18/9/11

உழைப்பில் விளைந்த வெற்றிகனிகள்


லைப் பூஸ்டர் 7              

பழமுதிர் நிலையம் சின்னசாமி


தமிழகத்தின் 8 நகரங்களில் 30 கிளைகளுடன் ஆயிரத்துக்குமேற்பட்ட ஊழியர்களோடு இயங்கும் இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு மொத்த வியாபாரம் 120 கோடிக்கும் மேல். வெளி நாட்டு பழவகைகளை பெரிய அளவில் நேரடியாக இறக்குமதி செய்யும்  இந்த நிறுவனம் பிறந்தது கோவை நகரில் ஒரு ஒழுக்கமான உழைப்பாளியாக தள்ளு வண்டியில்  பழம் விற்றுகொண்டிருந்த இளைஞனின  மனத்தில் தோன்றிய சிறு பொறியிலிருந்து..  “நல்ல பழங்களாக தருகிறாய் ஆனால் எனக்கு வசதியான நேரத்திற்கு வரமாட்டேன்கிறாயயே, ஒரு கடை போட்டால் நானாவது வந்து வாங்குவேன் “ என்ற ஒரு இல்லத்தரசியின் வார்த்தைகள் அசீரீயாக ஒலித்தது சின்னச்சாமிக்கு.  பள்ளிக்கூடமே இல்லாத குக்கிராமத்தில் பிறந்த சின்னச்சாமிக்கு  நடந்து பககத்து ஊர் பள்ளிக்கூடம் போய் படிக்கமுடியாத குடும்ப சூழ்நிலை.   12 வயதிலிருந்து கிடைத்த வேலயை செய்து குடுபத்துக்கு உதவிய அந்த சிறுவனை உறவினர் கோவை அருகே உள்ள அன்னூரில்  ஒரு முஸ்லீம் பழக்காரரிடம் வேலை பழக ஒப்படைத்தார்.  அன்று முதல் பழங்கள் தான் அவன் உலகம். பஸ்நிலையத்திலிருந்த அந்த கடை காலை முதல் பஸ் 5மணிக்கு கிளம்பும் முன் திறக்கபடும் இரவு 10 மணிக்கு கடைசி பஸ்  கிளம்பியபின் மூடப்படும்.  எந்த விடுமுறையும் கிடையாது.பழங்களை பார்த்து பார்த்து துடைத்து அடுக்கி வைத்திருந்த முறை வருபவர்களை கவர்ந்து வியாபாரம் பெருகியது. எந்த நேரத்திலும் பொய் சொல்ல கூடாது யாரையும் ஏமாற்றகூடாது என்ற பாடத்துடன் பழ வியாபரத்தையும் முதலாளியிடம் கற்றபடி மூன்றாண்டுகள் ஒடின, பஸ்நிலைய கடைகள் எலத்தில் எதோ அரசியல். முதலாளி கடையை மூடிவிட்டார். என்ன செய்வது எனறு தெரியாத  சின்னசாமி பஸ் ஏறிசென்ற இடம் ஊட்டி. அங்கு ஒரு பலசரக்குகடையில் உதவியாளார் வேலை அதுவே தங்குமிடதானால் நாள் முழுதும் வேலை. 18 வயது ஆவதற்காக காத்திருந்து
கோவையில் ஒரு மில்லில் கூலியாக வேலைக்குசேர்ந்த சின்னசாமிக்கு சந்தோஷத்திவிட சங்கடம் தான் அதிகமாகயிருந்தது. காரணம் ஒரு நாளில் 18 மணி நேரம் உழைத்தவருக்கு 8 மணி நேர ஷிப்ட் கஷ்டமாகியிருந்தது , மில் ஷிப்ட் நேரம் போக மீதி நேரத்தில் ஆப்பிள் சாத்துக்குடி மலைப்பழம் வாங்கலியோ என குரல் எழுப்பி கோவை முழுவதும்  சுற்றி வந்த  நேரம்  மிக சந்தோஷமாந்தாயிருந்திருக்கிறது..  எல்லா தெருக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு போகமுடியாததில் எழுந்த வாடிக்கையாளரின் கேள்வியின் விடை தான்  அவருடைய முதல் கடை.  போட்டிக்கு அருகில பளீர் விளக்குகளுடன் வந்த புதிய காய்கறிகடையை பார்த்தவுடன் தான் இந்த வியாபாரத்திற்கு அதுவும் அவசியம் எனப்து புரிந்தது.  விரித்த நீயூஸ் பேப்பரில் பழங்களும்  குண்டு பல்புமாகயிருந்த நாஙகளூம் மாறினோம். கோவையின் பல ஏரியாக்களில் அறிமுகமாகியிருந்த்தால்  கிளைகள் பிறந்தன. தம்பிக்கும் வயது 18 ஆகி மில்லில் வேலை கிடைத்ததால் நான் தைரியமாக முழு நேரவியாபாரியானேன்.   கடைக்கு பெயர் வைக்கவேண்டும் என்ற எண்ணம்கூட என்னுடையதில்லை. பழம் வாங்க வரும் ஒரு பள்ளி தமிழ் ஆசிரியர் தான், இருக்கும் அதிகபழவகைகளை பார்த்து இந்த பெயர் வைத்தார். அவரே போர்டும் தயாரித்து அனுப்பினார்.
