ஆழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19/8/14

புதிய இஸ்லாமிய தேசம் உருவாகிறதா?

ஆழம் ஆகஸ்ட் இதழில் எழுதியது. 

New post on ஆழம்

புதிய இஸ்லாமிய தேசம் உருவாகிறதா?

by ரமணன்
Chapter01எரிந்து கொண்டிருக்கிறது எண்ணெய் பூமி. இரானுடன் சண்டை, குவைத் ஆக்கிரமிப்பு, சதாம் எழுச்சி வீழ்ச்சி, அமெரிக்க முற்றுகை என்று கடந்த முப்பதாண்டுகளாக உலகச் செய்திகளில் தொடர்ந்து இடம்பெற்று வந்த இராக்கில் அண்மையில் உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது.
ஏன் இந்தப் போர்?
சற்றே முந்தைய வரலாற்றை ஆராய்ந்தால் இதற்கு விடை கிடைக்கும். மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு இராக். சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் வளமிக்க நாடும்கூட. மெசபடோமிய வண்டல் சமவெளி, ஜாக்ரோஸ் மலைத்தொடர்கள், சிரியா பாலைவனம், வடக்கு பெர்ஷிய வளைகுடாவை ஒட்டிய (58 கிலோமீட்டர் நீளம்) கடற்கரை என வேறுபட்ட நில அமைப்புகளை உள்ளடக்கிய நாடு. வடக்கில் துருக்கியும், கிழக்கில் இரானும், தென்கிழக்கில் குவைத்தும், தெற்கில் சவூதி அரேபியாவும், தென்மேற்கில் ஜோர்டானும், மேற்கில் சிரியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. யூப்ரடிஸ், டைக்ரிஸ் என இருபெரும் ஆறுகள், வடமேற்கில் இருந்து தென்கிழக்கை நோக்கி, இராக்கின் மையப் பகுதியைக் கிழித்துக்கொண்டு ஓடுகின்றன. இதனால் பாலைவனம், ஸ்டெப்பி புல்வெளி என்பதோடு வளமான வேளாண் நிலங்களும் இராக்கில் உள்ளன. இராக்கின் புராதனப் பெயரான மெசபடோமியா என்பதற்கு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள நிலம் என்று பொருள்.
நதிக்கரைகள்தான் நாகரிகங்களின் தொட்டில் என்பதற்குச் சான்றாக வரலாறு சொல்லும் இடங்களில் இந்தப் பகுதியும் ஒன்று. உலகுக்கு எழுத்துமுறையை வழங்கிய இந்த மண்ணில்தான் இப்போது வன்முறைக் கலாசாரம் வேறூன்றியிருக்கிறது. பாபிலோனிய பேரரசிலிருந்து தொடர்ந்த நீண்ட நெடிய மன்னர் பரம்பரைகளை வரலாறாகக் கொண்ட இராக் மற்ற நாடுகளைப்போல ஆங்கிலேயர் பிடியில் கொஞ்ச காலம் சிக்கியிருந்தது. நாற்பதுகளில் இராக் மீண்டும் மன்னராட்சிக்கு திரும்பியது. ஆனால் 1958ல் நடந்த ராணுவப் புரட்சியால் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து ராணுவ அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். 1978ல் சதாம் உசேன் இராக் அதிபராகப் பொறுப்பேற்றார். 2003ல் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரிடம் சிக்கும்வரை யாரும் அசைக்க முடியாத சர்வாதிகாரியாக சதாம் இருந்தார்.
பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி 2003ல் இராக்கைத் தனது ஆளுகையின்கீழ் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளின் படையும் கொண்டுவந்தது. இந்தப் போரின் இறுதியில்தான் தப்பியோடிய சதாம் உசேன் கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது ஷியா முஸ்லிம்கள் தலைமையிலான ஆட்சியை அமெரிக்கா உருவாக்கியது. அவர்கள் சதாமை 2006ம் ஆண்டு தேச துரோகத்துக்காகத் தூக்கிலிட்டனர். சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டனர். ராணுவம், அரசு நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்தனர். பல கட்சி நாடாளுமன்ற முறை உருவாக்கப்பட்டு அமெரிக்கச் சார்பு ஆட்சி அமைக்கப்பட்டது.
அப்போது ஒதுக்கப்பட்ட சன்னி பிரிவினர் ஆயுதமேந்தி போராடத் தொடங்கினர். சிறு கலவரங்கள் ஆரம்பமாயின. 2011ல் அமெரிக்கப் படைகள் இராக்கிலிருந்து வெளியேறியதும் இக்கலவரங்கள் தீவிரமடைந்தன. ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திவந்த பயங்கர தாக்குதல்கள் இப்போது உள்நாட்டுப் போராகி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்தப் போரை நடத்துபவர் யார்?
