3/11/14

செல்வம் நங்கூரமிடும் துறைமுகம்.


மிகச்சிறிய 32 குட்டிதிட்டுகளிணைந்து சின்ன  தீவாகயிருக்கும் அந்த நாட்டில் இருப்பது ஒரு சிறிய மீன் பிடிதுறைமுகம்தான்சிறியபயண கப்பல்கள்கூட வரமுடியாது. ஆனால் இன்று உலகம் முழுவதும்நிதி நிலையங்களின் துறைமுகமாக” ( Financial Harbour) அறியபட்டிருக்கும் அந்த வாமனதேசம்தான் பஹரைன்  .
 மிகச்சிறிய இந்த வளைகுடா  தீவில்தான்  முதல் எண்ணைக் கிணறு நிறுவபட்டது..அதன் வளம் குறைந்து இன்னும்10 ஆண்டுகளில் மூடப்பட்டுவிடும் என்ற நிலையிலேயே, நாட்டின் பொருளாதாரத்தை வளமாக்க இந்த தீவின் அரசு செய்த காரியங்கள் இரண்டுஅண்டை நாடான செளதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணையை கடலின் அடியில் பதிக்கபட்ட குழாய்களின் மூலம் கொண்டுவந்து சுத்திகரித்து அவர்களுக்கு அனுப்பவதற்காக அதிதொழில்நுட்பத்தில் ஆலைகளை நிறுவி,எண்ணையின்விலையில் பாதியை கட்டணமாக வசூலித்தது. மற்றொன்று வெளிநாட்டு வங்கிகளை  இங்கிருந்து தொழில்செய்ய வரவேற்றது. இன்றைக்கு 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வங்கிகள் இயங்கும் இந்த தேசத்தில் இன்னும் அவர்கள் வருகை தொடர்ந்தவண்ணமிருக்கிறது.
அவர்களின் வசதிக்காகவே நகரின் நடுவே .நவீன வசதிகளுடன் அலுவலகம் சிறப்பான  தொலைதொடர்பு வசதிகள் கொண்ட  பிரமாண்ட 53 மாடி கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்கள். இரண்டு  ராட்டசத வடிவ பூட்ஸ் வகை காலணியை எதிரும் புதிருமாக நிறுத்தியதைப்போல நிற்கும் இந்த கட்டிடங்களின் பெயர்  “பைனாஷியல் ஹார்பர்” Financial Harbour
தொழில்வளம் எதுவுமில்லாத வெறும் ஈச்ச மர காடுகளாயிருக்கும் இந்த சின்னஞ்சிறு பாலைவனத்தீவில்  இவ்வளவு வங்கிகள் என்னசெய்கின்றனஉலகஆப் ஷோர் பேங்கிங்”(off shore banking) என்ற பேங்க்கிங் தொழிலின்  முக்கிய கேந்திரம் இதுதான், , உலகில் நல்ல வருமானம் தரும் தொழில்களில் மற்றொரு  நாட்டில்  முதலீடு செய்ய விரும்பும்  நிறுவனங்களுக்கு, அதை அவர்கள் நாட்டிலிருந்து செய்யாமல் மற்றொரு நாட்டிலிருந்து செய்ய  உதவது இந்த வங்கிகளின் பணி. எளிதாக சொல்லவேண்டுமானால்ஒரு ஜப்பானிய நிறுவனம்  மெக்கிஸிக்கோவில் அதிக லாபம் ஈட்டும் தொழிலில் முதலீடு செய்ய இங்குள்ள ஸ்விடன் நாட்டு வங்கிக்கிளை உதவும். இதனால் பல நாடுகளின் பொருளாதாரத்தை கண்கொத்தி பாம்பாக கண்காணித்து தங்கள் வாடிக்கையாளார்களை செல்வந்தர்களாக்கிகொண்டிருக்கிரார்கள் இந்த வங்கியாளார்கள். ஒரே இரவில் கோடிகளை ஈட்டவும், இழக்கவும் செய்கிறார்கள். வருமானத்திற்கு வரி எதுவும் கிடையாது.லாபத்தை உலகின் எந்த மூலைக்கு மாற்ற தடையேதுமில்லை. பல வங்கிகளில் இந்தியர்கள் அதில் கணிசமான அளவில் தமிழர்கள் பணியிலிருக்கிறார்கள்
