சிரியா மத்தியகிழக்கில் அமைந்திருக்கும் ஒரு சின்னஞ்சிறிய நாடு. மேற்கில் லெபனானையும், கிழக்கில் ஈராக்யையும் வடக்கில் துருக்கியையும் எல்லையாக்கொண்ட இந்தநாடு மிகப்பழமையானது. வளமான சமவெளி, உயர்ந்த மலைகள், எண்ணெய் வளம் மிக்க பாலைவனம் கொண்டது . யூப்ரடிஸ் நதி பாயும் பள்ளத்தாக்கு செழிப்பானது 10 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்னரே விஞ்ஞானபூர்வமாக விவசாயம் செய்யக் கற்றிருந்தவர்கள் என்றும் இதன் தலைநகரமான டமாஸ்கஸ் கலசாரங்கள் பிறந்த தொட்டில் என்று வரலாற்றாளர்களால் வர்ணிக்கபட்ட தேசம்.
இன்று சின்னாபின்னமாகி சீரழிந்துகொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாகச் சிரியாவிலிருந்து வரும் புகைப்படங்கள். பச்சிளங் குழந்தைகளின் இறந்த உடல்கள் கிடத்தப்பட்டிருக்கும் காட்சிகளும், ரத்தக் காயங்களுடன் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடும் பெற்றோரின் படங்களும், உருக்குலைந்து கிடக்கும் கட்டிடங்களும் பார்ப்பர்வர்களை பதறவைக்கின்றன .உலகின் அழகிய நகரங்களைக்கொண்ட சிரியா மெல்ல நரகமாக மாறிக்கொண்டிருக்கிறாது
கடந்த இரண்டு வாரங்களுகுமுன் ஒரே நாளில் மட்டும் 602 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 185 பேர் குழந்தைகள், 109 பேர் பெண்கள். தலைநகர் டமாஸ்கஸுக்குக் கிழக்கில் உள்ள கிழக்கு கூட்டா நகரில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகள்மீது சிரிய ராணுவம், ரஷ்ய விமானப் படைகளின் உதவியுடன் கடும் தாக்குதல் நடத்தியது ஆனால், இந்தத் தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாதிகளை விடவும் அப்பாவிப் பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உலகைப் பதறவைத்திருக்கும் சிரியா மரணங்களுக்குக் காரணம் என்ன?
உள்நாட்டுப்போர். இது அண்மையில் துவங்கியதில்லை.கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொடரும் உள்நாட்டுப் போர்தான் இதற்கு முக்கியக் காரணம். 2011-ல் பல்வேறு அரபு நாடுகளில் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே திரண்டு தாங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை 'அரபு வசந்தம்' என்றனர். இதனால் துனீசியா, எகிப்து, லிபியா, யேமனில் ஆட்சியாளர்கள் பதவி இழந்தனர். பஹ்ரைன், சிரியாவில் மக்கள் எழுச்சி வலுவாக இருந்தது. அல்ஜீரியா, இராக், ஜோர்டான், குவைத், மொராக்கோ, ஓமானில் பெரிய போராட்டங்கள் நடந்தன. லெபனான், மௌரிடானியா, சூடான், சவுதி அரேபியா, மேற்கு சகாரா நாடுகளில் மக்கள் போராட்டம் வலுவு இல்லாமல் வெறும் அடையாளமாக நிகழ்ந்தது.
ஆனல் சிரியாவில் பதவியிலிருந்த அல் அசாத்திற்கு எதிராக் எழுந்த புரட்சி வலுவானதாகயிருந்த்து. இந்தப் புரட்சி எழுந்ததற்கு முக்கிய காரணம் மதம். இஸ்லாமிய மதத்தில் ஷியா மற்றும் சன்னி என்ற பிரிவுகள். சிரியாவில் சன்னி பிரிவினர் 70% ஆனால் அதிபர் சிறுபான்மையினமான ஷியாபிரிவை சேர்ந்தவர். இதனால் அதிகாரங்கள் அனைத்தும் அந்தப் பிரிவினர் வசம், இதனால் எழுந்த புரட்சி பின்னால் ஆயுதகிளர்ச்சியாக உருவம் கொண்டது.