‘நாங்கள்தான்’ என்று ஐ.எஸ்.ஐ.எஸ் எனற அமைப்பு அறிவித்தபோது அமெரிக்க உளவு அமைப்புகள் ஆச்சரியமடைந்தன. காரணம் அவர்கள் கணிப்புப்படி இந்தப் புரட்சிகர அமைப்பு அதிக நிதி வசதி இல்லாத, பயிற்சிகள் ஏதும் பெறாத ஒரு சிறு குழு. இதன் தலைவர் யார் என்பதை அறிந்துகொண்டபோது அதைவிட ஆச்சரியம் அடைந்தது அமெரிக்கா. இந்த இயக்கத்தின் தலைவராக அறியப்பட்ட அபுதுவா என்பவர் 34 வயதில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இராக்கின் கண்காணிப்பு முகாமில் கைதியாகக் கழித்தவர். அப்போதெல்லாம் மிக அமைதியானவராகத் தோற்றமளித்த அப்பாவி. ஒரு மசூதியில் குமாஸ்தாவாகப் பணியாற்றிவந்த இவரைச் சந்தேகத்தின்பேரில் கைது செய்தார்கள். விசாரணையின் முடிவில் இவர் ஓர் அச்சுறுத்தல் அல்ல என்று கூறி விடுதலை செய்துவிட்டார்கள். இராக்கின் பல நகரங்களைப் புரட்சிப் படைகள் கைப்பற்றி வருவதாகக் கடந்த இரண்டு மாதங்களாக வெளிவரும் செய்திகளின் பின்னணி இவர்தான். அப்பாவி என்று நினைத்து விடுதலை செய்த அமெரிக்கா இப்போது இவர் தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசு அறிவித்திருக்கிறது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, ‘உங்களையெல்லாம் நியூ யார்க்கில் சந்திக்கிறேன்’ என்று சிறை அதிகாரிகளிடம் அபுதுவா கூறினாராம். அவை சாதாரண வார்த்தைகளல்ல என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது. இன்னொரு பெரும் அமெரிக்கத் தாக்குதலை எதிர்கொள்ளவேண்டியிருக்குமோ என்றும் அமெரிக்கா அச்சப்படத் தொடங்கிவிட்டது. அந்த அச்சத்தின் விலைதான் 10 மில்லியன் டாலர்.
அல் காயிதாவைப்போல் மற்றொரு சவாலாக இப்போது ஐஎஸ்ஐஎஸ் பார்க்கப்படுகிறது. இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்ட் லெவாண்ட். இராக், சிரியா, லெபனான் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய அகண்ட இஸ்லாமிய தேசம் அமைப்பதுதான் இந்த இயக்கத்தின் கனவுத் திட்டம். 2003ல் இராக்கில் அமெரிக்கா போர் நடத்தியபோது சின்னதொரு போராளிக் குழுவுக்குத் தலைவராக இருந்த அபுதுவா இன்று ஒரு போரையே தலைமை தாங்கும் அளவுக்கு உயர்ந்தது எப்படி என்னும் கேள்விக்கு விடை தேடத் தொடங்கியபோது அமெரிக்க உளவுத்துறை சில விஷயங்களைக் கண்டுபிடித்தது.
  • அல் காயிதாவின் இராக் கிளையான ஐ.எஸ்.ஐ. (இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக்) அமைப்பில் கவுன்சில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
  • 2009ல் அமெரிக்கக் கண்காணிப்பு முகாமில் இருந்து விடுதலை ஆன சில மாதங்களில் ஐஎஸ்ஐ தலைவர் அபு ஓமர் அல் பாக்தாதி திடீரென்று கொல்லப்பட, அவருடைய இடத்தை இவர் நிரப்பியிருக்கிறார்.
  • இராக்கில் நடந்துவரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் இவரே காரணம்.
எல்லாப் புரட்சித் தலைவர்களைப்போல இவருக்கும் பல பெயர்கள், முகங்கள். ஊடகங்கள் சொல்லும் அபுபக்கர் அல் பாக்தாதி என்பவரும் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களிடையே பிரபலமான டாக்டர் இப்ராகிமும் ஒருவர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்ய அமெரிக்காவுக்கு ஓராண்டாகியிருக்கிறது. மக்கள் மத்தியில் பிரபலமான இவருடைய பெயர் அபுதுவா. தனது படைகளுடன் பேசும்போதுகூட ஸ்பைடர்மேன் ஸ்டைலில் முகமூடி அணிந்திருப்பதால் அவர் முகம் பலருக்குத் தெரியாது. இப்போது அமெரிக்கா வெளியிட்டிருக்கும் படம்கூட பத்தாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதுதான்.
இந்த ஸ்பைடர் மேன் அபுதுவா மதக்கல்வியில் பிஹெச்டி முடித்தவர் என்று சொல்லப்படுகிறது. பல்வேறு இடங்களுக்குச் சென்று மதப் பிரசாரம் மேற்கொண்டு தீவிரவாத வெறியை ஊட்டுவதில் தன் வாழ்நாளைச் செலவழிக்கிறார். உலகளவிலான ஜிகாதி அறிவுஜீவிகளின் மத்தியில் இவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. ஒசாமா பின்லேடன் மரணத்துக்குப் பிறகு அல்காயிதா மீதிருந்த நம்பிக்கை இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களிடையே குறைந்துவரும் நிலையில், அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவராக அபுதுவா உருவெடுத்திருக்கிறார். குறிப்பாக இராக்கில் அடுத்தடுத்து சிறைகள்மீது திடீர் தாக்குதல்களை நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை விடுதலை செய்த இவரது நடவடிக்கைக்கு சன்னி இஸ்லாம் வகுப்பினரிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டது.
