27/6/24

தர்ம்சாலா-தபோவனம்-தலாய்லாமா 6

6 எங்கள் இரண்டு பேருக்கு மட்டும் ஒரு விமானம்
வெள்ளிப்பனிமலைகளின் பின்னணியில் வெள்ளைக்கூடாரங்களின் போர்டிகோவுடன் இருக்கிறதும் தரம்சாலா விமான நிலையம். பெயர் Kangra-Gaggal Airport சுற்றிலும் மலைகள் நிறைந்திருப்பதால் Gaggal கிராமத்தில் ஒரு சமதளப்பகுதியைத் தேடி கண்டுபிடித்து விமான நிலையத்தை அமைதிருக்கிறார்கள் Kangra என்பது இந்த மாவட்டத்தின் பெயர்.விமானநிலையம் மிகச்சிறியது. மாநிலத்தலைநகர் என்பதால் அரசாங்கப்பயணிகள் தான் அதிகம் இப்போது ஐபிஎல் மேட்சுக்க்ள் நடப்பதால் (அழகான ஸ்டேடியம்) அந்த சமயங்களில் பிஸியாகயிருக்குமாம். விமான நிலையம் இருக்கும் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் கிராமத்தில் வேறு கட்டிடங்கள் ஹோட்டல்கள் எதுமில்லாதது ஆச்சரியம். .
நாங்கள் கவண்ட்டரில் போர்டிங் கார்ட் வாங்க காத்திருந்தபோது “ இன்று நீங்கள் இரண்டு பயணிகள் மட்டுமே இருப்பதால்…. என்று சொல்லிவிட்டு சிஸ்டத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார் அந்தப்பெண். சரி இன்று விமான சர்வீஸ் கேன்ஸல் என்று சொல்லி திருப்பியனப்பப் போகிறார். வந்த டாக்ஸியை வேறு திருப்பி அனுப்பி விட்டோமே? என்ற கவலை தொடங்கிய நிலையில் போர்ட்டிங் பாஸைக்கொடுத்து உங்கள் இருவருக்கும் மட்டும் இன்று விமானம் சிம்லா செல்லுகிறது. வாழ்த்துகள் என்றார்.
எங்கள் இருவருக்கும் மட்டும் ஒரு தனி விமானம் என்ற கேட்டவுடன் சிலிர்த்தது.
விமானத்தை பயணத்துக்கு ரெடி செய்து கொண்டிருந்த ஊழியர்கள் வாழ்த்து தெரிவிக்க விமானத்தில் ஏறியவுடன் எங்களுக்கு பின் வந்த கேப்டன் “குட் மார்னிங். எங்கே என் ஷம்பெயின்? சார்ட்டர் ஃபளைட்டில் கேப்டனுக்கும் க்குருவுக்கும் ஷாம்பெயின் கொடுப்பது வழக்கமாயிறே” என்றார்.
“விதிகளின் படி பைலட்கள் பயணத்தில் மது அருந்தக்கூடாது. சிம்லாவில் இறங்கியவுடன் ஷம்பெயின் சாப்பிடாத நாங்கள் விரும்பிச் சாப்பிடும் ஆப்பிள் ஜுஸ் சாப்பிடலாம்” என்றேன். மிக சத்தமாகச் சிரித்து “நான் ஷம்பெயின் கேட்டதற்கு கிடைத்த பதில்களில் இதுதான் பெஸ்ட்” என்றபடி காக்பிட்டுக்கு போனார்.
காலி சீட்டுகள் நிறைந்த அந்த விமானத்தில் நாங்களும் ஒரே ஒரு ஹோஸ்ட்டஸ் மட்டும் தான். பொதுவாக உணவு வழங்கப்படாத அந்த பயணத்தில் அன்று எங்களுக்கு காலை உணவு கொடுத்தார் அவர். . நிறைய பேசிக்கொண்டே வந்தார். பல ஆண்டுகளுக்கு முன் ஹனிமூன் போன சிம்லாவுக்கு இன்று மறுபடியும் போகிறோம் என்றது அவருக்கு ஒரே ஆச்சரியம். மொத்தப் பயணநேரம் 40 நிமிடம்தான்..
