திரும்பிப்பார்த்து
சில முக்கிய நிகழ்ச்சிகளை அசை போட்டபோது சற்று பிசியான ஆண்டாகவும் கற்றதில் சில கடினமானதாகவும்,
பெற்றதில் சில புதியதாகவும் இருப்பதாக தோன்றியது.
ஜனவரி
எனது வெற்றி வெளியே இல்லையின் ஆங்கில பதிப்பு மும்பய் தாஜ் ஹோட்டலில் மிகப் பெரிய விழாவில் வெளியிடபட்டது
பிப்ரவரி
திருப்பூர் தமிழ்
சங்கம் எனது கடைசிக்கோடு புத்தகத்தை பரிசுக்கு தேர்ந்தெடுத்து ஒரு விழாவில் விருது
பரிசும் கொடுத்தார்கள். பொருட்காட்சி திடலில் விழா. மக்கள் நின்று கொண்டு கேட்கும்
அளவிற்கு கூட்டம்.மகிழ்ச்சியாகவும் மீராவராதைல் சற்று வருத்தமாகவும் இருந்தது. விருது
பெற்ற கையோடு ராம்கோ பள்ளி மாணவர்களுக்கான quizz ராஜபாளயத்தில் நடத்த பயணித்தேன்.
மீண்டும் மாணவர்களை சந்தித்தது சந்தோஷமாகயிருந்தது. திட்டகமிஷனை மோடி அரசு ஒழித்து
புதிய நிதிஅயோக் கொண்டுவந்தது குறித்து ஜெயாடிவியில் ஒரு விவாதத்துக்கு சுதாங்கன் அழைத்தார்.
அறிமுகமில்லாத வெளியூர்காரகளிடமிருந்தெல்லாம்
கூட பாராட்டுகள்.
.
மார்ச்
பட்ஜெட் பற்றி ஆழம் இதழில்
எழுதிய கட்டுரைக்கு பெரிய வரவேற்பு. மீண்டும் ஜெயாவில் விவாதத்திற்கு அழைத்தார்கள்.
நான் பல டேட்டாக்களை வைத்து பேசியது பிஜேபி காரரை ஆச்சரியப்படுத்தியது. தொடர்ந்து கட்சி பணிகளில் பங்கு கொள்ள அழைப்பு வந்தது
ஆச்சரியம். வீடியோவைப்பார்க்கலாம்
மே
என் கடைசிக்கோடு
புத்தகத்தை காந்தி ஸ்டெடி செண்டரில் விமர்சிப்பதற்கான
கூட்டம் என அழைத்தார்கள். கூட்டம் அதிகமில்லை ஆனால் வந்தவர்கள் எல்லாம் அறிவிஜிவிகள். நண்பர் மோகனின் அருமையான் விமர்சனம்.
வந்தவர்களில் பலர் புத்தகத்தைப் படித்திருந்தது
சந்தோஷமான ஆச்சரியம்
ஜுலை
(15/07/16) திரு ரத்தன் டாட்டா கிரேட் லேக்ஸின் பட்டமளிப்பு விழாவிற்காக சென்னை வந்திருந்தார். திரு பாலா பாலசந்திரன் என்னை விழாவிற்கு அழைத்து அவரிடம் நூலின் ஆசிரியர் என அறிமுகப்படுத்தினார்
மும்பையில் நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டிய புத்தகத்தின் ஆசிரியர் என அறிமுகப் படுத்தினார் பாலா.
கைகுலுக்கியபின் திரு ரத்தன் டாட்டாவிற்கு புத்தகத்தின் பிரதியை கொடுத்தேன். திறந்த பார்த்த அவர்
”கையெழுத்திட்டுகொடுங்கள்”: என்றார்.
ஆச்சரியம்,சந்தோஷம், பெருமிதம் எல்லாம் ஒருசேரத் தாக்க சிலகணங்கள் உறைந்து போனேன். இந்தியா தொழில் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி எனது புத்தகத்தை கையெழுத்துடன் கேட்கிறார். (சொக்கா இது நிஜம்டா)
கையெழுத்திட்டு புத்தகத்தை கொடுத்த பின் மற்றொரு பிரதியில் அவரது ஆட்டோகிராப் தந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றேன்.
உடனே உட்கார்ந்து என் பெயரை நிதானமாக எழுதி(இடது கை பழக்கமுள்ளவர்) வாழ்த்துகளுடன் என்று கையெழுத்திட்டுகொடுத்தார் கட்டுரையை பார்க்க rmananvsv.blogspot.in/2015/07/blog-post_18.html
அனுதாப அலைகள் சூனாமியாக தாக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் புதிய தலைமுறை மக்கள் மேடையில் பங்கு கொள்ள திரு வெங்கட் அழைத்தார்.(29/07/15) சற்று யோசித்தேன். நிகழ்ச்சியில் மாவட்டங்களிலிருந்து மாணவர்களும் பங்கேற்பதாக சொன்னதால் நிகழ்ச்சி வெறும் அஞ்சலியாக இல்லாமல் மாறுதலாக இருக்கும் என எண்ணி பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில் தெளிவான பார்வையில் துணிவாக கருத்துகளை சொன்ன இந்த மாணவர்கள் கலாம் கண்ட கனவுகளின் நம்பிக்கை விதைகளாகத் தெரிகிறார்கள். விரைவில் வளர்ந்து விருட்சமாகப்போகும் அட...
