காஷ்மீர் ஏன் எரிகிறது?
கடந்த ஒரு மாதத்தில்
1018 வன்முறைச் சம்பவங்கள்
1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது
1000க்கும் மேல் துப்பாக்கி சூடு
3500க்கும் மேல் வீரர்கள் படு காயம்
கலவரத்தில் பலியானவர்கள் 70 பேர்
கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் 410 பேர்
________________________________________________________________________________
எரியும் நெருப்புக்கு எண்ணை
காஷ்மீர் போராட்ட தியாகிகளுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம். பாகிஸ்தானின் ஒரு பகுதியாக காஷ்மீர் உருவாகும்நாளுக்காக நாம் காத்திருப்போம். இன்னும் பல பர்கான்வானிக்கள் இந்தியாவிற்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கையில்இறங்குவார்கள்
-நாவஸ் ஷெரிப்- பாகிஸ்தான் பிரதமர்
__________________________________________________________________________________ காஷ்மீர் எரியவில்லை
காஷ்மீரில் தேர்தலில் 61 % மக்கள் வாக்களித்திருக்கின்றனர். இது அவர்களுக்கு ஜனநாயகத்தில் அவர்களுக்கு இருக்கும்நம்பிக்கையைக் காட்டுகிறது. ஒரு சிலரை வைத்து பிவினை வாதிகள் வன்முறையைத் தூண்டுகின்றனர். காஷ்மீர் ஒன்றும்பற்றி எரியவில்லை.
ஷம்ஷேர் சிங் மன்னாஸ்
காஷ்மீர் பாஜக எம்.பி
_________________________________________________________________________________
கடந்த இரண்டாண்டுகளாகப் பதற்றமான காஷ்மீர் பகுதியில் இன்று இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது..அதுவே அங்கே தீவிரவாதம் வளர ஒரு களமாகவும் மாறியுள்ளது
காஷ்மீரில் ஹில்புல் முஜாகிதின் இயக்கத்தின் கமாண்டராக இருந்தவர் புர்ஹான் வானி என்ற 22 வயது இளைஞன். இவர்காஷ்மீர் விடுதலை பெறவேண்டும் என்று தனது வலைத்தளம். பேஸ்புக், ட்விட்டர் எல்லாவற்றிலும் போட்டோ, விடீயோஆடியோ எல்லாம் வெளியிட்டு எக்கச்சக்கமான ஃபாலோயர்களை கொண்டு பிரபலமானவர். இவர் தலைமையில் நடந்தபேரணியில் பல இளைஞர்கள் பாகிஸ்தான் கொடியுடன் கலந்து கொண்டபோது. பாதுகாப்பு படையினர் மீது தொடர்ந்துகல்வீச்சு தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். இவரைக் கடந்த மாதம் நடந்த ஒரு என்கவண்ட்டரில் பாதுகாப்பு படையினர்சுட்டுக் கொன்றனர். இதன் விளைவாகச் சற்றும் எதிர்பாராதவிதமாக எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் இளைஞர்கள்சாலைகளில் போர் புரியத் தொடங்கினர். கடும் வன்முறை வெடித்து இதுவரை 68 பேர் பலியாகியுள்ளனர். பாதுகாப்புபடைகள் ரப்பர் குண்டுகளை பயன்படுத்துகின்றனர். இது ரத்த காயம் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதிவேகமாகத்தாக்குவதால் உடல் உறுப்புகள் செயலிழந்து போய்விடும். தாக்குதிலில் முகம், கண்களில் அடிபட்டவர்கள் அதிகம்.
இந்த வன்முறை காரணமாக பள்ளி, கல்லூரிகள்.கடைகள் பெட்ரோல் பங்குகள், வங்கிகள் மூடப்பட்டிருக்கின்றன.இன்டர்னெட், மொபைல் போன் சேவைகள் முடக்கப்பட்டிருக்கின்றன. சுருக்கமாக சொல்லுவதானால் காஷ்மீரில் மக்கள்வாழ்க்கை கடந்த இரண்டு மாதங்களாக ஸ்தம்பித்து நிற்கிறது.
