அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின்
தென்பகுதி அடர்ந்த காடுகள் நிறைந்தது. மிக
அறிய வனவிலங்குகள் வாழும் அந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வேட்டையாடுவது
தடை செய்யப்பட்டிருக்கிறது. அங்கு கடந்த சில
ஆண்டுகளாக எழுந்திருக்கும் ஒரு பிரச்னை அதிகரித்துக்கொண்டிருக்கும்
பெரிய மலைப்பாம்புகள். தாய்லாந்து வகையைச்சேர்ந்த இந்த மலைப்பாம்புகள் அமரிக்க வனங்களில்
வாழும் வகையில்லை. எப்போதோ யாரோ கொண்டுவந்த விட்டுப்போன இந்த பாம்பு இனம் இப்போது பல்கி பெருகிவிட்டது.
மிக அறிய வெள்ளைநிற வால்கள்
கொண்ட மான்கள் நீண்ட கொம்புகள் கொண்ட ஆடுகள்
போன்றவற்றை தினமும் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றன
என்பதால் புளோரிடா வன விலங்குகள் பாதுகாப்பு
கமிஷன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.. அதிக
நீளம் கொண்ட மலைப்பாம்புகளைப் பிடிப்பவர்களுக்கு. அதிக எண்ணிக்கைகளில் பாம்புகளை பிடிக்கும்
அணிக்குப் பரிசு எனப் போட்டிகளை அறிவித்தது.
பெருமளவில் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இதைத்தவிரப் பாம்பு பிடிப்பதற்கு ஸ்பெஷலிஸ்ட்களின் தனிப்டையெல்லாம் அமைத்தது.
ஆனாலும் பிரச்னையை சமாளிக்க முடியவில்லை. மலைப் பாம்புகள்
அதிகரித்துக்கொண்டிருந்தது அந்த மாநிலத்திலுள்ள
புளோரிட பல்கலைகழகத்திலிருக்கும் விலங்கியல்
பேராசியர் ஃபிராங்க் மஸோட்டி ( Frank Mazzotti). இந்தியப் பாம்புகள் பற்றி ஆராய்ந்தவர். அவர் சொன்ன யோசனை; இதைப் பிடிக்க சரியான ஆட்கள்
தென்னிந்தியாவில் நீலகிரி காடுகளிலிருக்கும் இருளர்கள் என்ற இனத்தவர்கள் தான். அவர்களை அழைத்துவந்து நம் ஆட்களுக்குப் பயிற்சி கொடுங்கள்
என்பது. பல் மட்டங்களில் விவாதிக்கப்பட்ட பின் இந்த யோசனை ஏற்கப்பட்டது. ஆனால் எழுந்த
சிக்கல் இவர்களுக்கு விசா. . அதிகம் படிக்காத அந்த இனத்தவருக்கு பாம்புகளின்
பாஷை தெரியுமே தவிர ஆங்கிலம் தெரியாது. மேலும் அமெரிக்கா விசா வழங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவில் இல்லாத தொழில் விற்பன்னர்கள் பட்டியலில் பாம்பு பிடிப்பவர்கள்
இல்லதால் விசா கிடைக்காது, இதற்காக புளோரிடா மாநில அரசு விசேஷ அனுமதி அளித்து மொழிபெயர்ப்பாளர்களுடன்
மாசி சடையன் மற்றும் வடி வேல் கோபால் என்ற இரண்டு
இருளர்கள் இந்தப் பணிக்காக அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டனர். இவர்கள் புளோரிடா பல்கலைக்கழக வனவிலங்கு உயிரின
ஆய்வாளர் பிராங்க் மஸோட்டி தலை மை யிலான குழுவினருக்கு மலைப் பாம்புகளை பிடிக்கும்
பயிற்சி அளித்து வருகின்றனர்.
வந்து இறங்கிய முதல் வாரத்திலேயே இவர்கள் பிடித்த பாம்புகள் 13.
அருகிலுள்ள முதலை ஏரி தேசிய வன விலங்கு
சரணாலயத்தில் 4 மலைப் பாம்புகளை ஒரே நாளில் பிடித்துவிட்டனர். . அவற்றில் ஒன்று 16 அடி நீளப் பெண் மலைப் பாம்பு இதனால் உள்ளூர் சானல்கள் போட்டிபோட்டுக்கொண்டு இவர்களைப் பேட்டி
காண்கின்றனர். இவர்கள் பிடித்து மயக்கமான நிலையிலிருக்கும்
பாம்புடன் பல்கலைக்கழக மாணவர்கள் போட்டோக்கள்
எடுத்துக் கொள்கின்றனர்.
மோப்ப நாய்களின் மூலம் பாம்புகள்
இருக்குமிட கண்டறியப்பட்டவுடன். மிகசாதரணமான Y
வடிவ கம்புகளின் உதவியால் அதை மடக்கி
பிடிப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் அமெரிக்க பாம்பு பிடிக்கும் ஸ்பெஷலிஸ்ட்கள் அவர்களுக்குத் தான் மாசியும் வடிவேலும் பயிற்சி அளிக்கப்போகிறார்கள். இவர்களது
ஒன்றை மாதப் பணிக்கு சம்பளம் 50 லட்சம் என ஒப்பந்தம்.
விமானகட்டணம் தங்கும் செலவுகள் அமெரிக்க அரசினுடையது. இதே பிரச்னையை சந்திக்கும் வேறு சில மாநிலங்களும்
இவர்களின் உதவியை நாடியிருக்கின்றனர். இவர்கள்
திறமையை கண்டு வியக்கும் அமெரிக்க வனவிலங்கு பாதுகாப்பு கமிஷன் நிரந்த வேலைக் கொடுத்தாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை.
கல்கி 19/02/17
கல்கி 19/02/17
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்