ஏர்செல் மொபைல் போன் நிறுவனத்தின் முன்னாள் அதிபர் தான் அமைச்சர் தயாநிதி
மாறானால் அதை ஒரு மலேசிய நிர்வனத்திற்கு
விற்க நிர்பந்திக்க பட்டதாக
சொல்லியி்ருப்பதாக செய்திகள் வெளியாயிருக்கின்றன.. உண்மை நிலை ஒரு அலசல்
|
மர்மம் என்ன?
துல்லியமான தொலைநோக்குடன் வரும் சில ஆண்டுகளில் இந்த துறை எங்கே போகும், என்பதை சரியாக கணிக்கவும், உருவாக்கிய பிராண்டை சரியான நேரத்தில் விற்கும் சாமர்த்தியமும் இருக்கும் தொழிலதிபர்கள் தோற்பதில்லை என்பதறகு மிக சரியான
உதாரணம் சிவா குரூப்பின் நிறுவனர். திரு சி.சிவசங்கரன். சென்னை எண்ணை சுத்திகரிப்பு
ஆலையில் கட்டுமான பிரிவில் சிறிய அளவில் உபகரணங்கள் செய்து
கொடுக்கும் ஒரு காண்டிடிராக்டராக
இருந்தவர். .1985ம் ஆண்டு அமிர்தராஜ் சகோதரர்களின் தந்தை ராபர்ட்
அமிர்தராஜின் ஸ்ட்ர்லிங் கம்பியூட்டர் நிறுவனத்தை வாங்கி கம்பூட்டர்கள் செய்து
விற்கும் பிஸினஸை துவக்கினார். அப்போது
ரூ80000 விலியிலிருந்த கம்பியூட்டர்களை ரூ33000க்கு அறிமுகபடுத்தி மார்க்கெட்டை
கலக்கினார். எதிர்பார்த்த லாபம் இல்லாததால் கம்பியூட்டர் தயாரிப்பை நிறுத்திவிட்டு
மற்ற துறைகளில் தடம்பதிக்க துவக்கினார். “லாபம் இல்லாமல் பிஸினஸ் செய்வது பாவம், நாம் துவக்கிய முதல் தொழில் என்று உணர்ச்சி வசப்பட்டு அதை மேலும் நடத்துவது முட்டாளதனம் “ என்று சொல்லும்
இவர் தொடர்ந்து செய்த எந்த பிசினஸும் நஷ்டமடையவில்லை. இன்று. உலகின் பலபகுதிகளில் வெவ்வேறு துறைகளில்
இயங்கும் 33 கம்பெனிகளின் மொத்த மதிப்பு 3
பில்லியன் அமெரிக்க டாலர்கள்.( சுமார்12000 கோடி ருபாய்) 90களில்
தாய்லாந்து, ம்லேசியாவில் நலிந்த
கம்பெனிகளை வாங்கி லாபம் தரும் கம்பெனிகளாக மாற்றி நல்ல லாப்த்தில்
விற்றுவிடுவதுதான் முக்கிய பிஸினஸ். இதுவரை இப்படி 17 கம்பெனிகளை
விற்றிருக்கிறார்கள். சிங்கபூர்,ஹாங்காங் நகரங்களில்
நட்சத்திர ஹோட்டல்களில் நீண்ட நாட்கள் தனது அலுவலகத்தை நடத்தி வந்தவர் 1996
அமெரிக்காவில் கலிபோரின்யாவில் ஒரு ஆடம்பர வீட்டை வாங்கி தனது தலமையகத்தை
அமைத்தலிருந்து அங்கு வாழும் ஒரு என்.ஆர்ஐ. இந்தியாவில் புதிய தொலைதொடர்பு கொள்கை
அறிவிக்கபட்ட அதே ஆண்டு சென்னையிலிருந்து ஏர்செல் மொபைல் போன் கம்பெனியை துவக்கினார். அடுத்த
ஆண்டே மற்றொரு மொபைல்கம்பெனியை(RPG) வாங்கி ஏர்செல்லின்
சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார். பல மாநிலங்களுக்கு பரவலாக்க அனுமதி கோறி
விண்ணபத்திருந்தார். இந்தியாவின் முதல் தனியார்
இண்ட்ர்நெட் வசதி அளிக்கும் கம்பெனியான DSL இவரால்தான்
