30/10/11


ராஜாவுக்கு கல்யாணம்

நமது பக்கத்துவீடான பூடான  உலகிலில் மன்னா ஆட்சியிலிருக்கும் சில  குட்டிநாடுகளில் ஒன்று. . ஒரு அரச குடும்ப திருமணத்திற்கான எந்தவித ஆடம்பரபமும் இல்லாமல் மிக எளிமையாக நடந்தது அதன்  31 வயது மன்னரான ஜிக்மி கேஸர் நாம்ஜியால் வாங்சக். (Jigme Khesar Namgyel Wangchuck, ) திருமணம்.  திருமணத்திற்கு பிற நாட்டுதலைவர்கள், மனன்ர்கள் அழைக்கபடவில்லை. நண்பர்களாக பங்குகொண்டவர்கள் ராகுல் காந்தியும் அமைச்சர் ஜோதிராத்தியா சிந்தியாவும் மட்டுமே. பூடானின் தலைநகர் திம்புவானாலும் திருமணம் நாட்டின் பழைய தலைநகரான  புனாகா லிருக்கும் பரம்பரை புத்தர் கோவிலில் தான் நடந்தது.  மணப்பெண்  21 வயதான ஜெட்சன் பெமா  (Jetsun Pema,)
இந்தியாவில் படித்தபின் லணடனில் கல்லூரியில் படிக்கும் மாணவி.  இவர் ஆக்ஸ்போர்டிலும்  பின்னர் அமெரிக்காவிலும் படித்த மன்னரின் காதலி எனபது ஐரோப்பிய மீடியாக்கள் தரும் தகவல்.   நாலு மணிநேர பிராத்தனைக்கு பின் மன்னரிடம் தரப்பட்ட சிவப்பு துணித்தொப்பியை மணமகளுக்கு அணிவித்து அழைத்துச்செனறு தன் தங்கசிம்மாஸனத்திற்கு  அருகில் அமைக்கபட்டிருந்த தனியாசனத்தில் அமர வைத்தார். அவ்வளவுதான் திருமணம் முடிந்தது. க்ஷ்க்ஷ்க்ஷ் பூடான் மன்னரின் மனைவியாகவும் ராணியாகவும் ஆகிவிட்டார்.
.7 லட்சமே மக்கள்தொகை கொண்ட, எளிமையான வாழ்க்கையில்  மிக சந்தோஷமாகயிருக்கும் இந்த நாட்டிற்கு மக்கள் கேட்காமலேயே  ஜனநாய அரசை மக்க்ளிடம் திணித்திருப்பவர் இவரது தந்தை.இதனால் இப்போது 47 உறுப்பினர் கொண்ட பார்லிமெண்ட்டும் இருக்கிறது. இதில் தன் திருமணத்தை அறிவித்த போது  ” “நாட்டின் ராணியாக வரப்போகிறவர் நல்ல மனுஷியாகவும்  மக்கள் விரும்பவராக, அவர்களின் நலம் பேணுவராக இருப்பார் “ என சொல்லியிருந்தார். அந்த நாளிலிருந்து மக்கள் ஆவலுடன்  அந்த அதிர்ஷ்டசாலியையை காண காத்திருந்தனர். திருமணத்தை தேசமுழுவதும் மக்கள்  தங்கள் வீட்டுதிருமணமாக கருதிகொண்டாடினர். பேபர் போஸ்டர்கள் கூட அனுமதியில்லாதா பூட்டனில் முதல் முறையாக டிஜிடல் பேனர்களில்  மன்னர் தம்பதியினரின் படம்.   குடும்ப விழாவாக நடைபெற்ற திருமணத்தை தொடர்ந்து   மக்கள் கூடியிருந்த ஸ்டேடித்தில் மக்களின் வாழ்த்தைபெற்ற இந்த மன்னரும் ராணியும அவர்கள் முன் முத்தமிட்டகொண்டது ஒரு  எதிர்பாராத  இனிய ஆச்சரியம்.. பொது இடத்தில் பெண்களை தொடுவது கூட தவறு எனறு கருதப்படும் நாட்டில் மன்னரின் இந்த செய்கை மன்னரைஒரு ஹீரோவாக பார்க்கும்  இளைஞர்களுக்கும் மாணவிகளுக்கும்  மகிழ்ச்சியை தந்தது என்பது எழுந்த ஆராவரத்தில் தெரிந்தது.

GDP   என்ற வளர்ச்சி குறியீடு போல GHP  எனபது ஒரு நாட்டு மககளின் சந்தோஷத்தை குறிக்கும் குறியீடு.  அதில் 148 உலக நாடுகளில்  7 வது இடத்தியும் ஆசியாவில் முதலிடத்தையும் பெற்றிருக்கும் பூட்டானில்  மக்கள் ஆட்சி மலர்ந்திருந்தாலும் மன்னரின் திருமணத்தில் தேசமே சந்தோஷப்படுவதில் ஆச்சரியமில்லையே


"

16/10/11

கலாம் சொன்னதைச் செய்தவர்


லைப் பூஸ்டர் 11             

 ராகவேந்திர ராவ்

  

