கவர்ச்சியில்லாத உடலமைப்பு, பொருந்தாத உடைகள், நைந்து போனகாலணிகள், பழைய தொப்பி, வளைந்த ஒரு பிரம்புக்கைத்தடி கோணல் நடையுடனான நடிகர் என்று சொல்லி முடிக்கும்முன்னரே நம் மனதில் நிற்கும் உருவம் சார்லி சாப்ளின். திரைப்படங்கள் பேச ஆரம்பிக்கும் முன்னரே அதில் நடித்த இவரது நடிப்புப் பேசப்பட்டது. நான்கு தலைமுறைகளுக்கு அறிமுகமாகியிருக்கும் இந்தக் கலைஞரின் 128 வது பிறந்த நாள் அண்மையில் மிகப் புதுமையான முறையில் ஜெனிவாவில் கொண்டாடப்பட்டது.
அந்த விழாவிற்கு வந்த 662 பேர்களும், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் சார்லி சாப்பிளினின் டிரேட் மார்க் உடையான ஹிட்லர் மீசை,கருப்பு கோட்டு, தொப்பி, பிரம்பு உடன் வந்திருந்தார்கள். இந்த 128 வது பிறந்த நாள் மட்டும் அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா? இருக்கிறது
.
சுவிட்ஸ்ர்லாந்தில் ஜெனிவா நகருக்கு அருகிலிருக்கும் ஒரு அழகான ஏரிக்கரையிலிருக்கும் வீட்டில் தான் சார்லி சாப்ளின் வாழ்க்கையின் கடைசி 25 ஆண்டுகள் வாழ்ந்தார். ஏழ்மைநிலையிலிருந்து மிகுந்த கஷ்டங்களுக்கிடையே கலைஞனாக, படத்தயாரிப்பாளாரக, இசை அமைப்பாளராக வளர்ந்து உலகையே திரும்பிபார்க்கவைத்த சார்லி சாப்ளினுக்கு அமெரிக்கா சென்று அங்கு வாழ ஆசை. ஆனால் 1950 களில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நிகழ்ந்து கொண்டிருந்த பனிப்போரினால், கம்னியூஸ்ட்களாக இருப்பார்கள் எனச் சந்தேகப்படுபவர்களுக்கு விசாக்கள் மறுக்கப்பட்டது. சார்லி இடதுசாரி சிந்தனை கொண்டவர் எனக் கருதப்பட்டதால் அவருக்கும் விசா மறுக்கப்பட்டது. அதனால் அமெரிக்காவிற்கு எக்காலத்திலும் வரமாட்டேன் எனச் சபதம் செய்த சாப்பிளின் ஐரோப்பாவில் சுவிஸ்ஸர்லாந்தில் 14 ஏக்கர் பரப்பில் அழகான தோட்டத்துடன் கூடிய ஒரு அரண்மனை வாங்கி வசித்துவந்தார்.
அந்த இடம் அவருடைய மறைவுக்குப் பின் இப்போது சாரலியின் கருவூலமாக்கப் பட்டிருக்கிறது . ஒற்றுமையில்லாத சார்லியின் வாரிசுகளுமிடருந்து (அவருக்கு 11 குழந்தைகள்) நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் பெறப்பட்ட அந்த அரண்மனையை பெரும் செலவில் புதுப்பித்து சார்லி சாப்ளின் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் சேகரித்து ஒரு கருவூலமாக உருவாக்கியிருக்கிறார்கள் சார்லியின் ரசிகர்கள் கொண்ட ஒரு குழு.
அவர் நடித்த முதல் படத்திலிருந்து கடைசிப்படம் வரை உள்ள ஸ்டில்கள், சில செட்டுகள், அவரது அறை படித்த புத்தகங்கள், சந்திப்புகளின் படங்கள் விருதுகள், அவரைக் கவர்ந்தவர்களின் தத்ரூப மெழுகுச்சிலை எனப் பலவிஷயங்களால் நிரம்பியிருக்கிறது அந்த இல்லம். அவரைக் கவர்ந்தவர்களின் உருவங்களில் சர்ச்சிலுக்கு அருகில் காந்தி. சார்லி சாப்பிளினுக்கு 8 நாடுகளில் நிறுவப்பட்டிருக்கும் சிலைகளின் படங்களும் இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது . ஆண்டுக்கு 5 லட்சம் சுற்றுலாப்பயணிகளை கவர்கிறது இந்த இடம்.
கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இதை உருவாக்கப் பிடித்த காலம் 10 ஆண்டுகள். காட்சிக்காகப் படங்கள் சேர்ப்பது மட்டுமில்லாமல் சில அரசாங்கங்கள் உள்பட சமந்தப்பட்டவர்களிடம், , காட்சிப் பொருட்களை பயன்படுத்திக்கொள்ளும் உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள். ‘செட்’களை அந்தக் கலைஞர்களைக்கொண்டே உருவாக்கியிருக்கிறார்கள். உள்ளே இருக்கும் அரங்கத்தில் பிலிம் சுருளை ஓட விட்டு பழைய ப்ரொஜ்க்டரில் சார்லியின் பேசாத படங்களை ஓட்டிக் காட்டுகிறார்கள். இத்தனை ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியிருந்ததானால் தான் 10 ஆண்டுகள்
.இந்த மியூசியம்தான் அவர்களது முதலாமாண்டு விழாவைக்கொண்டா சார்லியின் ரசிகர்களுக்கு “அவரைப்போல உடையணிந்து வாருங்கள்” என விடுத்த அழைப்பின் விளைவுதான் 600க்கும் மேற்பட்ட சாப்ளின்கள்.
அவர்களைத்தவிர குழந்தைகளும் குடும்பத்தினரும் சார்லின் சாப்ளினின் உடையில் வருவார்கள் என்பது நாங்களே எதிர்பார்க்காத ஒன்று என்கிறார். திருமதி பிலிப்பி மெய்லன் என்ற கட்டிட கலைஞர். இவர்தான் இந்த குருவூலத்தை உருவாக்கிய குழுவின் தலைவர்.
வந்தவர்கள் அனைவரும் ஒரு நட்சத்திர வடிவில் நின்று சார்லிக்கு பிடித்த ஒரு பாடலைப் பாடினார்கள்
மிக அழகான சூழலில் ஏரிக்கரையிலிருக்கும் இந்த பூங்காவில் சார்லி சாப்பிளினுக்கு ஒரு சிலையும் இருக்கிறது. உலகில் சொந்த நாட்டில் சிலை நிறுவப்பட்டிருக்கும் ஒரே காமெடியன் சார்லி சாப்ளின் எனச்சொல்லுகிறது அதன் கீழ் உள்ளக் குறிப்பு.
அவர்களுக்குத்தெரியாதது
சுவையான தகவல். அந்த இடம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றுதான். நமக்கு கொடுத்து வைத்திருக்கிறதா என்பதுதான் தெரியவில்லை. சார்லி ரசிகர்களின் 10 ஆண்டுகள் உழைப்பு என்பது பிரமிக்க வைக்கிறது.
பதிலளிநீக்கு