8/4/12

துயரங்களின் சக்ரவர்த்தி
வாழ்நாளில்  வெற்றி கண்ட சாதனையாளார்களின், வரலாற்றில் இடம் பிடித்த நாயகர்களின், அரசியலில் தங்கள் அடையாளங்களை ஆழமாக பதித்த தலைவர்களின் வாழ்க்கையை பேசும்  வாழ்க்கை வரலாறு நூல்கள் இலக்கிய உலகில்  என்றும் தனியிடம் பெறுவதில் ஆச்சரியமில்லை.  ஆனால் ஒரு நோயின் வரலாற்றை, அதுவும் இன்றளவும் விடை கண்டிபிடிக்கமுடியாத வினாக்களை  இன்னமும் எழுப்பிகொண்டிருக்கும் ஒரு கொடிய நோயின் தோற்றதையும்,  அதனிடம் ஆராய்ச்சியாளார்களும், மருத்தவர்களும் போராடித் தோற்றதையும் விறுவிறுப்பான நடையில், தனது நோயாளிகளின் வாழ்க்கை கதைகளுடன் ஒரு சுவையான வாழ்க்கை வரலறாக எழுதப்படிருக்கும் இந்த புத்தகம் உலகம் முழுவதிலும் வரவேற்பை பெற்றிருப்பது தான் ஆச்சரியம்
2011ஆம் ஆண்டின்  புலிட்சர் விருது,  அமெரிக்கபுத்தக விமரிசகர் வட்டவிருது,. டைம் பத்திரிகைதேர்ந்த்டுத்த சிறந்த புத்தகம், இங்கிலாந்தின்
கார்டியன் பத்திரிகையின்  முதல்புத்தக” “ விருது என  தொடர்ந்து பல விருதுகளை பெற்றிருக்கும் இந்த துயரங்களின்  சக்கரவர்த்தியான புற்று நோயின் வாழ்க்கைவரலாறு”“  என்ற புத்தகத்தை எழுதியிருப்பவர் ஒரு டாக்டர். சித்தார்த்தா முகர்ஜி எனற அமெரிக்க வாழ் இந்தியர்.. இது அவரது முதல் புத்தகம். ஓரே ஆண்டில் இதுவரை எந்த புத்தகமும் இத்தனை சிறப்பான அகில உலக விருதுகளைப்பெற்றதில்லை டாகடர் சித்தார்த்தா  நியூயார்க் நகரின் கொலாம்பியா யூனிவர்சிட்டியில் ம்ருத்த்வபேராசிரியராகவும், அதன் மருத்துவமனையில் சர்ஜனாகவும பணியாற்றும் ஆராய்ச்சியாளார்.  
துவக்கதத்லிருந்து முடியும்வரை ஒரு விறுவிறுப்பான நாவலைபோல  மிக சுவாரஸ்யமாக எழுதபட்டிருக்கும் இந்த புத்தகத்தில் மருத்துவ சொற்கள்  சில இடங்களில் இடம்பெற்றிருந்தாலும் அவை எளிதில் புரியும்  நடையில்   அமைக்கபட்டிருக்கிறது. திறமையான ஒரு சர்ஜனின் விரல்கள் சிறப்பான நாவலையும் படைக்கமுடியும்  என புரியவைக்கிறது.  
டில்லியில் வாழ்ந்த ஒரு மத்தியதரகுடும்பம் சித்தார்த்தாவினுடையது. கண்டிப்புக்கு பெயர் பெற்ற ஒரு கத்தோலிக்க பள்ளியில் படித்தவர். ஆங்கில பொயட்டிரியை சரியாக் ஒப்பிக்காதாதால் தண்டிக்கபட்டது கூட நினவிலிருக்கிறது என்று சொல்லும் இவர்  கல்லூரியில் எல்லாபாடங்களிலும் சிறப்பிடம் பெற்றமுதல் மாணவர். தொடர்ந்து அமெரிக்க ஸ்ட்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் உயிரியலில் முதுகலைப் பட்டபடிப்பின்போது சித்தார்த்தா விற்கு  மிக மதிப்பு வாய்ந்த ரோடோ ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ரோடோ அறகட்டளை உலகின் சிறந்த மாணவர்களை தேர்வுசெய்து அவர்கள் விரும்புவதை விரும்பும் வரை படிக்க உதவும் நிதி. இந்த ஸ்காலர்ஷிப்க்கு உரியவர்கள் கடும் தேர்வுகளுக்கு பின் தேர்ந்தெடுக்கபடுவதால் உலகின் எந்த கல்லூரியின் கதவும் இவர்களுக்கு முதலில் திறக்கும். சித்தார்த்தாவிற்கு மருத்துவதுறையில் சிறப்பாக சாதிக்க வேண்டும் என்ற ஆசை. ரோடோ ஸ்காலர்ஷிப் அந்த லட்சியத்தை அடைய உதவிசெய்தது.   