ஆர்பரிக்கும்
கடல் அலைகள் தொட்டுச்செல்லும் தொலைவில் கம்பீரமான
அழகுடன் நிற்கும் அந்த கோட்டை.. ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின் முதல் சுவடு தமிழ் நாட்டில்
பதிக்கபட்ட கடற்கரை கிராமான தரங்கபாடியில் 16 ஆம் நூற்றாண்டில் எழுப்பட்டது .. டேனிஷ்கார்களுக்கு முன்னரே போர்த்துகீசியர்களும்,
டச்சு காரர்களும் கிறுத்தவத்தை பரப்ப இந்த
கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் வலிமையான இந்த கோட்டை எழுந்த பின்னர் தான்
”தரங்கம்பாடி மிஷின் என்ற சபை ” உருவாகி தமிழ்நாட்டில்
கிறித்துவத்தின் நுழைவாயிலாகியிருக்கிறது.
இந்த கோட்டை. ஒரு தமிழக குறுநில மன்னராலோ புரட்சிகாரர்களாலோ
கட்டபடவில்லை. இங்கு வந்து ஒரு கோட்டையைக் கட்டிக்கொள்ளுங்கள், உங்கள் மக்களை
குடியமர்த்துங்கள் என டென்மார்க் மன்னரான
4ஆம் கிறிஸ்டியனக்கு ரெகுநாத நாயக்கர் என்பவர் வரவேற்று எழுதிய ஒரு கடித்தால் எழுந்த
கோட்டை. கடிதம் சதாரணமாக எழுதப்படவில்லை. பனைஒலை வடிவில் தயாரிக்கபட்ட ஒரு தங்க ஒலையில்
தமிழில் எழுதப்பட்டிருக்கிறது.
. இந்த தங்க
ஓலையும் இதைபோல வேறு சில தங்க ஓலைகளும் இன்னும்
பத்திரமாக இருப்பது டென்மார்க தலைநகரான கோபன்ஹேஹனில் உள்ள ”ராயல் ஆர்க்கேவ்ஸ்” என்ற ஆவணகாப்பகத்தில்.. இதைத்தவிர
பல ஆயிரகணக்கான சுவடிகளும், கையெழுத்துபிரதிஆவணங்களும் நவீன வசதிகளுடன் இங்கே பாதுகாக்கப்டுகிறது.
இந்த குவியல்களுக்குளே இருக்கும் தங்க ஒலைகளைப் பார்த்து
ஆராய்ந்து அதிலிருக்கும் விபரங்களை சொல்லியிருப்பவர்
ஒரு தமிழர். பேராசியர் பி.எஸ் ராமாஜம்.
இவர் தொல்லியலில் பேராசியர் இல்லை. டென்மார்க்கின்
மிகப்பெரிய, பாரம்பரியமிக்க பல்கலைகழகமான டென்மார்க் டெக்கினிக்கல் யூனிவர்சிட்டியில் இயற்பியல் பேராசியர். தன் துறையில் 8 புத்தகங்களும்,
82 கட்டுரைகளும் எழுதியிருப்பவர். இந்த பழைய சுவடுகள், ஆவணங்கள் ஆராய்ச்சிசெய்வது பொழுதுபோக்கு. இவர் டேனீஷ், ஜெர்மன் மொழிகளை நன்கு அறிந்தவர்.
பண்டைய தமிழ் எழுத்துகளையும் எளிதாக படிப்பவர்.
இந்த ஆவணங்களை நாம்படிக்க கூடிய தமிழில் எழுதி, ஆங்கிலம், டேனிஷ் ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்த்து ஆவணகாப்பகத்திற்கு உதவுகிறார்.
இந்த தங்க ஓலை அன்றைய தஞ்சாவூர் மன்னனருக்கும் டென்மார்க்
மன்னருக்கும் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கை என ஆவண காப்பகத்தில் கேட்லாக் செய்யபட்டிருக்கிறது.
ஆனால் இது ரெங்கநாத நாயக்கன் என்பவர் டென்மார்க் மன்னருக்கு எழுதிய ஒரு கடிதம். இதில்
மன்னரை நலம்விசாரித்து டென்மார்க்கிலிருந்து வந்தகடற்படை கேப்டன் ரோலண்ட், ஹாலந்திலிருந்து
வந்திருக்கும் ஜெனரலையும் சிறப்பாக பல்லக்கில் வரவேற்கப்பட்டது குறித்தும் தரங்கம்பாடி
துறைமுகம் நிறுபட்டிருப்பதால் டேனிஷ் மக்களை வந்து குடியமரச்சொல்லும்படியும் எழுதபட்டிருக்கிறது.
‘நாயக்கன்” என்ற சொல்லால் மன்னர் என தவறாக மொழிபெயர்க்க பட்டு பதிவு செய்யபட்டிருக்கிறது. மன்னருக்கு அனுப்பபட்டிருக்கும் பரிசுகளும் கடிதத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. தரங்கபாடி பகுதி ரெங்கநாதரின் கட்டுபாட்டிலிருக்கும் பகுதியியாக இருந்தாதலும் டேனிஷ் கிழகிந்திய கம்பெனியின் வியாபாரங்களால் அவர் பயன்பெற்றதாலும் ஒரு பண்டக சாலை அமைக்க இடம் கொடுத்திருக்கிறார். பின்னாளில் அது கோட்டையாகியிருக்கிறது.