சிரியா அரசு இந்தப் போராட்டங்களை அடக்குமுறையுடன் எதிர்கொண்டது அதிபர் பஷார் அல் அஸ்ஸாத் தலைமையிலான அரசு. ராணுவத்தின் மூலம் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அது பின்னர் அலையலையாகப் பரவிப் பெரிய போராட்டமாக மாறியது.
இதற்கிடையே அதிபரை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுப் படை ஒருபுறம், ஐஎஸ் பயங்கரவாதிகள் ஒருபுறம், அமெரிக்க ஆதரவிலான குர்துகள் ஒருபுறம் என்று எல்லாத் தரப்பிலிருந்தும் கடும் தாக்குதல்கள் நடக்கின்றன
.
அதிபரை எதிர்ப்பவர்களிடையே ஒற்றுமை இல்லை என்பதுடன் நோக்கங்களும் வெவ்வேறானவையாக இருப்பதால் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வராமலே இழுத்துக் கொண்டிருக்கிறது. மக்களிடையே செல்வாக்கை இழந்துவிட்ட அதிபர் ராணுவத்தின் விசுவாசத்தாலும் ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளின் உதவியாலும் பதவியில் தொடர்வதாலும் போர் ஓய்வதாக இல்லை...
.இதனால் அந்த நாட்டின் தலைநகர் தவிர்த்து மற்ற இடங்களில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. உள்கட்டமைப்புகள் 97 சதவீதம் அழிந்து போய்விட்டன
இந்த உள்நாட்டு தொடர்வதற்கு மற்றஒரு முக்கிய காரணம் சர்வ தேச அரசியல்
சிரியாவிற்கு நாட்டின் வருமானத்தில் 40% எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைத்தது. வேளாண்மை மூலம் 20% கிடைத்தது. சுற்றுலாத் துறை 20% வருவாயைப் பெற்றுத் தந்தது. இப்போது உள்நாட்டுப் போர் காரணமாகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் பெருந்தொகையைக் கடன் வாங்கி சமாளிக்கிறது சிரிய அரசு. எண்ணெய் ஏற்றுமதி மட்டும் மூன்றில் இரண்டு மடங்கு வீழ்ச்சியடைந்தது. அதனால் வேலைவாய்ப்பும் குறைந்துவிட்டது.
2010-ல் 12 பில்லியன் டாலர்களாக இருந்த ஏற்றுமதி மதிப்பு, 2012-ல் 4 பில்லியன் டாலர்களாகச் சரிந்துவிட்டது. 1995-ல் ஒரு நாளைக்கு 6 லட்சம் பீப்பாய்கள் கச்சா பெட்ரோலிய எண்ணெய் எடுத்த சிரியா, 2012-ல் 1,82,500 பீப்பாய்களைத்தான் எடுக்க முடிந்தது. இப்போது இதுவும் குறைந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் எண்ணெயின் தரமும் குறைந்துவிட்டது. புதிய வயலில் எண்ணெய் இருப்பு அடையாளம் காணப்பட்டாலும் எடுத்து விற்க முடியவில்லை. உள்நாட்டுப் போரால் நாட்டு மக்களில் குழந்தைகள் விளையாட்டு, படிப்பு என்று ஏதும் இல்லாமல் அன்றாடம் போர்ச் சூழலிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். ஏழெட்டு வயது குழந்தைகள்கூட துப்பாக்கிகளுடன் பெரியவர்களுக்குத் துணையாகக் களத்தில் நிற்கின்றனர்.
உலகில் தீவிரவாதம் எங்குத் தலையெடுத்தாலும் அழிப்போம் என்று சொல்லும் “உலகபோலீசான” அமஎரிக்க ஐ எஸ் தீவிர வாதிகளை அழிக்க இங்கே களமிறங்கியிருக்கிறது அவர்களைத்தேடித் தேடி தரையில் நடக்கும் பயங்கரம் போதாதென்று வான்வெளித் தாக்குதல் வேறு.குண்டுகளை வீசுவது அமெரிக்கா. இலக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கூடாரங்கள் தான்.
