22/11/09

தாயே வணக்கம்

தாயே   வணக்கம்
காலையில் பெய்த மழையினாலா அல்லது எப்போதுமே இப்படித் தானா என்று  தெரியவில்லை. கல்பாவிய அந்த சிறிய பாதையெல்லாம் நசநசவென்றிருக்கிறது.எதிரே வரும் மனிதர்கள், அருகில் வரும் சைக்கிள் அல்லது மாடு இல்லாவிட்டால் ஆங்காங்கே நீட்டிக்கொண்டிருக்கும் கடையின் பலகைகள் இப்படி எதிலாவது இடித்துக்கொள்ளாமல் நம்மால்  நடக்க முடிய வில்லை. இடையிடையே  பயமுறுத்தும் மோட்டர்சைக்கிள்கள் வேறு. இப்படி இடித்துக்கொள்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்ற ரீதீயில் நடக்கும் மக்கள். வாரணாசியின் சிறிய சந்துகளைப்பற்றி,,,,, நிறையப்படித்திருந்தாலும் பார்க்கும்போது ஆச்சரியத்தை தவிர்க்க முடியவில்லை. உலகப்புகழ் பெற்ற காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு போய்க்கொண்டிருக்கிறோம். “இந்த சந்தில்போனால் 5 நிமிடம்” என்று உள்ளுர்காரர் சொன்னதை நம்பி கடந்த 15நி¢மிடமாக நடந்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு சந்தின் முடிவில் கோணல்மாணலாக எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களையும் அம்புக்குறிகளையும் கடந்து சற்றே பெரிதாக இருக்கும் அந்த  குறுகிய தெருவில் ஒரு நுழைவாயில்.  பிராம்மாண்டம் ஆடம்பரம் எதுவும் இல்லாத அந்த நுழைவாயின் அருகிலிருக்கும் போலீஸ் சோதனை சாவடிகள், கெடுபிடிகள் எல்லாம் அது தான் கோவில் என்பதைத்தெரிவிக்கிறது.  வெண்சலவைக்கல் விரிந்திருக்கும் ஓரு பறந்த முற்றத்தின் நடுவே  நான்கு புறமும் வாயில்கள் கொண்டஒரு மண்டபம்.அதுதான் சன்னதி. நடுவே தரையின் நடுவில் தரையிலேயே மூர்த்தீ. சுற்றி நான்குபுறமும் பூஜைசெய்யும் அர்ச்சர்கள்.அவர்கள்தங்கள் உடலாலும்,பூஜைப்பொருட்களாலும் நுழைவாயிலை மறைத்துக்கொண்டிருப்பதாலும் அதற்கு வெளியே மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நிற்பதாலும் நமக்கு  சன்னதி ஸ்வாமி எதுவும் தெரியவில்லை. அனேகமாக இந்தியாவின் எல்லா மாநில முகங்களை பார்க்கமுடிந்த அந்த கூட்டத்தில் அதில் தெரிந்த எமாற்றத்தையும் உணரமுடிந்தது. நன்றாக பார்ப்பதற்கு எதாவது  எற்பாடு செய்யதிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டு அவரவர் மொழிகளில் முணு முணுப்பது ஆரத்தியின் உச்சகட்டத்தில் எழும் கோஷத்தில் கரைந்துபோகிறது அபிஷேகம் ஆர்த்திமுடிந்து கூட்டம் கலைந்த பின்அருகில் சென்று பார்க்கிறோம். வெள்ளியிலான நாக கவசம் அணிவிக்கப்பட்டு, பளீரென்று சிவப்பு மஞ்சள் மலர்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார் விஸ்வநாதர். தரிசனத்திற்குபின்னர் வெளியே வந்த நாம்  இப்போது மற்றொரு சந்தின் துவக்கத்திருக்கிறோம் மென்பதை புரிந்து கொள்ள சில நிமிடங்களாகின்றன...
