காரில் ஏறிச் சூரியனைச் சுற்றி வர முடியாது, ஆனால் ஒரு காரை ஏவுகணையின் முன்னால் வைத்து விண்வெளிக்கு அனுப்பினால் அது சூரியமண்டலத்தை சுற்றி வருமா?வரும் என்பதை நிரூபித்திருக்கிறார் எலான் மஸ்க் என்ற அமெரிக்கர். இவர் வான்வெளி விஞ்ஞானி இல்லை. ஆனால் விண்வெளி ஆய்வில் மிகுந்த ஆர்வம் கொண்ட கோடிஸ்ரவர். தன் சொந்த செலவில் கடந்த பல ஆண்டுகளாகப் பல ஏவுகணைச் சதனைகளைச் செய்துகொண்டிருப்பவர்.
எலான் மஸ்க். தென்னாப்பிரிக்காவில் பிறந்து கனடாவிலும் அமெரிக்காவிலும் படித்தஅவருக்கு விண்வெளியில் சாதனை புரிய வேண்டும் என்று இளம் வயதிலிருந்தே மிகுந்த ஆர்வம்.. அதற்கான பணத்தை திரட்டப் பல நிறுவனங்களைத் துவக்கினார். இன்று இண்டர்நெட்டில் பணம் செலுத்தும் முறைகளுக்கு முன்னோடியாக இருக்கும் “பேபால் (PayPaul) இவருடையதுதான்
பணம் சம்பாதித்ததும் 2002 ஆம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்வெளி நிறுவனத்தைத்தொடங்கினார். அமெரிக்காவில் பல்கலை கழகங்கள் போலத் தனியாரும் ஆய்வுகளுக்காகச் சொந்த ராக்கெட் தளங்களை அனுமதியுடன் அமைத்துகொள்ளலாம் அப்படி இவர் அமைத்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்மூலம் ராக்கெட்டுகளையும் விண்கலங்களையும் உருவாக்கி உயரே செலுத்துவது அவரது நோக்கம். பல எஞ்சினியர்க்ளையும் மற்றும் விண்வெளி நிபுணர்களையும் அவர் பணியில் அமர்த்திக் கொண்டு. தங்கள் நிறுவனத்துக்கென ஒரு ராக்கெட் தளத்தையும் அமைத்துக் கொண்டார்.
ஆரம்பத்தில்அவர் சிறிய ராக்கெட்டுகளை உருவாக்கி அவற்றைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார். அவைகளுக்கு பால்கன் 1, 2 எனப்பெயரிட்டிருந்தார். ஆனால் ராகெட் தயாரிப்பில் நாசா செய்யும் முறைகளிலிருந்து ”மாற்றி யோசிக்க” ஆரம்பித்தார்
.
பொதுவாக செயற்கைக்கோள்களைச் செலுத்துகின்ற ராக்கெட்டுகள் அனைத்துமே ஒன்றன் மீது ஒன்றாகப்பொருத்தப்பட்ட பல அடுக்கு ராக்கெட்டுகளாகயிருக்கும்’.உயரே செல்லச் செல்ல ஒவ்வொரு அடுக்கு ராக்கெட்டும் அதன் பணிமுடிந்த பின்னர் தனியே கழன்று நடுவானிலேயே தீப்பிடித்து அழிந்து விடும். இந்த முறைதான் ராக்கெட்கள் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை பின்பற்றப்படும் முறை. இதை மாற்றதான் எலான் மஸ்க் முயற்சித்தார்.
2013ல் இவர் உருவாக்கிய பால்கன் ராகெட்கள் உலகின் கவனத்தை ஈர்த்தது. காரணம் இவரது பால்கன் ராக்கெட் எரிந்து விழாமல் பணி முடிந்ததும் மெல்ல கிழே இறங்கி குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்தது.