இதன் உதவியால் சித்தார்த்தா ஆக்ஸ்போர்ட் பல்கலகழகத்தில் நோய்தடுப்பில் டாக்டர் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியில்  விரும்பி படித்த நோய்தடுப்பு ஆராய்ச்சி படிப்பின் ஒரு பகுதியாக தினசரி வார்டுகளுக்கு சென்று நோயாளிகளின் நிலைகுறித்து குறிப்புகள் எழுதிவந்தபோதும் அது சம்பந்தமாகவும் படிக்க நேர்ந்தபோது டாக்டர் சித்தார்த்தாவுக்கு இந்த கொடிய நோயின்  தோற்றமும் தொடர்ந்து மருத்தவ உலகத்தினர்  அதை ஒழிக்க செய்து வரும் போராட்டங்களையும் தியாகங்களையும் அறிந்து  ஆச்சரியமைடைந்தார்.  ஜுனியர் மாணவர்களுக்கு பாடம் நடத்த குறிப்புகள் எடுத்த போது  இந்த செய்திகளை  மருத்துவ அதுவும் இதுபற்றி படிக்கும் மாணவர்கள் மட்டுமே அறிய முடிகிறது. இது மக்களுக்கு சொல்லபடவேண்டிய முக்கிய விஷயம் என எண்ணிக்கொண்டிருந்தார்.  பரிசோதிக்கும் நோயாளிகளிடமிருந்து இவர்  தவறாமல் சந்திக்கும் கேள்வியான ஏன் எனக்கு இது வந்தது?  தீர்வேகிடியாதா?“ என்ற கேள்வி இவரை இந்த புத்தகம் எழுத வைத்திருக்கிறது.
கி.மு 500ல் ஒரு பெர்ஷய அரசிக்கு வந்த மார்புகட்டி ரக்சியமாக ஒரு கிரேக்க அடிமையால் கொடுரமான முறையில் வெட்டபட்ட முதல் சர்ஜரியிலிருந்து இன்று கையாளாபடும் கம்பூட்டர்மயமாக்கபட்ட நவீன சோதனைகருவிகள் வரை இந்த நோயுடன் மருத்துவ உலகம்  நிறுத்தாமல் தொடர்ந்து  போராடுவதையும் அதற்காக செய்யபட்ட ஆனால்   பலர் அறியாத தியாகங்களையும் மனம்தொடும் வாழ்க்கை போராட்டங்களையும் தன் புத்தகத்தில் சொல்லியிருக்கும் இந்த டாகடர் இந்த நோயைபற்றிய சமூக பார்வையும் அதன் அரசியல் முகத்தையும் துணிவுடன் பதிவு செய்திருக்கிறார். சிகரெட் பெட்டிகளில் ” “புகைபிடிப்பதில் புற்று நோய் அபாயமிருக்கிறது”“ என்ற வாசகத்தை அச்சிடுவதை சட்டமாக்க அமெரிக்க அதிபர் கென்னடி கூட தயங்கியதையும், அதற்கு காரணம்  அவரது கட்சிக்கு பெரும்  தேர்தல் நிதி தந்தவர்கள் சிகரெட் தயாரிப்பளார்களாகயிருந்தது தான். என்பதையும், நிக்கஸன் அதிபராகயிருந்த்போது வியட்நாம் போரில் இறந்தவர்களைவிட புற்று நோயால் இறந்த அமெரிக்கர்கள் அதிகம். அமெரிக்கா  புற்று நோயை ஒழிக்க ஒரு போரை துவங்க வேண்டும் போராடிய டாகடர்களின் அமைப்புபற்றியும் விவரித்திருகிறார். இதன் மூலம்  புற்று நோய் சம்பந்தபட்ட பல்வேறு விஷயங்களை வரும் தலைமுறையனருக்கு சொல்ல விரும்பும் இவரது சமூக பொறுப்பு புரிகிறது.
2009லிருந்து  நியூயார்க்கின் கொலம்பியா மருத்துவ மனையில் ஒரு விசேஷ ஆராய்ச்சிபிரிவை துவக்கி அதன் மூலம் புற்று நோயில் ஒரு வகையான லூக்கெமியா (ரத்த புற்று நோய்) பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார். அதில் ஒரு மிக முக்கிய திருப்பத்தை சந்திருப்பதாகவும்  இறுதி பரிசோதனைகள் முடியாத நிலையில்  அதுபற்றி  எதுவும் பேசுவது ஆராய்சி மரபுகளுக்கு புறம்பானது என சொல்லுகிறார்.