ராகவேந்தர்  சென்னையில் பிறந்து  தெனாலியில் படித்து வளர்ந்தவர். தந்தை ஒரு ரெயில்வே அதிகாரி. குடும்பத்தில் யாரும்பிஸினஸோ தொழிலோ செய்பர்கள் இல்லை. ஆனால்  பிகாம் பட்டபடிப்பில் பல்கலைகழகதங்க மெடல் பெற்று, அகில இந்திய தகுதித்தேர்வில் பெற்ற முன்ணணி ரேங்க்கினால் அஹதாபாத் ஐஐஎம் ல் இடம் பெறறு எம்பிஏ படித்த இவரின் கனவு சொந்த தொழில். அதவும் சாதாரண கனவில்லை.  பிரமாண்டமான பலநூறு கோடிகளில் ஒரு பெரிய தொழிற்சாலை கனவு. அதுதான் இன்றைய உலகமறிந்த 300மில்லியன் டாலர் கம்பெனியான ஆர்ச்சிட் பார்மா (ORCHID PHARMA ) நிறுவனம்
கிடைத்த முதல் வேலை மும்பாயில் குவாலிட்டி ஐஸ்கீரிம் நிறுவனத்தில். நஷட்த்தில் இயங்கிகொண்டிருந்த அதன் அஹமதாபாத் கிளையை சீராக்கி சிறப்பான நிலைக்கு கொண்டுவந்த ராகவேந்தரின் சாதனை தாகத்திற்கு அது போதுமானதாக இல்லை.  சென்னை அசோக்லேண்ட் பணியில் ஒரு தொழிற்சாலையின் பன்முகங்களை அறிய வாய்ப்பு கிடைத்தாலும்,  பெரிய அளவில் சாதிக்க துடிக்க காத்திருந்தவருக்கு 1986ல் ஹைதிராபாத்தில் கெமிகல் ஆலையை துவக்க திட்டமிட்டகொண்டிருந்த  ஒரு குழுமத்தினரின் அழைப்பு சவாலாக இருந்தது. அந்த நிறுவனத்தை முதல் செங்கலிருந்து உருவாக்கிய அந்த நிறுவனம் 2 ஆண்டுகளில்  5 மடங்கு வளர்ந்திருந்த்து. அவரது  சொந்த கம்பெனியின் கனவைப்போலவே. சொந்த தொழில் துவக்க வேண்டிய மூலதனத்திற்கான் பணத்தை இந்த வேலையில் சம்பாதிக்க முடியாதென்பதால் வெளிநாடுபோய் வேலைசெய்து சம்பாதிக்க திட்டமிட்டதின் விளைவு நல்ல சம்பளத்திலிருந்த வேலையை ராஜினாமா செய்தது. இதற்கிடையில் திருமணமாகி ஒரு குழந்தையும் குடுமப உறுப்பினராகியிருந்த்து. மனைவி இல்லத்தரசிஇத்தனை நாள் உழைப்பில் வங்கிகணக்கில் இருந்த் சேமிப்பு  11000ரூ மட்டுமே இந்த நிலையில் ஒமன் நாட்டில் ஒரு ஹோட்டலின் அக்கெண்டிங் மேனஜர் வேலைக்கு தேர்வாகி தனியே அங்கு போனபோது இவர் அடைந்தது மிகப்பெரிய ஏமாற்றம். அது ஒரு 30  ஊழியர்களுடன் 16 அறைகளை  கொண்ட சின்னஞ்சிறு ஹோட்டல். அதில் அதிகம் படித்த ஊழியர் 12 வகுப்பு பாஸ் செய்திருந்தவர் நிறைய நிலமும், பெரியஆசைகளுடனும் கொண்டவர்கள் அதன் முதலாளிகள்.  முதலில் தயங்கிய ராகவேந்தர் இதை சவாலாக ஏற்று சாதிக்க  வேண்டும் என்று முடிவு செய்தார், எல்லா பொறுப்புகளையும் நேரடியாக கவனித்து அந்த ஹோட்டலை பெறும்லாபத்தை ஈட்டி தரும் நிறுவனமாக்கினார். அதன் உரிமையாளர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி அவர்கள் ஒரு ரெடிமேட் ஆடைதயாரிக்கு நிறுவனம், சின்ன உருக்காலை, ஒரு கெமிகல் ஆலை போன்றவைகளை உருவாக்க உதவினார். 4 ஆண்டுகளில் ஒரு சின்னஹோட்டலை நடதிக்கொண்டிருந்த குடுமபம் ஆண்டுக்கு 80 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் குழுமம் ஆகியிருந்தது. அரபு நாடுகளில் நிறுவனத்தின் பங்குகள்ஊழியர்களுக்கு வழங்கபடமுடியாது என்பதால் 10000 டாலர் சம்பளம், பலவசதிகளை அந்த நிறுவனம் ராகவேந்தருக்கு தந்திருந்தாலும்  தன் கனவை மறக்காமல் இன்னும் பல புதியபரிமானங்களுடன் கண்டுகொண்டேயிருந்தார்.நிறுவனத்தின் வளர்ச்சசியில் கட்டுமான பணி, இயந்திர இறக்குமதி,  பணியாட்கள் எல்லாம் இந்தியாவிலிருந்தே ஏற்பாடுசெய்து பலருக்கு வாய்ப்பளிதிருக்கிறார்.  சேமித்த பணத்துடன் இந்தியா திரும்பிய ராகவேந்தர் திட்டமிட்டது  மருந்துகள் தயாரிக்கும்  தொழிலுக்கு தேவையான் அடிப்படை கெமிகல்கள் உற்பத்திசெய்யும் ஒரு ஆலை. மருந்து தயாரிக்கும் தொழில் மனித சமுதயாமிருக்கும் வரை வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு தொழில் அதில் ஈடுபடுவது மற்றதை விட லாபகரமானது  எனபதை கணித்த ராகவேந்தர் அதை  ஒரு சிறுதொழிலாக துவக்கவதை விரும்பவில்லை. தன்னுடையது ஒரு பெரிய நிறுவனமாக இந்தியா அறிந்த, உலகம் அறிந்த நிறுவனமாக இருக்கவேண்டும் என்பதை விரும்பினார். அதற்காக  12 கோடியில் தனக்கிருந்த தயாரிப்பு, நிர்வாக அனுபவம் எல்லாவற்றுடன் அழகான ஒரு பெரிய திட்டத்தை தயாரித்தார். தனது சேமிப்பு