இந்த முறையில் செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான ராக்கெட்டில் எரிபொருளுக்கு ஆகும் செலவுஅதிகமில்லை உருளை வடிவ ராக்கெட்டை உருவாக்குவதற்கு ஆகும் அதே செலவுதான். எனவே குறைந்த செலவில் ராக்கெட்களை செலுத்தும் முறையை எலான் மஸ்க் செய்து காட்டியதும் அதுவரை பணத்தை விணாக்கிக் கொண்டிருந்த ஒரு கோடிஸ்வரர் என அவரை அலட்சியபடுத்திக்கொண்டிருந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உலகம் அவரைக் கவனிக்கத்துவங்கியது
.
“தொடர்ந்து புதிய சாதனைகள்” என்ற வெறியிலிருந்த எலான் மஸ்க் அண்மையில் ஒரு புதிய சாதனையைச் செய்தார். 3 பால்கன் 9 வகை ராகெட்களை பக்கவாட்டில் ஒன்றாக இணைத்து ஒரு வலிமையான ராக்கெட்டை உருவாக்கினார். உலகில் இந்த அளவிற்கு சக்தி மிக்க ராக்கெட் இதுவரை உருவாக்கப்பட்டதில்லை
.இந்த ராக்கெட் 64 டன்னுக்கும் மேல் எடையைச் சுமந்து செல்லக்கூடிய அளவிற்கு வடிமைக்கப்பட்டது. இதற்குப் பால்கன் ஹெவி என்று பெயரிடப்பட்டது.
இந்த ராக்கெட் செல்ல வேண்டிய இடம் என இலக்கு எதுவும் நிர்ணயக்கபடவில்லை. ராக்கெட்டின் முகப்பில் விண்வெளிக்கலம் அல்லது செயற்கைகோள் எதுவும் வைக்கபடவில்லை. காரணம் இந்த ஏவுகணையின் பலத்தை சோதிப்பதுதான் இதை விண்வெளியில் செலுத்தும் நோக்கம். மேலும் ராகெட் அழிந்தால் அந்தக் கலமும் அழிந்துவிடும் அது தேவையற்ற செலவு எனக்கருதினார் எலான் மஸ்க். பொதுவாக இம்மாதிரி சோதனைகளில் ராக்கெட் முனையில் பெரிய கான்கீர்ட் அல்லது இரும்பு பாளங்களை சோதனைக்காக இணைப்பார்கள்.
இங்கு எலான் மஸ்க் ஒரு புதுமையைச் செய்ய விரும்பினார். இரும்பு பாளாத்துக்குப்பதிலாகத் தனது விலையுர்ந்த டோயோட்டா டெஸ்லா காரையே பொருத்தினார் . எலான் ராகெட் மட்டும் தயாரிப்பதில்லை. அவரது கம்பெனிகளில் ஒன்று பேட்டரிகளில் இயங்கும் கார்களையும் தயாரிக்கிறது. அவரது டெஸ்லா ரோட்ஸ்டர் எலக்டிரிக் காரை ட்டோயொட்டோ நிறுவனம் தயாரிக்க 50 மில்ல்யன் டாலர் மூதலீடு செய்திருக்கிறது.
மஸ்க் தனது ராக்கெட்டின் முகப்பில் தனது தயாரிப்பான டெஸ்லா காரை வைத்தது மட்டுமில்லாமல். அந்தக் காரில் டிரைவர் சீட்டில் ஸ்டியரிங்கைப் பிடித்த மாதிரி விண்வெளிவீர்ருக்கு உரிய உடை அணிந்த முழு உருவ மனிதப் பொம்மையையும் வைத்து அனுப்பத்திட்டமிட்டார். பின்னணியில் ஒரு பாடலும் இசைத்துக்கொண்டிருக்கும்படி அமைத்தார் இந்த இசைரசனையுமுள்ள விண்வெளி ஆர்வலர்.
.