அல் காயிதா இவரைத் தங்கள் தலைவராக ஏற்கவில்லை. அவர்களிடையே நிறைய முரண்பாடுகள் நீடிக்கிறது. நீங்கள் இராக்கில் மட்டும் தலைவராக இருங்கள் என்று சொல்லிவிட்டது. அபுதுவா தன் பங்குக்கு, நாங்கள் அல் காயிதாவின் கட்டுப்பாட்டில் இல்லாத சுதந்தர இஸ்லாமிய அமைப்பு என்றே அறிவித்துள்ளார். ஆனால் அவரது கனவு மிகப்பெரியது என்பதில் சந்தேகமில்லை.
இஸ்லாமிய தேசக் கனவு
அபுதுவாவின் கனவு அகண்ட இஸ்லாம் தேசம். ஐரோப்பாவில் ஸ்பெயினின் வடக்கு எல்லையில் தொடங்கி, வட ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா முழுக்க ஒரே இஸ்லாமியக் குடையின் கீழ் அமையவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இஸ்லாமிய ஆளுகைக்குள் இருக்கும் பிரதேசங்களை ஷரியத் சட்டம்தான் ஆளவேண்டும். இந்த லட்சியத்துக்கு முதல் படியாகத்தான் சிரியா, இராக் இரண்டு நாடுகளையும் கைப்பற்றும் நோக்கில் சிறிது காலமாகப் போராடிவருகிறார்கள். சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் இவர்களது பங்கு கணிசமாக இருந்தது. இராக்கிலும் பல்வேறு சிறுநகரங்களை வென்றெடுத்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரை எழுதும்போது பாக்தாத்தை நெருங்கியிருந்தார்கள். முதல்கட்ட வெற்றியை ருசித்தபின் சிரியா மற்றும் இராக்கில் இதுவரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கைப்பற்றியிருக்கும் பகுதிகளை தனி நாடாக இந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. இந்த நாட்டுக்கு ‘இஸ்லாமிய தேசம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதற்கு கலிபாவாக (மன்னராக) அபுதுவா இருப்பார் என்று அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இனி ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் இயங்கப்போவதில்லை என்றும் இஸ்லாமிய தேசம் என்னும் பெயரில் இயங்குவோம் என்றும் அறிவித்திருக்கிறார்.
உருவாகியிருக்கும் புதிய இஸ்லாமிய தேசத்தில் உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் வந்து குடியேறவேண்டும் என்று கலிபா அழைப்பு விடுத்துள்ளார். நீதிபதிகள், மருத்துவர்கள்,பொறியாளர்கள், ராணுவ மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்கள் இந்தப் புதிய இஸ்லாமிய தேசத்துக்கு வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
சிரியா, சிரியர்களுக்கு மட்டுமானதல்ல. இராக், இராக்கியர்களுக்கு மட்டுமானதல்ல. முஸ்லிம் மக்களே உங்கள் நாட்டுக்கு விரைந்து வாருங்கள். அல்லாஹ் காட்டிய வழியில் நமது புனிதப் போரை நடத்துவதைத் தவிர இந்தப் புனிதமான ரமலான் மாதத்தில் செய்யக்கூடிய புனிதமான பணி வேறு எதுவுமே இருக்கமுடியாது. எனவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நமது முன்னோர்களின் வழியில் செல்வோம்!’
நிதி எங்கிருந்து வருகிறது?
அமெரிக்க உளவு நிறுவனங்கள் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கும் கேள்வி இது. முன்னாள் அதிபர் சதாமின் ரகசிய சொத்துக்கள் இவர் வசம் வந்திருக்குமோ என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கிறது. கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு நிதி திரட்டியதாக அமெரிக்கா சந்தேகப்படுகிறது. அல் காயிதாவுக்கு முன்பு நிதி கொடுத்துக் கொண்டிருந்த புரவலர்கள் இப்போது இந்த அமைப்புக்கு உதவுகிறார்களா என்பதையும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.
தாங்கள் கைப்பற்றும் நகரங்களில் இருக்கும் செல்வங்களை அப்படியே சூறையாடும் பழங்கால ராணுவ பாணியை இந்த அமைப்பு பின்பற்றுகிறது. சமீபத்தில் இராக்கின் மொசூல் நகரை கைப்பற்றியபோது, அங்கிருந்த வங்கியை சூறையாடியதன்மூலம் மட்டும் சுமார் நானூறு மில்லியன் டாலர் கொள்ளையடித்திருக்கிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு இப்போது இரண்டு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு இருக்கலாம் என்பது அமெரிக்க சிஐஏவின் மதிப்பீடு.
விளைவுகள் என்ன?
இஸ்லாம் மதத்தினரின் இரு பிரிவுகளுக்கிடையே பெரும் பிளவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இராக்கில் முதலில் தாக்கப்பட்டவை வழிபாட்டுத்தலங்கள்தாம். வடக்கு இராக் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஷியா பிரிவு மசூதிகளையும் வழிபாட்டுத் தர்காக்களையும் இடித்து வருகின்றனர். புல்டோசர் மற்றும் வெடி மருந்துகளை வைத்து இவற்றைத் தகர்த்தெறிந்த படங்கள் வெளியாகியிருக்கின்றன. வடக்கு மாகாணமான நினேவெஹ் பகுதியில் உள்ள மொசூல், டல் அஃபர் ஆகிய நகரங்களில் இத்தகைய வழிபாட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இந்த மதவெறிப்போக்கு மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. அவ்வாறு நேர்ந்தால் அதனால உலக அமைதி பாதிக்கப்படும் அபாயமும் அதிகம்.