20 ஆண்டுகளாக தொடர்ந்த அமெரிக்க வாழ்க்கை சித்தாரத்தா முகர்ஜியை மற்றிவிடவில்லை. மரபுகளை மதிக்கும் இந்திய வாழ்க்கைமுறையை நேசிக்க்கும் இவரது மனைவி  சாரா ஒரு அமெரிக்கர். சாரா  ஒவியகலையை முறையயாக பயின்று அதில் முதுகலைபட்டம் பெற்றிருப்பவர்.  இவர்  அமெரிக்கா அறிந்த ஒரு புகழ்பெற்ற விருதினைப் பெற்ற சிற்பகலைஞர். சிற்பம், ஒவியம்  சம்பந்தமான அரசு, மற்றும் அரசு சாராத பல அமைப்புகளில் இடம்பெற்றிருக்கும் இவர் நியூயார்க் பல்கலைகழக ஆசிரியர். தங்கள்  பெண் குழந்தைகள். லீலா, மற்றும் ஆர்யாவுடன் நியூயார்க் நகரின் புறநகர்பகுதியில் வசிக்கின்றன்ர்  இந்த தம்பதியினர். தன் குடும்பத்தைப் போலவே ஆராய்ச்சியையும் அழமாக நேசிக்கும் இந்த டாக்டர் நம்பிக்கையுடன் சொல்வது இன்று சிகிச்யைகள் மூலம்  பல கட்டங்களில் 65% குணமாக்கபடும் இந்த நோய் ஒரு நாள் நிச்சியம் ஒழிக்கபட்டுவிடும் எனபது தான்.
நல்ல டாகடர்கள் தருவது சிகிச்சைமட்டுமில்லை நம்பிக்கையும்தான்.

1/4/12

உலகம் அறிந்த உடைந்த மணி.


உலகம் அறிந்த  உடைந்த மணி.அமெரிக்காவில் பிலடெல்பியா நகரின் நடுவே சுதந்திர பூஙகாவில்  அழகான ஒரு தனி வளாகத்தில் 30அடி உயரமும், 900கிலோ எடையும் கொண்ட அந்த பிரமாண்டமான லிபர்ட்டி பெல் அதன் பின்னே உள்ள கண்ணாடி சுவரின் வழியே தெரியும் அமெரிக்க முதல் சட்டமன்றத்தின் பின்னணியில் கம்பீரமாக நிற்கிறது    ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வந்து பார்க்கும் இந்த மணிக்கு  அமெரிக்க தேசிய  கொடிக்கு நிகரான அந்தஸ்த்து வழங்க பட்டிருக்கிறது. தபால் தலைகளிலும் நாணயங்களிலும் இடம் பெற்றிருக்கும் ஒரு தேசிய சின்னம். ஆனால் இந்த மணி அடிக்கபடுவதில்லை. காரணம் அதில்  விழுந்த விரிசல். பயன்படுத்தமுடியாமல் பல ஆண்டுகள் ஒதுக்கிவைக்கபட்டிருந்த இந்த மணி சரித்திர சின்னமானது ஒரு எழுத்தாளார் எழுதிய  சிறுகதையால் தான்.
 அமெரிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடாக அறிவிக்கபடும் முன்னரே மக்களாட்சி மலர்ந்தது பென்சில்வேனியா மாநிலத்தில்தான். அதன் தலைநகரான பிலடெல்பியா தான் நாட்டின் தலைநகராக அப்போது அறிவிக்கபட்டிருந்தது.  அதை சிறபிக்க புதிதாக எழுப்பட்டிருக்கும் சட்டமன்ற கட்டிட கோபுரத்தில் ஒருமணியை நிறுவ விரும்பினார் மாநில கவர்னர். லண்டனில் உள்ள மணிகள் தயாரிக்கும் புகழ்பெற்ற lலெஸ்ட்டர்&பாக்  (Lester and Pack) நிறுவனத்தால் (இன்றும் இந்த நிறுவனம் இருக்கிறது) வடிவமைக்க பட்டு1793ம் ஆண்டு கப்பலில் பிலெடெல்பியா வந்த மணி  நகர மக்களால்  .. கோலாமாக வரவேற்கபட்டது  மக்கள் பார்வைக்கு வைக்கபட்ட மணி முதல் முறை ஒலிப்பதை ஒரு விழாவாகவே கொண்டாட ஏற்பாடு செய்யபட்டிருந்தது. ஆவலுடன் காத்திருந்த மக்கள்  மணியின் நாதத்தை கேட்டு ஏமாற்றமடைந்தனர். அந்த அளவு அது மோசமாகயிருந்தது. அதில் ஒரு சின்ன மெல்லிய விரிசல் இருந்தது கண்டுபிடிக்கபட்டது,  இங்கிலாந்து நிறுவனம் தவறு எங்களிதில்லை.உங்கள் ஊர் மணியடிப்பவர் சரியாக கையாளாதனால் விரிசல் வந்திருக்கலாம். திருப்பியனுப்புங்கங்கள் சரி செய்து தருகிறோம் என்றது. ஆனால் மீண்டும் ஒரு முறை லண்டன் அனுப்பி திருப்பி பெற ஆகும் கப்பல் கட்டணம் மணியின் விலையை விட அதிகமாக இருந்ததால் அந்த திட்டம் கைவிடபட்டது.