27/1/19

காகிதப்புலி




லோக்ஆயுக்தா என்றால்மக்களால்நியமிக்கப்பட்டவர்கள்என்றுஅர்த்தம். சுதந்திரம்பெற்றபின்னர்அரசின்திட்டங்கள்

சட்டதிட்டங்கள்மக்களுக்குமுறையாகச்சென்றுசேர்கிறதாஎன்றஅடிப்படையில்ஆரம்பிக்கப்பட்டது. இந்தவிவாதம் 1960-களில்தொடங்கியது. பொதுவாழ்க்கையில்இருப்பவர்கள்ஊழலில்ஈடுபடுவதால், ஊழல்முக்கியப்பிரச்சினையாகஇருந்ததால்அதுவும்கூடுதலாகசேர்க்கப்பட்டது. இதுதான்லோக்ஆயுக்தாஎன்றவடிவத்தின்முக்கியஆரம்பம்
ஆளுங்கட்சியின்தலையீடுஏதுமின்றிதன்னாட்சியாக, முழுஅதிகாரத்தோடுசெயல்படக்கூடியலஞ்சஊழல்ஒழிப்புக்கானஆணையம்மற்றும்அரசுசேவைகளில்மக்களுக்குள்ளகுறைபாடுகளைதீர்க்கஉதவும்ஒருமையம். இதைதமிழில்அழகாககூறவேண்டுமானால், 
‘ஊழல்விசாரிப்புமற்றும்மக்கள்குறைதீர்ஆணையம்’என்றுஅழைக்கலாம்.

இது எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்படவேண்டும் என்று உச்ச நீதி மன்றம் வழி காட்டியிருந்தது. ஆனால் மாநிலங்கள் அக்கறை காட்டவில்லை. சமூக  ஆர்வலர்களின் பல முறையீடுகளினால் சில மாநிலங்களில் அமைக்கப்பட்டது.சமீபத்தியநீதிமன்றகணக்கின்படி 12மாநிலங்கள்தவிரஅனைத்துமாநிலங்களிலும்உள்ளது. லோக்ஆயுக்தாநீதிமன்றங்களைஏன்அமைக்கவில்லைஎன்பதுதொடர்பாககடந்த ஆண்டு ஜுலை 31ம் தேதிக்குள் பிரமாணப்பத்திரம்தாக்கல்செய்யும்படிதமிழகம்உள்ளிட்ட 12
 மாநிலங்களுக்குஉச்சநீதிமன்றம்கடந்தமாதம்உத்தரவிட்டது.
அனைத்துக்கட்சிகளும், சட்டப்பஞ்சாயத்துபோன்றஅமைப்புகளும், மீடியாக்களும்நெருக்கியதாலும்.உச்சநீதிமன்றத்திற்குஅறிக்கைஅளிக்கவேண்டியகட்டாயம் நேர்ந்ததின் விளைவாக கடந்த ஆண்டு ஜுலை மாத கூட்டத்தொடரின்  நாளன்று தமிழக அரசு ஒரு மசோதாவை அவசர அவசரமாக தாக்கல் செய்து நிறைவேற்றியிருக்கிறது.


ஏன் இந்த லோக் ஆயுக்தா அவசியம்?


லஞ்சஒழிப்புத்துறைமாநிலஅரசின்வரம்பிற்குள்வரும், லஞ்சஒழிப்புத்துறையில்உள்ளஅதிகாரிகளைமாநிலஅரசுநினைத்தபடிதூக்கிஅடிக்கலாம், தங்களுக்கேற்றஆட்களைநியமிக்கலாம். ஆனால்லோக்ஆயுக்தாவில்அப்படிச்செய்யமுடியாது. அதன்நியமனம்மாநிலஅரசுசம்பந்தப்பட்டதாகஇருந்தாலும்நீக்கமுடியாது, மாற்றவும்முடியாது.

லோக்ஆயுக்தாதலைவர்லஞ்சப்புகாரின்நடவடிக்கை எடுக்கப்பரிந்துரைக்கலாம்,
தாமாகமுன்வந்துவழக்குப்பதிவுசெய்யலாம். அமைச்சர்கள், முதல்வர், அதிகாரிகள்வீட்டுக்குள்சென்றுகூடரெய்டுநடத்தஉரிமைஉண்டு. பொதுமக்கள்சேவைபுகாரின்பேரில்நோட்டீஸ்அனுப்பலாம். விளக்கம்கேட்கலாம்.