ராக்கெட்டின் முன்னால் காரா? என்று பலர் ஏளனப் புன்கையுடனும் இவ்வளவு கனமான,ராக்கெட் சரியாகச்செல்லுமா? என்று விண்வெளி விஞ்ஞானிகளும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.மிகுந்தஎதிர்பார்ப்புக்குஇடையே பால்கன் ஹெவி ராக்கெட் கேப் கெனவரல் ராக்கெட் தளத்திலிருந்து கடந்த பிப்ரவரி 6 ந் தேதி உயரே செலுத்தப்பட்டது, இப்படி தனியார் ராக்கெட்களை நாசாவின் தளத்திலிருந்து செலுத்த மிகப்பரிய அளவில் கட்டணமும் இன்ஷ்யூரன்ஸ்கட்டணமும் செலுத்த வேண்டும்
உயரேச் சீறிப்பாய்ந்தபால்கன் ஹெவி ராக்கெட் செவ்வாய் கிரகத்தின் சுற்றுபாதை வரை (5 கோடி கிலோ மீட்டர் தூரம்) செல்லும் என்று கருதப்பட்டது. ஆனால் அது அதற்கு மேலேயே சிறப்பாகச் செயல்பட்டு செவ்வாய் கிரகத்தின் சுற்றுபாதையையும் தாண்டிச் சுமார் 32 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று ரோட்ஸ்டர் காரை விண்ணில் செலுத்தியது. எலான் மஸ்கின் கனவு பலித்துவிட்டது அவரது கார் இபோது சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. அது அப்படிச் சுற்றும்போது 2091ஆம் ஆண்டு பூமிக்கு அருகில் வந்து பூமியைக் கடந்து செல்லும்.பிறகு மறுபடியும் 32 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச்செல்லும்,
இப்படி எவ்வளவு நாள்.அது சுற்றும்? பல ஆயிரம் ஆண்டுகள் இவ்விதம் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும்?. இப்படிச் சுற்றி வர அதில் எஞ்சினோ எரிபொருளோ கிடையாது. இயற்கை விதிகளுக்குஉட்பட்டு பூமி எவ்விதம் சூரியனை சுற்றுகிறதோ அதே மாதிரியில் அந்தக் காரும் சுற்றிக் கொண்டிருக்கும்.
ஒரு நாள் வெடித்து சிதறவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அப்படி நடந்தால் அதன் துகள்கள் கூடப் பூமிக்கு வராது. என்கிறார்கள் விண்வெளி விஞ்ஞானிகள்.
இது விண்வெளி விஞ்ஞானத்தில் மிகப்பெரிய சாதனை. விண்னில் செலுத்தப்பட்டவுடன் உலகின் அத்தனை சானல்களிலும் பிரேக்கிங் நீயூஸாகவும், அடுத்தநாள் அத்தனை செய்தித்தாட்களில் தலைப்புச்செய்தியாகவும் ஆன இதைச் சாதித்த எலான் மஸ்க்கு வயது 46.தான்“உங்கள் கார் எங்கே? என்ற கேள்விக்கு “சூரிய மண்டலம்வரை போயிருக்கிறது” என்று எலான் பதில் சொல்வது போல ஒரு கார்ட்டுனை வெளியிட்டிருக்கிறது ஒர் அமெரிக்கப்பத்திரிகை.
செவ்வாயில் மனிதர்கள் வசிக்கும் காலனியை ஏற்படுத்துவது அவரது நீண்டகால கனவுத் திட்டமாகும். ஆனால் அதற்கு முன் எலான்மஸ்கின் உடனடி அடுத்த திட்டம் சந்திரனுக்கு பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் இரு விண்வெளி வீர்ர்களை அனுப்புவதாகும். இரு விண்வெளி வீர்ர்கள் அமர்ந்து செல்ல இவரது ஸ்பேஸ் எக்ஸ்நிறுவனம் ஏற்கெனவே “குரூ டிராகன்” என்ற விண்கலத்தை உருவாக்கியுள்ளது ஆனால் இதற்கு அந்த வீர்ர்களிடம் கட்டணம் வசூலிக்கப் போகிறாராம்
மனிதருக்கு இருக்கும் ஆர்வத்துக்கும் பண வசதிக்கும் சாதித்துகாட்டு வார் என்றே தோன்றுகிறது.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்