ஆனால் சிம்லா விமான நிலையத்திலிருந்து நகருக்குள் போக இரண்டு மணி நேரம் ஆனது. ,சிம்லா மிக மிக மாறியிருப்பதை உணர முடிந்தது. பசுமையான பைன்மரங்கள் நிறைந்த பள்ளதாக்குகள் முழுவதும் இப்போது கொத்து கொத்துகாக கான்கீர்ட் பூக்கள் மலர்ந்திருக்கிறது. வீடுகள் பள்ளதாக்குகளில் இருப்பதால் கார்களை - பென்ஸ்களைக் கூட குறுகிய சாலையின் ஓரங்களில் நிறுத்திவிட்டு மக்கள் சரிவான சிறு பாதைகளில் நடக்கிறார்கள் இந்த நெருக்கமான சாலைகளில் ஒருபுறம் முழுவதும் நிறைந்த பார்க்கிங் செய்யப்பட்ட கார்களினால் , சிம்லாவின் குறுகிய மலைச்சாலகள் இன்னும் சிறிதாகி அதில் செல்ல நீண்ட நேரமாகிறது.
அந்த நகரின் முக்கிய பகுதி 'மால்' என்று அழைக்கப்படும் சமதளப்பகுதி. அங்கிருந்து எந்தப்பக்கம் பார்த்தாலும் அழகான சிம்லாவின் பனி மிதக்கும் பள்ளதாக்குகள் தெரியும். மாலின் இரண்டு புறமும் காலரி மாதிரி அமைப்பில் மக்கள் அமர்ந்து சீசனை அனுபவிக்க வசதியிருந்தது.. அந்த மால்தான் இப்போது நம் கொடைக்கானல், ஊட்டி போல கிராமத் திருவிழா மைதானமாக மாறியிருக்கிறது. பலூன், பொம்மைகள் விலை மலிந்த மேக்கப் சாதனங்கள், பிளாஸ்ட்டிக் பொருட்களின் கூடாரக்கடைகள் கடைகள்- கூட்டம் கூச்சல்.
நடுவில் சிலையாக பாவம் வாஜ்பாய். அவர் முகத்தில் கோபம் தெரிவது போல எனக்குத்தோன்றியது. ஓரே ஆறுதல் மாலின் நடுவில் பிராமாண்டமாக தேசியக் கொடி பறப்பது.
பல ஆண்டுகளுக்கு முன் நாங்கள் பார்த்த லிப்ட் இப்போது பெரிதாக விரிவடைந்திருக்கிறது. சிம்லா மலைப்பாதைகளாலான நகரமாதலால் அந்த நகர் தொடங்குமிடத்திலிருந்து நகரின் அதிக பட்ச உயரத்திலிருக்குமிடத்துக்கு உள்ளுர் மக்கள் ஓவ்வொருமுறையும் ஏறி, இறங்கி சிரமப்பட வேண்டாம் என்று ஒரு மலையின் அடிவாரத்திலிருந்து மேல்பகுதிக்குச்செல்ல 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு லிப்ட் அமைத்திருந்தார்கள்
இன்று அதன் அருகில் ஒரு புதிய ராட்சத ஸைஸ் லிப்ட். 26 பேர் போகலாம் 1.5 நிமிடத்தில் பயணம் முடிகிறது. நுழைய, வெளியேற பெரிய பாதைகள், பாலங்களுடன் டூரிஸ்ட் அட்ராக்ஷனாகி டிக்கெட் வசூலிக்கிறார்கள். (உள்ளுர் காரர்கள் திட்டுகிறார்கள்)
இந்த சந்தை சந்தடிகளிலிருந்து விலகி சற்று அமைதியாகயிருக்குமிடத்துக்குப் போக முடிவு செய்து ஆராய்ந்ததில் இமயத்தின் பனிப்பாறைகளிலின் சுனைகளிலிருந்து உருவாகி திபேத்தின் வழியாக சட்லட்ஜ் நதி, சிம்லா பள்ளதாக்குகள் வழியாகத்தான் இந்தியாவுக்கும் நுழைந்து பஞ்சாப் மாநிலத்துக்குள் போகிறது என்பதைப் பார்த்து அதைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டோம். .
பொதுவாக வரும் டூரிஸ்ட்கள் போவதில்லை. அட்வென்ட்சர் டூரிஸ்ட்கள் டெரக்கிங் போகிறவர்களுக்கான இடம் என்றார்கள்,
பராவாயில்லை பார்த்துவிடுவோம் என்று கிளம்பினோம்.
All reactions:
You, Vidya Subramaniam, Manthiramoorthi Alagu and 78 others
25
1
Like
Comment
Send
Share

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்