மாககவி பாரதியார் இங்கு சிலகாலம் வாழ்ந்திருக்கிறார்.அந்த இடத்தில் அவருக்கு சிலையிருப்பது அறிந்து பார்க்க தேடிச்செல்லுகிறோம். அதிகம்பேர் அறியாத அந்த சி¨லைருக்குமிடத்தை அருகிலிருக்கும் பால்கடைக்காரர் ஆக்கரமித்திருக்கிறார்.நெஞ்சு பொறுக்குதில்லையே ..இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து..  என்று புலம்பதைத்தவிர் வேறு வழியில்லை. அருகில்
நண்பர்கள் சொல்லியிருந்த மணிகர்ணீகா கட்டம் அருகிலிருப்பதை அறிந்து கட்டத்திற்குபோக சைக்கிள்ரிக்ஷாவை அணுகிறோம். அந்த வயதான மனிதர் கேட்ட குறைவான கட்டணத்தில் ஆச்சரியமடைந்து பயணம் செய்தகொண்டிருக்கும் நம்மை கடந்துபோகும்  அந்த காட்சி மனதை உலுக்குகிறது.  பக்கங்களில் இருவர் பிடித்துக்கொண்டிருக்கும் ஹாண்டில்பாரில் தலை, சீட்டில் உடல், கேரியரில் கால்கள் என இரு மூங்கில்களில் பிணைக்கபட்டு (பாடை என்ற சொலிற்குகூட அருகதையற்றது அந்த கட்டமைப்பு)கிடத்தப்பட்ட என ஒரு மனிதனின் இறுதிப்பயணம் சைக்கிளிலில் ! தன் இறுதிபயணம் இப்படி நடக்ககுமென இந்த மனிதன் வாழ்நாளில் நினைத்தாவது பார்த்திருப்பனா? காசியின் சடலங்களயும் அவைகளுக்கு நேரும் அவலங்களையும் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் கண் முன்னே பார்த்த  மனதைப்பிசைந்த அந்த காட்சியின் தாக்கத்திலுருந்து மீள நீண்ட நெடுநேரமாகிறது. “இந்த மணிகார்ணீகா கட்டதில் குளிப்பது மிகப்புண்ணியம் சிவபிரான்  ஸ்னானம் செய்தகட்டம் இதன் அருமை பலருக்கு தெரியாது நீங்கள் கட்டாயம் குளியுங்கள் புண்ணியம் ” என்று சொன்ன அந்த ரிக்ஷா காரரை அனுப்பிவிட்டு குறுகியபாதையின் முடிவிலிறங்கும் படிகட்டுகளை கடந்து கங்கயை பார்க்கும் நமக்கு எமாற்றம். கலங்கிய கருப்புவண்ணத்தில் மிக மோசமாகமாக குப்பைகளுடன் வரும் கங்கை, அருகில் நிற்கும் நகரின் கழிவுநீரை நதியுடன் இணைக்கும் ராட்சத சைஸ் குழாய்களைப் பார்த்து சற்று அருவெறுப்படன்  தயங்கி நிற்கும் நமக்கு அங்கு குளிப்பவர்களைப் பார்க்கும் போது. நிர்வாகம் எப்படி இந்த படித்துறையை பயன்படுத்த அனுமதிக்கிறார்கள் என்பதைவிட,புண்ணியம் தேடும்வெறியில் புத்திசாலிதனத்தையே இந்த மனிதர்கள்இழந்து விட்டிருக்கிறார்களே என்பதுதான் ஆச்சரியமாக  இருக்கிறது
