மாண்புமிகு தலமை நீதிபதிஅவர்களுக்கு,
வரும் மார்ச் 8ம் தேதி நான் பதவியிலிருந்து
ஓய்வு பெறுகிறேன்., சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள்
ஓய்வுபெற்றால் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது வழக்கம். அந்த நாளில் அரசு
தலைமை வழக்குரைஞர் பிரிவு உபசார நாள் வாழ்த்துரை நிகழ்த்துவதும், அதற்கு ஓய்வு பெறும் நீதிபதி ஏற்புரை நிகழ்த்துவதும், தேநீர் விருந்து கொடுப்பதும், குழுவாகப்
புகைப்படம் எடுப்பதும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலோ
அல்லது வேறு ஏதேனும் இடத்திலோ விருந்து ஏற்பாடு செய்வதும் தொடர்ந்து நடைபெற்று
வருகிறது
வெறும் சடங்காக நடத்தப்படும் இந்த நிகழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். எனவே மார்ச் 8-ஆம் தேதி நான் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில் எனக்காக அதுபோன்ற பணி ஓய்வு பாராட்டு விழா எதுவும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் இந்த நீதிமன்றத்தில் கழித்த மற்ற நாள்களைப் போலவே மார்ச் 8-ஆம் தேதியும் ஒரு சாதாரண நாளாகவே இருந்து விட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்
வெறும் சடங்காக நடத்தப்படும் இந்த நிகழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். எனவே மார்ச் 8-ஆம் தேதி நான் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளில் எனக்காக அதுபோன்ற பணி ஓய்வு பாராட்டு விழா எதுவும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் இந்த நீதிமன்றத்தில் கழித்த மற்ற நாள்களைப் போலவே மார்ச் 8-ஆம் தேதியும் ஒரு சாதாரண நாளாகவே இருந்து விட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்
இந்த கடித்தை,
எழுதியிருப்பவர் தனக்கென ஏராளமான தனித்துவங்களைக் கொண்டிருக்கும் நீதிபதி கே.சந்துரு. நீண்ட பாரம்பரியம் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின்
சரித்திரத்தில் இம்மாதிரி ஒரு நீதிபதி கேட்டுகொண்டது 84 வருடங்களுக்கு முன். 1929-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற எம்.ஜி.எச்.ஜாக்சன் என்ற ஆங்கிலேய நீதிபதி,
"எனது கடமையை நான் செய்தேன், எனக்கு
ஏன் பாராட்டு" என்று சொன்னார். அதையேதான் இன்று நீதிபதி சந்துருவும் சொல்லியிருக்கிறார்.
பல வகைகளில் உயர் நீதிமன்ற சம்பிராதயங்களையும், ஆடம்பர
மரபுகளையும் உடைத்தெரிந்தவர் இவர்.
தான் கோர்ட்டுக்குள் நுழையும்போதும் வெளியேவரும்போதும முன்னால் வெள்ளிதடியேந்தி டவாலி அணிந்த ஊழியர் வருவதை
ஆடம்பரம் என நிறுத்தியவர். தனது பாதுகாப்புக்காக ஒதுக்கபட்டிருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மட்டுமில்லை ஒரு கான்ஸ்டபிள் கூட
வேண்டாம் என மறுத்தவர். தனது கோர்ட்களில் தன்னை மை லார்ட் என அழைக்க்படவேண்டியதில்லை சார் என சொன்னால் போதும் என்பதை வழக்கறிஞர்களுக்கு
ஆணையாகவே சொன்னவர். ஒருமுறை வழக்கறிஞர் நீதியரசர் என்று அழைத்தபோது அந்த வார்த்தை தனிநபர்
துதி அதை பயன்படுத்தாதீர்கள் என்றார்.
கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 96 ஆயிரம் வழக்குகளை விசாரித்து
முடித்து வைத்துள்ளவர் இந்த நீதிபதி.
இந்த சாதனை இதுவரை எந்த இந்திய கோர்ட்களிலும் நிகழந்ததில்லை. ஒரே நாளில் 75
கேஸ்களில் தீர்ப்பு அளித்தவர் இவர். சராசரியாக மாதத்திற்கு 1500 தீர்ப்புகள் வழங்கியிருக்கிறார்.
