிபாபா என்று ஏன் பெயர்.? ”எல்லோரும் அறிந்த  ஒருபெயராக இருப்பதை விரும்பி அதை தேடிக்கொண்டிருந்தேன், ஒரு ரெஸ்டிரொண்ட்டில் காபி தந்த பெண்ணிடம் அலிபாபாவை தெரியுமா?  என்ற கேள்விக்கு திருடன் தானே? என்றார். ஒரு டாக்ஸி டிரைவர், ஒரு வயதான மூதாட்டி எல்லோரும் அலிபாபாவை அறிந்திருந்தார்கள் திருடிய பணத்தில் அவர் கிராமத்திற்கு செய்த நல்லதை அறிந்திருக்கவில்லை என்றாலும், அலிபாபவையே   பெயராக்கினேன்” என்கிறார் ஜாக் மா
.இந்திய மார்க்கெட்டின் மதிப்பை உணர்ந்திருக்கும்  இவர்கள் விரைவில் இந்தியாவிற்கு வரப்போகிறார்கள்.

  kalki 9/11/14


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்