05.09.2014
`இன்று’ டன் ` நான் – 21
ஆசிரியர் தினம்!
தாயுமானவன்! தந்தையானவன்!
எனக்கு ஆசிரியர்கள் யார்?
பள்ளி ஆசிரியர்களை விட எனக்கு வாழ்க்கையை சொல்லிக்கொடுத்த பத்திரிகை ஆசிரியர்கள் தான்!
பள்ளிக் காலத்திலிருதே நான் மானசீகமாக வணங்கிய ஆனந்த விகடன் நிறுவன ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன், நான் ரசித்த படித்த கல்கி ஆசிரியர் அமரர் கல்கி! என்னை சின்ன வயதில் பத்திரிகை படிக்கத் தூண்டிய `கல்கண்டு’ ஆசிரியர் தமிழ் வாணன். குமுதம் ஆசிரியர் அமரர் எஸ்.ஏ.பி. ஆசிரியர் குழுவிலிருந்து என்னை கை தூக்கி விட்ட குமுதம் இணையாசிரியர் ரா.கி.ரங்கராஜன், எனக்கு புதிய நாமகரணம் சூட்டிய குமுதம் இணையாசிரியர் ஜ.ரா.சுந்தரேசன் (பாக்யம் ராமசாமி) என்னை பத்திரிகை உலகில் பிரசவித்த மாலன், அவர் பெற்றெடுத்த குழந்தையை ஊருக்கெல்லாம் அறிமுகப்படுத்திய அன்றைய ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் இவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்!
முதலில் என்னை `பெற்றெடுத்த தாய்’ மாலன்!
என்ன ஆகும் எனது வாழ்க்கை என்றிருந்த இளமை பருவம் அது!
படிப்பில் நான் அத்தனை கெட்டி இல்லை!
சினிமா, பத்திரிகை இரண்டும்தான் எனக்கு வெறி!
எந்த பத்திரிகை கிடைத்தாலும் படிப்பேன்!
இப்போது ப்ளஸ் டூ மாதிரி அப்போது பி.யூ.சி!
நான் டாக்டராக வேண்டுமென்கிற கனவில் என் தாத்தா என்னை சயன்ஸ் குருப்பில் சேர்த்துவிட்டார்!
குருடனை ராஜ முழி முழிக்க சொன்ன கதைதான்!
விளைவு நான் பி.யு.சி பெயில்!
இவன் எதற்கும் லாயிக்கில்லை என்று ஒதுக்கப்பட நிலையில் அன்று நான்!
மனதிற்குள் மட்டும் ஒரு உறுதி!
நான் இறந்தால் அது பத்திரிகைகளில் செய்தியாக வேண்டும்!
இவன் `திருடன்’ என்று வரலாம்!
`திறமையானவன்’ என்றும் வரலாம்!
எது எப்படியோ என்னை ஊருக்கு தெரிய வேண்டும்!
அப்போது மேற்கு மாம்பலம் சீனுவாசா தியேட்டர் அருகே இருந்த வடிவேல்புரம் என்கிற தெருவில் நாங்கள் ஜாகை!
என்னை அடையாளப்படுத்திக் கொள்ள ஒரு கையெழுத்து பிரதி துவங்கினேன்!
பெயர் `வானவில்’
நான் எழுதுவேன்! என் அப்பா நகல் எடுப்பார்!
ஒரு பத்திரிகை எடுத்து, ஒரு விட்டிற்கு ஒரு நாள்!
படித்துவிட்டு மாலையில் திருப்பித் தரவேண்டும்! வாடகை 10 காசுகள்!
அப்போது சாவி ஆசிரியர் இளைஞர்களுக்காக ஒரு பத்திரிகை துவங்கியிருந்தார்! `திசைகள்’. ஆசிரியர் மாலன்!
அதற்கு முன்பே மாலன் சாவியில் தொடர்ந்து எழுதி வந்த அரசியல் கட்டுரைகள்! உலக செய்திகளை அலசும் `டைனிங் டேபிள்’, தமிழன் என்கிற பெயரில் அவர் எழுதி வந்த பகிரங்க கடிதங்களினால் அவர் எழுத்தில் கிறங்கி போயிருந்த காலம்!
`திசைகள்’ பத்திரிகைக்காக இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் வெளியிட்டு விழா தி.நகர் வாணிமகாலில் கோலகலமாக நடந்தது!
தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் படங்கள் முதல் பிரதியில்!
அதில் அறிமுகமானவர்கள் இன்றைய சினிமா இயக்குனரான வஸந்த் (வீரப்பன்)! எழுத்தாளர் கார்த்திகா ராஜ்குமார்! பட்டுக்கோட்டை பிரபாகர்!
இந்த முகநூலில் அனுராதா கிருஷ்ணசாமி என்றிருக்கும் `ஷ்யாமா’! இவரது `ஷ்யாமாவின் டைரி’ முதல் இதழிலேயே துவங்கிவிட்டது! முகநூலில் இருக்கும் பிரபல கவிஞர், எழுத்தாளர் கல்யாண் குமார்! ஒவியர் அரஸ், இன்றைய திரையுலக பிரபலம் யூகி சேது (அப்போது அவர் யூகி தமோரஸ்!),சமீபத்தில் மறைந்த கைலாசம்(கே.பாலசந்தரின் மகன்) எல்லோர் படங்களும் அந்த முதல் பிரதியில் இருந்தது.
விழாவிற்கு போயிருந்தேன்! ஏக்கத்தோடு!
நான் மேடையில் இல்லையே என்று உள்ளுக்குள் ஒரு அழுகை!
`திசைகள்’ வார இதழ்! இரண்டு இதழ்கள்
வெளி வந்த சமயம்!
அப்போது அண்ணா சாலையில் இருக்கும் அரசினர் கலைக் கல்லூரி வளாகத்தில் புத்தகக் கண்காட்சி நடக்கும்!
வாங்க காசில்லாவிட்டாலும் புத்தகங்களை பார்க்கவாவது அங்கே போய் வலம் வருவேன்!
இம்முறையும் போனேன்! கையில் என் கையெழுத்துப் பிரதி!
வலம் வரும்போது, அங்கே அந்த தம்பதிகளை கண்டேன்!
மாலன் அவர் மனைவி சரஸ்வதியுடன் நடந்து கொண்டிருந்தார்!
கதாநாயகனை கண்டதும் ஒடும் பாமர சினிமா ரசிகனைப் போல் அவரருகே ஒடினேன்!
பவ்யமாக நின்றேன்! அன்பாக பார்த்தார்!
கையிலிருந்த கையெழுத்து பிரதியை நீட்டினேன்!
அதன் அட்டையைப் பார்த்தவுடனேயே அவர் கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தது!
புருவங்களை தூக்கி வியப்போடு என்னை பார்த்தார்!
இதை நான் படிக்கணும்! நாளை இதை `திசைகள்’ அலுவலகத்தில் வந்து வாங்கிக்க முடியுமா!
பேச வார்த்தை வரவில்லை! சந்தோஷ உணர்ச்சிகளில் தொண்டைக்குழியில் சிக்கிய வார்த்தைகள் வெளி வர மறுத்தது!
தலையாட்டினேன்!
அடுத்த நாள் மாலை நான் சாவி அலுவலகத்தில் அவரை சந்தித்தேன்!
அதற்குள் அந்த பத்திரிகையை அவர் முழுவதுமாக படித்து முடித்திருந்தார்!
என்ன கேட்டார்! என்ன பதில் சொன்னேன்!
தெரியாது!
அவர் பேசிய விதம்! என்னை வேலைக்கு எடுத்துக் கொள்ளப்போகிறார் என்பது உறுதியான உற்சாகம்!
எதுவுமே என் காதுகளில் விழவில்லை!
ஏழைக் குடும்பத்து ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதி ஆனதைப் போல!
பாமர லால்பகதூர் சாஸ்திரி இந்திய பிரதமரானதைப் போல!
அந்த மனநிலையில் நான்!
சம்பளம்? அதுவா முக்கியம்!
இவருடன் வேலை செய்யப்போகிறேனே அது போதாதா!
அடுத்த நாளே திசைகள் பத்திரிகையின் உதவி ஆசிரியன்
மூன்றாவது இதழில் ரங்கராஜன் (உதவி ஆசிரியர்) என்று என் புகைப்படத்தையும் வெளியிட்டார்!
அவர் கொடுத்த சுதந்திரம்!
கடிந்து கொள்ளாமல் வேலை வாங்கிய பாங்கு!