இவ்வளவு தீர்ப்புகளுக்கு பின்னே இருக்கும் கடுமையான உழைப்பை கோர்ட் நடவடிக்கைகளை அறிந்தவர்கள்தான்
புரிந்துகொள்ள முடியும். இந்திய நீதி வரலாற்றில்
இடம் பெறும் படியான மிகமுக்கியதீர்ப்புகளை வழங்கிய இவரது தீர்ப்புகள் மிக கூர்மையாக,
தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் இருக்கும்
”நூறு மலர்கள் பூக்கட்டும்!
ஆயிரம் எண்ணங்கள் உதிக்கட்டும்! பெரியாரின் கொள்கைகள் ஒரு கட்டுக்குள் இருக்காமல்
திசையெட்டும் பரவட்டும்” என்பது இரண்டு திராவிடகழக பிரிவுகள் பெரியாரின்
எழுத்துகளுக்கு உரிமை கொண்டாடிய வழக்கில் சொன்ன தீர்ப்பிலிருக்கும் வாசகங்கள்:. தமிழருவி மணியனை
வீட்டுவசதி வாரிய குடியிருப்பிலிருந்து வெளியேற்ற அரசு தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பு இது “கொள்கை ரீதியான மாறுபாடுகள் இருந்தாலும் மனுதாரரைப்போன்ற
தமிழ் எழுத்தாளர்கள்,தமிழ்
அறிஞர்கள்,தமிழ்
சிந்தனையாளர்களை கவுரவப்படுத்த
வேண்டும்.தமிழ் சிந்தனையாளர்களை பாதுகாப்பதன் மூலமே தமிழ்
வாழும்.அப்போது தான், நியான்
விளக்குபொருத்தப்பட்ட போர்டில் உள்ள,“தமிழ்வாழ்க’ என்கிற
வாசகம் மேலும்
மிளிரும்”
கல்லூரியில்
படிக்கும் காலத்திலேயே தொழிளார் பிரச்சனைக்கு குரல் கொடுத்தற்காக கல்லூரியிலிருந்து
இடைநீக்கம் செய்யபட்டவர் இவர் கம்யூனிஸ சித்தாங்களால் ஈர்க்க பட்டதால் சட்டம்
படித்தபின் எவரும் அணுக்கூடிய, சமூக, தொழிற்சங்கபிரச்னைகளுக்கு முன்னுரிமை
கொடுத்து வழக்காடி பணியாற்றி
கொண்டிருந்தார். சீனியர் வழக்கறிஞரான இவர் 7 ஆண்டுகளுக்கு முன் நேரிடையாக உயர்
நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பட்டவுடன் முதலில் செய்த காரியம் தன் சொத்துவிவரத்தை
தலமை நீதிபதியிடம் ஒரு சீலிட்ட கவரில் கொடுத்தது. எப்போதும் ஏதேனும் பணிகளில் ஆழ்ந்திருக்கும் இந்த நீதிபதியிடம்
பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்ட போது,
சுப்ரீம் கோர்ட்டில் பிராக்ட்டிஸோ தீர்ப்பாயங்களுக்கு நீதிபதியாவோ ஆகமாட்டேன்
சட்ட ஆலோசனை மையம் நடத்துவது, சட்ட நூல்களை பதிப்பிப்பது மற்றும் மக்கள் நலன் சார்ந்த மிக முக்கிய பிரச்னைகளில் தலையிடுவது என நிறைய திட்டம் உள்ளது என்கிறார் .
சட்ட ஆலோசனை மையம் நடத்துவது, சட்ட நூல்களை பதிப்பிப்பது மற்றும் மக்கள் நலன் சார்ந்த மிக முக்கிய பிரச்னைகளில் தலையிடுவது என நிறைய திட்டம் உள்ளது என்கிறார் .
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் சொன்னது “சட்டத்திற்கும்
அப்பால் ஒரு, சமூக பார்வையுடன் வழக்குகளை பரீசிலித்து வேகமாக செயல்பட்ட ஒரு நீதிபதி
அவர், இந்தகோர்ட் இன்னொரு சந்துருவை பார்க்க இன்னும் எவ்வளவு நாளாகுமோ?