11/9/11

6வேலைத்தேடி தரும் வேலை


              

நாடு முழுவதிலிருந்தும் பல லட்சங்களில் தேர்வு எழுதி அதில்முன்னணி ம்திப்பெண்கள் பெறும் சூப்பர் புதிசாலிகளில் சிறந்த்வர்களை மட்டும்  சலித்து தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கும்  கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மெனேஜமெண்ட்.. இன்று உலகதரத்திலிருக்கும் இதில் படித்தவர்களை  பட்டம் பெற்றும்முன்னே போட்டிபோட்டு பெரிய நிறுவனங்கள் பணியில் அமர்த்திக்கொள்ளும். இந்த நிர்வாகயியல் பயிற்சி நிறுவங்களில் முதலிடத்திலிருப்பது  அஹமதாபாத் ஐஐஎம்.  அதில் பயின்ற மத்தியதர குடும்பத்திலிருந்து வந்த ஒரு மாணவர்.    படிக்கும்போதே பெரிய வேலை என லட்சியமில்லை நான் ஒரு புதிய தொழில் துவங்கி வெற்றிகரமாக நடத்துவேன் என்ற் சொல்லிக்கொண்டிருந்தபோது  அவருடையா பேராசியர் உள்பட புருவம் உயர்த்தியவர்கள் பலர். அவர் சஞ்ஜீவ் பிக்சந்தானி. தனது  கன்வுகளுடன் துவக்கிய லட்சிய பயணத்தில் 10 ஆண்டு பயணத்திற்கு பின்னர்  வெற்றி கண்டவர்.  இன்று இந்தியாவின் மிகப்பெரிய இணையத்தின் மூலம் வேலைதேடித்தரும் நிறுவனமாகியிருக்கும் நாக்ரி.காம் நிறுவனத்தை உருவாக்கியவர்.  இன்று இந்த நிறுவனத்தின் மதிப்பு 200கோடி இதுவரை பதிவுசெய்திருப்பவர்கள் 10 ல்ட்சத்திற்கும் மேல். பலருக்கு  வேலை கிடைக்க உதவியிருக்கிறது. Naukri.com  இணையதளம். தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் வேலை வாய்ப்பு தேடல் இயந்திரம். (Job Search Engine). இத்தளத்தில் நீங்கள் வேலை தேடுவது, விண்ணப்பிப்பது மட்டுமல்லாது, பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இருக்கும் தேவை பற்றிய அறிவிப்புகளை, அந்த நிறுவனங்களின் Career இணைப்பிலிருந்து பெறலாம். இது மட்டுமல்லாது உங்கள் தகுதிக்கேற்ற வேலைகளை உங்கள் மின்னஞ்சல், அலைபேசியில் பெறுவதோடு SMS மூலமும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஐஐஎம்ல் படிப்பு முடிந்த வந்தவுடன் எதாவது தொழில் ஆரம்பிப்பது பற்றி தீவரமாக சிந்தித்து கொண்டிருந்தவரை ” “தீர்மானம் செய்யும்வரை ஒரு வேலையில் சேர்ந்து கொஞ்சம் பணமும் சேர்த்துக்கொள்” “ என்று சொன்னவர் உடன் படித்த தோழியும் பின்னாளில் மனைவீயுமான சுரபி. அவருக்கு நெஸ்லே நிருவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருந்தது.  ஆலோசனையை ஏற்று ஹார்லீக்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். நல்ல சம்பளம், வசதிகள் இருந்தாலும்  உள்ளத்தில் “சொந்தபிஸினஸ்” “ என்ற கனல் கனிந்த்து கொண்டேயிருந்தது.  திருமணமான புதிதில் ஒரு நாள் வேலையை வீசியெறிந்துவிட்டு, மனைவியிடம் நமது நிருவனம் பிறந்து  வளர்ந்து ஒருநிலையை அடையும் வரை நீ குடும்ப செலவுகளை சமாளிக்க வேண்டும் எனறு சொல்லிவிட்டு தன் தந்தையையின் வீட்டின் பின்னே இருந்த வேலையாட்களத்ங்கும் இரண்டு அறை வீட்டில்  நணபரை பார்டனராரக சேர்த்துகொண்டு நிறுவனத்தை துவக்குகிறார். பெயர் இன்போ எட்ஜ் திட்டமிட்டிருந்த பிஸினஸ்டேட்டா பிராஸிங், ஆலோசனைகள் வழங்குவது. அப்போது இந்தியாவில் அதிகமான அளவில் நிறுவனங்கள் கம்பூட்டர்களை பயன்படுத்தவில்லை, தகுதியான் ஆட்களும் இல்லை. என்வே இது நல்ல தொழிலாக வளரும் என்பது சஞ்ஜீவின் கணிப்பு,. ஆனால் எதிர்பார்த்த அளவில் வரவேற்பில்லை.. வருமானம் இல்லாமல் செலவுகள் கூடின.