அமெரிக்க அரசில் ஒரு தமிழ் அமைச்சர்
அமெரிக்க
நாட்டின் மெரிலாண்ட்ட் மாநிலத்தில் ”செகரிட்டரி ஆப் ஸ்டேட்” என்ற அரசின் உயர்ந்த
பதவிவகிக்கும் நடராஜன் ஒரு இந்தியர். தமிழர்.
நம் மாநில காபினெட் அமைச்சருக்கு நிகரான இந்த பதவியில் ஒரு அமெரிக்க மாநிலத்தின் கவர்னரால் நியமிக்கபட்டிருக்கும் முதல் இந்தியரும் இவரே. மெரிலாண்ட்ட்
மாநில தலைநகர் அன்னபோலீசில்
(Annapolis)
கவர்னரின் அலுவகத்தில் அவரை சந்தித்தபோது…….
ஒரு பயோடெக்
சயிண்ட்டிஸ்ட்டான நீங்கள் எப்படி அமெரிக்க
அரசியலுக்கு வந்து இந்த நிலைக்கு உயர்ந்தீர்கள்?
சென்னை
பல்கலைகழக்த்தில் பயோ டெக்கில் பிஹெச்டி முடித்த பின் 1989ல் இங்கு வந்தேன். மிக்சிக்கன்
ஸ்டேட் யூனிவர்சிட்டியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானியாக பணியாற்றினேன். சில
விருதுகள் பெற்றிருக்கிறேன். ஒரு கண்டிபிடிப்புக்கு காப்பு உரிமையும் பெற்றிருக்கிறேன்.
இளம் வயதிலிருந்தே பிஸினஸ் செய்ய ஆர்வம் அதிகம். அதற்கு என்னை தயார்செய்துகொள்ள ஏம்பிஏ
படித்தேன். தொழிலில் கிடைத்த அனுபவங்களும், பல பெரிய நிறுவங்களுக்கு ஆலோசகராகவும்,
தலைவராகவும் இருந்த வாய்ப்பினால் நிறைய தொழில்
அதிபர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்த்து. ஆசிய பசிபிக் நாடுகளின் சேம்பர் ஆப் காமர்ஸ்
தலைவராகும் வாய்ப்பும் வந்தது. இதில் நிறைய அரசியல் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பும்
நட்பும் கிடைத்தது. இந்தியா ரவுண்ட்டேபிள், மேரிலாண்ட் சேம்பர்ஸ் போன்றவற்றில் நிறைய
ஈடுபாட்டுடன் செயலாற்றி வந்தேன். அந்த சுழலில்
மாநில கவர்னர் தேர்தல் வந்தது. அதற்கு போட்டியிட்ட மார்ட்டின் ஒமேலாவுக்காக(Martin
o’malley) ஆதரவு திரட்டினேன். அவரது வெற்றிக்கு வர்த்தக சமூகத்தினரின் பெறும் ஆதரவுகிடைத்தவும்
ஒரு காரணம். நான் ஏற்கனவே அதிபர் ஒமாபாவின் தேர்தல் மாநில குழுவிலும் பணியாற்றியிருக்கிறேன்..
தேர்ந்தெடுக்கபட்ட கவர்னர் கடந்த ஆண்டு என்னை
வெளியுறவு துறைக்கு இனைச்செயலாளாராக் நியமித்திருக்கிறார்.
ஜனநாயக(டெமாகிரட்ஸ்)
கட்சிக்காக தொண்டாற்றியதனால் கிடைத்த பதவியா
இது?