மட்டும் போதாது எனபதால் வங்கிகளை கடன் வசதிக்காக அணுகினார். ஐடிபிஐ வங்கி கடன்  5 கோடி கடன் தரமுன் வந்தது. ஆனால் சொன்ன நிபந்தனை  “ உங்கள் மூலதனத்தை 6 கோடிகளாக்க வேண்டும் “ அதற்காக பங்குசந்தையில் நுழையும்படி ஆலோசனையைவழங்கி  அதை நிர்வகிக்கவும் முன்வந்தது. தொடர்ந்து நேரடி மூதலீட்டுக்கு சில தனியார் நிறுவனங்களையும் அணுகினார். தன் திறமையின் மீது கொண்ட அசாத்திய நமபிக்கையினால்  நனபர்கள், நண்பர்களின் நண்பர்கள்,  அப்பலோ மருத்துமனையில் டாக்டராக இருந்த அண்ணனின் நணபர்களை என பலரை அணுகி திட்டத்தை விவரித்து  மூதலிட்டை பெற்றார். தனிமனிதராக இதைச்செய்ததைவிட  பெரியசாதனை,இறுதியில் குறைந்த 50 லட்சத்தை ஐடிபிஐ வங்கி முதலீடு செய்ய முன்வந்ததுதான். கடன் கொடுக்கும் வங்கியே அந்த தொழிலில் முதலிடு செய்வது எனபது இந்தியாவில் அது தான் முதல் முறை.   1992ல் துவங்கிய முயற்சி மொட்டுக்கள் ஒரே ஆண்டில் தொழிற்சாலையாக மலர்ந்தது.   எல்லா கட்டஙகளிலும் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே பணிகள் முடிக்கபட்டன. முதல் இரண்டு மாதத்தில் தயாரிப்பும் பிஸினஸும் 5 கோடி லாபம் 43 லட்சம். அன்று முதல் இன்று வரை இந்த நிறுவனத்திற்கு தொடர்ந்தது வெற்றிகள் மட்டுமே. 94-95 ஆண்டுகளில் நிறுவனத்தின் பிசினஸ் 192 கோடிகள். திட்ட அறிக்கையில் எதிர்பார்ப்பாக சொல்லபட்டிருந்தது 37 கோடிகள்.
இந்த  மகத்தான வெற்றிக்ககான காரணமாக 3 விஷயங்களை  சொல்லுகிறார்  பத்மஸ்ரீ ராகவேந்திரா ராவ். முதலில்  ” “என்னுடைய டீம். என்னுடன் ஹைதிராபாத்திலும்,ஓமனிலும் என்னுடன் இணைந்தது உழைத்த அருமையான நண்பர்கள். . இன்று எல்லோருக்கும் கணிசமான பங்குகள் இருந்தாலும் கம்பெனி துவங்கிய காலங்களில் சமபளம் எடுத்துகொளாமல் நம்பிக்கையோடு உழைத்தவர்கள். இரண்டாவது தேர்ந்தெடுத்த தொழிலில்  எதைத்யாரிக்கவேண்டும் எனற  தீர்மானமான குறிக்கோள். நிறைய கம்பெனிகள் இந்த தொழிலில் இருந்தாலும் போட்டியில்லாத, மிகஅதிக அளவில்மருந்துகளின் தயாரிப்புக்கு தேவைப்படும்  ஒரு  முக்கிய ஆண்டிப்யாட்டிக் மூலப்பொருளை தயாரிக்க முடிவு செய்தது. “ (இன்று உலகில் 5 கம்பெனிகள்  மட்டுமே தயரிக்கும் ஒரு பொருளை இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.)  மூன்றாவது உலக மார்கெட்டில் கண்வைத்து முழுதயாரிப்பையும் 100% ஏறுமதிக்காக உற்பத்திசெய்யும் நிறுவனமாக துவங்கியது. உலகளவில்.  அடிப்படை மருந்துகளின் தேவையில் இந்தியா 1%  ஏறுமதி தான் செய்துவருகிறது அதில் இறங்குவதிலிருக்கும் ஆபத்துகளைப்பற்றி மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்த்காலத்தில் மீதி 99 % தயாரிப்பில் பெரிய இடத்தை பிடிக்க நாங்கள் நம்பிக்கையுடன் திட்டமிட்டதுதான் எனகிறார்..முதல்ஆண்டு 3 நாடுகளுக்கும், இரண்டாம் ஆண்டு 12 நாடுகளுக்கும் ஏற்றுமதிசெய்துகொண்டிருந்த ஆர்ச்சிட் நிறுவனம் இன்று 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. மிக அதிக அளவில் அமெரிக்காவிற்கு.  இன்று அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் வழங்கபடும் மருந்துகளிலும் மாத்திரைகளிலும் இருக்கும் அடிப்படை வேதியப்பொருள் இந்தியாவில் தயாரிக்கபட்டது என்ற பெருமையான விஷயத்தை செய்தவர்கள் இவர்கள்.
இவர்களின் வெற்றிக்கு மற்றொரு பெரிய காரணம் இவர்களது  3700 ஊழியர்கள். பலர் நிறுவனத்துடன் வளர்ந்தவர்கள். டீ கொடுக்கும் பையனிலிருந்து ஜெனரல் மானேஜர்கள் வரை பலருக்கு நிறுவனத்தின் ஷேர்கள்  வழங்கப்பட்டிருக்கிறது. சாப்ட்வேர் கம்பெனிகளில் மட்டுமேஇருந்த இந்த திட்டதை 199லியே தன் நிறுவனத்தில் அறிமுகபடுத்தியிருக்கிறார்.
உலகப்பொருளாதாரநெருக்கடி. பன்னாட்டுகம்பெனிகளின்போட்டி அன்னிய முதலீட்டு கொள்கைகளினால் வெளிநாட்டுகம்பெனிகளின்போட்டி, கமபெனியையே முழுங்க முயறசிக்கும் உள்நாட்டு போட்டியாளர்கள் எல்லாவற்றையும் திறமையாக சமாளித்து பிரமாண்டமாக நிற்கும்  இந்த நிறுவனம்  ஒரு  இந்திய இளைஞனின் “ நம்பிக்கையின் அடையாளம்
 096     


