29/6/24

தரம்சாலா-தபோவனம்-தலாய்லாமா 5

தரம்சாலா நகருக்கு வெளியே 12 கிமீ தொலைவில் மெல்யோடு Mcleod Ganj, மலையின் நடுப்பகுதியில் அமைந்திருக்கிறது தலாய்லாமா கோவில் வளாகம். இதை Tsuglagkhang Complex என்கிறது நுழைவுப்பலகை. (இதனுள்ளே திபேத்திய கலாசாரா ஆய்வு மையமும் இருப்பதால் வளாகத்தை கல்வி நிலையமாக பதிவு செய்திருக்கிறார்கள்). வளாகும் இருக்குமிடம் மினி லாசா(திபேத்தின் தலைநகர்) போலிருக்கிறது. எங்கு திபேத்திய முகம், லாமாக்கள், திபேத்திய கலைப்பொருட்கள் விற்பனைசெய்யும் கடைகள். அரை நூற்றாண்டுகளுக்கு மேல் இங்கு திபேத்தியர்கள் வாழ்ந்திருப்பதால் இளம் தலைமுறையினர் இந்தியும் பேசுகிறார்கள்.
திபேத்திய புரட்சியின் போராட்டங்களை சித்தரிக்கும் காட்சிகளும் தியாகிகளின் படங்களும் வரவேற்கும் நுழைவாயில். அந்த வளாகத்தில் தான் தலாய்லா வழிபடும் புத்தரின் கோவிலும் அவர் வாழுமிடமும் இருக்கிறது.
ஒரு மலைப்பகுதியாக இருப்பதானால் நான்கு தளங்களாக படிகள் அமைத்து பெரிய. பெரிய கட்டிடங்களை நிறுவிவியிருக்கிறார்கள். இதில் இரண்டும் மூன்றாம் தளங்களில் புத்தர் கோவிலும், 4 வது தளத்தில் தலாய் லாமா வாழும் அரண்மனையும் இருக்கிறது. (அரண்மனை என்று சொல்லக்கூடாது என்றார்கள்)
அந்த இடத்தை அடையவே பல செக்யூரிட்டி கெடிபிடிகள். பல கேள்விகள். தலாய்லாமாவின் செயலகம் நம் பிரதமர் அலுவகம் போல பல மட்ட அதிகார அடுக்களுடன் இருக்கிறது. திபேத்துக்கு வெளியே நிறுவப்பட்டிருக்கும் திபேத்திய அரசின் தலைமை அலுவகம் என்ற அந்தஸ்த்தை பெற்றிருக்கும் இடம்.
செகரட்டரியை சந்திக்க வேண்டும் என்று சொன்னவுடன் எந்த செகரட்டரி? இங்கு 5 பேர் இருக்கிறார்கள் என்றார்கள், நமக்கு வந்த மெயிலை காட்டிய பின் அமரச்சொல்லி உள்ளே போனார் அந்த ராணுவத் தோரணையிலிருந்த அதிகாரி. 10 நமிட காத்திருப்புக்கு பின் நம் உடமைகளை மட்டுமில்லை நம்மையும் ஸ்கேன் செய்யும் அமெரிக்க இயந்திரவாசலை கடந்தபின் தலைமைசெயலரின் அறைக்கு அழைத்துச்செல்லுகிரார் மற்றொரு அதிகாரி.
காவி உடை அணிந்திருக்கும் லாமாக்கள் மத்தியில் பளீரென்று ஃபுல் சூட்டில் இருக்கிறார் தலமைச் செயலாளார் Chhime Rigzin Chhoekyapa, (சரியாக உச்சரிக்கத்தெரியாதால் சொக்கப்பா என்று நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்). நல்ல ஆங்கில உச்சரிப்பில் மெல்லப்பேசுகிறார். அவர் மேஜையில் நான் சில ஆண்டுகளுக்கு முன் THE WEEK பின்னர் கல்கியில் எழுதிய உலக அமைதிக்காக தலாய் லாமா நடத்தும் காலசக்கர பூஜை பற்றிய கட்டுரைகளின் பிரதிகள் (கட்டுரையின் லிங்க் பதிவின் இறுதியிலும் முதல் பின்னுட்டத்திலும்)
“உங்கள் தாய்மொழியில் காலச்சக்கரம் பற்றி எழுதியிருக்கிறீர்கள் நன்றி” என்று அன்புடன் வரவேற்று டீ கொடுத்து (சகிக்கலை) உபசரித்து சொன்ன விஷயம் தலாய்லாமாவை சந்திக்க இயலாது என்பது தான். “உங்களுக்காக இன்று 10 நிமிடம் திட்டமிட்டிருந்தோம். ஆனல் அவர் உடல் நிலை சரியாகயில்லாதால் (வயது 90) அடுத்த 20 நாட்களக்கு அவரது சந்திப்புகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் முயற்சி செய்யுங்கள் என்றார்.
