11/7/13

கஜ்னியின் 17 முறை படையெடுப்பு என்பது சரியில்லையாமே?

 4
குஜராத் பயணம் 4 

கஜ்னியின் 17 முறை படையெடுப்பு என்பது சரியில்லையாமே?

ஸோம்நாத் என்று உலகம் முழுவதும் அறியபட்டடிருக்கும் அந்த ஊரின் பெயர் வெராவெல். ஒரு கடற்கறை கிராமம். இந்த கோவிலை தவிர வேறு முக்கிய இடங்கள் எதுவும் கிடையாது. மிக சிறிய வயதிலிருந்தே இதை பார்க்க வேண்டும் என்ற  எண்ணம்  இப்போதுதான்  நிறைவேறியது, Thanks to Meera  துவராகை கிருஷ்னனை பார்க்க இந்த சிவனின் அருளும் வேண்டும். ஸோம்நாத கோவிலை பற்றி சொன்னாலே கஜினியின் 17 முறை படையெடுப்பு நினைவிற்கு வருமே? எங்களுக்கும் வந்தது. இங்குபார்த்த  குறிப்புகளில் எங்குமே 17 தடவைகள் என சொல்லபடவே இல்லை.  கி.பி.1300 –ம் ஆண்டு அலாவுதீன் கில்ஜியாலும் தாக்கப் பட்ட இந்த  ஆலயம் ஜுனாகட் மன்னனால் கட்டப் பட்டது. மீண்டும், மீண்டும் முந்நூறு ஆண்டுகளில் நான்கு முறை ஆலயம் திரும்பத் திரும்ப இடிக்கப் பட்டது. முசபர்ஷா, மகமது பெக்டா, இரண்டாம் முசபர் ஷா, கடைசியில் 1701-ம் ஆண்டில் ஒளரங்கசீப் ஆகியோராலும் ஆலயம் இடிக்கப் பட்டிருக்கிறது. . பின்னர் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இந்தோர் ராணி அகல்யா பாய் என்பவள் காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்போது, இந்தப் பழைய சோமநாதர் ஆலயத்துக்கு எதிரே ஒரு புது சோமநாதர் ஆலயம் கட்டினாள். ஆனால் பின்னர் ஜுனாகத்  ஆட்சி நிர்வாகம் முகலாயர்களின் கைக்கு வரவே அப்போது உள்ள நவாபோ, அல்லது ஆங்கிலேய அதிகாரிகளோ கி.பி. 1820-ம் ஆண்டில் இருந்து 1947-ம் ஆண்டு வரை எந்தவிதப் புனர் நிர்மாணத்துக்கு அனுமதிக்கவில்லை.  இந்திய சுதந்திரத்தின் போது இந்த பகுதி ஜுனாகத் நவாப் பாகிஸ்தானோடு இணையப் போவதாய் ஒப்பந்தமும் போட்டுக் கொண்டார். கத்தியவார் மக்கள் எதிர்க்க ஆரம்பித்ததோடு அல்லாமல், அர்சி ஹுக்குமத் அல்லது ஜுனாகத் தாற்காலிக அரசு என்ற அமைப்பைக் கொண்ட மக்கள் சபை அமைக்கப் பட்டது. நவாபுக்கு எதிர்ப்பு வலுக்கவே அவர் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார். பின்னர் படேல் அவர்களால் ஜுனாகத் இந்தியாவோடு இணைக்கப் பட்டது. நாடு விடுதலை அடைந்த 1947-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று இந்தியாவின் துணைப் பிரதமராய் அப்போது இருந்த சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் சோமநாதர் ஆலயத்துக்கு விஜயம் செய்து இந்திய அரசே ஆலயத்தை மீண்டும் கட்டும் என அறிவித்தார்.
சோமநாதருக்கென புதிய ஆலயம் உருவாக்கப் பட்டது. பழைய கோயிலின் மாதிரிகள் மிகவும் கஷ்டத்துடன் சேகரிக்கப் பட்டது. இதில் முனைந்து பணியாற்றியவர் திரு கே.எம். முன்ஷி அவர்களும், சர்தார் படேலுமே ஆவார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எங்கே ஆலயம் நின்றதோ அதே இடத்தில் கட்டப் பட்டு அதே கருவறையில் அதே பீடத்தில் சோமநாத ஜ்யோதிர்லிங்கம்  அப்போதைய ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களால் பிரதிஷ்டை செய்யப் பட்டது. சோமநாத ஆலயத்தின் புனருத்தாரண சிற்பிகளில் முதன்மையானவர் ஆன படேல் ஆலயத்தின் திறப்பு விழாவைக் காணாமலேயே 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி காலமானார்
எனினும் திறப்பு விழா கோலாகலமாய் நடந்தது. சுதந்திரம் கிடைத்து மூன்று மாதங்களிலேயே சர்தார் படேல் இந்தக் கோயிலை மீண்டும் கட்டித் தருவதாய் அறிவித்தார். நாலே வருஷங்களில் சோமநாதர் அப்போதைய குடியரசுத் தலைவரால் பிரதிஷ்டை செய்யப் பட்டார். அதன் பின்னர் கிட்டத் தட்ட 14 ஆண்டுகள் முயன்று இந்தக் கோயில் கட்டப் பட்டது. மஹாத்மா காந்தி அரசு செலவு செய்யக் கூடாது என்று சொன்னதை மதித்து இந்தக் கோயில் முழுக்க முழுக்க நன்கொடைகளாலேயே கட்டப் பட்டது. அரசிடமிருந்து எந்தவிதமான நிதி உதவியும் பெற வில்லை. 1965-ம் வருஷம் மே மாதம் 13-ம் நாள் 21 துப்பாக்கிகள் வணக்கம் செய்ய சோமநாதர் கோயிலின் 155 அடி உயரக் கோபுரத்தில் துவஜஸ்தம்பமும், அதன் மேல் காவிக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. இந்தியாவிலேயே கடந்த 800 ஆண்டுகளில் இத்தகையதொரு கோயில் இன்று வரையிலும் கட்டவில்லை என்று சொல்லபபட்டது. . 
அப்போதைய கணக்குப் படி இந்தக் கோயிலுக்கு ஆன மொத்தச் செலவு, 24, 92,000 ரூபாய்கள். கோயிலினுள்ளே சோதனைகளுக்குப் பின்னர் நுழைந்தால் முதலில் வருவது பெரிய சபா மண்டபம்.  நுழையும் போதே பெரிய எல்சிடியில் சனனதியி அபிஷெகம் தெரிகிறது/ ஏராளமான சிற்பங்களைக் கொண்ட அந்த சபா மண்டபத்தில் ஆங்காங்கே பக்தர்கள் அமர்ந்து யாகங்கள், ஹோமங்கள், யக்ஞங்கள் என்று நடத்திக் கொள்ளுகின்றார்கள்.  ஒரு காலத்தில் தங்க தூண்காலாக இருந்த இடத்தில் இன்று பளபள்க்கும் கோல்டு பெயிண்ட். அந்தச் சபா மண்டபத்தைத் தாண்டினால், திறந்த கருவறையில் பெரிய அளவிலால் ஆன சோமநாத லிங்கம் காணப் படுகின்றது அலங்காரம் ஜொலிக்கிறது. 
அபிஷகத்திற்கு பக்கதர்கl கொடுக்கும் பாலும் நீரும் சன்னதி முன்னால் ஒரு துவாரத்தில்  விட்டால் அது லிங்கத்தின் மீது 24 மனி நேரமும்  நீர் சொட்ட தொங்கும்   குடத்தில் டூயூப் வழியாக சேரும்படி   ஒரு  அமைப்பு. 
 பிரஹாரத்தைச் சுற்றி வலம் வரும்போது பழைய இடிந்த கோயிலின் இடிபாடுகளின் மிச்சம் காண முடிகின்றது. படங்கள் எடுக்க முடியாது. இது ஒருவேளை அப்போதைய பார்வதி கோயிலாக இருக்கலாம் என அனுமானம் செய்கின்றனர். கோயிலின் வெளியே நிலாமாடங்கள் போன்ற முற்றங்கள் ஆங்காங்கே பயணிகளின் வசதிக்காகக் கட்டப் பட்டிருக்கின்றது.