தீவிரவாதிகள் ஒடுக்கப்படாவிட்டால் இராக் இரண்டாக உடையும் அபாயமும் இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த நிலை இராக்குக்கு ஏற்பட்டதற்கு அமெரிக்கா ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்கமுடியாது. நிலைமை கைமீறி சென்றுவிட்ட நிலையில் தற்சமயம் அமெரிக்காவும் நேச நாடுகளும் இந்தப் பிரச்னையில் தலையிடத் தயங்குகின்றன. இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவோம் என்ற அறிவிப்புடன் தேர்தலைச் சந்தித்த பராக் ஒபாமா இனி போர் எதுவும் நிகழந்தால் அமெரிக்கா தலையிடாது என்று அறிவித்திருக்கிறார். ஆனால் தன்னை உலக போலிஸாக அழைத்துக்கொள்ளும் அமெரிக்காவால் சும்மாயிருக்கமுடியுமா? முடியாது, இராக்கின் நிரந்தரப் பகையாளியான இரான் உதவியுடன் இன்னொரு போரை அமெரிக்கா உருவாக்கும் என்று சில ஐரோப்பியப் பத்திரிகைகள் எழுத ஆரம்பித்திருக்கின்றன.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
இராக்கில் தீவிரவாதத் தாக்குதல்களால் அரசு நிர்வாகம் அடியோடு சீர்குலைத்துவிட்டது. நிவாரணப் பணிகளைக்கூட மேற்கொள்ளமுடியவில்லை. அகதிகள் நிலைமை பரிதாபகரமானதாக உள்ளது. இராக்கின் உள்நாட்டுப் போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியுள்ள நமது பொருளாதாரத்தை இது நிச்சயம் பாதிக்கும். பெட்ரோல் விலையேற்றம் நேரடியாகப் பொதுமக்களைப் பாதிக்கும். உள்நாட்டுப் போரால் பல லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி தவிக்கின்றனர். அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் நிலைமை இன்னும் மோசம். ஏராளமான இந்தியர்கள் இராக்கில் இன்னமும் உள்ளனர். அவர்களில் பலர் தனியார் நிறுவனங்களில் ஒப்பந்தத்தின்பேரில் வேலைசெய்பவர்கள். எந்த நிமிடமும் சேமிப்புகள் பறிக்கப்பட்டு அகதிகளாக அவர்கள் வெளியேறலாம். இப்போதே பலர் வெளியேறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்திய முஸ்லிம் இளைஞர்கள் இந்த ஜிகாதியில் பங்கு கொள்ள விசாவுக்கு விண்ணப்பித்திருப்பது அபாயத்தின் அறிகுறி. இந்தியா தங்கள் பக்கம் இருக்கிறது என்று உலகை நம்பவைக்க ஐஎஸ்ஐஎஸ் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இது இடமளிக்கும். உலகின் மிக ஆபத்தான மனிதராக அபுதுவாவை மேற்கத்திய ஊடகங்கள் அடையாளம் காட்டுகின்றன. வீரமும் அறிவும் ஒருங்கே அமைந்திருக்கும் தீவீரவாதத் தலைவர் என்பதால் அமெரிக்கா இவரை இன்னுமொரு பின்லேடனாகவே பார்க்கிறது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவிலிருக்கும் இஸ்லாமியர்களை அவர்களுடைய ஆதரவாளர்களாகவே பார்க்கிறது. இந்திய அரசின் மென்மையான போக்கையும் இவர்கள் சாதகமாகவே பார்க்கிறார்கள். எனவே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இந்திய அரசு தவறினால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையாக இது வளர்ந்துவிடக்கூடும்.
*****
  • 2003ல் அமெரிக்காவும் தோழமை நாடுகளும் இராக்கை ஆக்கிரமித்த அதே வேகத்தில் இந்த இயக்கம் பாக்தாத்தை நெருங்கிவந்துகொண்டிருக்கிறது.
  • ஐஎஸ்ஐஎஸ் அல் காயிதாவைவிடவும் ஆபத்தானது என்று சிலர் கருதுகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் இயங்கிவந்த பொகோ ஹரம் போன்ற உள்ளூர் தீவிரவாதக் குழுக்களுடன்தான் இந்த இயக்கத்தை ஒப்பிடமுடியும் என்றும் அவர்கள் சொல்கின்றனர்.
  • ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை முறியடிக்கும் திறன் மட்டுமல்ல எதிர்த்து நின்று போவராடும் திறனும் பலமும்கூட இராக் ராணுவத்திடம் இல்லை. பின்வாங்கிச்செல்லும் இராக் ராணுவத்தினரிடம் இருந்து ஆயுதங்களைக் கைப்பற்றி தன் பலத்தை இந்த இயக்கம் பெருக்கிகொண்டுள்ளது.