துவக்கப்ட்டது. இந்த நிறுவனம் சில ஆண்டுகளில் டாடாவின் குழுமத்திஎன் விஎஸ்என்எல்
க்கு 270 கோடிக்கு விற்கபட்டது. இது போல ரியல்
எஸ்டேட், கப்பல்துறை பதபடுத்தபட்ட உணவு என பல்வேறு நிறுவங்கள்
இவரால் வாங்கி விற்கபட்டது. வெவ்வேறு
துறைகளில் நிறுவனங்களை வாங்கி அவற்றை பெரிய அளவில்
லாபத்திற்கு விற்றுவிடும் குழுமம் என்று உலகளவில் அறியபட்டது இவரது சிவா
குருப். இந்த குருப்பின் முதலீடுகளை
க்வனிக்கும் சிவா வென்ச்சர்ஸ் என்ற பிரிவின் கடந்த ஆண்டு மொத்த வரவுசெலவு மட்டும்
3900 கோடிகள். அதில் லாபம் எவ்வளவு என்பது
அறிவிக்க படவில்லை
இவரது ஏர்செல் மொபைல் கம்பெனியை மாக்ஸிஸ் கம்னியூக்கேஷன் எனற மலேசிய கம்பெனிக்கு விற்க அமைச்சர் தயாநிதி மாறனால் நிர்பந்திக்க பட்டதாக
கடந்த வாரம் எழுந்திருக்கும் குற்றசாட்டை சிபிஐ விசாரிக்க துவங்கியிருக்கிறது.
ஆனால உணமையில் சிவா குழுமம் 2002ம் ஆண்டு முதலே தனது ஏர்செல் நிறுவனத்தை நல்ல
விலைக்கு விற்க முயற்சித்து கொண்டிருந்தது.
புதிய 71% அன்னிய முதலீடு கொள்கையினால் உலகின் முக்கிய டெலிகாம் கம்பெனிகள் இந்தியாவின்
மீது கண் வைத்திருந்த நேரம் அது. 2004 ம் ஆண்டு ஏர்செல்லை 1600 கோடிக்கு ஹட்ச்போன் நிறுவனம் வாங்கபோவதாக சிவா
குழுமம் அறிவித்திருந்தது. பின்னர் 2005 பிப்ரவரியில் அதை ரத்து செய்து ஒரு ரஷ்ய நிறுவனத்துடன் 2025 கோடிக்கு விற்பனை ஒப்பந்தம்
செய்து இருப்பதாக அறிவித்தது. ஆனால் அந்த
ஒப்பந்த்தையும் ரத்து செய்து அதேஆண்டு டிசமபர் 30ம்தேதி மலேசிய கம்பெனிக்கு 4860 கோடி ருபாய்களுக்கு விற்க பட்டிருக்கிறது. அதாவது சிவா குழுமம் முதலில் எதிர்பார்த்தைவிட 3000
கோடிக்குமேல் லாபத்தில் வியாபாரம் முடிந்திருக்கிறது. மலேசிய கம்பெனி மாக்ஸிஸ் ஓப்புகொண்ட விலையை பற்றி
பெரிய பன்னாட்டு டெலிகாம் கம்பெனிகள் அடைந்த ஆச்சரியம் பற்றி 2006 ஜனவரி
6ம்தேதி ஃபினாஷியல் எக்ஸ்பிரஸ் ஒரு கட்டுரையே
வெளியிட்டிருக்கிறது. கிடைத்திருக்கும்
பணத்தில் எந்த கம்பெனியை வாங்கப்போகிறார் சிவசங்கரன்? எனறு ஃபினான்ஷ்யல் நாளிதழழ்கள் கேட்டன கம்பெனிகளை உருவாக்கி லாபத்திற்கு விற்பதையே முக்கிய பிஸினாக
செய்யும் சிவா குழுமம் நல்ல லாபம்
அடைந்திருக்கும் இந்த பிஸினஸை இப்போது தாங்கள் அமைச்சரின் மிரட்டலுக்கு
அடிபணிந்து செய்திருப்பதாக சொல்லுவதின் மர்மத்தைவிட பெரிய மர்மம்- வழக்கு பிரச்சனைகள், மீடியாக்களை அறவே தவிர்க்கும் திரு சிவசங்கரனே சிபிஐக்கு
நேரில் சென்று சிபிஐயிடம் இது பற்றி சொல்லியிருப்பதாக
சொல்லப்படுவதுதான்.