அப்போது அவர் பெஸண்ட் நகரில் இருந்தார்! அவர் ஒரே மகன் சுகன்! கைக்குழந்தை!
அந்த வீட்டிற்கு அழைத்துப் போனது!
அங்கே பல நாள் பழகியதைப் போல் அவர் மனைவி சரஸ்வதி தாயைப் போல அரவணைத்து சோறு போட்டது!
பிரம்பால் அடித்து போதிக்கவில்லை இந்த ஆசிரியர்!
பாசப் பிணைப்பால் என்னைப் பக்குவப்படுத்தினார்!
பிறகு என் திருமணம்! காதல் திருமணம்!
பெண் வீட்டார் வரவில்லை!
அப்போது மனையில் அமர்ந்து திரு மாலன் திருமதி சரஸ்வதி மாலன் என் மனைவியை மனதால் சுவீகரித்து கொண்டு, அவளை மகளாக மடியில் அமர வைத்து, எனக்கு தாரைவார்த்தவர்கள்!
அதுவரையில் மாலனுக்கு மாணக்கனாக இருந்த நான் (மரு) மகனானேன்!
என் மனைவி இறந்த போது `எங்களுக்கிருந்த ஒரே மகளையும் பறி கொடுத்துவிட்டோமே’ என்று மாலன் – சரஸ்வதி அழதார்கள்!
தாயுமானவர் தந்தையானவர்!
(படத்தில் என் முதல் புத்தக வெளியீட்டு விழாவில் பாரதிராஜா-மாலன் - கமல்ஹாசன்)
LikeLike ·  · 
 • 15 people like this.
 • Karthika Rajkumar nice Sudangan,!,,in your marriage a group of Thisaigal team was with you, including me...we were there to do our part as 'Mappilai thozargal" , did you remember that? Your marriage is a " kalakkal "one many still remembering that for the excitements...
  32 mins · Like · 3
 • Vedha Gopalan கதாநாயகனை கண்டதும் ஒடும் பாமர சினிமா ரசிகனைப் போல் அவரருகே ஒடினேன்!
  பாமர லால்பகதூர் சாஸ்திரி இந்திய பிரதமரானதைப் போல!
  அந்த மனநிலையில் நான்!
  ...See More
  31 mins · Like · 2
 • Suresh K Perumalsamy உங்களின் நன்றி உணர்வு பெருமைக்குரியது.
  பத்திரிகை உலகில் பன்முக தன்மை கொண்ட வெகு சிலரில் நீங்களும் ஒருவர். உங்களின் எழுத்து ப் பணி தொடர வாழ்த்தக்கள்.
  ...See More
  24 mins · Like · 1
 • Pitchumani Sudhangan தற்சயம் எங்கு பணிபுரிகீர்கள்! உங்களைப் போன்றவர்களின் இதயத்தில்!
  24 mins · Like · 2
 • Suresh K Perumalsamy எங்கள் இதயத்தில் என்றும் உங்களுக்கு இடமுண்டு அய்யா
  21 mins · Like · 2
 • Vedha Gopalan திசைகள் இதழ் ஒன்றை பட்டுக்கோட்டை பிரபாகரும் கார்த்திகா ராஜ்குமாரும் தயாரித்தபோது அதில் "ஞாயிறுகள் இவர்களுக்காக" என்று ஒரு உருக்கமான பகுதியை எனக்கும என் கணவருக்கும் அளிக்க மாலன் ஒப்புக்கொண்டார்! நமக்கெல்லாம் ஞாயிறுகள் இனிக்கும். பார்வை ./.கேட்கும் திறன...See More
  10 mins · Edited · Like · 1
 • Vedha Gopalan தேதியில்லாத டயரி வரிக்கு வ்ரி சுவாரஸ்யம். ஆமாம் வெளியீட்டு விழவுக்கு ஒரு பிரபலத்தை அழைப்பதே பெரும்பாடு! எப்படி இந்த காமபினேஷன்!
  12 mins · Like · 1
 • Pitchumani Sudhangan இது மேடையில் ஒரு பகுதி! அந்தப் பகுதியில் இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன், வைரமுத்து, நெல்லைக் கண்ணன், மலைச்சாமி!
  10 mins · Like · 1
 • Vedha Gopalan ayyyooodaa!!
  2 mins · Like · 1
 • Ramanan Vsv