ஆனால்மணியை கைவிட மனமிலாத கவர்னர் உள்ளூர் ஆட்களைவிட்டு சரி செய்ய உத்தரவிட்டார். முன்வந்தனர்  இரண்டு இளைஞர்கள். ஜான் சகோதரர்கள் (John Pass and John Stow) இறக்குமதி செய்யபட்ட மணியை உருக்கி அந்த உலோகத்தில் ஒரு புதிய மணியை உருவாக்கினர். ” எல்லா நிபரப்பிலிருக்கும் அனைத்து மக்களுக்கும் சுதந்திரம்” என்று முன்பிருந்த வாசகங்களுடன்  அவர்கள் பெயரும் அதில் பொறிக்கபட்டது. நம் நாட்டிலியே தயாரான மணி என்ற பெருமையை பெற்ற அந்த மணியை   பரிசோதித்தபோது அதன் நாதமும் பலருக்கு திருப்தி தரவில்லை. ஆனாலும் கவர்னரின் உத்தரவின் பேரில் மணி மாடத்தில் நிறுவபட்டது. முக்கியமான நாட்களில் மட்டும் ஒலிக்கபட்ட அந்த மணி ஒரு முறை ஜார்ஜ் வாஷிங்டனின் பிறந்தநாளில் ஒலித்தபோது மாறுபட்டு தெரிந்த அதன் ஒலி மணியில் மீண்டும் ஒரு விரிசல் விழுந்திருப்பதை சொல்லியது.   மணிமாடத்திலிருந்து கழட்டபட்டு ஓரம் கட்டபட்டது. ஆண்டுகள் சில ஆண்டுகளில்  மக்கள் மறந்தே போனார்கள்
அமெரிக்க சுதந்திரபோர்  முடிந்து புதிய நாடும் ஆட்சியும் உருவாகி , மக்களின் உணர்ச்சிகளின் எழுச்சியாகயிருந்த  காலகட்டத்தில். நிகழ்ந்த  சரித்திர நிகழ்வுக பல நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியவர்  ஜார்ஜ் லிப்பர்ட்  20கும்  மேற்பட்ட படைப்புகள உருவாக்கியவர் இன்றும் அமெரிக்க இலக்கியத்தில் மதிக்கபடுவர். இவர் 1847ல் எழுதிய ஒரு சிறுகதை  ஃபோர்த் ஜூலை 1776 ("Fourth of July, 1776")  சார்ட்டே ரெவியூ பத்திரிகையில் வெளியானது.  அந்த மணியை அடிக்க நியமிக்க பட்டிருந்தவர் ஒய்வு பெற்றுவிட்டாலும் மணியை மிகவும் நேசித்ததால் அந்த பணியை தொடர்ந்தார். ஜுலை 4 1776 அமெரிக்க மக்கள் சுதிந்திர பிரகடனம் கையெழுத்தாகப்போகும் செய்தியை எதிர்பார்த்திருந்தனர். தன் வாழ் நாளில் நாட்டிற்கு சுதந்திரம் வந்து அதை இந்த மணியை அடித்து தாம் அறிவிக்க  முடியும் என்ற நமபிக்கையை இழந்திருந்த அந்த வயோதிகரின் பேரன் ஓடிவந்து ”தாத்தா பிகடனம் கையெழுத்தாகிவிட்டது” என்று சொன்ன செய்தியில் மகிழ்ந்து வேகமாக அந்த மணியை அடித்து மக்களுக்கு அறிவித்தபின் இற்ந்துபோகிறார் என்பது  அந்த கதையின் ஒன்லைன்..
சார்ட்டடே ரிவிய்யூவில் வெளியான இந்த கதை தொடர்ந்து மற்ற மாநில செய்திதாட்களிலும்/பத்திரிகையிலும் வெளியானதினால் மிக பிரபலமடைந்தது. கதையில் சொல்லபட்ட சுதந்திர மணியை மணியை பார்க்க ஆவலுடன் மற்ற மாநில மக்களும் அந்த வர ஆரம்பித்தனர். பல ஆண்டுகள் பள்ளிபாடபுத்த்கங்களிலும் இந்த கதை இடம் பெற்றிருந்ததினால் மாணவர்களுக்கும் ஆர்வமான ஒரு விஷயமாகிபோனது. பார்ப்பவர்களின் வசதிக்காக  இந்த மணியை. தேடிபிடித்து தூசி தட்டி மாநில மன்ற வளாகத்தின் தோட்டடதில்,  அடிக்கமுடியாதபடி அலங்கார தூண்களில் காட்சிக்காக வைக்கபட்டது.  அடிமை முறையை சட்ட பூர்வமாக ஒழிப்பது  என்பது அந்த காலகட்டதில் அமெரிக்கா முழுவதும் பேசபட்ட விஷயம். அந்த குழுவினர். மணிஓசை எனபது சுதந்திரத்தின் அடையாளம் என சொல்லி இந்த மணியை அவர்கள் இயக்கத்தின் சின்னமாக அறிவித்து ஆறு குதிரைகள் பூட்டிய வண்டியில் எடுத்துச்சென்று பலநகரங்களில் பேரணியில் காட்சியாக்கினார்கள். மக்களிடம் பிரபலமாகிவிட்ட இந்த உடைந்த மணியை அரசும் அங்கீரித்து தாபால் தலை ஒன்றை வெளியிட்டது. தொடர்ந்து படிப்படியாக பல கெளரவங்களைப் பெற்றது  ஒசை எழுப்பாத இந்த உடைந்த மணி. இன்று இதன் மாதிரி வடிவம் அத்தனை அமெரிக்க மாநில மன்றங்கள் முன்னும் நிற்கிறது. நாட்டின் உயரிய விருது பதக்கங்களில், நாணயங்களில் படம் பொறிக்கபட்டிருக்கிறது.