அதை சமாளிக்க ஒரு மானேஜ்மெண்ட்ட் கல்லூரியில் லெக்சரர் வேலைஇரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருந்த சுரபியும் வேலையை விட்டிருந்தார். அதானால்  ஒரு நாளிதழலில் வேலை வாய்ப்பு பக்கஙகளை கவனிக்கும் சிலமணி நேர பகுதி நேர இரண்டாவது வேலை. சஞ்ஜீவ் வாய்ப்புகளை அணுகி போகுமிடங்களில் எல்லாம் பலர் பிசினஸ் டூடே என்ற பத்திரிகையை எல்லோரும் கடைசி பக்கத்திலிருந்து படித்து கொண்டிருப்பதை பார்த்தார்.   ஏன் என கவனித்து போது அது  நிறுவனங்களில் மேல்மட்ட வேலைவாய்பு விளம்பரஙகள் தெரிந்த்தது. இதை  மற்ற சதாரண வேலைவாய்ப்களுடன் நாமே தொகுத்து தரலாம் என்ற எண்ணத்தில் தினசரி பேப்பர்களில்  வந்திருக்கும் வாய்ப்பை தொகுத்து ஒரு டேட்டா பேஸை உருவாக்க தனது அலுவலக  ஊழியர்களை பணித்தார். (அவர்களுக்கு வேறு வேலையுமில்லை எனபதும் ஒரு விஷயம்.).. இவ்வளவு கஷ்டங்களுக்கிடையேயும் தனது நிறுவனத்தை நடத்தி வந்ததிருக்கும் இவரது அசைக்கமுடியாத தன்னம்பிக்கை நம்மை ஆச்சரியபடவைக்கிறது.  ஒரு நாள் மாலையில் பிரமாத விள்மபரபடுத்தபட்ட பொருட்காட்சியில் தனக்கு வாய்ப்பாக எதேனும் ஒரு நிறுவந்த்தின் தொடர்பு கிடைக்குமா என போனவரின் கண்ணில் பட்டது  WWW  என்ற பெயரில் ஒரு ஸ்டால். என்னவென்று விசாரித்த்தில் அது தான் இண்டர்நெட் என்றும் அதில் மெயில்அனுப்பிக்கொள்ளலாம் என்றும் தனியாக ஒரு தளம் வைத்துகொண்டு தங்கள் தொழில் பற்றி சொல்லாம் எனறும் தெரிந்து கொண்டார். உடனே இதன்மூலம் நாம் ஏன் பிஸினஸ் செய்யகூடாது எனற எண்ணம் எழுந்தது. கவனியங்கள். இன்று இண்டர்நெட் மூலம் பணம் கொட்டிக்கொண்டிருக்கும் பிஸினசை நடத்திகொண்டிருக்கும் சஞ்ஜீவிக்கு அன்று இண்டர்நெட் என்றால் என்னவென்ன்று கூட தெரிந்திருக்கவில்லை.   “எனக்கு இண்டர்நெட் எனபது தெரிந்திரிக்கவில்லை. ஆனால் சில வினாடிகளில் அதில் இருக்கும் வியாபார வாய்ப்பை புரிந்துகொண்டேன்” “ என்கிறார் சஞ்ஜீவ்.  தொடர்பு கொண்டு விபரஙகள் அறிந்த போது இணையத்தில் ஒரு தளமாக இணைய  சர்வர் இருக்கும் நிறுவந்த்தின் உதவி அவசியம் அது அமெரிக்காவில் இருக்கிறது, கட்டணம்  மாதம் 25 டாலர் செலுத்த வேண்டும் எனபதை அறிந்தார். அமெரிகாவிலிருக்கும் சகோதரை  தொடர்பு கொண்டு  இண்டர்நெட் எனறால் தெரியுமா? உதவமுடியுமா? எனகேட்டார். அவர் சிரித்து கொண்டே இங்கு எல்லோரும் பயன் படுத்துவதாக சொல்லி உதவ உறுதியளித்தார். அவர் உதவும் பணத்திற்கு தந்து நிறுவனத்தில் 5% பங்குகள் தருவதாக சொன்ன தம்பியின் நம்பிக்கையை பராட்டியவருக்கு அப்போது தெரியாது அந்த பங்குகள் ஒரே  இரவில் அவரை கோடிஸ்வரனக்கபோகிறது எனபது.