9/10/11

சமையலோடு பிஸினஸும் செய்யுங்கள்

லைப் பூஸ்டர் 10             

லலிதா ராவ்


ஒரு பெண் அதுவும் மத்தியதரகுடும்பத்து இல்லத்தரசி சொந்தமாக பிசினஸ் ஆரம்பிப்பது எனபது   10 ஆண்டுகளுக்குமுன் மிக கடினமாகயிருந்த ஒரு விஷயம் அவர்களின் இம்மாதிரி முயற்சிகளூக்கு முதல் எதிர்ப்பு அவர்கள் வீட்டிலிருந்துதான் எழும்.   மெக்கானிகல்என்ஜினியரிங் படித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் டிசைன் என்ஜியராக நல்ல சம்பளத்திலிருந்த   லிலிதா திருமணத்திற்கு பின்னும் தன் வேலையை  தொடர்ந்தார். ஆனால்  எதாவது சொந்த தொழில் ஆரம்பித்து  பல பெண்களுக்கு வேலை கொடுக்கவேண்டும் என்ற  ஆவலில் வேலையை விட்டுவிட்டு  துவக்கிய  தொழில் இன்று 15000 க்குமேற்பட்ட பெண்களுக்கு எளிதாக வருமானம் ஈட்டும் வழியைச் சொல்லிக்கொடுத்திருக்கிறது.  இந்த முயற்சியை பராட்டி எக்னாக்மிஸ் டைம் பத்திரிகை  உமன் லீடர் ஆப் டூமாரோ  விருதை வழங்கியுருக்கிறது.
லிலிதா உடுப்பி பின்னணி உள்ள குடுமபத்திலிருந்து வந்தவர். கோவையில் படித்து வளர்ந்தவர். இன்று மை பேமிலி பிஸ் எனற 54 வகையான  இன்ஸ் டெண்ட்  உணவுப்பொருளை தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர். கடந்த ஆண்டின் மொத்த வியாபாரம். 12 கோடிக்கும்மேல்.   மெக்கானிகல் எனஜினியர் எப்படி உணவு பொருள் தயாரிப்புக்கு வந்தார்கணவரின் பணிகளில் உதவ ஆரம்பித்தில அறிந்துகொண்ட விஷங்கள் தான் என்கிறார். கணவர் சேஷாத்திரி ரங்கநாத் ஒரு பிரபல நிறுவனத்தின் மார்கெடிங் மேனேஜர். அவர் நிறுவனத்தில் முதல் முறையாக பிஸ்கட், ஜாம், ரெடிமேட் உணவுபொருள்களை தயாரிபாளார்களிடமிருந்து வாஙகி மார்க்கெட் செய்யும் முயற்சியை முன்நின்று நடத்தியவர் ரஙகநாத். நிருவனத்திற்கு மிகப்பெரிய வெற்றியான இந்த விஷயம்  ஏற்கனவே   “எதாவது சொந்தத்தொழில்”“ என்ற எண்ணததிலிருந்த லலிதாவை  மேலும் சிந்திக்க வைத்தது.  உணவு சம்பந்தபட்ட துறையின் வளமான எதிர்காலத்தை புரிந்துகொண்ட அவருக்கு இயல்பிலியே சமையலில் ஆர்வமிருந்திருந்தால் அந்த பொருட்கள் தயாரிப்பை தேர்ந்தெடுத்தார். 1999ல்  பங்களூர் ராஜாஜி நகரில் ஒரு 10X 10 அறையில் 55000ரூபாய் மூலதனத்தில் (அதில் 20000 கடன்) துவங்கியது லிலிதாவின் கம்பெனி. முதலில் பெரிய அளவில் தயாரித்தது ஊட்டசத்து பௌடர். குழந்தைகளுக்கும், வயோதிகர்களுக்கும், சிகிச்சைக்குபின் நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கும் உதவும் அந்த பிராடக்டட் மிகபெரிய வெற்றியாயிற்று. இதுபோன்ற பொருட்களை உலக மார்கெட்டில் விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் பெருமளவில் வாங்கியதினால் ஏற்றுமதியும் அதிகரித்தது. வியாபாரம் அதிகமிருந்தாலும்,லாபம் குறைவாகவேயிருந்தது. காரணம் விற்பனை மற்றும் மார்கெட்டிங்க்கு ஆகும் செலவுகள். மேலும் உலகபொருளாதாரம் மந்தநிலையில் சிக்கியபோது ஏற்றுமதியும் நின்றது. மனம் தளராத லிலிதா தன் முயற்சிகளை  தொடர்ந்தார்.  