அருகிலேயே காசிநகரின் இடுகாடு.தினசரி 50-100 உடல்கல் தகனம்செய்யப்படும் இந்த் இடத்தில் வசூலிக்கபடும் ‘கட்டணம்' உலகப்புகழ் பெற்றது. விலையுர்ந்த சபாரிசூட், கையில் தங்கபட்டையில் கடிகாரம் சட்டைப்பையில் தங்கபேனா கையில் தொடர்ந்து ஒலிக்கும் செல்போன் என ஒரு பிஸினஸ்மேன் போல காட்சியளிக்கும் அந்த மனிதர் தான் இந்த இடத்தின் ராஜா. ஆமாம் அவர்தான் தலைமை வெட்டியான். சத்திய நாரயண செளத்திரி. பரபரப்புடன் இயங்கும் அவரின் கீழ் 6 உதவியாளார்கள் எரியும் சிதைகளை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் முறை வருவதற்காக  சடலங்களுடன் காத்திருக்கும் உறவினர்கூட்டத்தினருடன் பேரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பல ஆயிரங்கள், சில சமயங்களில் லட்சங்கள் கூட வசூலிப்பார்களாம்.  செளத்ரியிடம் கேட்டபோது “அதெல்லாம் கிடையாது. இறந்தவரின் தகுதிக்கேற்ப கட்டணம். மன்னரிடமும் சாதாரண மனிதரிடமும் ஒரே கட்டணம் வாங்குவது தர்மமில்லை. இலவசமாக இந்த பணியை யாருக்கும் செய்யகூடாது என்று வேதத்தில் சொல்லியிருக்கிறது (எந்த வேதமோ நமக்கு தெரியவில்லை) முன் காலங்களில் மன்னர் குடும்பங்களுக்கு நாங்கள் செய்த பணிக்காக எங்களுக்கு வீடுகள், அரண்மணைகள் கொடுத்திருக்கிறார்கள். சொந்தமகனுக்கு கூட இந்த பணிக்கு பணம் கேட்ட அரிச்சந்த மஹாரஜவிற்கு ராணி தனது சேலையைகிழித்து கொடுக்கவில்லையா? அப்படிபட்ட அரிசந்தமஹாராஜவிற்கே சம்பளம் கொடுத்த மன்னர் பரம்பரயினர் நாங்கள்.” என நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே செல்போனில்  சற்று முன் நகரில் இறந்த ஒருவரின் வருமான விபரங்கள் சொத்து விபரங்கள் காரியம் செய்யப்போகும் மகன் பற்றிய விபரம் வருகிறது. இந்த ‘ராஜாவின்” விரிந்த சாம்ராஜ்ய எல்லைகளும் அவரின் நெட் ஒர்க்கின் வலிமையும் புரிகிறது.
மெலிந்த உயர்ந்த உருவம், தீர்க்கமான முகம் பளிசென்றகண்களுடனிருக்கும் அந்த சிறுவன் “படகில் சென்று சுத்தமான கங்கையில் நிம்மதியாக குளிக்க விரும்புகிறீர்களா?” என்று பணிவான ஆங்கிலத்தில் கேட்ட விதம் எவரையும் “எஸ்” சொல்ல வைக்கும்.  படகில் எறிய பின்னர் தான் தெரிகிறது ஒட்டப்போவது அந்த பையன் இல்லை  அவரது குடும்ப படகிற்கு அவர் மார்க்கெட்டிங் அதிகாரி என்பது. பரந்து விரிந்திருக்குமந்த கங்கை கடலில் சீறி வரும் புது வெள்ளத்தில் சீரான வேகத்தில் படகு சென்று நின்ற இடம் ஒரு மணல்திட்டு. ஓரு கரையில் ஸ்நான கட்டங்களும் மறு கரையில் பழைய பனாரஸ் நகருமிருக்கும் கங்கை நதியின் நடுவே இதுபோல பல திட்டுக்கள். சொன்னதுபோலவே நதி சுத்தமாக ஒடுகிறது.இறங்கிக்குளிக்க வசதியாக படகிலிருந்து கயிறு கட்டி தருகிறார்கள்.எப்படி பாதுகாப்பாக குளிக்கவேண்டும் என சொல்லித்தருமிந்த படகோட்டிகள் கங்கையிலேயே பிறந்து வளர்ந்து மடிபவர்கள்.