கடந்த  10 ஆண்டுகளில் இந்த வங்கித்தொழில் நாட்டின் முகத்தையே மாற்றியிருக்கிறது. பிரமாண்டமான பல மாடிகட்டிடங்கள், அகன்ற சாலைகள் என வளர்ந்து கொண்டிருக்கிறது. நகரின் புதிய அடையாளமாக எழுந்திருப்பது
    240மீட்டர் உயரத்தில்  வேர்ல்ட் டிரேட் செண்ட்டர்.(world trade center) இரட்டை கோபுரம். தொலவிலிருந்து பார்க்கும்போது சாய்த்து நிறுத்திவைக்கபட்டிருக்கும் படகைப் போல இருக்கும் இதை அருகில் பார்க்கும் போது தான் அது  ஒரு படகில் விரித்து கட்டப்பட்டிருக்கும் இரண்டு பாய்மரங்கள் என்ற வடிவம்  புரிகிறது. 50 மாடிகளுடன் அமைக்கப் பட்டிருக்கும்  இந்த  இரண்டு கட்டடித்திற்கு இடையில் பெரிய காற்றாடிகளை நிறுவி மின் சக்தி பெற ஒரு காற்றாலையை நிறுவியிருக்கிரார்கள். இது இந்த கட்டிடத்திற்கான மின் வசதியை தருகிறது. கட்டிடத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள். வங்கிகள்மேலேயிருந்து பார்க்கும்போது தேசம் முழுவதும் தெரிகிறது. ஆம். இந்த நகரம் மட்டும் தான் முழுதேசமே!. கீழ்தளத்தில் மிகப்பெரிய ஷாப்பிங் மால்  நிறைய சர்வதேச பிராண்டுகளின் கடைகள்.
இங்குமட்டுமில்லை நகரின் அத்தனை பெரிய கட்டிடங்களிலும்  கீழ் தளம் மால் தான்எல்லா மால்களிலும் பிராத்தனைக்கு என தனி இடம். இவைகளைத்தவிர பல லட்சம் மீட்டர் பரப்பளவில் பல மாடிகட்டிடங்களில்  பல தனி மால்கள்..உலகின் எந்த முண்ணணி பிராண்டும் தங்கள் படைப்பை முதலில் அறிமுகப்படுத்துமிடம் பஹரைன் தான்இந்த மால்களில்தான்.. சில மிக பிரமாண்டமானவை. ஒரு மாலில்  5000 கார்களை நிறுத்த அடுக்கமாடி பார்க்கிங் நிறுவியிருக்கிறார்கள். கடைகளில் யார் வாங்குகிறார்கள்? எந்த வித வரியுமில்லாமல் சர்வதேச விலையைவிட மலிவாக  கிடைப்பதால்  அருகிலிருக்கும் சவுதி அரேபியா போன்ற அண்டை நாடுகளிலிருந்து விடுமுறைகளில் வந்து வாங்கித்தள்ளுகிரார்கள். இதற்கு வசதியாகியிருப்பது பஹரைன் மன்னர் பெயரில் அமைக்கபட்டிருக்கும் கடல் வழி சாலை தான். குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கீழே படகுகள் கடந்து போக  உயர்ந்தநிலையில்  பாலமாக அமைக்கபட்டிருக்கும் கடல்வழி சாலையில் பலநாட்களில் நெருக்கடியாகிவிடுமளவிற்கு போக்குவரத்துபோக விஸா அவசியமானாலும்  இங்கிருந்து தினசரி  சவுதி அரேபியாவின் நகரங்களுக்கு போய் வேலை செய்து திரும்புவர்களுமிருக்கிறார்கள்.