இன்றைக்கு  இவர்களுடைய அத்தனை கிளைகளிலும் சேர்த்து ஒரு நாள் வரும் வாடிக்கையாளார்கள் 40000 க்கும் மேல் இருப்பதின் காரணம் பழங்க்ளுடன் காய்கறிகளும், பழங்களில் நல்ல வெளிநாட்டு வகைகளும்விற்பது தான்.  முதலில் இதையெல்லாம் நம் மக்கள் எல்லோரும் வாங்குவார்களா என்ற பயம் இருந்தது. இன்று நகரங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சியும் பழங்களும் அவசியம் எனபதை நிறையவே உணர்ந்திருகிறார்கள்.  நல்ல பழங்களை பாதுகாக்க ஏர்கண்டிஷன் அவசியமாயிற்று அதையே கஸ்டமர்களுக்கு செய்யும்போது பெரிய இடங்கள் அவசியமாயிற்று என்பதை தனது கடைகள் பரந்த பரப்பிலிருப்பதற்கு காரணமாக சொல்லுகிறார் இவர்.  விலை அதிகமாகிவிடுமே என்ற நம் கேள்வியை  தவறு என்கிறார். பல காலமாக கோவையில் ப்ழங்களின் விலையை பேப்பரில் அறிவிப்பவர்கள் நாங்கள்.  எங்கள் போட்டியாளார்கள் இதை வரவேற்கவில்லை எனற போதிலும் நாங்கள் செய்கிறோம். காரணம் தரமான பழங்களின் மார்கெட் விலயை மக்கள் அறிவதற்காகத் தான்.  விலை அதிகம் வைத்தால் மக்கள் எங்களை ஒதுக்கிவிடுவார்கள் எனகிறார். இவர்களின் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளினாலும் முதல் கிளையை  திறந்தவர்கள் இப்போது பலநகரங்களில் பரவியிருக்கிறார்கள் தமிழகம் முழுவதும் பரவது லட்சியம் என்று சொல்லும் இவரது மகன் செல்வம் இப்படி காய்கனி வியாபாரத்தில் செயின் ஸ்டோரை தெனிந்தியாவில் அறிமுகபடுத்தியது தங்கள் நிருவனம் தான் என்கிறார்.  சாப்ட்வேர்கள் தயாரிக்க படித்து பயிற்சி பெற்ற இவர் தயாரித்த  ஒரு மென்பொருளால்  வியாபார நிர்வாக்த்தில் பல விஷயங்கள் எளிதாக்கப்பட்டிருக்கிறது.  இதை பல வியாபர நிறுவனங்கள் விரும்பி கேட்டதால் அதை தயாரிப்பதற்காகவே ஒரு தனி நிறுவனத்தை துவக்கியிருகிருப்பதாக சொல்லும் செந்தில் தந்தையின் காய்கனி வியாபாரம் தான் முதனமையானதும் முக்கியமானதும்  எனகிறார்.
தங்கள் கடைவாசலில் வ்ரும் வடிக்கையாளர்களுக்காக பழஜூஸ் விற்க ஆரம்பித்தில் தெரிந்த விஷயம் அதை வாடிக்கையாளார்கள்  பெரிதும் விருபுகிறார்கள். எனபது. அதை  நன்கு ஆராய்ந்தபின் அதற்காகவே தனி கடைகளை நல்ல வசதிகளுடன் பல இடங்களில் ஆரம்பித்துவிட்டார்கள்.  ஒரு நாளைக்கு 20000 கப்புகள் ஆரோக்கியமான பழ ஜுசை மக்கள் அருந்திக்கொண்டிருக்கிறார்கள். முதலில் வெளிநாட்டு பழங்களை இடைத்தரகர்கள் மூலம்  இறக்குமதி செய்துகொண்டிருந்தவர்கள் இப்போது உலக புகழ பெற்ற நிறுவனங்களிலிருந்து நேரடியாகவே இறக்குமதி செய்கிறார்கள். இது நல்ல தரத்தை குறைந்த விலையில்  தரமுடிகிறது என்று சொல்லும் இவர்கள்  அண்டை நாடுகளுக்கு நமது பழங்களை ஏற்றுமதி செய்யவும ஆரம்பித்திருக்கிறாகள்.  வாழக்கையில் நான் எதையும்  எதிர்கால எதிர்பார்ப்பு திட்டங்களுடன்  ஆரம்பிக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை ந்மபிக்கையுடனும் நன்பர்கள் உதவியுடனும் உழைப்பினால் செயல் படுத்தினேன்.  இபோது அடுத்த தலைமுறை அதை சிறப்பாக வளர்க்க முயற்சிக்கிராரகள் அதைத்த்விர ஒன்றும் வெற்றி ரக்சியம் இல்லை என்று அடக்கதுடன் சொல்லும் சின்னசாமி இன்றும் பல நாட்களில் விடியற்காலை நேரங்களில் விற்பனை செய்பவைகளை கொள்முதல் செய்ய மார்கெட்டுக்கு  தனது குடும்பத்து இளைய தலைமுறையினரையும் அழைத்துகொண்டு போகிறார். 

96     




கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்