உள் நாட்டு உணவுத்துறையில் ஐடிசி போன்ற இந்திய பெரிய நிறுவனங்கள் இறங்கியிருந்த நேரம் அது. அவர்களுக்கு தயாரிப்பில் யோசனைகள் கொடுத்தோடு தயாரித்தும் கொடுத்தார்.  சனபீஸ்ட், பாஸ்டாடீரிட் ஆஸிர்வாத் போன்ற பிமாதமாக விற்கும் பொருட்களை த்யாரித்து கொடுத்தவர்கள் இவரது கம்பெனிதான். விற்பனையும் வருமானமும் பெருகி வந்தது. சந்தித்த பலர் முன்வைத்த கேள்வி  “இதை ஏன் உங்கள் பிராண்டாகவே செய்யகூடாதுஇந்த கேள்வி லலிதாவை அடுத்த கட்டத்திற்கு இட்டுசென்றது. விளைவு கணவருடன் இணைந்த மை பேமிலி பிஸ் நிறுவனம் பிறந்தது.
மார்கெட்டிங் பிரச்னைகளையும், விற்பனை செலவுகளையும் பற்றி நன்கு அறிந்திருந்த  அவர் இந்த நிறுவனத்தின் ” “உடுப்பிருசி””’“ விற்பனையையில்  ஒரு புதிய மாடலை துணிவோடு அறிமுகபடுத்தினார். முதலில் தன் நிறுவனம் பெண்களால்-பெண்களுக்காக நடத்தபடுவது எனபதை அறிவித்தார்.. இதன் விற்பனை பெண்களுக்கும் மட்டுமே. பார்கெட்டிங்பிரதிநிதி, கிடையாது.கடைகளில், சூப்பர்மார்கெட்டில் கிடைக்காது. உறுப்பினர்களுக்கு மட்டுமே விற்பனை. ஆனால் பெண்கள் மட்டுமே உறுப்பினராக முடியும்.   இப்படியெல்லாம் கண்டிஷன்கள் போட்டு  பொருட்களை அதுவும் பெண்களிடம் விற்கமுடியுமா?   முடியும் எனறு சாதித்திருக்கிறார் இவர். இதை எப்படி செய்கிறார்.? உறுப்பினாராகிறவர்கள் 600 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.  அதற்கு அவர்களுக்கு 750 மதிபபுள்ள ஒரு பாக்கெட் அனுப்பபடும்.   அதில் தினசரி சமயலுக்கு தேவையான சாம்பார் பொடி, ரசப்பொடி, புளியோதரைமிக்ஸ்,பஜ்ஜி தோசைமிக்ஸ் மில்க்ஷேக்பவுடர்  என எல்லாம் இருக்கும்,. பயன்படுத்தி பார்த்து நன்றாகயிருந்தால் நண்பர்களுக்கு சிபாரிசு செய்யலாம். அப்படி செய்யும்போது அவர்களுக்கு அந்த பாக்கெட்டிலிருக்கும் புதிய உறுப்பினராகும் விண்ணப்படிவத்தில் தங்கள் உறுப்பினர் நமபரையிட்டு ஸ்பான்ஸர் என குறிப்பிட்டு கொடுக்கவேண்டும். அந்த புதிய உறுப்பினர் வாங்கும் பாக்கெட்டிலும் இதுபோல ஒரு படிவம் இருக்கும். இதை கஸ்டம்ர்2கஸ்டமர் முறை என சொல்லுகிறார். அறிமுகபடுத்தபட்டவர் வாங்கும் பொருட்களுக்கு ஸ்பான்சருக்கு கமிஷன் தரப்படுகிறது.  அறிமுகபடுத்தபட்டவர் மற்றொரு புதிய உறுப்பினரை அறிமுகபடுத்தும் போதும், அவர் பொருட்கள் வாங்கும்போதும் ஸ்பான்ஸருக்கு ஒரு சிறிய கமிஷன் தொடர்ந்து கிடைத்துகொண்டேயிருக்கும். ” “நாங்கள செய்வது மல்டி லெவல் மார்கெட்டிங்கோ, அல்லது ஆன்லைன் மார்கெட்டிங் பிஸினஸோ இல்லை. இதில் தொடர்ந்து வீடுகளுக்கு போய் விற்க வேண்டிய கட்யாமோஅல்லது கமிஷனுக்கான  விற்பனை டார்கெட் போன்ற பிரச்சனையான விஷயஙகளோ இல்லை””“என்பதை தெளிவாக சொல்லுகிறார் லிலிதா. சமைத்து, சாப்பிட்டு பார்த்து பிடித்திருந்தால் மட்டுமே அடுத்தவருக்கு சொன்னால் போதும். வரவேற்பு எப்படியிருக்குகிறது.? சூப்பர் என்கிறார்.  