வாழ்நாள் முழுவதும் இங்கு வருபவர்களுக்கு பணி செய்து புண்ணியம் சேர்ப்பதால் இவர்களுக்கு மறு பிறவி கிடையாதாம். கங்கையில்  படகு பயணம் செய்த பின் மாலையில் கங்கா ஆர்த்தியை நதியிலிருந்தே பார்க்கலாம் என அழைத்துப்போகிறார்கள். அன்றைய ஸ்மஸ்தானமன்னர்கள் தங்களது நாட்டின் காலாச்சார பிரதிபலிப்பகாக அழகான சிற்பவேலைபாடுகளுடன் கட்டியிருக்கும் ஸ்நானகட்டங்கள் பல கேட்பாரற்று  பழாகி ஆக்கரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது.  பனாரஸ் மன்னரின் ஸ்நான அரண்மனை போன்ற  சில அருமையாக பாரமரிக்கப்படுகிறது. மற்ற பலவற்றில் ஹோட்டல்கள், பட்டு புடவைக்கடைகள். சில்லென்ற காற்றின் சுகத்தில் படகுப்பயணத்தை அனுபவித்து கொண்டே ஆர்த்தி கட்டத்தை நெருங்குகிறோம். துவங்க இன்னும் அரைமணி நேரமிருந்தாலும் படித்துறையில்  மக்கள் உட்கார ஆரம்பித்துவிட்டார்கள்.ஓலிபெருக்கியில் பக்தியிசை, அறிவிப்புகள். நிறைய வெளிநாட்டினர் நம்மைப் போல படகில் காத்திருக்கிறார்கள்.வேறு சிலர் படகில் பயணம் செய்யாவிட்டாலும் பார்ப்தற்காக,  படமெடுப்பதற்காக காசு கொடுத்து காலிபடகுகளில் உட்காருகிறார்கள் . மெல்ல இருள் பரவுகிறது.அதிகமாகிக்கொண்டிருக்கும் கூட்டம், ஆர்வத்தைத்துண்டும் அறிவிப்புகள் ஆர்த்திப் பாடல்பாடும் குழு வந்தமர்கிறது. இந்திய மொழிகள் அனைத்தும் காதில்விழுகிறது. படிகளினிடையே பலகையினால் நிறுவப்பட்ட சிறிய மேடையில் தங்கம்மாய் மின்னும் ஒரு குட்டி மண்டபம். உள்ளே முகம் மட்டும் தெரியும் கங்காமாதா. அருகில் பூஜை சாதனங்கள்.பக்கவாட்டில் பக்கத்திற்கு இரண்டாக நாலு சிறிய மேடைகள் அதிலும் பூஜை பொருட்கள். மணி 7ஐ நெருங்குகிறது.படிகளில் கூட்டம் வழிகிறது.. மின் விளக்கு வெளிச்சத்தில்  தகதகவென பளபளக்கும் ஆரஞ்சுக் கலர்பட்டாடையில் பூஜைமேடைஅருகே கம்பீரமாக நிற்கும்  இளைஞர்கள். டாண்ணெண்று 7 மணிக்கு அறிவிப்பபைத் தொடர்ந்து பூஜையை நடுமேடையில் வந்தமரும் தலமைப்பூசாரி துவக்குகிறார். பள்ளிக் காலை வணக்க கூட்டத்தில் சலசலத்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் விசிலடித்ததும்  அமைதியாகிவிடுவதுபோல  சட்டென்று கூட்டம் அமைதியாகி கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. மேடையிலிருக்கும் தேவிக்கு முதல் பூஜை முடிந்து  ஒரு சிறிய தீபாரதனை. அந்த தீபத்திலிருந்த எடுத்த அக்கினியில் அருகில் தயாராகயிருக்கும் பெரிய தீபங்கள் ஏற்றபடுகிறது. இசைகுழுவின் ஆர்த்திபாடல் ஒலிக்கிறது. ஓவ்வொன்றாக 7 விதமான தீபங்கள், படியிலிருந்து கங்கையை நோக்கி மூன்று திசைகளுக்கும் காண்பிக்கபடுகிறது. ஒவ்வொருமுறையும் 5 பேரும் இசையுடன் இணைந்து துல்லியமான அசைவுகளைக்கூட ஒரு பிசிரில்லாமல் தேர்ந்த  நடன கலைஞர்களைப் போல நேர்த்தியாக  செய்யும் அந்த காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. கனமான அந்த  கொதித்துக்கொண்டிருக்கும் தீபங்களை ஒருகையில் தூக்கிச்சுழற்றிக்கொண்டே மறு கையில் கனமான மணியை அடித்துக்கொண்டே ஒரு காலில் மண்டியிட்டு  4 பேரும் ஒரே நேரத்தில் வினாடிபிசாகமல் திரும்புகிறார்கள். தொடர்ந்த பயிற்சி,இசைஞானம்,பக்தி இவை யெல்லாம் இல்லாமல் இதைச்செய்யமுடியாது நூற்றுகணக்கான விடியோக்கள் இயங்குகின்றன.ஆயிரகணக்கான காமிராக்கள் பதிவுசெய்கின்றன.2000 வருடங்களாக ஒருநாள்கூட விடாமல் தொடர்ந்து நடைபெறுவதாக சொல்லும் இந்த நிகழ்ச்சிக்கு கட்டணம் எதுவுமில்லை.பார்ப்பவர்கள் தரும் காணிக்கைகளதான்.இறுதியில் பல அடுக்கு விளக்குகளுடன் ஆர்த்தி.உச்சஸ்தாயில்  இசைகுழுவின் குரல். பக்திபரவசத்தில் மக்களின் “கங்காமாதாகீ ஜே” என்று ஓங்கி ஒலிக்கும் குரலின் பின்ணியில் மூன்று முறை சுழற்றப்பட்ட அந்த பெரிய தீபம் மக்களை நோக்கிகாட்டபட்டபின் அணைக்படுகிறது. காத்திருந்த மக்கள் தங்கள் கைகளில் புஷ்பங்களுடன் இலைகளில் வைத்திருக்கும் சிறு தீபங்களை மிதக்க விடுகிறார்கள். சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கில் நம் படகை கடந்து மிதக்கும் அந்த மின்னும்  நட்சத்திரங்களை ரசித்த வண்ணம் கவனமாக அருகில் நிற்கும் படகுகளில் மாறி மாறி  நடந்து  கரையிலிருக்கும் அந்த ஆர்த்தி இசை கலைஞர்களை நெருங்குகிறோம். ஆர்மோனியம் வாசித்து கொண்டே பாடியவரையும் தபேலா வாசித்த கலைஞரையும் பாரட்ட கை நீட்டிய   நாம் அவர்கள் முகத்தைப் பார்த்ததும் சற்று அதிர்ந்து போகிறோம்.  தினசரி பல ஆயிரம் கண்கள் பார்க்கும் அந்த அற்புதமான ஒளி வழி பாட்டுக்கு உயிர்தரும் இசையை வழங்கும்  அந்த சகோதரர்களால் அதைப்பார்க்க முடியாது. ஆம் அவர்கள் விழியில் ஒளியில்லை.
மனித வாழ்க்கைதான் எவ்வளவு ஆச்சரியங்களை கொண்டதாயிருக்கிறது.!

பார்த்ததை படங்களுடன் பகிர்ந்து கொள்பவர்9/8/09

வங்கிப்பணியில் வளமான எதிர்காலம்


வங்கிப்பணியில் பதவி  உயர பிரகாசமான வாய்ப்புகள் ¸¡ò¾¢Õ츢ýÈÉ. இன்றயைய வங்கித்தலைவர்களில் பலர்  பயிற்சி அதிகாரிகளாக தங்கள் பணியைத் துவக்கியவர்கள்.
நல்ல சம்பளம்,À½¢ôபாதுகாப்பு,பதவிஉயர்வுகளுக்ககு வாய்ப்பு போண்ற விஷÂங்களினால் வேலைத்தேடும் பலரின் விருப்பமான இலக்குகளில் முதலிடம் பெற்றிருப்பது  வங்கியில் பணி. சமீபத்திய உலகப்பொருளாதார சீரÆ¢வில் அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளில் உருகி கரைந்து  அழிந்துபோன போன வங்கிகளைபோல் இல்லாமல்நமது இந்திய வங்கிகள் அசையாது நின்று தங்களது உறுதியான கட்டமைப்பை  நிருபிததிருக்கிறது.