  • ஐஎஸ்ஐஎஸ் இதுவரை ஈட்டியுள்ள வெற்றிக்கு முதன்மையான காரணம் செயலிழந்தும் அதைவிட அச்சமூட்டும்வகையில் நம்பிக்கையிழந்தும் காணப்படும் இராக் ராணுவம்தான்.
  • உள்ளூர் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்தது இந்த இயக்கத்தின் இன்னொரு முக்கிய பலம்.
  • பலரும் நினைப்பதைப் போல் ஐஎஸ்ஐஎஸ் இஸ்ரேல்மீது தாக்குதல் தொடுக்காது என்று சிலர் உறுதியாக மறுக்கின்றனர். சன்னி இஸ்லாமிய சமூகத்தின் ஏகப் பிரதிநிதியாக மாறுவது மட்டும்தான் இந்த இயக்கத்தின் நோக்கம், இஸ்ரேலுடன் மோதுவது அல்ல என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
ரமணன் | August 18, 2014 at 12:21 pm | Categories: அரசியல்உலகம் | URL:http://wp.me/p2eZn6-155
Comment   See all comments

12/7/14

கறுப்பு பணத்தின் உண்மையான கலர்


ஆழம் ஜூலை இதழலில் எழுதியது 



பதவி ஏற்றதும் பஜக அரசு செய்த முதல் காரியம். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய கருப்பு பணத்தை  கண்டுபிடித்து வெளிகொண்டுவர ஒரு  தனி சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது  தான்.  கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட இந்த விஷயத்திற்காக முந்திய அரசில் எதிர்கட்சியாக இருந்தபோது பஜக வலுவாக போராடிக்கொண்டிருந்தது.  இந்த அறிவிப்பு பரவலாக வரவேற்க பட்டாலும் இந்த சவாலான விஷயத்தை சாதிக்க  புதிய அமைப்புகளும் அறிவிப்புகளும் மட்டும் போதாது. மோடியின் அரசுக்கு ஒரு அரசியல்  துணிவு (POLITICAL WILL) இருந்தால் மட்டுமே இதைச்சாதிக்க முடியும். மக்கள் செல்வாக்கும், பாராளுமன்றத்தில்  மிகப்பெரிய மெஜாரிட்டியும் இருக்கும் இந்த அரசுக்கு அத்தகைய அரசியல் துணிவு இருக்குமா? இருந்தாலும் அதை கட்சி அரசியல் எல்லைகளை தாண்டி நாட்டின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்துமா? இந்திய அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயக்கும் கார்பேர்ட்களும், மிகசக்திவாய்ந்த செல்வந்தர்களும்  சமப்ந்த பட்ட இந்த விஷயத்தை ”கார்ப்ரேட் பிரண்டிங்” என கருதப்படும் மோடியின் ஆட்சி எவ்வளவு கடுமையாக கையாளும்? என்ற கேள்விகளுக்கான விடையை பொறுத்து தான் இந்த விஷயத்தில் வெற்றி அமையும்.
சிறப்பு புலானய்வு குழு அமைக்க பட்டதை பிஜெபியின் சாதனையாக சொல்ல முடியாது. காரணம் இந்த குழு உச்சநீதிமன்ற ஆணைக்கேற்ப அமைக்கபட்ட ஒரு குழு.  2009ல் வழக்கறிஞர் ஜெத்மலானி, கோபால் சர்மா,பேராசிரியர் தத்தா,கேபிஎஸ் கில் திருமதி வைத்த்யா ஆகியோர் இணைந்து கறுப்பு பண விவகாரத்தில் யூபிஏ அரசு மிக மெத்தனமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. அதைச்செய்ய கட்டளை இடவேண்டுமென்று ஒரு வழக்கை உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்திருந்தனர்.
உச்ச நீதி மன்றகண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு என்பது  சிலகாலம் முன்பு உச்சநீதி மன்றம் கண்டுபிடித்திருக்கும் ஒரு புதிய விஷயம். இப்படி அமைக்க சட்டபிரிவுகள் இல்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கிழ் ஏற்படுத்த படும் ஒரு நிர்வாக அமைப்பு. அந்தமாதிரியான ஒரு  புலானாய்வை கோரியது ஜெத்மலானி குழு.  யூபிஏ அரசு சட்டபுத்தகத்தின் ஒட்டைகளை யெல்லாம் ஆராய்ந்து அப்படி ஒரு குழு அமைப்பதை தவிர்த்து அல்லது தாமத படுத்திகொண்டிருந்தது. இறுதி தீர்ப்பில் அப்படி ஒரு குழு அமைக்கபடவேண்டும் என ஆணையிட்டதை எதிர்த்து அப்பீல் செய்திருந்தது. அப்பீல்லிலும் உச்சநீதி மன்றம் குழு  அமைப்பதை உறுதி செய்து, அதை அறிவிக்கும்படி அரசுக்கு ஆணையிட்டிருந்தது.  பொறுப்பேற்ற புதிய அரசு அந்த ஆணையின் அடைப்படையில் தான் இந்த சிறப்பு புலானய்வு குழுவை அமைத்திருக்கிறது. அதாவது பிஜேபி தனிப்பெருபான்மையுடன் ஆட்சிக்கு வராவிட்டாலும் அல்லது யார் ஆட்சிக்கு வந்திருந்தாலும்  இந்த குழு அமைக்க பட்டிருக்கும்.