திட்டத்தை அறிவித்த அன்று மாலையில்  ஒரு புதிய பராடெக்ட் பாக்கெட்களை கோவில் சன்னதியில் வைத்து பூஜித்து வீடு திரும்பிய  எனக்கு காத்திருந்த ஆச்சரியம்  என் வீட்டின் பணிப்பெண் 10 உறுப்பினர்களின் விண்ணப்பங்களுடன் காத்திருந்தது. அதிகம் படிக்காத அந்தபெண் இபோது நான அவருக்கு தரும் சம்பளத்தைவிட பல மடங்கு இதில் சம்பாதிக்கிறார்.   2010 ஆகஸ்ட்டில் துவக்கிய இந்த திட்டத்தில் இது வரை உறுப்பினாராகியிப்பவர்கள் 14 ஆயிரத்துக்கும் மேல். தமிழ்நாட்டில் மட்டும் 7000 பேர் எனகிறார்.எங்கள் பொருட்களின் தரத்தால் தினமும் பலபுது உறுப்பினார்கள் சேருகிறார்கள். இதில்  புதியவர்களின் முகவரிகளையோ அல்லது தேவையான ஆர்டர்களை  ஸ்எம்ஸ் அல்லது ஈமெயில் மூலம் அனுப்புவது மட்டும் தான் உறுப்பினர்களுக்கு வேலை.  பொருட்கள் நேரடியாக ஸ்டாக்பாயிண்ட்லிருந்து  வந்துசேரும்.  ஒரு சிறிய அறையும் கம்யூட்டரும் இருந்தால் ஸ்டாக்பாயிண்ட் துவக்கலாம்.  ஆனால்  இதுவும் பெண்களுக்கு மட்டுமே. இம்மாதிரி இருக்கும் பல ஸ்டாக்பாயிண்ட்களின் கம்யூட்டர்கள் பங்களுரின்தலமைஅவலகத்துடன் இணைக்கபட்டிருக்கிறது. உறுப்பினர்களின் ஆர்டர்கள் கிடைத்தவுடன்  அது  ஆன்லயனில்  ஸ்டாக்பாயிண்ட்க்கு தெரிவிக்கபட்டு.   உடனே  அவர்களின் வீடுகளுக்கு பொருட்கள் நேரிடையாக அனுப்பபடுகிறது.  ஸ்பான்ஸ்ர்களின் . கமிஷன் தொகை  இண்டர்னெட் மூலம் வங்கி கணக்கில்சேருகி
றது.  ஆர்கல் தயாரித்திருக்கும் இந்த மென்பொருளால். நேரம்
,மிச்சமாகிறது. அவசியமான பொருட்கள் மட்டும் தயாரிக்கபடுவதால் உற்பத்திச்செலவு கட்டுபாட்டிலிருக்கிறது.
1999லிருந்து ஆண்டு தோறும் திருப்பதிக்கு கணவருடன் பஙகளூரிலிருந்து 284 கீமீ நடைப்பயணமாக சென்று பிராத்தனை செய்து திரும்பும் இவர் கடந்த சில ஆண்டுகளாக அதை ஒரு சமூக பொறுப்புடன் செய்கிறார். தனது  “வாக்தானுக்கு“ 10 கீலோமீட்டருக்கு  ஒரு கட்டணத்தை நிர்ணயத்து அதை  ஸ்பான்ஸ்ர்களிடமிருந்து பெற்று  சிறு கிராமங்களில் பள்ளிக்கூடங்களுக்கு உள்ளூர் சமுக நிறுவனங்களின் உதவியுடன் அடிப்படை வசதிகளைப்பெறுக்க  உதவுகிறார். தயாரிப்பின் தரத்திற்கு உலக தரச்சான்றிதழ், நவீன சோதனைச்சாலை எல்லாமிருந்தாலும் தயாரிப்புகளை தினசரி   தன் வீட்டு சமையலில் பயன்படுத்தி பார்க்கும் இவர் வீட்டில் சமையலுக்கு பணியாள் இலை. தினசரி  வீட்டிலிருக்கும் 85 வயது மாமியாருக்கு தேவையானவற்றை தயார்  செய்து விட்டு கல்லூரிக்கு மகனை அனுப்பிவிட்டு தானே தயாரித்த  மதிய உணவுடன் தினசரி அலுவலகம் வரும் இந்த தொழில அதிபரின் லட்சியம் அடுத்த சிலஆண்டுகளில் லட்சம் உறுப்பினர்கள். 