வங்கிகளின் பணி பொதுமக்களிடம் டெபாசிட்டுகளைப் பெற்று அதை அவசியமானவர்களுக்கு கடனாககொடுத்து வட்டியுடன்திரும்பபெறுவது” என்று வணிகவியல் பாடங்களில் சொல்லிலித்தரப்பட்டவையெல்லாம் இன்று பழங்கதையாகிவிட்டது. வங்கிகள் இன்று தங்கள் செயல் பாடுகளின் எல்லைகளை புதிய  வகை சேமிப்பு திட்டங்கள்கடன்வசதி திட்டங்கள் தனிநபர்சொத்துபாரரமரிப்புஇன்ஷுரன்ஸ்கிரிடிட்/டெபிட் கார்டுகள்  முதலீட்டுஆலோசனைமியூட்சுவல் பண்ட் ,பென்ஷன் நிர்வாகம் பங்குச்சந்தை தரகர் என்று பல திசைகளில் விரிவாக்கிக்கொண்டே போகிறார்கள்.
 இவைகளையும் தாண்டி பல இந்திய வப்ங்கிகள் இன்று வெளிநாடுகளில் தடம் பதிக்க துவங்கியிÕக்கிறார்கள். ஸ்டேட்பாங்க் போன்று எற்கனவே வெளிநாடுகளில் கிளைகள் உள்ள வங்கிகள் தங்கள் சாம்ராஜ்யங்களை விரிவாகக்த்தொடங்கிவிட்டார்கள். இவைகளினால் இந்திய வங்கிப்பணியின் வேலைவாய்ப்புகள் உலக அளவில் பரவத்துவங்கியிருக்கிறது.
வேலைவாய்ப்புகள்
நமது நாட்டில் மிக அதிக அளவு வேலைவாய்பயை வழங்கும் துறைகளில்  வங்கித்துறையும் ஒன்று. கடந்த ஆண்டு92008-09) வங்கித்துறையில் வேலை பெற்றவர்கள்50,000.  இந்த ஆண்டு(2009-10)ல் இது பலமடங்ககாக உயரப்போகிறது.
வங்கிபணியில் நுழைய ஊழியர்கள்அதிகாரிகள் என இரண்டு பிரிவுகளில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதில் பயிற்சி அதிகாரி  என்பது அதிகாரிகளின் அந்தஸ்த்தின் முதல் நிலை. . இன்றயைய வங்கித்தலைவர்களில் பலர்  பயிற்சி அதிகாரிகளாக தங்கள் பணியைத் துவக்கியவர்கள். பொதுத்துறை  வங்கிகளில் பயிற்சிஅதிகாரியாக சேர்ந்துவர்கள் படிப்படியாக பதவி உயர்ந்து வங்கிகளின் மிக உயரந்த பதவியான சேர்மன் கம் மானேஜிங் டைரக்டர் வரை உயர்ந்தவர்கள்.
ஓவ்வொருவங்கியும் தங்கள் பயிற்சி அதிகாரிகளைத்தெர்ந்தெடுக்க வெவ்வெறு தேர்வுமுறைகளைப் பின்பற்றுகின்றன.சில வங்கிகளில்  நுழைவுதேர்வுசிலவற்றில் தேர்வும் நேர்முகத்தேர்வும் இப்படி மாறுபட்டவை. ஆண்டுதோறும் ஒவ்வொரு வங்கியிலும் சில ஆயிரக்கணக்கான இடங்களுக்கு,பல இலட்சக்கணக்கான பட்டதாரிகள்முதுநிலைப்பட்டதாரிகள்,தொழில்வல்லுனர்கள் போட்டியிடுகிறார்கள்.
பயிற்சி அதிகாரியாக சேர என்ன தகுதி வெண்டும்?
நுழைவுத்தேர்வு எழுத 21முதல் 30 வரையிலான வயது வரம்பிலிருக்க வேண்டும். பட்ட படிப்பபில் 55% அல்லது 60% மதிப்பெண் பெர்றிருக்கவேண்டும். சில வங்கிகள் வணிகவியலுக்கும்மற்ற பாடங்களுக்கும் வேறுபட்ட மதிப்பெண்களை நிர்ணயிò¾¢Õìகின்றன.எல்லா வங்கிகளிலும் SC/ST பிரிவினருக்கான சலுகை வயது வரம்பலிலும்மதிப்பெண்களிலும் அலிக்கபடுகிறது.பொதுவாக வயதில் 5 ஆண்டும்மதிப்பெண்ணில் 5%மும் அளிக்கப்படுகிறது.
