யோகா குரு அய்யங்கார் தன் பிராணாயமத்தை கடைசி மூச்சை நேற்று நிறுத்திவிட்டார். இரண்டு
ஆண்டுகளுக்கு முன் கல்கியில் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு
சீனாவில் இந்திய அரசின் உதவியுடன் முதல் முறையாக ஒரு யோகா உச்சி
மாநாடு தென் சீனாவில் குன்ஸாஹு(GUNGZHOU) என்ற ஒரு பெரிய தொழில் நகரில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. தலைமை
விருந்தினாராக் அழைக்கபட்டிருந்தவர் யோகா குரு பி கே எஸ் அயங்கார். அவர் உலகின் பல
நாடுகளுக்கு பயணம் செய்திருந்தாலும் சீனாவிற்கு இதுதான் முதல் முறை. புனாவில் யோகா பள்ளியை நடத்திவரும்
இந்த குருவிற்கு அங்கே எதிர்பாராத
ஆச்சரியங்கள் பல காத்திருந்தன. 200டாலர்
கட்டணம் கட்டி மாநாட்டிற்கு வந்திருந்த 1300 பேர் களில் சில மாணவர்கள் ஒருங்கிணைந்து அவருடைய அய்யங்கார்
பாணி யோகசனங்களை தவறில்லாமல்
செய்துகாட்டினார்கள். . அதைவிட ஆச்சரியபடுத்திய விஷயம் அவரது அய்யங்கார் ஆசனங்கள்
சீனாவில் மிகவும் பாப்புலர் என்பதும், அந்த நாட்டில் 17
மாநிலங்களில், 57 நகரங்களில் அவரது
பாணி யோகவை கற்பிக்க பல பள்ளிகள் இருப்பதும் 30, 000க்கும்
மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள் எனபதும் தான். பல பள்ளிகளில்
ஆசிரியர்கள் ரிஷிகேஸ் வந்து இவரது சீடர்களிடம்
பயிற்சி பெற்றவர்கள். சீனர்கள் தங்களது
குருவிற்கு மிகுந்த மரியாதை அளிப்பவர்கள். தாங்கள் பயிலும் யோக கலையின் பாணியை உலகிற்கு
அறிமுகபடுத்திய குருவை சந்திப்பதை வாழ்வின் பெரிய வாய்ப்பாக கருதிய சீன இளைஞ்ர்கள்
அவரை பல நகரங்களில் வரவேற்றனர். “சீனர்களுக்கு யோகா பற்றி ஓரளவு தெரியும் என்பதை
மட்டுமே அறிந்திருந்த எனக்கு யோகா அங்கு
இவ்வளவு பிரபலமாக் இருப்பதை பார்க்கும்போது
மிகவு சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சீனா யோகாவில்
இந்தியாவை முந்தி விட்டால் கூட நான் ஆச்சரியபட்மாட்டேன் “ என்று சொல்லும் அய்யங்கார் கர்நாடக
மாநிலத்தில் பெல்லூர் என்ற சிறிய கிராமத்தில்
மிக ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலியே பெற்றோர்களை இழந்து மைசூரிலிருக்கும் புகழ்பெற்ற
யோகாசன ஆசிரியாரான தன் மாமா கிருஷ்ணமாச்சாரியாரின் வீட்டில் தங்கி அவருடைய உதவியாளாரக பணிசெய்து
யோக கலையை கற்றவர். 15 ஆண்டு ப்யிற்சிக்குபின்னர்
மராஷ்ட்டிர மாநிலத்தில் புனா
நகருக்கு வந்து யோகா பயிற்சி பள்ளியை துவக்கி அதை வளர்த்தவர். தானே கற்று உணர்ந்த சில பழைய
யோகயாசன முறைகளை செம்மைப்படுத்தி கற்பித்துவந்தார். எளிதான இந்த யோகா பாணி அய்ங்கார் ஆசனங்கள் என்று பிரபலமாகி
இன்று இந்தியாவில் பல இடங்களிலும், உலகின் பல
நகரங்களிலும் பரவியிருக்கிறது. ’ ‘யோகா
லைட் ஆப் லைஃப்’ ‘ என்ற இவரது புத்தகம் உலகம் முழுவதும் அதிக அளவில் விற்கும் யோகா புத்தங்களில் ஒன்று
இந்த பயணத்தில் பல சீன
நகரங்களில் யோகானசஙகள் செய்து காட்டியும்
அது குறித்து விளக்க உரையையும் நிகழ்த்தியிருக்கும் இந்த குருவின் படத்துடன் சீனா
நாட்டின் அஞ்சல்துறை ஒரு விசேஷ தபால் தலை வெளியிட்டு கெளரவித்திருக்கிறது.
இத்தகைய கெளரவம் பெறும் முதல் இந்தியர்
இவர்தான். சீன அரசுக்கு தெரிவித்த நன்றி
உரையில்” என் வாழ் நாள் முழுவதும் சந்தோஷப்படும் வகையில் என்னை சீனாவின் ஒரு அடையாளமாக கருதி இந்த
மகத்தான கெளரவத்தை அளித்தற்கு மிக்க நன்றி
என குறிப்பிட்டிருக்கிறார். இனி ஆண்டுக்கு
ஒருமுறை சிலமாதங்களாவது சீனாவில் யோகா வகுப்புகள் நடத்தபோவதாக அறிவித்திருக்கும்
இவருக்கு வயது- ஒன்றும் அதிகமில்லை 93 தான்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்