தமிழ்நாடு நில அளவைத்துறை சங்கத்தினர் ஒரு நில அளவையாளரின் கதையான இந்தப் புத்தகத்தின் ஒரு சிறப்பு பதிப்பை அவர்கள் தலைவர் பணிநிறைவு விழாவில் விழாவில் வெளியிட விரும்பி என்னை அணுகினார்கள். இம்மாதிரி விழாக்களில் புகழார மலரும் தலைவரின் வாழ்க்கை கதை போன்றவற்றை வெளியிடும் பலரிடையே ஒரு புத்தகத்தை சிறப்பு பதிப்பாக கொண்டுவருவது ஒரு மாறுதலான ஆச்சரியம்.
மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். புத்தகத்தின் பதிப்பாளர் (கவிதாபதிப்பகம்) சொக்கலிங்கம் மிக குறைந்த அவகாசத்தில் (4 நாட்கள்) சங்கத்தினர் விரும்பியபடியே ஒரு சிறப்பு பதிப்பை
ஆகஸ்ட்
நண்பர் வவேசு தந்த
செய்தியினால் மக்கள்டிவிக்காக என்னை பேட்டி கண்டார்கள் கீரின் ஏக்கர் தோட்டத்தில் ஒரு
நல்ல பேட்டியாக அமைந்தது. செல்வி புரிந்துகொண்டு கேள்விகள் கேட்டார். என் எல்லா புத்தகம்
பற்றி பேசு ஒரு வாய்ப்பாக்கிகொண்டேன். பலர் பார்த்து பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது.
செப்டம்பர்
கறுப்பு பணம் பற்றி தகவல் சொல்லுபவர்களுக்கு பரிசு என்ற அறிவிப்பு பிரச்சனிக்கு
மீண்டும் உயிர் கொடுத்திருந்தால், புதிய தலைமுறை டிவியில் விவாதத்தில் பேச அழைக்கபட்டேன். செய்தியாளர் மணி
அறிமுகனார். பாஸ்கர் என்ற மனிதரையும் சகித்துகொள்ளவேண்டியிருந்தது
.
அக்டோபர்
எம்.எஸ்ஸின் வாழக்கை
கதை முயற்சி மீண்டும் தொடர ஆரம்பித்தது. பல
ஆலோசனைகள்- தேவையில்லாததும் கூட வழங்கிக்கொண்டிருந்தார்கள். புத்தா விஷயமாக சீதா ரவியின்
உதவியால் கெளரிராம்நாரயணன் அவர்களை சந்தித்தேன். பிரமிக்கவைக்கும் பெண்மணி. எவ்வளவு
தெரிந்தவராக இருக்கிறார். நீண்ட உரையாடல் பதிவு செய்து கொண்டேன். அடுத்த பதிவுக்கு
நேரம் கேட்டேன்.
நவம்பர்
கல்கி ஆசிரியர்
வெங்கடேஷ் சாஸ்தா யூனிவர்சிட்டியில் டிஜிட்டல் ஜர்னலிசம் கோர்சின் பாடதிட்டத்தை உருவாக்க
அமைக்கபட்டிருக்கும் குழுவிலி இருக்கிறார். அதற்காக நடந்த கூட்டங்களுக்கு அழைக்கபட்டேன்.
அமெரிக்க பல்கலை கழக பேராசியர்களை சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது. இந்த கூட்டத்தில்
பங்கேற்பதற்காக டிஜிட்டல் ஜர்னலிசம் பற்றி படித்து புரிந்துகொண்டேன்
டிசம்பர்
விண்வெளியில் இருக்கும்
கருப்பு துளைகள பற்றி ஆராய்ச்சி செய்யும் பிரியம்வதா
என்ற பெண்மணியை பற்றி ரவி சொன்னார். அவருக்கு பாரதிவிருது வழங்கப்படுவது பற்றியும்
சொன்னார். கல்கியில் எழுத நான் அமெரிக்காவிலிருக்கும்
அவரை தொடர்பு கொண்டேன். ஆச்சரியப்படும் விபரங்கள். மிக அழகாக எளிமையான் தமிழ் பேசினார்.
கேட்ட விபரங்கள் உடனே மெயிலில் அனுப்பினார்.
சென்னை வந்தவுடன் சந்தித்தேன். மிகவும் மகிழ்ச்சியான சந்திப்பாக இருந்தது. இந்த
ஆண்டு அவருக்கு நோபல் கிடைக்கும் என அமெரிக்க பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன.
.http://ramananvsv.blogspot.in/2015/12/blog-post.html