எமாற்றமாகயிருந்த போதிலும் சந்திக்க இயலாது என்பதை போனிலோ, மெயிலிலோ சொல்லாமல் வரவேற்று பேசி சொன்னது ஒரு பத்திரிகையாளனுக்கு கிடைத்த கெளரவம்.
கோவிலைப் பார்த்துச்செல்லுங்கள் என்று ஒரு லாமாவை உடன் அனுப்பினார். ஆங்கிலம் பேசும் அந்த லாமா( எல்லா லாமக்களும் ஆங்கிலம் பேசுவதில்லை) நிறைய தகவல்கள் சொன்னார். இரண்டாம் தளத்திலிருக்கும் தலாய்லாமா வணங்கும் தெய்வங்களின் உருவங்கள் முன்னால் அவர் அமர்ந்து ஆன்மீக உரை, வழங்கும், பிரார்த்தனை செய்யும் மண்டபத்துக்குள் கூட்டிச் சென்றார். துணியால் மூடப்பட்டிருக்கு பெரிய தங்க சிம்மாசனம்.
தொடர்ந்து முதல் தளத்தில் தலாய்லாமா வணங்கும் புத்தர்கோவில், முதலில் வெளிப்பிரகாரத்தை சுற்றி நடந்து பிரார்த்தனை சக்கரங்களை clockwise ஆக சுற்றி நம் வேண்டுதலைச் சொன்ன பின்னர்தான் கோவிலுக்குள் செல்லவேண்டும் என்பதை சொல்லிக்கொடுத்தார். உள்ளே பளபளக்கும் தங்க வண்ணத்தில் தியான நிலையில் புத்தர். பின்னால் சுவற்றில் பல காட்சிகள்
இரண்டாம் தலாய்லாமா தோற்றுவித்த நாம்கியால்(Namgyal) கோவில் புரட்சியில் அழிந்து விட்டதால் இந்த 14ம் தலாய் லாமா அதை இங்கு வழிபாட்டுக்காக எழுப்பியிருப்பதாகச் சொன்னார் நம்மை அழைத்துவந்தலாமா.. நீங்கள் விரும்பும் வரை பிரார்த்திக்கலாம் எனச் சொல்லி அவர் விடை பெற்றுகொண்டார்.
பளிசென்று சுத்தமாகயிருந்தாலும் புத்தர் பிரமாண்டமாகயிருந்தாலும் ஒரு தெய்வ சன்னதியை அங்கு உணர முடியவில்லை. பூஜை ஆராதனை எதுவும் கிடையாது. ஒரு எரியும் விளக்கு கூட இல்லை. வரும் டூரிஸ்ட்கள் புத்தரின் அருகில் நின்று செல்பி எடுத்துக்கொள்கிறாகள். அதிக செல்பி படங்களில் சிக்கியவர் இந்த புத்தராகத்தானிருப்பார் என்னை நினைத்துக்கொண்டோம்
. புத்தருக்கு வேண்டுதலுடன் படைத்த பிஸ்கட் சாக்லேட், வாட்டர் பாட்டில்கள், சோப்புகள் போன்ற அந்த சிலையின் முன்னே அழகாக அடுக்கி வைக்கபட்டிருக்கின்றன.
ஒரு மலைச்சரிவில் இறங்குகிறோம் என்றே தெரியாதவண்ணம் படிகளில் இறங்கி வெளியே வந்து அறைக்கு திரும்புகிறோம்.
நாளை காலை இங்கிருந்து சிம்லா போகதிட்டம். பல ஆண்டுகளுக்கு முன் நாங்கள் ஹனிமூன் சென்ற இடம் சிம்லா. இங்கிருந்து 40 நிமிட விமானபயணத்தில் போய்விடலாம் என்பதால் இப்போது சிம்லா எப்படியிருக்கிறது என்று பார்க்க விரும்பி அங்கு போக திட்டமிட்டிருந்தோம்.
காலையில் விமான நிலையம் சென்ற எங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
(https://www.chuvadugal.com/2014/07/blog-post_31.html சுட்டியில் காலசக்கர வழிபாடு கட்டுரையைப் படிக்கலாம்)
All reactions:
You, Vidya Subramaniam, Manthiramoorthi Alagu and 16 others

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்