அதற்கு விலையேதுமில்லைஆனால் அது தான் மிக மதிப்பானது
அதை தருபவர்களுக்கு நஷ்டம் எதுமில்லை
பெருபவர்களுக்கு லாபம்
அது வினாடிகளில் விரியும் ஆனால் வாழ்நாள்முழுவதும்
வாழும்
அது இல்லாமல் செல்வத்தின் செருக்கோ, ஏழையின் சந்தோஷமோ இல்லை
அது இல்லத்தில், சந்தோஷத்தை நிரப்புகிறது நட்பை உறுதிசெய்கிறது
அது வெற்றிபெற்றவனுக்கு மகிழ்ச்சியாகவும் வருந்துபவனுக்கு
புத்தொளியாகவும், தெரிகிறது.
அதை விலைக்கு வாங்க, கடனாக பெற திருட,
பிச்சையாக எடுக்க கூட முடியாது.
அது ஆயிரங்கதைகள் சொல்லும். அளவற்ற மகிழ்ச்சியை தரும்.
அது மதிப்பில்லாது -ஒருவருக்கு அளிக்கபடும்வரை
அது தான் மனிதனால் மட்டுமே செய்யகூடிய
புன்னகை
ஆனாலும் சிலர் அதை கொடுக்க தயங்குகிறார்கள்.
இன்று அவர்களுக்கு உங்களுடையதை ஒன்று கொடுங்கள்
ஏனெனில் கொடுப்பதற்கு இல்லாத அவருக்கு அது அவசியம்.
இன்று நீங்கள் இன்று கொடுக்கும் அந்த புன்னகை
ஆண்டு முழுவதும் அனைவருக்கும் பரவட்டும்.
அதற்கு இனிய புன்னகைகளுடன் எங்களது
இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
ரமணன் & மீரா