“நீங்கள் விரும்புவது போல் ஒரு மாதம் எல்லாம் ஹாபி மாதிரி செய்யக்கூடிய பணியல்ல அது. இரண்டுவருடமாவது செய்ய வேண்டும். மேலும் நீங்கள்”pahari” மொழியைக் கற்றுகொள்ளவேண்டும்”. (ஹிந்தி தான் மாநில மொழியானாலும் பழங்குடி கிராம மக்கள் அதைப்பேசுவதில்லை) என்பது CORDல் நான் தன்னார்வலாராக இணைந்து பணியாற்ற அனுமதி கேட்டதற்கு ஸ்வாமிஜி பிரகாஷானந்தா. (இவரை ரெஸிடென்ட் ஆச்சார்யா என்றழைக்கிறார்கள்.)
இங்கு நாள் காலை5.45க்கு குருதேவரின் சமாதி ஸ்தலத்தில் வழிபாடு ஆர்த்தியுடன் தொடங்குகிறது. நாம் அதற்குள் ரெடியாக வேண்டும். நம் மாதிரி விஸிட்டர்களுக்கு கட்டாயம் இல்லை. ஆனால் நம்மோடு எழுந்து . இமயத்திலிருந்து பால்கனிவழியாக எட்டிப்பார்க்கும் சூரியனும் ஒலிக்கும் வேதங்களும் நம்மை அழைக்கிறது.
6.15க்கு முடிந்த குருதேவரின் ஆர்த்திக்கு பின் அருகிலுள்ள ராமர் கோவிலில் பூஜை, வாழ்நாள் முழுவதும் கீதையை பல வடிவங்களில் போதித்த சின்மையானந்தா கிருஷ்ணருக்கு ஒரு கோவில் எழுப்பாமல் இங்கு எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் 1983ல் ராமருக்கு ஒரு கோவில் உருவாக்கியிருக்கிறார். ஒரு கோடிக்குமேல் 24 நாடுகளிலிருந்து வந்த ராமநாமம் எழுதப்பட்ட நோட்டுபுத்தகங்கள் கருவரையின் அஸ்திவாரத்திலிருப்பதாக தகவல் பலகை சொல்லுகிறது.
பளிரென்று ஒளிரும் கருங்கற்களில் கேரள அம்பலம். (நுழை வாயிற்படியில் ஆமை(கூர்மம்) பாணியில் வட்ட வடிவ கருவறை, முன்னால் விஸ்தாரமான ஹால். கண்ணாடி பேழையில் வேதங்கள் எழுதப்பட்ட பெரிய புத்தகம். கோவிலின் கோபுரமாக ராமர் கீரிடம். வடிவமைத்து கட்டியிருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொறியாளார் நிறுவனம்.
சன்னதியின் எதிரில் தரையில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்ய முடிவதால். ராமர் நம்முடன் பேசும் உணர்வு எழுகிறது. மூலவர் வன வாசகோலம். உற்சவர் சீதை,இளவல், மற்றும் ஆஞ்சநேயருடன்.. வடித்த சிற்பி யாரோ அழகும் அமைதியும் கொஞ்சுகிறது. இது இந்த மாநிலத்தில் எழுப்பட்ட முதல் ராமர் கோவில்.
இங்கு பூஜைகள் முடிந்த பின்னரும் அங்கேயே அமர்ந்திருக்கிறோம். தொடர்ந்து அந்த வளாகத்திலிருக்கும் ஒரு பிரமாண்ட ஆஞ்னேயருக்கு பூஜை. ஏன் ஆஞ்சேனேயருக்கு இவ்வளவு பெரிய சிலை? என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். காலை உணவு மணி அழைக்கிறது. அதை அடுத்த பதிவில் பேசுவோமே
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்