.......நேதாஜி புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. செப் 22ல் வெளியான புத்தகம் இதுவரை சென்னயின் இரு பெரிய புத்தக நண்பர்கள் குழுவில் ஆய்வுடன் அறிமுகப்படுத்தபடிருக்கிறது. 3 பத்திரிகைகள் விமர்சனம் எழுதியிருக்கின்றன.
ஒரு எழுத்தாளினின் சந்தோஷமான கணங்களில் ஒன்று அவன் எழுத்தும் உழைப்பும் ஒரு வாசகனால் உணரப் பட்டு அவனால் மனப்பூர்வமாக பாரட்டப்படும் போது, பேஸ் புக்கில் ஒரு நண்பர் எழுதியிருப்பது இது.
. மிக்க நன்றி Mr Murali Seetharaman..
........ எனக்கு வசதி இருந்தால் Ramanan Vsv யின் ஒவ்வொரு விரலுக்கும் ஒரு வைர மோதிரம் இழைத்துப் போடுவேன்: அப்படி உழைத்திருக்கிறார் மனிதர்! தகவல், தகவல், தகவல்... அப்படி ஒரு உழைப்பு அவருடைய "நேதாஜி - மர்ம மரணம்" புத்தகத்தில்!
ஒரு சாம்பிள்: "இந்தோ ஜெர்மனி சொஸைட்டி என்ற பெயரில் ஜெர்மனியில் வாழும் இந்தியர்களும், இந்திய சுதந்திரத்துக்கு ஆதரவு தரும் ஜெர்மானியர்களும் இணைந்திருந்தனர். 1942 செப்டம்பர் 11- இந்த அமைப்பின் ஆண்டு விழா ஹாம்பர்க் நகரில் நடைபெற்றது. ஜெர்மன் தேசிய கீதம் வாசித்து முடிந்ததும் மற்றொரு கீதம் வாசிக்கப்பட்டது. புன்னகையுடன் இது சுதந்திர இந்தியாவின் தேசியகீதம் என்று சுபாஷ் அறிமுகப்படுத்தினார். நமது தேசிய கீதமாக இன்று ஒலிக்கும் "ஜன கண மன" முதலில் பியானோ இசையில் ஒலித்தது ஜெர்மனியில்தான்!
1911 Dec 27 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட தாகூரின் பாடல் சுபாஷை மிகவும் கவர்ந்தது. அதை இந்திய தேசிய கீதமாக அறிவிக்கத் தீர்மானித்தார் சுபாஷ். ஆனால் அதன் இசை வடிவம் எவரிடமும் இல்லை. சுபாஷ் தன் கல்கத்தா நண்பர்களைளத் தொடர்பு கொள்ள அதன் இசை நொட்டேஷனை அம்பிக் மஜூம்தார் என்பவர் எழுதி அனுப்பினார். அதுதான் முதன் முதலில் பியானோவில் வாசிக்கப்பட்டது.
இந்த ஒலிநாடா சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழ் INA வீரர்களால் பாதுகாக்கப் பட்டது. 1950 ல் ஐ நா சபையில் ஒலித்த இந்த ஒலிநாடா, இப்போது அகில இந்திய வானொலிக் காப்பகத்தில் உள்ளது!"
தகவல் களஞ்சியம்! ரமணனின் அயரா உழைப்பு! நேதாஜி பற்றி அவ்வளவு தகவல்கள்! வாய்ப்பு இருப்போர் வாங்கிப் படியுங்கள்! (கிழக்கு பதிப்பகம் -விலை ரூ150/-)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்