24/7/12

2012 ஓலிம்பிக்ஸில் பங்கேற்கும் ஒரு சினிமா

 

இங்கிலாநில் 150 திரையரங்குகளில்   திரையிடபட்டிருக்கும்  ஒரு படத்திற்கான இரண்டு மாதத்திற்கான காட்சிகள் ஹவுஸ்புல். படம்  எந்த புதிய ஹாலிவுட் படமுமில்லை. ஒரு 31 வருட பழைய படம்  நம் கர்ணனைப் போல  டிஜிட்டல் டெக்னாலஜியில் புதுபிக்கபட்டிருக்கும். ஒரு படம். தொழில் நுணுக்கத்துடன் தயாரிக்கபட்டிருக்கும் படத்தின் பூளுரே டிவிடியும் விற்று தள்ளி கொண்டிருக்கிறது.

படத்தின் பெயர்  சாரிய்ட்ஸ் ஆப் பைர். (Chariots of Fire)      இந்த சாதனைகளுக்கு காரணம் படத்தின் கதை. 1924ல் நடந்த ஓலிபிக்கின் ஓட்டபந்தயங்களில்  பங்கேற்ற இரண்டு வீரர்களின் கதை.7  ஆஸ்கார்களுக்கு பரிந்துரைக்கபட்டு 4 அவார்ட்களைப் பெற்ற படம். இன்றைக்கும் பிரிட்டனின் முக்கிய முதல் 100 சினிமாக்களின்  பட்டியலில் இருக்கும் இந்த படத்தின்  டைட்டலில் ஒலித்த பின்னணி இசைதான்., இசையும்  விளமப்ரங்களில் பயன்படுத்தபடுவதால் தயாரிப்பாளார்களுக்கு பண்ம கொட்டுகிறது. முதல் முறையாக விளையாட்டுவிர்ரகள் அல்லாத ஓலிம்பிக் பங்கேற்பாளாராக ஒரு சினிமா, அறிவிக்கபட்டிருக்கிறது.

 இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் லண்டன் ஒலிபிக் 2012ன் அறிமுக  இசையாக் அறிவிக்கபட்டது.  படத்தின் பல காட்சிகளும்