லோக்ஆயுக்தாபோலீஸ்என்றுதனியாகஇருக்கும். இதற்கானபோலீஸார்மாநிலபோலீஸாராகஇருந்தாலும்லோக்ஆயுக்தாகட்டுப்பாட்டில்இருப்பார்கள்.

ஆனால் இந்த விதிமுறைகள்மாநிலஅரசுஇயற்றும்சட்டத்தின்பிரிவில்இருக்கவேண்டும். இதில்முதல்வர், அமைச்சர்கள்வீடுகளுக்குரெய்டுபோகக்கூடாதுபோன்ற விஷயங்களுக்கு விதிவிலக்குகொடுத்தால்அதுநடக்காது.

லோக்ஆயுக்தாவில்என்னென்னஅம்சங்கள்இருக்க வேண்டும்.,
லோக்ஆயுக்தாவில்யார்தலைவராகஇருப்பது, யார்தலைவரைநியமிப்பது. யார்தேர்ந்தெடுப்பதுஎன்றவரையறை எல்லாவற்றையும் மாநில அரசுகள்  தங்கள் சட்ட வடிவில் சொல்ல வேண்டும்  அதே போல் என்னென்னவிஷயங்கள்விசாரிக்கலாம், என்னஅதிகாரங்கள்உண்டுஎன்ற விஷயங்களும் சொல்லப்பட்டிருக்க வேண்டும்

அப்படியானால் மாநில அரசுகள் இந்த சட்டத்தை நீர்த்துப்போக செய்துவிடுமே?

.இந்த நிலையைத் தவிர்க்கத்தான்  மத்தியஅரசேஇந்தியாவுக்கானபொதுவானஒருலோக்ஆயுக்தாசட்டத்தைஉருவாக்க வேண்டும் அல்லது பொது வரையறைகளைஅளிக்கவேண்டும்என்றும். மத்தியஅரசுலோக்பால், மாநிலஅரசுலோக்ஆயுக்தாஎன்றுஇருக்கவேண்டும்.அதேநேரத்தில்நியமனம்போன்றவிஷயங்களில்வரையறைவேண்டும்என்று சமூக ஆர்வலர்கள் போராடுகிறார்கள்.

மாநில அரசுகள்  இந்த சட்டம் இயற்றுவதும் மாற்றுவதும்  தங்கள் உரிமை என்ற பெயரில் கர்நாடகநாடக அரசு ஒரு  மோசமான முன்னூதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.லோக்ஆயுக்தாவில்கடுமையானசட்டப்பிரிவுகள்உள்ளமாநிலம்என்றால்அதுசந்தோஷ்ஹெக்டேஇருந்தபோதுகர்நாடகாவில்தான். என்ற நிலையிருந்தது.
 .கர்நாடகாவில்அறிமுகப்படுத்தபட்ட லோக்ஆயுக்தாசட்டப்பிரிவு 13 படிமுதல்வர்மீதோ, அமைச்சர்மீதோ, ஐஏஎஸ், ஐபிஎஸ்அதிகாரிகள்மீதுஒருபுகார்வருகிறதுஎன்றுவைத்துக்கொள்வோம். அப்போதுதான்சட்டப்பிரிவு 13-ன்கீழ்லோக்ஆயுக்தாவின்பணிதொடங்கும். இந்தப்பிரிவின்கீழ்உங்கள்மீதுபுகார்வந்துள்ளது, நீங்கள்பதவியில்இருந்தால்விசாரிப்பதில்குறுக்கீடுஇருக்கும். ஆகவே, நீங்கள்பதவிவிலகவேண்டும்என்றுகோரலாம்.
இதன் கிழ் எடுத்த நடவடிக்கையின் படி தான் அன்றைய் முதல்வர் எடியூரப் கைதாகவும் பதவி விலகவும் நேர்ந்தது.