அப்படி
சொல்ல முடியாது. இங்கு கட்சியில் இருப்பதானால் மட்டும் அமைச்சராக முடியாது, கட்சியில்
இல்லாதவர்களும் பதவிக்கு வரமுடியும். மக்களால் தேர்ந்தெடுக்க படும் அமெரிக்க அதிபரும்,மாநில
கவர்னர்களும் நிர்வாகத்தை செம்மையாக் நடத்த
தகுதியுள்ள ஒழுக்கமான, மக்களுடன் அதிகம் தொடர்புள்ள திறமையானவர்களை தேர்ந்தெடுத்து
அவர்களுக்கு உதவ நியமிப்பார்கள். அப்படி தேர்ந்தெடுக்பட்டவர்களில் நானும் ஒருவன். சமீபத்தில்
வாஷிங்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட்டமைப்ப்பு நடத்திய பாராட்டுவிழாவில்
கலந்து கொண்ட கவர்னர் ஒமேலா இதை குறிப்பிட்டு
தெரிவித்தது இந்தியார்களுக்கு பெருமையான விஷயம்.
அமெரிக்க அரசியலில் அங்கு வாழும இந்தியர்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா?
மாறிவரும்
சூழ்நிலையில். நிறைய இருக்கிறது. ஆனால் ஆர்வத்துடன்
ஈடுபட தமிழர்களிடம்தான் ஒரு வித தேவையற்ற தயக்கமிருக்கிறது,
வட இந்தியர்கள் போல் தயகமின்றி அமெரிக்கர்களுடன் நம்பவர்கள் எல்லோரும் பழகுவதில்லை.
மாறாக தென்னிந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் நேர்மையும் உழைப்பும் அமெரிக்கர்களை
பெரிது கவர்கிறது. பல பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள்.
இங்கு கட்சிகளில் உள் கட்சி ஜனநாயகம் மிக மதிக்க படுவதால் திறைமையுள்ள எவருக்கும் அரசியலில் இடம் இருக்கிறது.
நீஙகள் பொறுப்பேற்றிருக்கும்
துறையினைப்பற்றி சொல்லுங்கள்
நம்
நாட்டினைபோல் இல்லாமல் இங்கு மாநிலங்கள் நாட்டின்
வெளியுறவு கொள்கைகளுக்கேற்ப தங்கள் மாநில வெளியுறவுதுறையை
அமைத்துகொள்வார்கள். அயல் நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பது, மெரிலாண்டின் தொழில் வளர்ச்சிக்கு அவர்கள் மூலம்
உதவுவது, தொழில் நுட்ப பறிமாற்றம், அன்னிய முதலீடுகள செய்வது, , பெறுவது போன்ற விஷயஙகளை
கவனிக்கும் துறை என்னுடையது. இந்தியா உள்பட 10 நாடுகளை கவனிக்கிறேன். மாநில கவர்னர்
இந்த நாடுகளுக்கு பயணம் செய்யும் முன்னதாக நான் சென்று முன் ஆயூத்த பணிகளை செய்வதும் என் பணிகளில்
ஒன்று.
இந்தியாவிற்கு-
குறிப்பாக தமிழ்நாட்டிற்கு ஏதாவது செய்ய முடிகிறதா?
மெரிலாண்ட்
அரசின் கொள்கை முடிவுகள் எடுக்கும் குழுவில் இருப்பதால் இங்குள்ள பன்னாட்டு நிறுவனங்கள்
தமிழகத்தில் தொழில் தொடங்க ஆலோசனைகள் வழங்கி அதுகுறித்து தமிழக தொழில் முனைவோரிடம்
பேசிகொண்டிருக்கிறேன். ஏறகனவே குஜராத், ஆந்திர
மஹாராஷ்டிர மாநிலங்களில் அமெரிக்க நிறுவனங்களை அறிமுகபடுத்தியிருகிறேன், குஜராத் அரசு
வெகு வேகமாக செயல்படுகிறது. மேலும் “ஸிஸ்டடர் ஸ்டேட்” என ஒரு இந்திய மாநிலத்தை இந்த மெரிலாண்ட் மாநிலம் தத்து
எடுத்துகொள்ளலாம் என்பது ஒரு திட்டம் இதன்
மூலம் தமிழ் நாட்டை மெர்லாண்ட்டுடன் இணைக்க
முயற்சி செய்துகொண்டிருக்கிறேன், இதனால் இரு நாட்டின் மாநிலங்களுகிடையே பரஸ்பரம் நல்லுறவும்,
தொண்டு நிறுவங்களுக்கு ,பள்ளிகளுக்கு உதவி கிடைக்கும், இது கொள்கைரீதியிலான எனபதால்
எல்லா மாநநிலங்களுக்கும் அறிவிப்புஅறிக்கை அனுப்பபட்டது. உடனே விருப்பம் தெரிவித்திருப்பது
ஆந்திர மாநிலம் தான். . தமிழகத்துடன் தொடர்ந்து
நம்பிக்கையுடன் தொடர்பிலிருகிறேன்.