ஒரே ஒரு நகரமாகயிருக்கும் இந்த தேசத்தை இப்போது நிறைய வசதிகளுடன் ஒரு சுற்றுலா மையமாகக்க  துவங்கியிருக்கிறார்கள். உலகின் சிறந்த ஹோட்டல்கள் இங்கு வந்திருக்கின்றன. ஒரு ஹோட்டல் அருகிலிருக்கும் அமைதியான கடலை அலையடிக்கும்,கடலாகஇயந்திரங்களின் உதவியால்  உருவாக்கியிருக்கிறார்கள்அருகிலுள்ள குட்டி தீவுகளை ரிஸார்ட்டாக மாற்றிக்கொண்டிருக்கிரார்கள். ஃபார்முலா ஒன் என்ற சர்வதேச கார் ரேஸ்களை நடத்த மிக அதிக செலவில் டிராக்களை அமைத்து உலகம் முழுவதுமிருக்கும் கார் ரேஸ்பிரியர்களை ஈர்க்கிறார்கள்
நகர் உருவாகும் போது நிறுவபட்ட  “பாபல் பஹரைன்என்ற நுழைவாயில் முகப்பை மாற்றாமல் போற்றி பாதுகாக்கும் பகுதியில்தான் நகரின்பிரதான கடை வீதிகள். நிறைய  குறுகிய தெருக்கள் நிறைய இந்திய முகங்கள். வீதியோர கடைகள். சன்னமான குரலில் சரளமான மலையாளம். நடிகர் மோகன்லால்,மம்முட்டி படங்களுடன் முடிதிருத்துமிடத்திலிருந்து, குருவாயரப்பன் சன்னதியுடன் கோவிலாக மாற்றபட்டிருக்கும் 2 பெட்ரூம் பிளாட் வரை எங்கும் நிறைந்த கேரள வாசனை. காய்கறி மார்கெட்டைப்போல தங்க நகைகளுக்கு தனியாக 300 கடைகளுடன்  கோல்ட் சிட்டி. என்ற மார்க்கெட்.

மெக்கா விலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களினானால் பிரமாண்டமாக நிறுவபட்டிருக்கிறது அந்த மசூதி.. இத்தாலிய மார்பிள் தரை, இந்திய தேக்கில் கதவுகள்,பிரான்ஸில் வடிவமைக்கபட்ட கண்னாடி சாரளங்கள்.ஸ்பெய்னில் வடிவமைக்கபட்ட பைபர்கிளாஸ் விதானம், தரை முழுவதும் பெர்ஷ்ய கார்பெட் என மிக நேர்த்தியாக கலையுணர்வுடனிருக்கும் அதனுள் பிராத்தனை இல்லாத சமயங்களில் பார்க்க அனுமதிக்கிறார்கள். எந்த நாட்டினாராக, எந்த மதத்தினாராக யிருந்தாலும் பெண்கள் உள்ளே நுழைய பர்தா அணிந்தால்தான் அனுமதி..  ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருக்கும் பெரிய பிராத்தனை கூடத்தில் விதானத்திலிருந்து தொங்கும் சரவிளக்கில் இணைக்கபட்டிருக்கும் ஒரு பிரமாண்ட வட்டம்  1000 பல்புகளுடன் நம்மை பிரமிக்கவைக்கிறது.(1000விளக்கு மசூதி)
ஒரு  வளமான முகலாய நாட்டில் அவர்களது வழிபாட்டுதலம் ஆடம்பரமாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால்  நகரின் வெளியே 10 மைல் தொலைவில் பார்த்த ஒரு மரம் தான் ஆச்சரியமான விஷயம். சுற்றுவட்டாரத்தில் 20 மைலுக்கு எந்தநீர்வளம் இல்லாத அந்த மணல் பாலைவனத்தில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழும் ஒரு மரம்.. எங்கிருந்து தனக்கு வேண்டிய நீரை எடுத்துகொள்கிறது என்ற ஆச்சரியத்தை தரும் இந்த மரத்தின் அடி பாகம் ஆலமரம்போலவும் இலைகள் புளிய மர இலைகளைபோலவும் தன் கிளைகளை  சிறு மாமரம்போல தாழ்வாக பரப்பி  ஆராய்சியாளர்களுக்கு சவால் விட்டுகொண்டு நிற்கிறது. மிக அரிதான தாவரமாக அறிவிக்கபட்டு வாழும் மரமாக(tree of life) பாதுகாகப்படுகிறது. வழிபாட்டுக்கு உரியதாக மதிக்கப்படும் இதில் சிலர் தங்கள் பெயரை செதுக்கியிருக்கிறார்கள். அவை தமிழ் எழுத்துகளாக இருப்பது     நெஞ்சில் வலியை உண்டாக்கியது.
.
இந்த வாழும் மரத்தை பார்த்து திரும்பும்போதுஇறைவன் படைப்பில் புரிந்துகொள்ளமுடியாத சில ஆச்சரியங்கள் அவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை அதிகரிக்கசெய்கிறது.” என்ற இஸ்ரேலிய பழமொழி  நினைவிற்கு வந்ததது.






கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்