பிலெடல்பியாவில் காட்சியகத்தில்  காலச்சுவடுகளின் படங்களோடும் ஒலிஓளிகாட்சிகளோடும் நிறுவபட்டிருக்கும்  இந்த மணியை . சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு பார்வையாளார், தான்  கொண்டுவந்த சுத்தியால் அடித்து பார்க்க முயன்றதால்  இப்போது இதற்கு 24/7 காவல் நுழைவாயில் சோதனை,..மணியை தொடமுடியாதபடியான அமைப்பு எல்லாம்.விரிசல் பெரிதாகிவிடுகிறதா என 3 ஆண்டுகளுக்கு   ஒருமுறை எக்ஸ்ரே, விசேஷ ரசயான பராமரிப்பு, வல்லுனர்சோதனை என பாதுகாகிறார்கள். மணிஓசை எப்படித்தானிருக்கும்? என்ற ஆவல் கொண்டவர்களுக்கு உள்ளூர் பல்கலைகழக உலோகவியல் பேராசிரியரும் மாணவர்களும் மணியின் அளவுகளிலேயே அதே கீறலுடன்  ஒரு மாதிரியை செய்து அதில்  எழுப்பிய ஒலியை பதிவு செய்துவைத்திருகிறார்கள். 
ஜார்ஜ் லிப்பர்ட்  எழுதியது உண்மைக்கதையாக இருக்க முடியாது  என்று ஆராயச்சியாளார்கள் பல ஆதாரங்களுடன் இன்றும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த மணி எழுப்பிய ஓசையைவிட அந்த   சிறு கதை எழுப்பிய ஒசை தான் இன்று உலகத்தையே இதை பார்க்கவைத்திருக்கிறது.
kalaki 01'041225/3/12

அமெரிக்க அரசில் ஒரு தமிழ் அமைச்சர்


அமெரிக்க அரசில் ஒரு தமிழ் அமைச்சர்


அமெரிக்க நாட்டின் மெரிலாண்ட்ட் மாநிலத்தில் ”செகரிட்டரி ஆப் ஸ்டேட்” என்ற அரசின் உயர்ந்த பதவிவகிக்கும் நடராஜன் ஒரு  இந்தியர். தமிழர். நம் மாநில காபினெட் அமைச்சருக்கு நிகரான இந்த பதவியில்  ஒரு அமெரிக்க மாநிலத்தின் கவர்னரால்  நியமிக்கபட்டிருக்கும் முதல் இந்தியரும் இவரே. மெரிலாண்ட்ட் மாநில தலைநகர் அன்னபோலீசில்  (Annapolis) கவர்னரின் அலுவகத்தில் அவரை சந்தித்தபோது…….


ஒரு பயோடெக் சயிண்ட்டிஸ்ட்டான நீங்கள் எப்படி  அமெரிக்க அரசியலுக்கு வந்து இந்த நிலைக்கு உயர்ந்தீர்கள்?
சென்னை பல்கலைகழக்த்தில் பயோ டெக்கில் பிஹெச்டி முடித்த பின் 1989ல் இங்கு வந்தேன். மிக்சிக்கன் ஸ்டேட் யூனிவர்சிட்டியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானியாக பணியாற்றினேன். சில விருதுகள் பெற்றிருக்கிறேன். ஒரு கண்டிபிடிப்புக்கு காப்பு உரிமையும் பெற்றிருக்கிறேன். இளம் வயதிலிருந்தே பிஸினஸ் செய்ய ஆர்வம் அதிகம். அதற்கு என்னை தயார்செய்துகொள்ள ஏம்பிஏ படித்தேன். தொழிலில் கிடைத்த அனுபவங்களும், பல பெரிய நிறுவங்களுக்கு ஆலோசகராகவும், தலைவராகவும் இருந்த  வாய்ப்பினால் நிறைய தொழில் அதிபர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்த்து. ஆசிய பசிபிக் நாடுகளின் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவராகும் வாய்ப்பும் வந்தது. இதில் நிறைய அரசியல் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பும் நட்பும் கிடைத்தது. இந்தியா ரவுண்ட்டேபிள், மேரிலாண்ட் சேம்பர்ஸ் போன்றவற்றில் நிறைய ஈடுபாட்டுடன் செயலாற்றி வந்தேன். அந்த சுழலில்  மாநில கவர்னர் தேர்தல் வந்தது. அதற்கு போட்டியிட்ட மார்ட்டின் ஒமேலாவுக்காக(Martin o’malley) ஆதரவு திரட்டினேன். அவரது வெற்றிக்கு வர்த்தக சமூகத்தினரின் பெறும் ஆதரவுகிடைத்தவும் ஒரு காரணம். நான் ஏற்கனவே அதிபர் ஒமாபாவின் தேர்தல் மாநில குழுவிலும் பணியாற்றியிருக்கிறேன்.. தேர்ந்தெடுக்கபட்ட கவர்னர்  கடந்த ஆண்டு என்னை வெளியுறவு  துறைக்கு இனைச்செயலாளாராக் நியமித்திருக்கிறார்.