துருக்கிக்கு அருகில் உள்ள) எல்லையில் குர்து இனத்தவரைக் குறிவைத்து.தாக்குதல் நடத்தும், ஐ.எஸ் அணியை அழிக்க இதுவரை அமெரிக்க அணியின். 21 வான்வெளி தாக்குதல்கள், நடத்தியுள்ளன. தீவிரவாதிகளின் தரப்புக்கு பலத்த சேதம். ஆனால் வெறியில்அவர்கள் மேலும் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துகிறார்கள். ஆனால் அதிகம் செத்துக்கொண்டிருப்பது என்னவோ சுற்றுப்புறத்தில் இருக்கும் பொது மக்கள் தான்
இதற்கிடையே நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றிய ஐ.எஸ். சிரியாவின் எண்ணெய் வயல்களிலும் பெரும் பகுதியைக் கைப்பற்றி, எண்ணெயை விற்று ஆயுதங்களுக்குப் பெரும் பகுதியைச் செலவிட்டு. தனது எதேச்சாதிகார அரசை வலுப்படுத்திக்கொண்டுவிட்டது. இவர்கள் கட்டுப்பாட்டில் நாட்டின் சிலபகுதிகள் இருக்கின்றன. அங்கு அவர்கள் மதத்தின் பெயரால் நடத்தம் ஆட்சி ஆப்கான் தாலிபான்களைவிடக் கொடுமையானது. நோன்புகாலத்தில் சாப்பிட்டான் என்பதற்காக 13 வயது சிறுவனை முக்கிய சாலையில் நிறுத்திச் சுட்டுகொன்று அதை டிவியில் காட்டியவர்கள். 4 ஆண்டுகளுக்கு முன் 21 லட்சம் பேர் இருந்த இந்தப்பகுதியில் இப்போது இருப்பது 3 லட்சம் மக்கள் மட்டுமே.
கடந்த சில ஆண்டுகளில் உள்நாட்டுப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். அவர்களில் 11,000 பேர் குழந்தைகள். இரண்டாவது உலகப் போர்கூட இத்தனை குழந்தைகள் இறந்த தில்லை.
இந்தச் சந்தர்ப்தை பயன்படுத்தி போரிடும் குழுக்களை ஆதரிக்கும் நாடுகளும் எண்ணெய் வளத்தைக் குறிவைத்தும், சிரியாவில் அமைதி வந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டும் காய்களை நகர்த்துகின்றன.
இந்த நீண்ட அரசியல் சதுரங்க ஆட்டத்துக்கு நடுவில்தான் ஏதுமறியா அப்பாவிகள் கொத்துகொத்தாகப் பலியாகிக்கொண்டிருக்கின்றனர்.
ஐநா என்ன செய்கிறது?
ஐ.நா. சபையின் “உண்மை அறியும் குழு” ஒன்று சிரியாவுக்குச் சென்றது. அவர்கள்மீதும் தாக்குதல் நிகழ்ந்தது. . ‘‘சந்தேகம் இல்லாமல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடக்கிறது’’ என்று யாருக்கும் சந்தேகமில்லாத ஒரு விஷயத்தை அறிக்கையாக வெளியிட்டது ஐ.நா.
‘‘ஐ.நா.வின் சிறப்பு தூதராக அதன் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் நியமிக்கப்பட்டார். சிரியாவுக்கு ஒரே ஒரு விசிட். அவ்வளவுதான். தன் தூதர் பதவியியை ராஜினாமா செய்து விட்டார் அவர். தன் அமைதி திட்டத்தைத் தீண்டக் கூடச் சிரியா தயாராக வில்லை.
போரை ஒரு மாதத்துக்கு நிறுத்துங்கள் என்று ஐநா சபை அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் சிரிய அரசு இந்தப் போர் நிறுத்தத்தைப் பகலில் அதுவும் சில மணி நேரங்களுக்கு மட்டும்தான் கடைப்பிடிப்போம் என்கிறது. இதற்கு அரசு சொல்லும் காரணம் வினோதமானது.
அரசை எதிர்க்கும் படைகளிடம் ஆபத்தான ஆயுதங்கள் இருப்பதால் போர் நிறுத்தத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாது என்கிறது. அரசை எதிர்ப்போர் ஆயுதங்களுடன் சரண் அடைந்தால்தான் இது சாத்தியம் என்கிறது.
