ஸரிகம சிறப்பிதழாக வந்திருக்கும் இந்த வார கல்கியில் என்னுடைய “காற்றினிலே வரும் கீதம் புத்தகத்தை மூத்த எழுத்தாளர் திருமதி வேதா கோபாலன் விமர்சித்திருக்கிறார்அவருக்கும், கல்கி ஆசிரியர் திரு வெங்கடேஷ்க்கும் நன்றி
M.S என்று இரண்டே எழுத்தில் அறியப்பட்ட இவரை மாஸ்டர் ஆஃப் சங்கீதம் எனலாமோ? கடலை சிமிழ்க்குள் அடைக்க முயன்று வெற்றிபெற்றிருக்கிறார் ரமணன். எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை என்னமாய் எழுதியிருக்கிறார். நமக்குத் தெரியாத எவ்வளவு விவரங்கள்? அட என்று வியக்கவும் அடடா என்று பிரமிக்கவும் ஐயோ என்று வருந்தவும் அம்மாடீ என்று நிம்மதியடையவும் வைக்கும் நிகழ்ச்சிகள் ஒன்றா இரண்டா?
* நிழலாகவும் இரும்புக்கோட்டையாகவும் இருந்தார் திரு சதாசிவம். (நிழலே பறவையைச் செலுத்தியது என்கிறார் ரமணன்). முதல் முதலில் எம்.எஸ். அம்மாவைப் பேட்டி எடுக்க வந்த ஒரு பத்திரிகையாளராகத்தான் அறிமுகம். அழகாகக் காதலிக்க ஆரம்பித்தனர். தம்மைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்ன எம். எஸ்.ஸை திடுதிப்பென்று தம் வீட்டுக்குக் கூட்டிப் போய்விட்டார் ஏற்கெனவே திருமண மான திரு சதாசிவம். அவரின் மனைவிக்கும் தாய்க்கும் இவரைக் கண்டாலே பிடிக்கவில்லை. ஆனால் சிறிது சிறிதாகக் குழந்தைகள் இவரிடம் ஒட்டிக்கொண்டனர். பிரசவத்துக்குப் போன மனைவி இறந்துவிட மூத்த தாரத்துக் குழந்தைகளைத் தம் குழந்தை யாகவே வளர்த்தார் சுப்புலட்சுமி அம்ம
.
*1940 ஆம் வருடம் ஜூலை 10 அன்று திருநீர்மலையில் 250 ரூபாய் பட்ஜெட்டில் இவர்கள் திருமணம் நடந்தேறியது இரு வருக்கும் 14 வயது வித்தியாசம்.
* வாழ்நாள் முழுவதும் வீட்டில் கட்ட ஒரு சமயத்தில் ஏழு புடைவைகள்தான். அதற்கு மேல் இருந்தால் யாருக்காவது கொடுத்துவிடுவார். மேக் அப் கிட் என்பது வெங்கடாசலபதி படம் போட்ட தகர LL’ÜLIT தான் ஸ்டிக்கர் பொட்டு இல்லை. குங்குமம்தான்.
*சுத்தமான உச்சரிப்பு வேண்டும் என்பதற்காகவே சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளை 50 வயதுக்குப் பிறகு கற்றுக்கொண்டார்.
* நன்கொடை கொடுப்பதற்காகவே சம்பாதிப்பது அவரின் லட்சியமாக இருந்தது. நெருங்கிய உறவினர்களின் திருமணங்கள் இவரிடம் தேதி கேட்டே நிச்சயிக்கப்படும், உறவினர் திருமணங் களில் அம்மா ஆரத்தி பாடுவார். அதற்குக் கூடப்பயிற்சி செய் வாராம் . ராகங்களில் பல சோதனைகள் செய்து வெற்றி கண்டார்.
* ஒரு முறைகூடக் கச்சேரிகளில் பிசிறு. தவறு நேர்ந்ததில்லை. ஒரு முறை அப்படி அபூர்வமாக நேர்ந்தபோது 'அப்படித் தப்பு வரும்படி நாம பாடினா எதுக்கு உசிரை வெச்சுக்கறது’ என்று வீடு திரும்பும்போது சொன்னாராம் சதாசிவம். எம்.எஸ். பதிலே பேசவில்லை!
இந்நூல் வாசிப்பவரை வேதனைப்படுத்தும் செய்திகளுள் ஒன்று. எம்.எஸ். உடல் நலம் குன்றிப் படுத்திருந்தபோது ரேடியோவில் கர்நாடக சங்கீதம் கேட்டு 'அதை நிறுத்து' என்று உதவியாளர் ஆத்மாவிடம் சொன்னாராம்.-
காரணம் மனநோய். (2500 பாடல்கள் மனப் பாடம் செய்தவருக்கு இந்நிலை வரவேண்டுமா?)
இப்படி ஆச்சர்யமளிக்கும்படி எவ்வளவு விவரங்கள் எத்தனை நிகழ்ச்சிகள்! நூலாசிரியர் ரமணன் மிகவும் மெனக்கெட்டிருக் கிறார். பத்து நூல்கள், இணையதளம், கேள்விப்பட்ட செய்திகள், அவர் குடும் பத்தினர் மற்றும் நெருங்கிப் பழகியவர்களின் பேட்டிகள் என்று என்ன ஒரு சேகரம். ஹாட்ஸ் ஆஃப்.
அத்தியாயத் தலைப்புகளில் ரமணனின் திறமை பளிச், முதல் அத்தியாயத்தின் தலைப்பே அசத்தல். மல்லிகை தேசத்தில் மலர்ந்த தாமரை எம்.எஸ்.ஸின் மறைவை விவரித்த அத்தியாயத்துக்கு 'வாடிய தாமரை எனத் தலைப்பிட்டு மனம் நெகிழும் படி நிறைவு செய்திருக்கிறார். இந்த நூலில் ஓர் அழகிய புதுமை செய்திருக்கிறார் ஆசிரியர் முழுக்க முழுக்கத் தானே ஆக்கிரமிக்க வேண் டும் என்ற பேராசை இல்லாமல் எம்.எஸ்.ஸுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் அது பற்றிக் கட்டுரை வாங்கி இணைத்திருக்கிறார். போட்டோக்களின்கீழ் பெயர்கள் போட்டிருக்க லாம். தேதி முரண்பாடு உள்ளது. மற்றபடி குறையொன்றுமில்லை!
கண்ணைப் பறிக்கும் அச்சு நேர்த்தி. பொருத்தமான பொலிவான வண்ணப் படங்கள், அனைத்துப் பக்கங்களும் ஆர்ட் பேப்பர். ரமணன் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல். கவிதா பதிப்பகத்தார் தொப்பியிலும்தான்.
காற்றினிலே வரும் கீதம் - இசையரசியின் வாழ்க்கைப் பயணம் -ரமணன், பக்.264, வெளியீடு:கவிதா பப்ளிகேஷன், சென்னை-17,
தொலைபேசி: 044-24364243, விலை 800/- ()
முக நூல் நண்பர்களிடமிருந்து
முக நூல் நண்பர்களிடமிருந்து
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்