10 ஆயிரம்
கோடி நிகர மதிப்பு, ஆறு
லட்சம் ஊழியர்கள், மென்பொருள் இரும்பு,
கார்,விமானம், தொலைத்தொடர்பு என பலத்துறைகளில் பெரிய மூதலீடுகளைச்செய்திருக்கும் டாடா குழுமத்தின்
தலைவராக பதவியேற்றிருக்கிறார் ஒரு
தமிழர்.
திரு
சந்திரசேகரகன் நாமக்கல்லுக்கு
அருகிலிருக்கும் மோஹனூர் என்ற சிறிய
கிராமத்தில் பிறந்தவர். 6 ஆம்
வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை
தினமும் 3 கீமி நடந்துசென்று அருகிலுள்ள
அரசுப்பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவர். இரண்டு
சகோதரர்கள், 2 சகோதரிகள் என்று பெரிய குடும்பம்.
தந்தை நடராஜன்
வழக்கறிஞராக இருந்தாலும், குடும்பச்சொத்தாக நிறைய நிலங்கள் இருந்ததால் கிராமத்தில்
விவசாயம் செய்துகொண்டிருப்பவர்.. தன் மகன்கள் நிறையப்
படித்து பெரிய அதிகாரிகளாக வரவேண்டும்
என விரும்பியவர், ஆனால் சந்திர சேகருக்கு
புதிய முறைகளைப் புகுத்தி விவசாயம் செய்யவே விருப்பம்.
ஆனால்
அதைத் தந்தையின் விருப்பத்திற்கேற்ப கோவை
இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி (CIT)யில்பி.எஸ்சி முடித்தவுடன் செய்யவிருந்தவரின்
மனதை அன்று அதன்
முதல்வர் மாற்றாதிருந்தால் இந்திய
கார்ப்பெரேட் உலகம் இந்தச் சாதனை மனிதரை இழந்திருக்கும். “சவாலான
படிப்புகளை ஏற்று அதில் சிறக்கும்
திறன் உனக்கு இருக்கிறது” மேலே
படிக்க வேண்டும் என்று ஊக்குவித்த அவர்
அந்த ஆண்டுதான்(1983) கணினி
துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் MCA வில் சேரச்சொன்னார்.
அதற்கான நுழைவுத்தேர்வில் முதலிடம் பெற்று திருச்சி REC((இப்போது
(NIT-T)யில் படித்துக்கொண்டிருக்கும் போது டாடா நிறுவனத்துக்குச்
செய்த இரண்டு பிராஜக்கெட்கள் நிறுவனத்தின்
கவனத்தை கவர, அது இவரை
கல்லூரிக்காலம் முடியும் முன்னரே TCS நிறுனத்தில்
பணிக்காகத் தேர்வு செய்யவைத்தது. . 1987ல்
அதில் புரோகிரமராக பணியில் சேர்ந்த சந்திரசேகர் தனது
தொடர்ந்த சாதனைகளால் TCSஸ் நிறுவனத்தின் இயக்குநராக
2007லும் 2009ல்
அதன் தலைவராகவும் உயர்கிறார்.
வசதியான
குடும்பப்பின்னணியிருந்தாலும்
மிக எளிமையான வாழ்க்கையை விரும்புபவர்கள் சந்திரசேகரும் அவரது சகோதர ர்களும். சென்னையில்தொழில் வாழ்க்கைத்தொடங்கியபோது ஒரே ஸ்கூட்ரை பகிர்ந்து
கொண்டவர்கள். இன்று ஒவ்வொருவரும் தத்தம்
துறையில் சிறந்த இடத்திலிருக்கிறார்கள்.
டாடாகுழுமத்திற்கு
தலைவராக தேர்ந்த்டுக்கப்பட்டிருந்த திரு
ஸரஸ்மிஸ்திரி இயக்குநர்
குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக
பதவி விலகினார். அப்போது டாடா குழுமத்தின் தலைவர்
ரத்தன் டாடா விரைவில் “உலகத்தரம் வாய்ந்த ஒரு தலைவரை எங்களது
குழும நிறுவனங்களிலிருந்தே தேர்ந்தெடுப்போம்”
என அறிவித்திருந்தார். அது
யார் என இந்திய கார்பேர்ட்
உலகம் மட்டுமில்லை பல பன்னாட்டு நிறுவனங்கள்
எதிர்பார்த்துக் காத்திருந்த போது அறிவிக்கப்பட்ட பெயர்
சந்திரா எனப் பிரபலமாக அறியப்பட்டிருந்த
சந்திரசேகரன்.
இவரது
தேர்வுக்கு முக்கிய காரணம் இவர்
TCSஸ் நிறுவனத்தில் நிகழ்த்திய
ஆச்சரியங்கள். மென்பொருள் துறை உலகளவில் சரிவுகளை
சந்தித்துக்கொண்டிருந்த சமயங்களிலும்
கூட TCS தொடர்ந்து
வளர்ச்சி வீதம், லாபம். புதிய
வாடிக்கையாளர்கள் என கலக்கிக்கொண்டிருந்தது தான். மிகப்
பெரிய யானையைக் கூட வேகமாக ஓடவைப்பவர்,
அதை தன்விருப்பபடி நடனமாடவைப்பவர்
என்று மென்பொருள் துறையினரால் வர்ணிக்கப்படுபவர் சந்திரா.
ஒட்டபந்தியங்களில்
பங்கு கொள்ளவதில் மிக
விரும்பும் கொண்ட சந்திர சேகர் மாராத்தான்களில்
பங்குகொள்ளும் தொலை
தூர ஓட்டக்காரர். தொலை தூரஓட்டங்களில் வெற்றி
பெற, கடக்கவேண்டிய தூரத்தையும் நேரத்தையும் சரியாக கணக்கிட்டு அடிகளை
வைக்கவேண்டும். இடையில்
வரும் இடையூறுகளையும், போட்டியாளர்களைச் சமாளிக்கும் திறனையும் கொண்டிருக்க வேண்டும் மாரத்தான்களில்
நான் பெற்றிருக்கும் இந்தப் பயிற்சிகள் என்னுடைய
இன்றைய பணிக்கு உதவும் என
நம்புகிறேன் என்கிறார் சந்திரசேகர்
பெரிய
நிறுவனங்களில் வெற்றி என்பது மிகச்
சவாலானது. இருக்கும்
இடத்தை தக்கவைத்துக்கொள்ளக்கூட “நிற்காமல் ஓடிக்கொண்டிருக்க” வேண்டிய இன்றைய
சூழலில், இந்த சாதனைத் தமிழர்
அதைச்செய்து டாடா
நிறுவனத்தை புதிய உயரங்களுக்கு இட்டுச்
செல்வார் என இந்திய கார்பேர்ட்
உலகம் நம்புகிறது. .
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்