2/10/11

பேரீச்சையிலிருந்து எழுந்த சிங்கம்..


லைப் பூஸ்டர் 9             

 பொன்னுதுரை


பலகாலமாக பழையபொருட்களுக்கு மாற்றாக தரப்படுவதாக மட்டுமே அறியபட்டிருந்த பேரீச்சம் பழத்தை உடல் ஆரோக்கியத்தையும் வலிவையும் பெருக்கும் ஒரு விஷயமாக்கிய பெருமை லயன் டேட்சையே சாரும்.இன்று ஆண்டுக்கு 5000 டன்னுக்கு மேல் பேரீச்சைபழம்களை இறக்குமதி செய்து பக்குவபடுத்தி விற்பனை செய்யும் இந்த நிறுவனம் பிறந்தது ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இளைஞனின  சொந்த தொழில்துவங்க வேண்டும் என்ற  தணியாத ஆசையினால். 1970களில் இலங்கயிலிருந்து  இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த பல குடுமப்ங்களில் இவருடையதும் ஒன்று. இலங்கயில் 10 வயதிலிருந்து கடைகளில் வேலைசெய்துகொண்டே பள்ளிபடிப்பை  தொடர்ந்த பொன்னுத்துரை இந்தியா வந்தபின்னரும் அதையே  தொடர்ந்து  திருச்சியில் 80ரூபாய் சம்பளத்தில் 18 வ்யது வரை செய்து வந்தார். . துளிர் விட்டிருந்த சொந்ததொழில் ஆசையும் வளர்ந்தது இந்த காலகட்டதில்தான்நண்பர் ஒருவரின் உதவியால் வங்கிக்கடன் 5000 பெற்று ஆரம்பித்தது ஒரு சின்ன மளிகை கடை. ஆர்வம் இருந்த அளவிற்கு அனுபவம் இல்லாதால் வியாபாரம் செய்யத்தெரியவில்லை. ஆறு மாதத்திலியே படு நஷடம் கடனும் அதிகமாயிற்று. என்றோ மனுச்செய்த அரசாங்க வேலையும், கடை ஆரம்பித்தபோது விண்ணப்பித்த சபீனா பௌடருக்கான எஜென்சியும் ஒன்றாக வந்தது.  ஏதை ஏற்பது என்று குழம்பியிருந்தவருக்கு சபீனாகாரர்கள் சொன்ன யோசனை இரண்டையும் ஏற்றுகொள்ளுங்கள் எனபதுதான். பகலில் ஆபிஸ் மாலையில் சபீனா வியாபரத்திற்காக கடைகளுக்கு போவது எனப்து வாழ்க்கையாயிற்று. கிடைத்த கமிஷன் பணத்திலும் சம்பளத்திலும்  வங்கி கடனை அடைத்த பின்னர். மீண்டும் சொந்த பிஸினஸ் எண்ணம் எழுந்திருந்தது.
தினசரி திருச்சி நகரின் பல கடைகளுக்கு போய்கொண்டிருந்தபோது கவனித்த ஒரு விஷயம் சில கடைகளில் பேரீச்சம்ப்ழத்தை திறந்த கூடைகளில், ஈ க்களுடன் சுகாதாரமற்ற நிலையில் வைத்திருந்ததையும் அதை மக்கள் வாங்குவதையும் தான். இதை பாக்செய்து வைக்ககூடாடாதா? என்ற இவரது கேள்விக்கு ஒரு கடைகாரரின் பதில் தான் இவரை இந்த தொழிலுக்கு அழைத்திருக்கிறது எனபது ஆச்சரியமான உண்மை.  “ நீயே பேக்செய்து கொண்டுவாயேன் “ என்பது தான் அந்த பதில்.  அன்றே அதைப்பற்றி யோசித்து மறுநாளே தனது கீளினிங்பௌடருடன் இதையும் கடைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தவருக்கு அதற்கு கிடைத்த வரவேற்பு பிரம்பிப்பை தந்தது. தனியளாக இரவெல்லாம் பேக்கிங் செய்து காலை மாலை நேரங்களில் கடைகளில் விற்று வந்தார். சுத்தமான தரமான பழங்களை கொடுத்ததால் ஆர்டர்கள் அதிகமாயிற்று. ஒரு நாள் 500 பாகெட் வரை போக ஆரம்பித்தவுடன் இதுதான் நமது சொந்த தொழில் என தீர்மானித்ததும் செய்த முதல் வேலை அரசாங்க வேலையை ராஜினாமா செய்ததுதான். தினசரி சப்ளை செய்து பணம் வாங்குவது மட்டுமில்லாமல் வாடிக்கையாளார்களின் விர்ப்னையாளர்களின் கருத்துக்கு கேட்டு அதற்கு மதிப்பளிதிருக்கிறார். அப்படி செய்த  ஒரு விஷயமதான் இன்றும், இவராலும் மற்ற நிறுவனங்களாலும்  பின்பற்றபடுகிறது. அது பேரிச்சம்பழத்தை அதன் கொட்டைகள் நீக்கி விற்பது.
 தினசரி பல கடைகளுக்கு கொடுத்துவந்த பேரீச்சம்பழத்திற்கு ஒரு தனி[பெயர் இருந்தால் மக்கள் கேட்டு வாங்கவார்கள் என்று நண்பர் சொன்ன ஒரு யோசனையினால் ஒருநாள் இரவு பிறந்த பெயர்  “லயன் “. சிங்கதிற்கும் பேரீச்சைக்கும் என்ன சமபந்தம்.- பேட்டண்ட், ரிஜிஸ்டிரேஷன் பற்றியெல்லாம் தெரியாது. சிங்கம் மாதிரி இந்த தொழிலில் நம் சரக்கு ராஜாவாகயிருக்க வேண்டும்,. எல்லோருக்கு எளிதாக புரியக்கூடியபெயராக இருக்க வேண்டும் எனபதுதான் எண்ணமாகயிருந்தது.  டிசைன் செய்த கலர் சிங்க படத்துடன் சிவகாசியில் லேபில் தயாரிக்க வேண்டுமனால் ஆயிரகணக்கில் ஆர்டர் தரவேண்டும், நிறைய செலவாகும் அன்றைய சூழலில் அது முடியாத காரியமாக் இருந்தததால்  உள்ளூர் அச்சகத்தில் தயாராக இருந்த தேர்தல் சின்னங்களில் ஒன்றாக இருந்த சிங்க பட பிளாக்கையையே பயன் படுத்தி லேபில்களை அச்சிட்டேன்  என்று சொல்லும் இவரது நிறுவனம் இன்று விளமபரபட்ஜெட்க்காக பல கோடிகளை ஒதுக்கியிருக்கிறது
