10/3/13

ரிவ்யூ ராஜா







இணயதளங்களிலும், வலைப்பூக்களிலும்  தமிழ் சினிமாகளுக்கு விமர்சனம் நிறைய வருகிறது. சில ஜெட் வேகத்தில் வருகிறது. காலை10 மணிக்கு வெளியான படத்திற்கு 1 மணிக்கே விமர்சனம் வெளியாகிறது. (தியட்டரிலேயே எழுதிவிடுவார்களோ?) இப்போது அடுத்தகட்டமாக  விமர்சனங்கள் யூ ட்டுயூபில் படங்களாக வருகிறது, விமர்சகர் படத்தை விமர்சிப்பது விடியோபடமாக்க பட்டு யூ ட்யூபில் வெளியிடபடுகிறது. இதில் இப்போது மிக பாப்புலாராக இருப்பது “ரிவ்யூ ராஜா”. டைட்டில் கார்ட் போடும்போது படத்தின் தீம் மியூசிக்கின்,பின்னணியில் படத்தின் ஹைலைட் காட்சிகளைபோலவே நைண்டியாக ரிவ்யூ ரஜா நடிக்கும் காட்சிகள் என விமர்சனபடம் தொடங்குகிறது

. –(விஸ்வரூபத்தின் விமர்சனம் துவங்கும்முன் கமலைப்போல கதக் நடனம்-துப்பாகி சண்டை) இந்த பாணியில் வாரம் தோறும் ஒரு தமிழ்பட விமர்சனம். விமர்சனம் ஆங்கிலத்தில் . செய்பவர் ஒரு கனடா நாட்டு இளைஞர். ஆம் தமிழ் படங்களுக்கு விமர்சனம் ஒரு வெளிநாட்டுகாரர் ஆங்கிலத்தில் வாரந்தோறும் செய்கிறார். பலர் பார்க்கிறார்கள். இதுவரை இவர் விமர்சன்ங்களை பார்த்தவர்கள் பதினெட்டு லட்சட்சத்திற்கும் மேல். கனடாவின் புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் நிர்வாகயியல் படித்து ஒரு மென்பொருள் நிருவனத்தில் பணிசெய்பவர்.
விமர்சனத்தில் கதை, கேமிரா, நடிப்பு, மியூசிக் என துறைவாரியாக மார்க் கொடுத்து இறுதியில்முழு படத்துக்கும எவ்வளவு என மார்க் கொடுக்கிறார். விஸ்வரூபத்திற்கு இவர் தந்திருப்பது  7.3 மார்க்குகள். சகுனிக்கு 3.05.
கனடாவிலிருக்கும் தமிழ் தெரியாத இந்த வெள்ளைகாரருக்கு எப்படி தமிழ் சினிமாவின் மீது விமர்சனம் செய்யும் அளவிற்கு காதல்? இவருடைய நல்ல  நண்பர் குஹன். குஹனின் பள்ளித்தோழர் அர்ஜுன் மனோ. கனடா பலகலைகழகத்தின் சினிமா ஸ்கூலில் படிப்பவர்.. ஹாலிவுட்டில் சாதிக்க துடிக்கும் இலங்கை தமிழர்.வார இறுதியில் குஹன் அவர் வீட்டிற்கு சென்று தங்குவது வழக்கம். கடந்த ஆண்டு ஒரு முறை ராஜாவையும்  அழைத்து சென்று தங்கியபோது டிவிடி யில் பார்த்த  ஒரு தமிழ் சினிமாதான் இவரை விமர்சகராகயிருக்கிறது. அது அஜித் நடித்த பில்லா 2. அதன் கம்பீரம், மியூசிக் போட்டோகிராபி எல்லாம் பார்த்து அசந்து போன இவர் “ஹீரோவின் ஒரே அடியில் வில்லன் அறையின் மூலைக்கு பறந்து போய் விழுவது போன்ற காட்சிகள் அமெரிக்க சமூக சினிமாக்களில் இல்லாத படங்களில் புதுமை எனறு வியந்து நிறைய படங்கள் ஆரம்பித்தார்.