தமிழகத்தில்
உங்கள் சோந்த ஊர் எது? ஏப்போது அமெரிக்கா வந்தீர்கள்.
?
சொந்த
ஊர் புதுகோட்டை மாவட்டத்திலுள்ள முத்துகாடு
என்ற சின்னஞ்சிறு கிராமம். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் மின்சாரம் கிடையாது,
மண்ணெணை விளக்கில் படித்தவன் நான். பள்ளியில் வகுப்புகள் மரத்தடியும், ஒலைகொட்டகையும்தான்,
வசதியில்லாத ஒரு சிறு கிராமத்தின் அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தவன் நான். அந்த கிராமத்தின்
முதல் பட்டதாரி நான் தான். என் நிலையை பார்த்து இன்று முதுகலை வரை படிக்க மாணவர்கள்
முன்வருகிறார்கள். நான் இன்றும் கிராமத்தை மறக்கவில்லை..என்னால் இயன்ற உதவியை செய்துகொண்டிருக்கிறேன்.
உயர் நிலை பள்ளிக்கு கட்டிடம் கட்டி உதவியிருகிறேன். அங்கு தேசத் தலைவர்கள் படங்களுக்கிடையே முன்னாள் மாணவர் என்று என் படமும் மாட்டபட்டிருப்பது அமெரிக்க அரசில் அமைச்சராக இருப்பதை விட பெருமையான
விஷயமாக நினைக்கிறேன்.
உங்கள் குடும்பம்
பற்றி சொல்லுங்கள்
பல
புலம்பெயர்ந்த இந்தியர்களைபோல சவாலாக துவங்கி உழைப்பை மட்டுமே நம்பி உயர்ந்த குடும்பம்.
இப்போது மெரிலாண்ட் மாநிலத்தில் நிரந்தர வாழ்க்கையாகி நிற்கிறது. மனைவி சாவித்திரி
ஒரு வேளாண்மை விஞ்ஞானி. நான்கு கண்டுபிடிப்புகளுக்கு உரிமம் பெற்ரிருக்கிறார். இப்போது
அரசு பணியிலிருகிறார். இரண்டு மகன்கள் மூத்தமகன் பெற்றோர்களைப்போ பள்ளி இறுதி கட்டத்திலிருகிறார்.
அமெரிக்காவில் அமெரிக்கர்களுடன் பழகி வாழ்ந்தாலும், 20 ஆண்டுகளானாலும் வேர்களை, அதன்
அடிமண்ணை மறக்கவில்லை. வீட்டில் தமிழ்தான் பேசுகிறோம். வாரந்தோறும் கோவில் செல்லுகிறோம்.
அமெரிக்க அரசியலில்
ஒரிடத்தை பிடித்திருக்கும் உங்கள் எதிர்கால திட்டம்.என்ன?
எனக்கு இதுவரை கிடைத்தவைகளை திட்டமிட்டு பெறவில்லை. இறைவன்
தந்தது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொடுத்த பணியை சிறப்பாக செய்யதுமுடிக்க வேண்டும்
எனபதைதவிர பெரிய திட்டம எதுவுமில்லை. இந்த பதவியினால் நம் நாட்டுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு
நிறைய பன் நாட்டு நிறுவங்களின் பயோ டெக் தொழில்நுட்பஙகளை
கொண்டுவர ஆசை. இதற்கு தொழில்முனைவோர், மற்றும் அரசின் ஆதரவு தேவை. கிடைக்கும் எனற நம்பிக்கையோடு
இருக்கிறேன்.