 சில ஆண்டுகளிலியே உள்ளூரில் கொள்முதல் செய்யும் நிலையிலிருந்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு உயர்ந்தவர் ஓமன் துனிஷியா போன்ற நாடுகளிலிருந்த்து நேரடியாக கண்டெயினர்களில் இறக்குமதி செய்து அதை தரம் பிரித்து சுத்தப்படுத்தி பேக் செய்ய தொழிற்சலைகளை நிறுவியிருக்கிறார்.  இவர் பலமுறை மும்பாய்க்கும் பல நகரங்களுக்கும் செல்ல நேர்ந்த போது உணர்ந்த விஷயம் வியாபாரத்தை பெருக்க தேவையானதில் முக்கியமானது ஆங்கிலம் எனபதைத்தான்.  அதற்காக 1990ல் பல மாதங்கள் டியூஷன் வைத்து கற்றுகொண்டேன்  என தயங்காமல் சொல்லும் இவரது பிஸினஸ் அணுகுமுறைகள் மிக யதார்த்தமாகயிருக்கிறது.
 “நீங்கள் ஒரு புதிய பொருளை அறிமுகபடுத்தி அதில் உங்களுடையதை பிராண்டாக ஆக்கவேண்டுமானால் முதலில் வாங்குவோருக்கு அந்த பொருளைப் பற்றி புரிய வைக்க வேண்டும். இதற்கு சற்று காலம் பிடிக்கும் ஆனால் இது அவசியம்” “ எனகிறார். பிலிப்ஸ் கோட்ல்ர் என்ற அமெரிக்க மார்கெட்டிங் குரு.  இதைப்பற்றியெல்லாம் அதிகம் அறிந்திருக்காத பொன்னுதுரை ஆரமபகாலத்தில்  இதை தனது பிராடக்டெக்காக அனாசியமாக செய்திருப்பது வியப்பாகயிருக்கிறது. இன்று அதிக அளவில் விற்பனையாவதற்கு காரணம் பேரீச்சை உடல் நலத்திற்கு உகந்தது எனபது  இவர்களால் கன்ஸ்யூமருக்கு புரிய வைக்கபட்டிருப்பது தான். இன்று உலக பேரீச்சையின் 5% இறக்குமதியை நம்து நாடு செய்கிறது. உள்ளூர் மார்கெட்டின் விற்பனை  இன்னும் உயர நல்ல வாய்ப்பு இருக்கிறது நாங்கள் இன்னும் நாட்டின் பல மாநிலங்களில் முழுவதுமாக பரவவில்லை என்று சொல்லுகிறார்.
பேரீச்சை பழஙகளை இவர்களுக்கு மஸ்கட்டிலிருந்து விற்பனை செய்துகொண்டிருந்த உலக புகழபெற்ற நிருவனம் பேரிச்சையிலிருந்து சிரப் த்யாரித்து கொண்டிருந்தது. அதை ஏற்றுமதி செய்யும் முயற்சிகளிலிருந்த அந்த அரசு நிருவனம் இவரை அழைத்து இந்தியாவில் அறிமுகபடுத்தமுடியுமா எனகேட்டார்கள்.   அவர்கள் ஆலோசனையின் பேரில் அதை இந்தியாவில் அறிமுக படுத்த துணிந்தது இவர்கள் வளர்ச்சியின் அடுத்த கட்டம். அந்த சிரப்பை நமது உணவுமுறைகளுடன் ஆரோக்கிய சம்பந்தமான விஷயமாக விளம்பரபடுத்தும் முன் நிறைய ஆராய்ச்சி செய்து பார்த்திருகிறார்கள். இறுதியாக கண்டுபிடித்த விஷயங்கள்  அதை இளம்சூடான பாலில் கலந்து சாப்பிடுவது மிக நல்லது. சில விஷயங்களில் சர்க்கரைக்கு மாற்றாக பயன் படுத்தலாம். எனபது.  மார்கெட்டில் பெறும் வரவேற்பை பெற்றிருந்த இந்த  சிரப். சில ஆண்டுகளுக்குபின் சந்தித்த பிரச்சனை சற்று வினோதமானது. மஸ்கட்டில் இதை த்யாரித்துகொண்டிருந்த ஆலை மூடப்படுவிட்டது.  இங்கு கஷ்ட்டபட்டு உருவாக்கிய பெருகிவரும் மார்க்கெட்  ஆனால் மூலப்பொருள் இறக்குமதி செய்ய முடியாது என்ற நிலை. உருவானது. அபோது பொன்னுத்துரை எடுத்த முடிவு அவரது துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. ஒரு சிரப் தயாரிக்கும் ஆலையை திருச்சிக்கு அருகில் நிறுவி அதை நிர்வகிக்க ஓமானிலிருந்து நபர்களை வேலைக்கு அமர்த்தியது இன்று அந்த தயாரிப்பை  உள் நாட்டில் விற்பதுமட்டுமிலாமல் மலேசியாவிற்கும் சிங்கபூருக்கும் ஏற்றுமதிசெய்கிறார்கள்.
சிரப்பை தொடர்ந்து தேனை விற்பனைக்கு அறிமுகபடுத்திய இவர்கள் அதில் தங்களின் தனி தரத்தால் தேன் விற்பனையில் நாட்டின முதலிடத்தை  விரைவில் அடைந்துவிடுவோம் எனபதில் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். திருச்சிக்கு அருகில் கிராமங்களில் அமைந்திருக்கும் இவர்கள் தொழிற்சாலைகளில் வேலையில் மகளீருக்கு முன்னுரிமை. ஒரு தொழிற்சாலையில்  அதிக அளவில் பணியிலிருப்பவர்களின் எண்ணிக்கை 50 வயதுக்குமேல். விரும்பி ஏற்ற தொழிலில் வாடிக்கையாளார்கள் தேவைகளை கூர்ந்து கவனித்தால் வெற்றி நிச்சியம் என்று சொல்லும்  இவரது இன்றைய கனவு இந்தியாவில் அத்தனை மாநிலத்தவரும் இவ்ர்களின் தயாரிப்புகளை அறிந்திருக்க வேண்டும்.