கல்விப் பின்புலம் வாய்ந்த புர்ஹான் வானி காஷ்மீரின் புதிய தலைமுறை போராளிகளின் அடையாளம். புர்ஹான் வானிஸ்கூல் ஹெட்மாஸ்டரின் மகன், பள்ளிப்படிப்பில் நன்றாக விளங்கிய புர்ஹான் வானி தனது 15-வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி அந்தப்பகுதியின் மிகப்பெரிய போராளிக்குழுவுடன் இணைந்தார் வானி மற்றும் அவரது சகோதரரைஅரசுப்படைகள் வீட்டுக்கு வரும் வழியில் நிறுத்தி அடித்து உதைத்து கடுமையாக இழிவுப் படுத்தியதாலேயேதீவிரவாதத்தைத் தனது பாதையாக வானி தேர்ந்தெடுத்ததாக சொல்லியிருந்தார்..
.
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தனது படங்கள், தான் கண்ட களங்கள் என்று துப்பாக்கியுடன் புகைப்படங்களைவெளியிடத் தொடங்கினார். தனது சக போராளிகள் குழுவுடன் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். அதாவது தீவிரவாதிஎன்றால் தலைமறைவாக இருக்க வேண்டும் என்ற மரபை மீறியதால் புர்ஹான் வானியை ஒரு ஹீரோவாகப் பின்தொடரும் இளம் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரித்தது. அவரது பதிவுகள் பல்வேறு கணக்குகளிலிருந்து பதிவானதால்அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. ஆனால் இவரது பதிவுகள், வீடியோக்கள் அவர்பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டுள்ளது. இவரது இறுதிஊர்வலத்தில்
கலந்து கொண்டவர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல் .
இவரது மரணத்துக்குப்பின் இவர் தியாகியாகஅறிவிக்கப் பட்டு பள்ளிகளில் அவரது வாழ்க்கை நாடகமாக நடிக்கப்படுகிறது. நினைவு கிரிகெட் மாட்ச்கள் நடைபெறுகின்றன.மரணத்திற்குப் பின் மிகப்பெரிய ஹீரோவாக மதிக்கப்படுகிறார்.
சமூக வலைத்தளங்களில் புர்ஹான் வானியின் காட்டிய வழியால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உருவாகும்தீவிரவாதிகள் எண்ணிக்கைவிட இந்திய பகுதியில் உள்நாட்டிலேயே தீவிரவாதிகள் பலர் உருவாகிவிடுவார்கள் என்றஅச்சம் இப்போது எழுந்திருக்கிறது. இவரது மரணத்திற்குப் பின் பெரிய அளவில் எழுந்திருக்கும் மக்களின் அனுதாப அலைமத்திய அரசுக்கு மிகவும் சவாலாகியிருக்கிறது.
புர்ஹான் வானி என்கவுண்டர் குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்வீட் செய்யும் போது, “என்னுடையவார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் - சமூக வலைத்தளம் மூலம் அவர் போராட்டத்துக்கு திரட்டியஉறுப்பினர்களை விட தற்போது தான் புதையுண்ட சுடுகாட்டிலிருந்து போராட்டத்துக்கு ஆட்களைத் திரட்டும் எண்ணிக்கைஅதிகமாகும் புர்ஹானின் திறமையை நாம் பார்க்கத்தான் போகிறோம்”
நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஜம்மு காஷ்மீரில் பிரிவினை வாதிகள், தேசிய வாதிகள் இருக்கத்தான் செய்கின்றனர்.நாங்கள் பாக்கிஸ்தானுடன் சேரவிரும்புகிறோம் என்று சொல்லுபவர்கள் குறைந்தகொண்டுவரும் இந்த நேரத்தில் ஒருபிரிவினை வாதியின் மரணத்தை உயிர்த்தியாகமாக்கி ஒரு அரசியல் தலைவர் கொண்டாட ஆரம்பித்திருப்பது ஆபத்தானஎச்சரிக்கை. என்பதை உணர்ந்த நாட்டின் எல்லா முக்கிய கட்சியினரும் ஒன்று சேர்ந்து நல்ல முடிவை எடுக்கத்தயாராகியிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
உடனடியாக காஷ்மீர் மக்கள் அமைதியான,இயல்பு வாழ்க்கை அளிப்பது ஒரு சில தீவிரஅமைப்புகளுடன் போரிடுவதை முக்கியமானது.
(இந்த வார கல்கியில் எழுதியது )
|
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்