எவ்வளவு கறுப்பு பணம் இருக்கிறது?
ஒரு விடை தெரியாத கேள்வி இது. முதலில் இதை சரியாக கணக்கிட்டு உறுதி செய்ய வேண்டும்.  2012 மே மாதம் நாடாளுமன்ற கூட்ட தொடரின் கடைசி நாளன்று அன்றைய நிதி அமைச்சர் பிராணப் முகர்ஜி கறுப்பு பண நிலை குறித்து ஒரு 100 பக்க வெள்ளை அறிக்கையை  அதிரடியாக தாக்கல் செய்தார், அரசு எடுத்த பலமுனை நடவடிக்கை 5 அம்ச திட்டம் என பல விஷயங்களை பேசிய அந்த அறிக்கையின் முன்னுரையில் சொல்லப்பட்ட விஷயம். இது. ”நாட்டின் மூன்று முக்கிய உளவு நிறுவனங்கள் எவ்வளவு முயன்றும் உதேசமாக எவ்வளவு கறுப்ப பணம் இருக்கிறது என்பதை கணுபிடிக்க முடியவில்லை.”
இதற்கிடையே, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ரூ.25 லட்சம் கோடிக்கு மேல் கருப்பு பணம் பதுக்கி இருப்பதாக, சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங் 2011 பிப்ரவரி மாதம் தகவல் வெளியிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ரூ.25 லட்சம் கோடியை இந்தியர்கள் பதுக்கி உள்ளனர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று இந்தியாவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் மறுப்பு தெரிவித்தது. அதன்பிறகு இந்த விவகாரம் கிடப்பில் போடபட்டது
தொடர்ந்து ஒரு ஜெர்மானிய .வங்கி தங்களிடம் பெரிய அளவில் கணக்கு இருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியலை அரசுக்கு தந்திருக்கும் செய்தி கசிந்திருந்ததால் அதை பாராளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று அன்றைய எதிர்கட்சியான பிஜெபி குரல் எழுப்பி கொண்டிருந்தது. ஆனால் வெள்ளை அறிக்கையில் இதுபற்றி அரசு எதுவும் சொல்லவில்லை.
எவ்வளவு  இந்திய பணம் கறுப்பு பணமாக  வெளிநாட்டில் பதுக்க பட்டிருக்கும் என்பதை  ஆய்வாளர்கள் பலவகைகளில் கணிக்க முயற்சிதிருக்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக  தங்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைப்பது என்பது இந்தியாவிற்கு மட்டும் உரிய விஷயமில்லை. உலகமயமான இந்த விஷயத்தை 1999லிருந்து 2007 வரை  162 நாடுகள் இப்படி செய்திருக்கின்றன என்கிறது உலகவங்கியின்  ஒரு அறிக்கை. நாட்டின் மொத்த GDP யில் 20 முதல் 34 % வரை இது இருக்கிறது. இந்தியாவில் 20 முதல்-23 % வரை இருக்கலாம் என்கிறது இந்த அறிக்கை.(நமக்கு அண்ணன் கள் இருக்கிறார்கள்). முந்திய அரசின் வெள்ளை அறிக்கை இந்த புள்ளிவிபரங்களை மறுக்க வில்லை. இந்த மதிப்பீட்டின் படி பார்த்தால்  குறைந்த பட்சம்  40 ஆயிரம் கோடிக்கும் மேல் கருப்பு பணம் இருக்கிறது.  இதன் சொந்தகார்கள் அடையாளம் காணப்பட்டு, பணத்திற்கான வரியை வசூல் செய்தபின் அவர்கள் தண்டிக்கபட வேண்டும்.
வெளி நாட்டில் மற்ற இடங்களை விட சுவிஸ் நாட்டில் தான் அதிக வெளிநாட்டினர் பணம் வைத்திருக்கின்றனர். அந்த நாட்டின் வங்கி விதிகளும், ரகசியம் காக்கபட வேண்டியகடுமையான சட்டங்களும் ஒரு காரணம். சமீபத்திய சர்வ தேச நெருக்கடிகளுக்கு பின்னர் சுவிஸ் தேசிய வங்கி நிர்வாகம் ஆண்டு தோறும் நாடுகள் வாரியாக தங்கள் நாட்டு வங்கிகளில்  இருக்கும் கணக்குகளின் மொத்த தொகையை அறிவிக்கிறது. இந்த மாதம் 2013ம் ஆண்டுக்கான  கணக்கு விபரங்களை அறிவித்திருக்கிறது. இந்தியர்கள் வைத்திருக்கும் பணம் 14000 கோடி.. ஆச்சரியம் என்னவென்றால் இது கடந்த ஆண்டைவிட 40% அதிகம். 2010-11 ஆண்டுகளில் கறுப்பு பணம் பற்றி அரசாங்க அறிவிப்புகள், பாராளுமன்றவிவாதங்கள் இருந்த காலத்தில் கணிசமாக குறைந்திருந்த தொகை இது. கடந்த ஆண்டு மெல்ல இது அதிகரித்திருக்கிறது,
கறுப்பு பணத்தை ஒழிக்க இதுவரை எடுக்கபட்ட முயற்சிகள்
1947லிருந்து இன்றுவரை 40க்கும்மேற்பட்ட கமிஷன்கள் அமைக்கபட்டு,  இந்த 65 ஆண்டுகளில் பல் கோணங்களில் அலசி ஆராயபட்ட விஷயம் இது. கறுப்பு பணத்தின் பிறப்பு, பரிமாற்றம், பதுக்கல் என பல்வேறு பரிமாணங்களில் ஆராயபட்டிருக்கும் இந்த விஷயத்தில் பல ஆயிரகணக்கான ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமானது வாஞ்ச்சு கமிட்டியின் அறிக்கை. அருமையான யோசனைகள் சொல்லபட்ட இந்த அறிக்கை முழுமையாக ஏற்க படவில்லை. சில நல்ல யோசனைகள் ஏற்க பட்டன. ஆனால் காலபோக்கில் அவைகள் நீர்த்துபோயின. இப்படி யோசனைகள் பல இருந்தும் அரசாங்கங்கள் செயல் படுத்த முடியாமல் போனதின் காரணம் அந்தந்த அரசுகளுக்கு தேவையான அரசியல் துணிவு இல்லாதது தான். சம்பந்த பட்டவர்களினால் ஆட்சிக்கும் கட்சிக்கும் வரும் ஆபத்துக்களை விட இந்த கறுப்பு பணம் பிரச்சனை இருந்து தொலையட்டும் போன்ற உணர்கள் தான்

இந்த புலானாய்வு குழு எவ்வலவு வலிமையானது,?