தனது தொழில் இதுதான் என முடிவுசெய்துவிட்ட சஞ்ஜீவ் முழு முச்சாக அதில் இறங்கினார். இரண்டு முழு இரவுபகல்கள் உழைத்து ஒரு திட்ட அறிக்கயை உருவாக்கினார். எதை எப்படி ஏன் செய்ய வேண்டும் என்ற கச்சிதமான் திட்டம். வெப் சைட்டை வடிவமைக்கவும் நிர்வகிக்கவும் டெக்கினிகல் விஷயஙகள் அறிந்தவர்கள்  தேவை எனபதால் ஐஐஎம்லில் கூட படித்த  நணபர் லாலை  அழைத்தார்.  சம்பளம் கிடையாது  நிறுவனத்தின் பங்குகளில் 9 % எனபது ஒப்பந்தம். கம்ப்யூட்டர் ப்ரோகிராமில் கில்லாடியான அவர் எனக்கு இண்டர்நெட் பற்றி எதுவும்  தெரியாது எனறவரிடம் உனனால் முடியும் என்று ஊக்கபடுத்தியதில் ஒரே வாரத்தில் நான் தயார் என்றார். சேமித்து வைத்த வேலை வாய்ப்புகள் டேட்டாகள் உதவின. 1000 வேலைவாய்ப்பு விபரங்களுடன் நாக்ரி. காம் 1997ல் பிறந்தது. சொந்தத்தில் ஒரு கம்ப்யூட்டர்கூட இல்லாதால் நணபர் லாலின் கம்ப்யூட்டர் மூலம் இயங்கியது. முதலாண்டு 18லட்சம்இரண்டாம் ஆண்டு 36 லட்சம் என பிஸினஸ் வளர்ந்தது. கூடவே புதியபோட்டியாளார்களும் களத்தில் இறங்க தனது நிறுவனம் அவர்களைவிட பிரமாண்டமாக்யிருக்க வேண்டியதை உணர்ந்த சஞ்ஜீவிவ் செய்தத  துணிவான முடிவு. 2005ல் நிறுவன முதலுக்கு பங்குசந்தையை நாடியதுதான். நம்பமுடியாத ஆச்சரியமாக பங்குகள் வேண்டி விண்ணப்பத்தவர்கள் லட்சகணக்கில். தேவைக்குமேல் 55 மடங்கு. 320ருபாய் ஷேர்  600ருபாய்களுக்கு விற்றது. சஞ்ஜீவ் குடும்பத்தினர் தஙக்ள் பங்ககளில் சிலவற்றை விற்று கோடிஸ்ரர்கள் ஆனார்கள். அந்த ஆண்டு நாக்கிரி.காமின் வருமானம்  84 கோடி லாஉஅப் 13 கோடிகள். அன்றிலிருந்து இந்த நிறுவனம்  வேலை தேடுவதை பல புதிய பரிமாணங்களோடு அறிமுகபடுத்தி வளர்ந்துகொண்டிருக்கிறது.   “சொந்த தொழில் செய்யவிரும்புகிறீகளா? திட்டத்தில் அசாத்திய நம்பிக்கை வைத்து உழையுங்கள். வெற்றி நிச்சியம் வரும் த்மாதமாகத்தான் வரும்  அதுவரை காத்திருக்க கற்றுகொள்ளுங்கள் “ எனகிறார் சஞ்ஜீவ்






கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்