மெல்லப்பரவும் துல்லியமான ஒலி, கண்களை உறுத்தாத இதமான ஒளி. அழகான இணைப்புரை. இதமான ஏசிஅமைதியாக ரசிக்கும் ரசிகர்கள். இதைவிட வேறென்ன வேண்டும் ஒரு நாட்டிய நிகழ்ச்சியின் வெற்றிக்கு.? .அப்படியொருஇசையும் நடனமும் இணைந்து பரிமளித்த ஒரு நிகழ்ச்சியுடன் தான் எம். எஸ் அம்மாவின் நூற்றாண்டைக் கல்கிசதாசிவம் அறக்கட்டளை கடந்த வாரம் கொண்டாடியது
.
.
அமரர் கல்கி அவர்கள் எழுதிய பல பாடல்களில் ஒன்று ”மாலைப்பொழுதினிலே” அதையே தலைப்பாகக் கொண்டு திருமதிகெளரி நாராயணன் தயாரித்திருந்த இசை-நாட்டிய நிகழ்ச்சி அது. நிஷா ராஜகோபலன் பாட, பிரியா கோவிந்த் நடனமாடினார்.எம்எஸ்ஸை இசைஅரசியாகத்தான் உலகம் அறியும். அவர் தன் அன்பு மகள்களின் நடனத்துக்குப் பாவங்களும், அபிநயங்கள்சொல்லிக்கொடுத்து ஜதி சொல்லிபாடியுமிருக்கிறார் என்பதிலிருந்து அவர் பாடிய சில பாடல்கள் எப்படிப் பிறந்தது போன்றசுவையான தகவல்களுடன் கெளரிராம்நாராயணனின் இணைப்பு உரையுடன் நிஷாவின் பாட்டு. எம் எஸ் பாடியபாடல்களில் நடனத்துக்கு ஏற்றது தேர்ந்த்டுக்கபட்டிருந்தன.
எம்.எஸ் அம்மா பாடிய பாட்டு என்பதைத்தாண்டி எம்.எஸ்ஸின் குரல் சாயலை நிஷா பாடியபோது உணர்ந்தது நிஜம்.நடனங்களுக்கு பாடுபவர்கள் ஒரு தனி இனம். ஓங்கிய தங்கள் குரலால் ஜதிஸ்வரங்கள் சொல்லித் தங்கள் இருப்பதைஅழுத்தமாகப் பதிவு செய்வார்கள். அன்று நிஷா அப்படி எதுவும் செய்து மிரட்டாமல் கச்சேரியில் பாடுவது போல அழகாகவயலினுடன் இணைந்து மிதந்த குரலுடன் நடனத்தைச் சிறப்பாக்கினார்.
பாடல்களின் ஒவ்வோரு வார்த்தைக்கும் வரிகளுக்கும் தனது நளினமான உடல்மொழி,
மற்றும் பாவங்களினால்உயிருட்டினார் பிரியா கோவிந்த். பாரதீய வித்யாபவனின் அந்தப் பெரிய ஸ்டேஜ் முழுவதும் வினாடிகளில் ஒடிப்பரவிஆடிக் காட்டிய அபிநயங்களை ரசிகர்கள் தங்களை மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர். இவரிடம் நடனம் கற்கும்மாணவிகள் நிச்சியமாகக் கொடுத்துவைத்தவர்கள்தான்.
மற்றும் பாவங்களினால்உயிருட்டினார் பிரியா கோவிந்த். பாரதீய வித்யாபவனின் அந்தப் பெரிய ஸ்டேஜ் முழுவதும் வினாடிகளில் ஒடிப்பரவிஆடிக் காட்டிய அபிநயங்களை ரசிகர்கள் தங்களை மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர். இவரிடம் நடனம் கற்கும்மாணவிகள் நிச்சியமாகக் கொடுத்துவைத்தவர்கள்தான்.
ஆண்டுதோறும் கல்கி சதாசிவம் நினைவு அறக்கட்டளை கல்வியில் சிறந்து பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளமாணவர்களுக்குக் கல்விக்கான உதவித்தொகையும், தமிழ் பத்திரிகைகளில் இடம் பெற்ற விளம்பரங்களில்கலைச்சிறப்பும் சமுதாய சிந்தனையும் இணைந்ததான ஒரு சிறந்த விளம்பரத்துக்கு ரூ 25000 பரிசும் வழங்குகிறார்கள்.இசை நடன நிகழ்ச்சிக்கு முன்னர் அன்றைய விளம்பரத்துக்காகக் கடந்த 16 ஆண்டுகளாக வழங்கப்படும் இந்த விருதை இந்த ஆண்டு பெற்றவர்கள் விஜய் டிவி நிறுவனம். அவர்கள் பத்திரிகைகளில் வெளியிட்டிருந்த ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த விளம்பரம் பரிசு பெற்றது. இந்த விருதுக்குகான இறுதிக்கட்ட நடுவர்களில் ஒருவராக இருக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்காக அன்றைய விழாவில் எனக்கும் ஒரு நினைவுப்பரிசு வழங்கினார்கள். விழாவிற்கு தலைமையேற்ற வயலின், வாய்பாட்டு வித்தகரும் எம்,.எஸ் அம்மாவுக்கு நீண்டநாள் வாசித்த கலைஞருமான ஸ்ரீராம்குமார் பரிசினை வழங்கினார்.