சிரியாவே நாசமானாலும் பரவாயில்லை, எதிரிக்கு அடங்கிவிடக் கூடாது என்பதே முடிவாக இருக்கும். சிரியா அரசுக்கு இப்போது ரஷ்யா பக்கபலமாக இருக்கிறது. அரசை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் படைகளுக்கு அமெரிக்கா துணையாக இருக்கிறது. இதனால் தான் 8 ஆண்டுகளாகப் போர் தொடர்கிறது.
கடந்த ஒரு வருடமாகவே சிரியாவில் போர். மிக உக்கிரமான யுத்தம். போர் எந்த வெளிநாட்டுடனும் இல்லை. புரட்சியை அடக்க உள்நாட்டிலேயே. நடக்கும் போர். சிரிய அரசுப் படைகள், சிரிய ஜனநாயக ஆதரவுப் படைகள், சிரிய எதிர்க்கட்சிகளின் ஆதரவுப் படைகள், ஐஎஸ் படைகள், தாஹிர் அல் ஷாம் என்ற படை என்று களத்தில் ஐந்து வெவ்வேறு அணிகள் இருக்கின்றன. யார் எப்போது எதற்காகத் தாக்குகிறார்கள் என்று தெரியாத நிலையில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் கிராமத்தை விட்டுக் கிராமம், நகரத்தை விட்டு நகரம் என்று இடம் பெயரத் தொடங்கி இப்போது நாட்டின் எல்லைகளைக் கடக்க வேண்டிய கட்டாயதிற்குள்ளாகியிருக்கிறார்கள்
இப்படி உள்நாட்டுப் போரினால் தவிக்கும் மக்கள் " அரசாங்கமே, எங்களைக் காப்பாற்று’’ என்று கேட்க முடியவில்லை. என்ன காரணம்? போரை நடுத்துவதே அரசாங்கம் தான்.. இந்தக் கடும் போரிலும் செஞ்சிலுவைசங்கம் தன் பணிகளைசெய்ய முற்சிக்கிறது அதன் களத்தலைவர் ஜாட் என்ற பிரிட்டிஷ் மருத்துவர் பிபிசிக்கு அளித்த பேட்டியைபார்க்க பரிதாமாகயிருந்தது. "மின்சாரம், மாத்திரைகள், ஆக்சிஜன், மயக்க மருந்து, வலி நிவாரணிகள், ஆன்டி பயாடிக்ஸ் போன்ற எதுவுமே இல்லாமல் மருத்துவர்கள் பணியாற்றி வருகிறோம் உண்மையிலேயே மிகவும் பயங்கரமான, கடினமான சூழலில் பணிபுரிந்து வருகிறோம் முதல் உலகப் போரை இது நினைவு படுத்துகிறது" என்றார் அவர்
.
கடந்த ஒரே வருடத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிரியாவின் உள்நாட்டுக் கலவரத்தில் இறந்திருக்கிறார்கள். முப்பது லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள்.அண்மையில் கனடா நாட்டுபிரதமர் கூட 25000 சிரிய அகதிகளை ஏற்பதாக அறிவித்திருக்கிறார்.
இந்த அர்த்தமற்ற போர் எப்போது தான் ஓயும்? எவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி.இது
போர் நிறுத்தத்துக்கு ஐ நா மட்டும்முயற்சித்தால் போதாது. அரபு நாடுகளும் இஸ்லாமிய கூட்டமைப்பும் உதவ வேண்டும். அப்படியே போர் ஒய்ந்தாலும் சீரழிந்த சிரியாவை சீரமைக்க குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும் பலமில்லியன் டாலர்கள் தேவை என்கிறார்கள் வல்லுனர்கள்
தங்கள் சொந்த மண்ணில் வாழவும் முடியாமல் அகதிகளாகவும் வெளியேறவும் முடியாமல் செட்துக்கொண்டிருக்கிறார்கள் அப்பாவி சிரியா மக்கள்
.
சுருக்கமாகச் சொன்னால்
'ஒரு இனத்தின் ஒன்றுமே அறியாத ஒரு தலமுறையைஅதன் அரசே படுகொலை செய்து அழித்துக்கொண்டிருக்கிறது'.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்