 1981ல் வெளியான் இந்த படம் 
1919ல் கேம்ப்ரிட்ஜ் பலகலைகழகத்தில் சேரும்  ஹெரால்ட் ஆபிரஹாம்ஸ் (Harold Abrahams)  எனற மாணவனுக்கு  அவன் சார்ந்த இனத்தால் அங்கு உரிய மதிப்பு அளிக்கப்படவிலை. தன்னை நிலை நிறுத்திகொள்ள தனக்கு நன்கு தெரிந்த விளயாட்டான ஓட்டத்தில் பங்குகொள்ள துவங்குகிறான். முதல் முறையாக கேம்பிரிட்ஜ் பல்கலை வளாகத்தின் சுற்றுபுற சுவரை மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் 12 மணி அடித்து ஒய்வதற்குள் ஒடிக் கடந்து சாதனையை செய்கிறான். இதனால் மேலும் பல ஓட்டங்களில் பங்கேற்று வெற்றிபெரும் வாய்ப்புகிட்டுகிறது.
 ஸ்காட்டிஷ் .சர்ச்சின் கட்டுபாடுகளை பெரிதும் மதிக்கும் ஒரு மத போதகரின் குடுமபத்தில் பிறந்து பாதியாராக பயிற்சி பெற்றுகொண்டிருக்கும். “கட்வுளின் மேனமியை சொல்லுவதற்காக்  ஓட்ட பந்தையங்களில்   ஓடிக்கொண்டிண்டிருக்கும்  ஒரு இளைஞன் எரிக் லிட்டெல் (Eric Liddell) . ஒரு தேசிய அளவினால் போட்டியில் ஆபிரஹாம்ஸ் எரிக்கிடம் தோற்க நேரிடுகிற ஹெரால்ட் ஆப்ரஹாம்ஸ்  (Harold Abrahams) இதனால் மனமுடைந்து சோர்ந்திருந்த ஆப்ரஹாமுக்கு ஏதிர்பாராத விதமாக் ஒரு கோச்சின் உதவி கிடைக்கிறது கல்லூரி நிர்வாக்ம் அதனை ஆதரிக்கவிட்டலும் துணிந்து பயிற்சியில் ஈடுபடும் ஆபிரஹாம்ஸுக்கு அவர் சொல்லிகொடுக்கும் டெக்னிக்களினால் 1924  ஓலிம்பிக்கில் நாட்டிற்ககாக் பங்கேற்ற்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. உடன் ஒட தேர்ந்த்டுக்க்பட்டிருக்கும் ஓட்டகாரர்  தன்னை முதலில் தோற்கடித்த வீரர் எரிக் லிட்டெல் (Eric Liddell).. பாரிசில் ந்டைபெற்ற அந்த ஒலிம்பிக்ஸில் 100மீட்டர் ஓட்டபந்தையம் அட்டவணையிடபட்டிருப்பது ஒரு ஞாயிற்று கிழமை எனபதால் ஒரு உண்மையான கிருத்துவராகையால் மத கொள்கைகளின் படி ஞாயிறு எதையும் செய்ய கூடாதாகையால் பங்கேற்க ம்றுத்துவிடுகிறார் ஏரிக்.  ஒலிம்பிக் கமிட்டி தலைவர் மன்னர் பிலிப்ஸ் வேண்டியும் மறுப்பதால் அது உலக தலிப்பு செய்தியாகிறது . செய்தியாகிவிடுகிறது.  அவ்ருக்கு பதில் மற்றொரு ஓட்டகாரர் பங்கேற்பதால் ஏரிக் அவர் ஓட வேண்டிய 400மீட்டர் பந்தயங்களில்  அதற்காக தயாரித்து கொளாத நிலையிலும் பந்தயத்தில் ஓடி தங்க மெடல் பெறுகிறார்.
 இந்த குழப்பங்களினால் ஆப்ரஹாமும் தான் பயிற்சி பெறாத இன்னொரு ஓட்டத்தில் பங்கு கொண்டு தங்க மெடல் பெறுகிறார். தீவிரமான மதநம்பிக்கை கொண்ட  ஒரு ஓட்டவீரன், திறமையினால்  கிடைத்த வாய்ப்பை  நழுவவிடாமில் சாதித்த மற்றொருவிரன் என்ற இரண்டு ஒலிம்பிக் போட்டியாளார்களின் பின்னணீயிலிருக்கும் இந்த இந்த சாதாரண கதையை  விறுவிறுப்பான திரைக்கதையினாலும் இசையினாலும் பார்ப்பவர் அசந்துபோகும் அளவிற்கு படமாக்கி வெற்றிகண்டவர் பல வெற்ரி படங்கலை இயக்கிய ஹட்ஸ்ன் (Hugh Hudson) . ஓலிம்பிக்போட்டிகளின் பயிற்சிகள்,  காட்சிகளுக்கான களங்கள்,  சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக நாட்டிற்கு விளையாட மறுப்பது ( ஒலிப்பிக்கில் அப்போதே இந்தமாதிரி  பிரச்சனைகள் இருந்திருக்கிறது) போன்ற புதிய விஷயங்கள் இருந்ததும்  படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம்.
வசூல் ரிகார்ட், அவார்ட்கள் போன்றவைகளை யெல்லாம் தாண்டி காலம் முழுவதும் வாழும் பெருமையை பெற்ற சினிமாக்கள் சில மட்டுமே.  சாரியட் அப் பயர்(Chariots of Fire)  அவைகளில் ஒன்று. இரண்டு ஒலிபிக்க் ஓட்டகாரகளின்ன கதையை சொல்லும் இந்த படத்தை 2012 ஒலிபிக் கமிட்டி கெளரவிருப்பது தான் அதைவிட மிகப் பெரிய  பெருமை.

2 கருத்துகள் :

உங்கள் கருத்துக்கள்