அதுவரை அவருக்கு தமிழ் சினிமாவின் வீச்சு, ரசிகர்கள் பற்றி எதுவும் தெரியாது.  விளையாட்டாக ஒரு பட விமர்சனத்தை பதிவு செய்து யூட்யூபில் பதிவேற்ற அதற்கு கிடைத்த செம ரெஸ்பான்ஸ் இவரை தொடர்ந்து அதைச்செய்ய  வைக்கிறது. இன்று நண்பர்களுடன் ஒரு சின்ன ஸ்டூடியோ, ஓளி/ஒலிப்பதிவு வசதிகளுடன் அமைத்து விமர்சனங்களை வழங்கி கொண்டிருக்கிறார். நன்பர் அர்ஜூன் ஒளிபாதிவளார்.  படங்களுக்கு மியூசிக் சென்னையிலிருக்கும் உதய பாரதி. நண்பர் குஹன் எடிட்டர் மற்றும் தமிழ் சொற்களை சரியாக சொல்லிகொடுப்பவர்.  வட அமெரிக்காவிலும்,கனடாவிலும் உள்ளூர் ஆட்களுக்கு அதிகம் தெரியாத இவர் அங்கிருக்கும் தமிழர்களிடையே ஆட்டோகிராப் கேட்கும், சேர்ந்து படமெடுத்து கொள்ளுமளவிற்கு மிக பாப்புலர். தன்பெயர் அச்சடிடிருக்கும் மஞ்சள்  டி ஷர்ட்டையே எப்போதும் அணிகிறார்.
சிவாஜி 3 டி பட ரிலீஸின் போது ரஜினி ஸ்டையில் மாண்டிரியல் நகர வீதிகளில் இவர்  ஒரு கொரிய மொழி பாட்டிற்கு நடனமாடிக்கொண்டுபோன படம் யூட்யூபில் சூப்பர்ஹிட். 4 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.  நிறைய தமிழ் படங்கள் பார்த்தும், தமிழ் நண்பர்களுடன் பேசிபேசியும் மெல்ல தமிழ் கற்று கொள்ளும் இவர் சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். விஸ்வரூபம் படத்தின் முதல் காட்சி பார்த்து ரசிகர்களை தன் யூ ட்யூப் சானலுக்காக பேட்டியும் கண்டார். சந்தித்தவர்களில் இளைய தளபதியும் ஒருவர்.
ஆதிபகவன் படத்திற்காக கனடா வந்திருந்த அமீர் ஜெயம் ரவி டீமை வரவேற்று அவர்களை கனடா டிவியில் அறிமுகபடுத்தியிருக்கிறார் இன்னும் சில மாதங்களில் சென்னை வந்து இன்னும் நன்றாக தமிழ் கற்று கொண்டு தமிழ் சினிமாவில் நிறைய தொடர்புகளை ஏற்படுத்திகொண்டு தமிழ் சினிமாவில் பிசினஸ் செய்யபோவது  என் லட்சியம் . அமெரிக்காவிலும், கனடாவிலிருக்கும் தமிழ் ரசிகர்களையும் தாண்டி தமிழ் சினிமாக்களை உலக மார்க்கெட்டில் அறிமுகபடுத்துவேன் என்கிறார். தன்னை ராஜா என சொல்லிகொள்ளூம் இவர் உண்மைப்பெயர் என்ன?“என்னை ராஜா என்றே அழையுங்கள்” என்கிறார். உடன் வந்திருக்குக்கும் தந்தை ரிச்சர்ட்டும் இவரை ராஜா என்றே அழைக்கிறார். படித்த, படிக்கும், வேலையிலிருக்கும் நமது  இளைஞர்களை கோலிவுட் எனற காந்தம் ஈர்ப்பது நமக்கு தெரியும். அந்த காந்தத்தின் சக்கி இப்போது வலிமையாகி கனடா வரை நீண்டு அங்குள்ள ஒரு இளைஞரையும் ஈர்த்திருப்பது ஒரு ஆச்சரியமான சந்தோஷம்.




கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்