தேர்வு முறை
பயிற்சி அதிகாரிகளுக்ககான தேர்வு முறை வங்கிக்கு வங்கிக்கு வேறுபடும்.பொதுவாக தேர்வு இரண்டு கட்டமாகயிருக்கும். முதல் கட்டம் ±ØòРநுழைவுத்தேர்வு. இது இரண்டு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். அப்ஜெடிக்வ் டைப் என்று சொல்லப்படும் சரியானவற்றைத் தேர்ந்¦¾டுக்கவேண்டிய கேள்வித்தொகுப்பும்,தொடர்ந்து விரிவான பதிலுக்கான கேள்விகளைக்கொண்டதாகயிருக்கும். இதில் வெற்றிபெற்றவர்கள் மதிôபெண்களின் அடடிப்படையில் ¾Ãபட்டியலிடப்படுவார்கள். அந்த பட்டியிலிருந்து குறிப்பிட்ட கட் ஆப் மதிப்பெண் வரைபெற்றவர்கள் அடுத்த கட்டதிற்கு தேர்வு பெறுவார்கள். இவர்கள் குழு கலந்துரையாடல்மற்றும் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.சில வங்கிகள் கலந்து¨Ãயாடல் நடத்துவதில்லை. நேர்முகத்தேர்வு மட்டுமே. பொதுவாக இருக்கும் காலியிடங்களைபோல 5 முதல் 7 மடங்கு வரையிலலான விண்ணப்பதார்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கபடுவார்கள்.
பெருமளவில் விண்ணப்பங்கள் வருவதால் பாரத ஸ்டேட்வங்கியும் பஞ்ஞாப் நேஷனல் வங்கியும் கடந்த ஆண்டு தேர்வுகளை மூன்று கட்டமாக நடத்தியது.ஆனால் சிண்டிகேட் வங்கி நுழைவுத்தேர்வயே நடத்தாமல்.பட்டபடிப்பின் மதிப்பெண்கள் மற்ற கல்வி தகுதிகÇ¢ன் பின்னணிகளின் அடிப்படையில் நேரடியாக§Å நேர்முகத்தேர்வுக்கு அழைத்து  அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்தது.
எழுத்து தேர்வு
அப்க்ஜெக்டிவிவ் என்ற பகுதியில் ஒப்ப்பிடும்திறன்,சரியானவற்றை இனம்கண்டுகொள்ளும் ஆற்றல் இவற்றுடன் ஆங்கில் மொழிஅறிவும்
சோதிக்கக்படுகிறது. சில வங்கிகளின் தேர்வில் வங்கித்துறைகணணி பற்றியும்மார்க்கட்டிங் திறமை பற்றியும் கேள்விகள் கேட்கபடுகின்றன.எந்த மாதிரி கேள்விகளாயிருந்தாலும். எல்லாப்பகுதிகலிலும் நல்ல மதிபெண்கள் பெற்றால்தான்óத பகுதிக்கான கட் ஆப் மதிப்பெண்ளையும் அதனால் முழுத்தேர்வின் கட் ஆப் மதிப்பெண்களையும் பெறமுடியும்.ஆங்கிலத்தை தவிர மற்ற கேள்வித்தாள்கள் இந்தியிலுமிருக்கும்.சில வங்கிகள் அந்தந்த மாநில மொழியிலும் எழுத அனுமக்கிறன்றன.