 அதில் ஒரு மாடத்தின் அருகே, வேலைப்பாடுள்ள ஒரு தூண் காணப்படும். அந்தத் தூண் சோமநாத லிங்கத்தின் வலப்பக்கமாய் அமைந்திருக்கிறது. சோமநாதர் சந்நதியின் அந்த வலப்பக்க ஜன்னலில் இருந்து சோமநாதரின் அருட்பார்வை தடைகள் ஏதுமின்றி தென் துருவம் வரையிலும் ஒரே நேர்கோடாய்ப் பயணிக்கின்றது என்று சொல்கின்றார்கள். இதை ஒளிப்பாதை என்றும் சொல்லுகின்றனர். 
சர்தார் படேலுக்கு ஒரு அழகான சிலை நிறுவப் பட்டிருக்கின்றது. செக்யூரிட்டி தெய்வங்கள் படம் எடுக்க போட்டடிருக்கும் கோட்டிருக்குள் அவர் இருப்பதால் அங்கிருந்து அவரையும் கோவிலையும் படம் எடுக்க கூடாது என்கிறார்கள்.  தொல்பொருள் இலாகாவின் புகைப்படங்கள், பழைய சோம்நாத் கோயிலின் மாதிரிப் படங்கள் கொண்ட ஒரு கண்காட்சியும்இருக்கிறது.  புதிய கோயில் கட்டும்போது உலகின் பல நாடுகளில் இருந்தும் நீர் கொண்டு வரப் பட்டு, கோயில் வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதாக கண்காட்சியில் ஒரு தகவல் சொல்லுகின்றது. பல கண்ணாடிப் புட்டிகளும் நீர் நிறைந்து காணப் படுகின்றன. அகல்யா தேவி கட்டிய சோமநாதர் கோயிலும் அருகே உள்ளது. அதற்குத் தனியாய் வழிபாடுகள் நடக்கின்றது. 
இரவு ஒரு ஓலிஓளிகாட்சி. ஹிந்தியில் கதை. ஒம்பூரியின் வாய்ஸ் ஆனால் சகிக்காத மியூஸிக். கதை புரியாதால் கோபுர மாடத்தில் இருக்கும் அத்தனை புறாக்களும் எப்படிஅதன் மீது இந்த வெளிச்ச வெள்ளத்தில் பயப்படாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறது என்றுஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன்.

தங்கியிருந்த ஹோட்டல் ஒரு கிராமத்தின் ஹைவேயில். பெரிய புல்வெளி. நல்ல ரூம். காட்டேஜ்கள் வித்தியாசமாக பிரமிட் வடிவத்தில்.
பயணபடங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்

















<

1 கருத்து :


  1. Dear Ramanan
    Thank you. You blog is very nice. I am happy you have mentioned about Iron man patel. But for him no somath temple. I am sending a book on him. May be of use to you.
    Thanks once again
    Ramesh

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்