ஆனால்கர்நாடகமாநிலஅரசு தேர்தலுக்குப் பின்  2014-ல்எடுத்த ஒருமுடிவினால் . மக்களுக்கானசேவைகளைவிசாரிப்பதுலோக்ஆயுக்தாவில்இருக்காது. இனிதனியாகஒருஅமைப்புபார்த்துக்கொள்ளும்என்றுமுடிவெடுத்தார்கள். 2016-ம்ஆண்டில் ‘ஆன்டிகரெப்ஷன்பீரோ’என்றஅமைப்பைஉருவாக்கிஇனிஇந்தஅமைப்புலஞ்சஊழல்பிரச்சினைகளைபார்த்துக்கொள்ளும்என்றுசட்டம்இயற்றிவிட்டார்கள்.
இதற்குஎதிர்ப்புதெரிவித்து முன்னாள் நீதிபதிசந்தோஷ்ஹெக்டே “கர்நாடகாவில்லோக்ஆயுக்தாமரணப்படுக்கையில்உள்ளது”என்றார். கர்நாடகமாநிலலோக்ஆயுக்தாதலைவர் ''நாங்கள்இனிலஞ்ச, ஊழல்புகார்வந்தால்அதை ‘ஆன்டிகரெப்ஷம்பீரோவுக்கு’அனுப்பிவிடுவோம்ஏனென்றால்எங்கள்அதிகாரம்குறைக்கப்பட்டுவிட்டது'' என்றுகூறியுள்ளார்.எனவே ஒரு மாநில அரசு இந்த லோக் ஆயூக்தாவை ஏற்படுத்தினாலும் அதை செயலிழக்கச் செய்யும் வலிமை பெற்றதாக யிருக்கிறது.

தமிழகம் கொண்டுவந்திருக்கும் சட்டம் எப்படியிருக்கிறது?
சட்டத்தின் முன் வடிவை பொதுவெளியில் விவாதிக்காமல் அவசரகதியில் மசோதாவை நிறைவேற்றியபின்னர்  அதற்கான விதி முறைகளை அறிவித்திருக்கிறது. அதில் மிக முக்கியமானது

ஊழல்புகார்கள்மீதுரகசியவிசாரணை மட்டுமேநடத்தவேண்டும்; புகாருக்குள்ளானஊழல்வாதிகுறித்துபத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோதெரிவிக்கக்கூடாது; விசாரணைநடக்கும்போதோஅல்லதுவிசாரணைமுடிந்தபிறகோகூடஅந்தவிவரங்களைதெரிவிக்கக்கூடாது

லோக்ஆயுக்தாவிற்குதலைவர்மற்றும்உறுப்பினர்களைதேர்வுசெய்யும் “தேடுதல்குழு”உறுப்பினர்களைஎந்தநேரத்திலும்மாற்றலாம்.

இந்த விதிகள் அறிவிப்புவுடன் பல சமூக ஆர்வ அமைப்புகள் தங்கள் எதிர்ப்பைத்தெரிவித்திருக்கின்றன.
இந்த  விதிகள்அ.தி.மு.கவில்உள்ளஊழல்அமைச்சர்களையும், ஊழல்குற்றச்சாட்டிற்குஉள்ளாகியுள்ளமுதல்- அமைச்சர்தன்னைத்தானேகாப்பாற்றிக்கொள்ளவும்வகுக்கப்பட்டுள்ளதாகவேதெரிகிறது.ஊழல்புகார்கள்மீதுரகசியவிசாரணைநடத்தவேண்டும்; புகாருக்குள்ளானஊழல்வாதிகுறித்துபத்திரிகைகளுக்கோ, பொதுமக்களுக்கோதெரிவிக்கக்கூடாது; விசாரணைநடக்கும்போதோஅல்லதுவிசாரணைமுடிந்தபிறகோகூடஅந்தவிவரங்களைதெரிவிக்கக்கூடாதுஎன்றெல்லாம்வகுத்துள்ளவிதிகள்அ.தி.மு.கவில்உள்ளஊழல்அமைச்சர்களையும், ஊழல்குற்றச்சாட்டிற்குஉள்ளாகியுள்ளமுதல்- அமைச்சர்தன்னைத்தானேகாப்பாற்றிக்கொள்ளவும்வகுக்கப்பட்டுள்ளதாகவேதெரிகிறது.


ஊழல்ஒழிப்பின்அடித்தளத்தையேதகர்த்துஎறியும்
இந்த விதிகளைஉடனடியாகரத்துசெய்யவேண்டும். இந்த அரசு, லோக்ஆயுக்தாஅமைப்பைஒரு “காகிதப்புலி”போல்ஆக்கிகாலில்போட்டுமிதிக்கநினைக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
.மாநிலஅரசின்உரிமைஎன்ற பெயரால் தன்இஷ்டத்துக்கு சட்டங்களை மாற்ற அனுமதிக்காமல்  . லோக்ஆயுக்தாவைக்காப்பாற்றஉச்ச நீதிமன்றமோ அல்லது மத்திய அரசு சட்டம் ஒன்றை கொண்டுவராதவரையில் லோக்ஆயுக்தாஎன்பது உண்மையில் மக்களால்நியமிக்கப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்