‘நாயக்கன்” என்ற சொல்லால் மன்னர் என தவறாக மொழிபெயர்க்க பட்டு பதிவு செய்யபட்டிருக்கிறது. மன்னருக்கு அனுப்பபட்டிருக்கும் பரிசுகளும் கடிதத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. தரங்கபாடி பகுதி ரெங்கநாதரின் கட்டுபாட்டிலிருக்கும் பகுதியியாக இருந்தாதலும் டேனிஷ் கிழகிந்திய கம்பெனியின் வியாபாரங்களால் அவர் பயன்பெற்றதாலும் ஒரு பண்டக சாலை அமைக்க இடம் கொடுத்திருக்கிறார். பின்னாளில் அது கோட்டையாகியிருக்கிறது.
40
செமீ நீளமும் 2.5 செமீ அகலமும் உள்ள இந்த தங்க ஓலை1620 ஏப்ரலில் ஆணியும் சுத்தியும் கொண்டு தமிழில் வடிக்கபட்டிருக்கிறது. ரெங்கநாத நாயக்கன் தெலுங்கில்
கையெழுத்திட்டிருக்கிறார். அவரது நீண்ட கையெழுத்துக்கு
மேல் சில கடித எழுத்துக்கள். இருப்பதால் முதலில் கடிதத்தில் கையெழுத்து போடப்பட்டபின்
செய்தி வடிக்க பட்டிருக்க வேண்டும், தமிழில் கையெழுத்திட தெரியாத ஒருவர் தங்க ஓலையில் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தை
தமிழ் தெரியாத டென்மார்க் மன்னருக்கு தாரைவார்த்திருக்கிறார். இந்த கடித்தின் டேனிஷ்
மொழிபெயர்ப்பு காகிதத்தில் எழுதபட்டு இதனுடன் அனுப்பப் பட்டிருக்கிறது, அதுவும் இந்த
காப்பகத்தில் இருக்கிறது. அப்போது இந்தியாவிலும்,
டென் மார்க்கிலும் அங்கீகரிகபட்ட மொழிபெயர்ப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த தங்க ஒலையை தவிர இன்னும் இரண்டு தங்க ஓலைகளும் இருக்கிறது. ஒன்று மன்னருக்கு நன்றி சொல்லும்கடிதம்,
மற்றொன்று ”கம்பெனியின் சார்பாக” என 4 தமிழர்கள் கையெழுத்திட்ட ஒரு புகார் கடிதம்.
ஏன்
தங்க ஒலைகள்? எழுதியவர் மற்றும் பெறுபவரின் கெளரவத்தையும் முக்கியத்துவத்தையும் காட்டுவதற்கும்
என்றும் நிலைத்து நிற்கும் ஆவணமாக இருக்க வேண்டும் என்பதற்காக இருக்கலாம் என்கிறார்.
ராமனுஜம். இந்த காப்பகத்தில் 100க்குமேற்பட்ட
அலமாரிகளில் ஆயிரகணக்கான தமிழ் ஆவணங்கள் தவிர உருது,தெலுங்கு, கன்னட மோடி (பழமையான
மாரத்திய மொழி) மொழிகளிலும் ஆவணங்கள் பாதுகாக்க படுகின்றன. இவற்றில் தமிழ் ஆவணகளை பற்றி
ஆராய்ச்சிகள் செய்யும் ராமனுஜம். அவர் ஆராய்ந்தவற்றின்
ஆங்கிலம், டேனிஷ் மொழிபெயர்ப்புகளை குறிப்புகளுடனும்,ஆவண)ங்களின்
போட்டோகளுடனும் அவருடைய இணையதளத்தில்(http://www.tharangampadi.dk/) வெளியிட்டிருக்கிறார். ஆராய்ச்சிமாணவர்களுக்கு உதவது
நோக்கம். ஆர்வமுள்ளவர்களை தொடர்பு கொள்ள வரவேற்கிறார். இவர் இந்த தங்க ஒலையில் கண்டுபிடித்து சொன்ன ஒரு விஷயம் அதிலிடப்பட்டிருக்கும் தேதியில்
தவறு. அந்த தவறை சரித்திர ஆசிரியர்கள் எவரும் கவனிக்கவில்லை. என்கிறார். தமிழில் எழுதபட்டிருக்கும் அந்த தங்க ஓலையில் ஆண்டும்
மாதமும் தமிழில் ”ரூத்ர வருடம் சித்திரைமாதம் 20ம் ” என்று குறிப்பிடபட்டிருக்கிறது.