அப்ஜெக்டிவ் தேர்வு வங்கிக்கு வங்கி மாறுபடும். 2 அல்லது 2மணி15 நிமிடம் நடடைபெறும் இந்த தேர்வில் 200 முதல் 225  கேள்விகள் 200-250 மதிபெண்கள். 5 விடைகளில் சரியான ஒன்றைத்தேர்ந்த்டுக்கம் பாணியிலிருக்கும். தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கபடும் இந்த பகுதியில் 4 அல்லது 5 உட்பிரிவுகள்இருக்கும். பிரச்சனைகளை ஆரய்ந்து நோக்கி ¾£ர்க்கும் திறன்மாறுபட்ட படங்களை ஒப்பிடும் திறன்,ஆங்கில் மொழியின் இலக்கணம்பொது அறிவுபலபரிமாண பகுத்தாய்வு போன்ற பல திறன்களைச்சோதிக்க உட் பிரிவுகள்

பல வேறுபட்ட அர்த்தங்கள் தரக்கூடிய ஒரேமாதிரியான ஆங்கில வார்த்தைகள்கோடிட்ட இடத்ததை சரியான பதத்துடன் நிரப்பவதுசொல்லாட்சிதிறன், þÄ츽அறிவு போன்றவை ¦Á¡ழி பகுதியில் சோதிக்கபடுகிறது. ஐஓபியூனியன் போன்ற வங்கிகள் இந்த பகுதி மதிப்பெண்களை தகுதித்தேர்விற்காக மட்டுமே கணக்கிடுகிறார்களே தவிரஇறுதித்தேர்வு தரப்பட்டியலிட கணக்கிடுவதில்லை. சில வங்கிகள் இது பற்றி எதுவும் சொல்லாவிட்டாலும் இறுதித் தேர்வுபட்டியிலுக்கு இந்த மதிப்பெண்களை கணக்கிலெடுத்துக் கொள்கிறார்கள் என்று யூகிக்கமுடிகிறது.
பொதுஅறிவு பகுதியில் சுற்றுபுற சூழல்,சமூகபிரச்சனைகள்,மக்கள்பிரச்சனைகள்,நிகழ்வுகள் பற்றிய கேள்விகளைச் சந்திக்கவேண்டும்.
பல பரிமாண பகுத்தாய்வுபகுதியில்கணிதயிலில்  அல்ஜிப்ராஜாமெண்டிரிபட்டியில்களைப் ºÃ¢Â¡¸ÒâóЦ¸¡ûÅРபோண்றவற்றில்உங்கள் ஆளுமைக்கு சாவல். பொதுவாக இவைஅனைத்தும் 10/11 வகுப்பு பாட நிலையில்தானிருக்கும்.
அப்ஜெடிக்வ் பகுதியைத்தொடர்ந்து வருவதுவிரிவாக எழுத வேண்டிய தேர்வுப்பகுதி. இது உங்களுடைய எழுத்தாலாற்றலையும் மொழி ஆளுமையையும் சோதிப்பதற்காகனÐ. இதில் சமீபத்தைய நிகழ்வுகள் பற்றிய கட்டுரைசுருக்கியெழுதல்,படித்துபுரிந்துகொண்டு கேட்டவற்றிருக்கு பதில் எழுதுவது போýறு  4 அல்லது 5 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். 1 மணி நேரம் நடை பெறும் இந்த தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண்கள் பெற்றால் தான் நேர்முகத்தேர்விற்கு தகுதிபெறமுடியும். ஆனல் இதில் எடுக்கும் மதிப்பெண்கள்  இறுதித்தரபட்டியலுக்கு எடுத்துக்கொள்ள படமாட்டாது.þÐ ´Õ ¾Ì¾¢ò§¾÷×. அப்ஜெடிக்வ் தேர்வு குழு கலந்துரையாடல்,மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் இறுதி தரப்பட்டியில் தயாரிக்கப்படுகிறது.
பயிற்சி அதிகாரியாக தயாராகுங்கள்
நீங்கள் என்ன படித்திருந்தாலும் சரி இந்த தேர்விற்கு உங்கள்து 10 வகுப்பு கணக்கு பாடத்தை மீண்டும் பலமுறை படிப்பதிலிருந்து ஆரமிபிக்கவேண்டும்.NCERT புத்தகங்களைத்தேடிப் படித்தால் மிக பயனுள்ளாதாகயிருக்கும். குறைந்த நேரத்தில் அதிக கேள்விகள் பதிலளிக்க வேண்டியிருப்பதால்வேண்டியது வேகம். §Å¸õ §Å¸õ. வேகமாக நிறைய மன கணக்குகள்  போடவும்வேண்டாதவற்றை சட்டென்று நீக்கும் திறனையும்  தினசரி பயிற்சி செய்து வளர்த்துக்கொள்ளவேண்டும்.

நன்றி புதிய தலைமுறை