2ஜி வழக்கில் ஒரு குழு சிறப்பாக செயலாற்றியதால் இப்போது உச்ச நீதிமன்றம் இது போன்ற  குழுக்களை நியமிக்கிறது. ஆனால் கோல்கேட் விஷயத்தை அவர்கள் கையாண்டைதை பார்த்த போது எல்லா குழுக்களும் ஒரே தரத்தில் இருக்க போவதில்லை என்பது புரிந்தது. கறுப்பு பண விவகாரத்திற்கு  அமைக்க பட்ட குழுவில்  தலவர்  உட்பட 13 பேர்கள் உறுப்பினர்கள். நீதிபதி எம். பி ஷா தலமையைலான இந்த குழுவில் உபதலைவர் தவிர, மற்றவர்கள் அனைவரும். துறைஅதிகாரிகள். ரிசர்வ் வங்கி,  அமுலாக்க பிரிவு, உளவுத்துறை வருமானவரித்துறை, போதைமருந்து கடத்தல் தடுப்பு, பொருளாதரா குற்ற தடுப்பு துறை போன்றவற்றின் செயலர்கள். இவர்கள் எப்போது வேண்டுமானலும் பதவி உயர்வு, மாற்றம் என்ற நிலையிலிருப்பவர்கள்..  இப்படி இந்த குழுவின் அமைப்பை பார்க்கும் போதே உடனடி செயல்படக்கூடியது என்ற எண்ணம் எழவில்லை. பிரதமர் அறிவித்தவுடன்   சம்பிரதாயமாக முதல் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
இந்த அதிகாரிகள் அனைவரும் ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையில் தீவீரமாக இருந்து அரசு துணிவுடன் செயல்படதாதை கண்டு அல்லது நிர்பந்தம் காரணமாக ஒதுங்கியிருப்பவர்கள்.  விஷயத்தின் முழு கனத்தையும் அதன் பின்னால் உள்ள அரசியலையும் நன்கு அறிந்தவர்கள். ஆனால் பல்துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு என்பது இந்திய அதிகார வர்கத்தினரிடையே தோற்று போன ஒரு விஷயம்.  மேலும் இந்த குழுவின்  செயல் திட்டம் அறிவிக்க படவில்லை. அவை வெளிப்படையாக அறிவிக்க படுமா என்றும் தெரியவில்லை. இவர்களுக்கு அளிக்கபட்டிருக்கும்  பொறுப்புகள்(terms of Reference) பற்றியும் தெளிவாக பேசப்படவில்லை. உதாரணமாக ஜெர்மன் அரசு அளித்த பட்டியலில் உள்ள 26 பேர்களில் விசாராணை நடத்தி அதில் 8 பேர்களுக்கு போதிய ஆவணங்களும் ஆதாரங்களும் இல்லாதாதால்  கைவிடபட்டு மற்றவர்களிம் மீது விசாராணை தொடர்ந்து கொண்டிருப்பதாக முந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த பெயர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கிழ் விண்ணபித்தவருக்கு மறுக்கபட்டது.  உச்ச நீதி மன்றத்தில் இரண்டு சீலிட்ட கவர்களில்  தனித்தனியாக அந்த பெயர்களை கொடுத்த அரசு மனுதாரருக்கு மறுத்துவிட்டது. மனுதாரருக்கு வழங்க ஆணையிட்டபோதும் இது தகவல் உரிமைக்கு அப்பாற்பட்டது என சொல்லி அப்பீல் செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்த புதிய குழுவிற்கு  தனியாக ஆணை இடப்படாவிட்டால் தவிர அந்த 8 பெயர்களை ஆராய முடியாது.  வழக்குகள் அவசியமில்லை என கைவிடபட்ட பெயர்களில் ரிலயன்ஸ் குழும இயக்குனர்கள் பெயர்கள் இருப்பதாக, இந்த செய்தி பரபரப்பாக இருந்த காலத்தில் மீடியாவில் பேசபட்டிருக்கிறது.