ஜனநாயக(டெமாகிரட்ஸ்) கட்சிக்காக தொண்டாற்றியதனால்  கிடைத்த பதவியா இது?
அப்படி சொல்ல முடியாது. இங்கு கட்சியில் இருப்பதானால் மட்டும் அமைச்சராக முடியாது, கட்சியில் இல்லாதவர்களும் பதவிக்கு வரமுடியும். மக்களால் தேர்ந்தெடுக்க படும் அமெரிக்க அதிபரும்,மாநில கவர்னர்களும்  நிர்வாகத்தை செம்மையாக் நடத்த தகுதியுள்ள ஒழுக்கமான, மக்களுடன் அதிகம் தொடர்புள்ள திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவ நியமிப்பார்கள். அப்படி தேர்ந்தெடுக்பட்டவர்களில் நானும் ஒருவன். சமீபத்தில் வாஷிங்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட்டமைப்ப்பு நடத்திய பாராட்டுவிழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஒமேலா இதை  குறிப்பிட்டு தெரிவித்தது இந்தியார்களுக்கு பெருமையான விஷயம்.
அமெரிக்க அரசியலில்  அங்கு வாழும இந்தியர்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா?
மாறிவரும் சூழ்நிலையில். நிறைய  இருக்கிறது. ஆனால் ஆர்வத்துடன் ஈடுபட தமிழர்களிடம்தான்  ஒரு வித தேவையற்ற தயக்கமிருக்கிறது, வட இந்தியர்கள் போல் தயகமின்றி அமெரிக்கர்களுடன் நம்பவர்கள் எல்லோரும் பழகுவதில்லை. மாறாக தென்னிந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் நேர்மையும் உழைப்பும் அமெரிக்கர்களை பெரிது கவர்கிறது. பல பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். இங்கு கட்சிகளில் உள் கட்சி ஜனநாயகம் மிக மதிக்க படுவதால் திறைமையுள்ள எவருக்கும்  அரசியலில் இடம் இருக்கிறது.
நீஙகள் பொறுப்பேற்றிருக்கும் துறையினைப்பற்றி சொல்லுங்கள்
நம் நாட்டினைபோல் இல்லாமல் இங்கு மாநிலங்கள்  நாட்டின் வெளியுறவு கொள்கைகளுக்கேற்ப  தங்கள் மாநில வெளியுறவுதுறையை அமைத்துகொள்வார்கள். அயல் நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பது,  மெரிலாண்டின் தொழில் வளர்ச்சிக்கு அவர்கள் மூலம் உதவுவது, தொழில் நுட்ப பறிமாற்றம், அன்னிய முதலீடுகள செய்வது, , பெறுவது போன்ற விஷயஙகளை கவனிக்கும் துறை என்னுடையது. இந்தியா உள்பட 10 நாடுகளை கவனிக்கிறேன். மாநில கவர்னர் இந்த நாடுகளுக்கு பயணம் செய்யும் முன்னதாக  நான் சென்று முன் ஆயூத்த பணிகளை செய்வதும் என் பணிகளில் ஒன்று.
இந்தியாவிற்கு- குறிப்பாக தமிழ்நாட்டிற்கு ஏதாவது செய்ய முடிகிறதா?