தமிழ் வருடங்களுக்கு இணையான ஆங்கில வருடங்களை காட்டும் அட்டவணையின் படிஅது 1620 ஏப்பரல்
25. . ஆனால் அந்த காலகட்டத்தில் இந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் டேனிஷ் கேப்டன் ஓவ் க்ஜெட்டேயின் கப்பல் ஆப்பரிக்க கடலை
கடந்து கொண்டிருந்தது இந்தியாவை அடையவில்லை. அப்படியானால் எங்கே தவறு? ஆராய்ச்சிக்குரிய
விஷயம் இது தான்!
தரங்கம்பாடி
அரசியல் ஆவணங்களை தவிரவும் பலசுவடிகள் இங்கிருக்கின்றன. கிறிஸ்டியன் கிறிஸ்டோபர் என்பவர் தரங்கம்பாடி டேனிஷ்
பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் இவர் 1831ல் ”கபில வாசகம்”, ”ஆத்திசூடி கதைகள்” என்ற
இரண்டு பெரிய சுவடி தொகுப்புகளை வாங்கி டென்மார்க்கிற்கு அனுப்பியிருக்கிறார். பல ஆண்டுகளாக
கேட்பாற்று காப்பகத்தின் நிலவரையிலிருந்த இது ஒரு நூலகரால் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கபட்டு
இப்போது இங்கே பாதுகாக்க படுகிறது. அதை ராமானுஜம் நாம் படிக்ககூடிய தமிழில் எழுதி அதை ஆங்கிலத்திலும்
டேனிஷிலும் மொழிபெயர்திருக்கிறார். சுவடிகளின் படங்களுடன் பக்க எண் இட்டுபொழிபெயர்ப்புகளை
தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
14ஆம்
நூற்றாண்டு தமிழை எளிதாக படிக்கும் இவர் இலக்கியங்கள் தவிர பல சுவாரஸ்யமான விஷயங்களும்
இருக்கிறது என்கிறார். 1795ல் சின்னையா என்ற பார்வையற்றவர் தரங்கபாடியிலிருந்து டென்மார்க்க்கு
கப்பலில் சென்று மன்னரை சந்தித்திருக்கிறார்.. தரங்கம்பாடியிலிருக்கும் கவர்னர் தன்சாதிக்காரர்களை
கெளரவமாக நடத்தவில்லை என புகார் அளித்திருக்கிறார். விசாரித்து முடிக்கும் வரை அவர்
டென்மார்க்கில் தங்க அனுமதிக்க பட்டிருக்கிறார். விசாரணை முடிய 5 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
தான் தரங்கபாடியில் செல்வந்தன் என்றும் தன் குடும்பம் அடுத்த கப்பலில் வைரங்களை அனுப்பும்
என சொல்லி நிறைய கடன் வாங்கியிருக்கிறார். ஒரு டேனிஷ் பெண்னையும் திருமணம் செய்துகொள்கிறார்.விசாரணை
இறுதியில் சின்னையா மோசடிக்காரர் என தெளிவாகிறது. அவர் இந்தியாவில் தண்டனையை அனுபவிக்க
கப்பலில் திருப்பிஅனுப்ப படுகிறார். அப்போது இந்தியாவிற்கு ஆப்பிரிக்காவில் கப்பல்
மாறி வரவேண்டும். அப்படி மாறும்போது காணமல் போய்விடுகிறார் சின்னையா.! இதுபோல ஒரு நாவலுக்கு
உரிய விஷயங்களெல்லாம் இங்கே கொட்டிக் கிடக்கிறது.
அப்போது
தரங்கம்பாடியிலிருந்த கோர்ட் வழங்கிய தீர்ப்புகள், சாக்கிலிட்டு கடலில் ஏறியுங்கள் என்று ஒரு கவர்னர் வழங்கிய கொடிய தண்டனை பற்றிய விபரங்கள்., தன் கடல் பயணத்தில்
ஆபத்தான கட்டத்தில் போராடி தன் உயிரை காப்பற்றிய படகோட்டியின் குடும்பத்தினருக்கு ஆயுட்கால
பென்ஷன் வழங்கியிருக்கும் கேப்டனின் கணக்குகள்,
மதக்குருமார்களிடையே நடந்த பிரச்சனைகள் என பலவகை ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சில- வையபுரியின் திருமணம் என்பது போன்ற-
ஒரு திருமணத்தின் பிரச்னையைச் சொல்லும் ஆவணங்கள், தெளிவாக எழுதப்படாதால் தமிழில் இருந்தாலும் விஷயத்தை புரிந்துகொள்ளமுடியவில்லை என்கிறார் முனைவர்..
400 ஆண்டுகளுக்கு முந்திய தமிழகத்தின் ஒரு
பகுதி மக்களின் வாழ்க்கைப்பயணங்கள் தமிழில் பதிவு செய்யபட்டிருப்பதும் அது ஐரோப்பாவின்
ஒரு பகுதியில் சிறப்பாக பாதுகாக்கபடுவதும் பெருமைக்குரிய விஷயம், அதைவிட பெருமைக்குரியது
முனைவர் ராமனுஜம் செய்துகொண்டிருப்பது. .
கல்கி
20/04/14