மெரிலாண்ட் அரசின் கொள்கை முடிவுகள் எடுக்கும் குழுவில் இருப்பதால் இங்குள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆலோசனைகள் வழங்கி அதுகுறித்து தமிழக தொழில் முனைவோரிடம் பேசிகொண்டிருக்கிறேன். ஏறகனவே குஜராத், ஆந்திர  மஹாராஷ்டிர மாநிலங்களில் அமெரிக்க நிறுவனங்களை அறிமுகபடுத்தியிருகிறேன்,  குஜராத் அரசு  வெகு வேகமாக செயல்படுகிறது. மேலும்   “ஸிஸ்டடர் ஸ்டேட்” என ஒரு  இந்திய மாநிலத்தை இந்த மெரிலாண்ட் மாநிலம் தத்து எடுத்துகொள்ளலாம் என்பது ஒரு திட்டம்  இதன் மூலம் தமிழ் நாட்டை  மெர்லாண்ட்டுடன் இணைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன், இதனால் இரு நாட்டின் மாநிலங்களுகிடையே பரஸ்பரம் நல்லுறவும், தொண்டு நிறுவங்களுக்கு ,பள்ளிகளுக்கு உதவி கிடைக்கும், இது கொள்கைரீதியிலான எனபதால் எல்லா மாநநிலங்களுக்கும் அறிவிப்புஅறிக்கை அனுப்பபட்டது. உடனே விருப்பம் தெரிவித்திருப்பது ஆந்திர மாநிலம் தான். . தமிழகத்துடன் தொடர்ந்து  நம்பிக்கையுடன் தொடர்பிலிருகிறேன்.
தமிழகத்தில் உங்கள் சோந்த ஊர் எது? ஏப்போது  அமெரிக்கா வந்தீர்கள். ?
சொந்த ஊர் புதுகோட்டை மாவட்டத்திலுள்ள முத்துகாடு  என்ற சின்னஞ்சிறு கிராமம். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் மின்சாரம் கிடையாது, மண்ணெணை விளக்கில் படித்தவன் நான். பள்ளியில் வகுப்புகள் மரத்தடியும், ஒலைகொட்டகையும்தான், வசதியில்லாத ஒரு சிறு கிராமத்தின் அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தவன் நான். அந்த கிராமத்தின் முதல் பட்டதாரி நான் தான். என் நிலையை பார்த்து இன்று முதுகலை வரை படிக்க மாணவர்கள் முன்வருகிறார்கள். நான் இன்றும் கிராமத்தை மறக்கவில்லை..என்னால் இயன்ற உதவியை செய்துகொண்டிருக்கிறேன். உயர் நிலை பள்ளிக்கு கட்டிடம் கட்டி உதவியிருகிறேன்.  அங்கு தேசத் தலைவர்கள் படங்களுக்கிடையே  முன்னாள் மாணவர் என்று என் படமும் மாட்டபட்டிருப்பது  அமெரிக்க அரசில் அமைச்சராக இருப்பதை விட பெருமையான விஷயமாக நினைக்கிறேன்.
உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள்
பல புலம்பெயர்ந்த இந்தியர்களைபோல சவாலாக துவங்கி உழைப்பை மட்டுமே நம்பி உயர்ந்த குடும்பம். இப்போது மெரிலாண்ட் மாநிலத்தில் நிரந்தர வாழ்க்கையாகி நிற்கிறது. மனைவி சாவித்திரி ஒரு வேளாண்மை விஞ்ஞானி. நான்கு கண்டுபிடிப்புகளுக்கு உரிமம் பெற்ரிருக்கிறார். இப்போது அரசு பணியிலிருகிறார். இரண்டு மகன்கள் மூத்தமகன் பெற்றோர்களைப்போ பள்ளி இறுதி கட்டத்திலிருகிறார். அமெரிக்காவில் அமெரிக்கர்களுடன் பழகி வாழ்ந்தாலும், 20 ஆண்டுகளானாலும் வேர்களை, அதன் அடிமண்ணை மறக்கவில்லை. வீட்டில் தமிழ்தான் பேசுகிறோம். வாரந்தோறும் கோவில் செல்லுகிறோம்.
 அமெரிக்க அரசியலில் ஒரிடத்தை பிடித்திருக்கும் உங்கள் எதிர்கால திட்டம்.என்ன?
எனக்கு  இதுவரை கிடைத்தவைகளை திட்டமிட்டு பெறவில்லை. இறைவன் தந்தது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொடுத்த பணியை சிறப்பாக செய்யதுமுடிக்க வேண்டும் எனபதைதவிர பெரிய திட்டம எதுவுமில்லை. இந்த பதவியினால் நம் நாட்டுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு நிறைய பன் நாட்டு நிறுவங்களின்  பயோ டெக் தொழில்நுட்பஙகளை கொண்டுவர ஆசை. இதற்கு தொழில்முனைவோர், மற்றும் அரசின் ஆதரவு தேவை. கிடைக்கும் எனற நம்பிக்கையோடு இருக்கிறேன்.

11/3/12

நம்பிக்கையின் சின்னம்கனவு காட்சியானதைச்சொல்லுகிறது இந்த பாறைஅமெரிக்க அரசியல் சரித்திரத்தில் அழிக்கமுடியாத இடத்தைபெற்றிருப்பவர் மார்ட்டின் லூதர்கிங். ஆப்ரஹாம் லிங்கன் அறிவித்திருந்த நிற,இனபேதமில்லாத அமெரிக்கா” 100 ஆண்டுகளுக்குமேலாக கனவாகவே இருப்பதை கண்டித்து அதைச் சட்டபூர்வமாக செயலாக்க 60களில் அண்ணல் காந்தியின் வழியில் அறப்போர் செய்து வெற்றிகண்டவர். நீதிகேட்டு  வெள்ளை மாளிகை நோக்கி அவர் குழுவுடன் செய்த நீண்டபயணமும் இறுதியில் 2லட்சம்பேர் பங்கு கொண்ட பேரணியும் அமெரிக்க சரித்திரத்தில் ஒருமுக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ”கனவொன்று கண்டேன்என அந்த பேரணியின் இறுதியில் லிங்கலின் நினைவுசின்னத்தின் படிகளிலிருந்து அவர் நிகழ்த்திய உரை இன்றளவும் உலகின் மிக சிறந்த உரைகளில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது..”  நான் கண்ட கனவு இது  எனது நான்கு சிறு குழந்தைகளும்  ஒரு நாள்  அவர்களின் தோலின் நிறத்தால் இல்லாமல்  அவர்களது பண்பினாலும் ஆளுமையினாலும்  மதிக்கபடும் அமெரிக்காவில் வாழ்வார்கள்என்று சொன்ன மார்ட்டின்லூதரின் இன்று கனவு பலித்திருக்கிறது. கறுப்பினத்தவர் பலர் இன்று அரசியலில்,.சமூகஅமைப்புகள், கல்வி, கலை, இலக்கியம் என பலதுறைகளிலும்அரசு பணிகளிலும் உயர்ந்த இடத்திலிருக்கிறார்கள். இது சட்டம் மட்டும் செய்த விஷயமில்லை. மக்கள் மனதார ஏற்றுகொண்ட ஒருசமூக புரட்சி. 1964லில் நோபல் பரிசு பெற்ற மார்டின் 1968ல் சுட்டுகொல்லபட்டது சரித்திரத்தின் கருப்பு பக்கம்
.
கடந்த ஆண்டு அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மார்டின் லூதர் கிங்க்கு ஒரு நினைவுசின்னம்  பிரமாண்டமான சிலையுடன் எழுப்பபட்டிருக்கிறது. முன்னாள் அதிபர்களான ஆப்ராஹாம்லிங்கனுக்கும், ஜெபர்ஸனுக்கும் மட்டுமே (ஜார்ஜ் வாஷிங்டனுக்கு கூட சிலை கிடையாது) அளிக்கபட்டிருக்கும்  மிகப் பெரிய கெளரவம். இது. அவர்களது நினைவுசின்னங்களுக்கு அருகில் நகரின் முக்கியமான இடத்தில் பொட்டாமாக் நதிகரையில் நிறுவப்பட்டிருக்கும் இதை, அமைதிபேரணியின் 48ம் ஆண்டு  நினைவு நாளான்று  அதிபர் ஒபாமாவால் நாட்டுக்கு அர்பணிக்கபட்டது. இந்த பிரமாண்ட சிலை அவரது வரலாற்றுசிறப்புமிக்க பேரணி உரையில் சொல்லபட்ட சில  வாசகங்களின் அடிப்படையில் வடிவமைக்க பட்டிருகிறது.
இந்த பேரணி  நம்பிக்கையின்மை என்ற கடினமான மலைபாறையிலிருந்து யிலிருந்து   வெட்டி எடுக்கபட்ட கல்லாக நம்பிகையளிக்கிறது.” ( "Out of the Mountain of Despair, a Stone of Hope"— for Justice,) "
என்ற அந்த வாசகங்களுக்கு ஏற்ப ஒரு பெரிய வெண்சலவைகள் மலையிலிருந்து வெட்டி எடுக்க்பட்ட பாறையில் நிற்கும் நிலையில்  சிலை வடிக்கபட்டிருகிறது. பிளவுபட்ட ஒரு மலையின் வழியாக சென்று பார்க்கும்படியாக அமைக்கபட்டிருக்கும் 30 அடி உயரசிலை. வளாகத்தின் சுற்று  கருங்கல் சுவர்களில் அவரது புகழ் பெற்ற வாசகங்கள்.. 140 மில்லியன் டாலர்களில் ஆறு ஆண்டு திட்டமாக நிறைவேற்றபட்டிருக்கும் இந்த சிலையை வடித்தவர் புகழ்பெற்ற சீன சிற்பி லீ யெக்ஸின்(Lei Yixin,)  பீகிங் நகர செஞ்சதுக்கதிலிருக்கும் பிரமாண்ட(100அடி) மாசேதுங் சிலையை வடித்தவர். அழியா சின்னங்களான சிலைகளைப்டைக்கும் சிற்பிகள் ஒவியர்களைப்போல தங்கள் படைப்புகளில் கையெழுத்திட மாட்டார்கள். ஆனால் இவர் செய்திருகிறார். சிலையின் பீடத்தில் இவரது கையெழுத்தும் கல்வெட்டாக இடம்பெற்றிருப்பது இந்த கலைஞனுக்கும் அளிக்கபட்டிருக்கும் காலத்தையும்கடந்து நிற்கும் கெளரவம்..