இவைகளையெல்லாம் பார்க்கும் போது மோடி அரசு உச்சநீதிமன்ற ஆணையை பயன்படுத்திகொண்டு  முந்திய அரசைப்போல தாமதபடுத்தி அவபெயரை  பெற விரும்பாமல் மக்களின் செல்வாக்கை பெற அவசர கதியில் இப்படி ஒரு  வலுவில்லாத குழுவை தெளிவில்லாத கட்டளைகளுடன் அமைத்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.




கருப்பு பணத்தில்தான் எத்தனை வண்ணம்?
 வருமான, அல்லது மற்ற வரிகளை செலுத்த விரும்பாமல் நடக்கும் எந்த ஒரு  செயல் பாட்டிலும் கருப்பு பணம்  பிறக்கிறது. இது சிறிதும் பெரிதுமாக எல்லா மட்டங்களிலும் நுழைந்திருக்கிறது. காலப்போக்கில் இது பலராலும் ஏற்றுகொள்ளபட்ட ஒரு விஷயமாகி வளர்ந்து கொண்டே யிருக்கிறது.. கடந்த 50 ஆண்டுகளில் வரிகள் மிக்குறைக்க பட்டிருக்கின்றன. வரிச்சலுகைகள் மிக அதிகமாகியிருக்கின்றன. ஆனாலும் இந்த பழக்கமும் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. சுமூகம் அங்கீகரித்தவிட்ட செயலை அழிக்க சட்டங்களால் மட்டும் முடியாது.
வரிஏய்ப்புக்கு கடுமையான சட்டங்கள் இங்கே இல்லை.  நீண்டகால சட்ட போராட்டங்களுக்கு பின்னர் வழங்கும் தண்டனைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதால் பிரச்சனை தொடர்கதையாகிறது. இன்றுள்ள சட்டங்களின் படி கணக்கு சொல்ல முடியாத பணம் கைபற்ற பட்டால் வரி மற்றும் அபராதம் செலுத்தினால் (இது மூன்றில் ஒரு பங்கு அளவிற்குதான் வரும்) மீதிப் பணம் வெள்ளை பணமாகிவிடும்.
 வரி ஏய்ப்பை தவிர ஏற்றுமதியில் வர வேண்டிய வருமானத்தை குறைவாக மதிப்பீட்டு  இந்தியாவில் பெற்று கொண்டு மீதியை அந்த வெளிநாட்டிலேயே நிறுத்திகொள்வதும் அதே போல் இறக்குமதிக்கு செலுத்தவேண்டிய அன்னிய செலாவாணியை அதிகம் செலுத்தி பணத்தை வெளிநாட்டில் சேமிப்பது போன்ற பல வழிகளில்  கருப்பு பணம் உருவெடுக்கிறது.  இந்த வழிமுறைகள் அனைத்தும் நமது அரசு அதிகாரிகளுக்கு நனறாக தெரியும் என்பதும் அவர்களில் பலர் இவைகளை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதும் தான் உண்மை.
90களுக்கு பின் இந்தியாவின் புதிய பொருளாதார கொள்கைகளின் மூலம் கதவுகள் திறக்க பட்டவுடன் வெளிநாட்டில் பதுக்கபடும் கருப்பு பணத்தின் அளவு பலமடங்கு அதிகரித்துவிட்டது. இன்று நம்ப முடியாத அளவில்  வளர்ந்து பெருகி நிற்கிறது.
FDI என்ற நேரிடையான  அன்னிய முதலீடு திட்டம் பிறக்கும் போதே இந்த கருப்பு பணம் உருவாதற்கான் வழியுடன் பிறந்த ஒரு திட்டம். இது தற்செயலா, திட்டமிடபட்ட தந்திரமா என்பது ஒரு புரியாத புதிர்,  நமக்கு வந்த அன்னிய முதலீடுகளில் 50%க்கு மேல்  எந்த வரிகளும் இல்லாத சில குட்டி நாடுகளிலிருந்துதான். இந்த நாடுகளின் பொருளாதார சட்டங்களும் நிதி வங்கி அமைப்புகளும் விசித்திரமானவை. இங்கு அதிக கஷ்டங்கள் இல்லாமல் கணக்குகள் திறக்கலாம். அதிலிருந்து எங்கு வேண்டுமானலும் எவ்வளவு வேண்டுமானலும் பணத்தை மாற்றலாம். இந்த வசதிகளினால் இந்தியாவிற்கு  இந்த நாடுகளிலிருந்து  மூதலீடுகள் கொட்டியது.  இன்னும் கொட்டிகொண்டிருக்கிறது. இவற்றி பெரும்பாலானவை இந்தியர்களின் பணம்- கணக்கில் வராத கருப்பு பணம்- உலகின் பல மூலைகளிலிருந்து இந்த குட்டி தேசங்களுக்கு அனுப்ப பட்டு அங்கிருந்து மூதலீடாக வடிவம் எடுத்து ஒரு லெட்டர் பேட் கம்பெனி மூலம் இங்கே அனுப்ப பட்டவை. இதில் முக்கியமான விஷயம் முதலீடு செய்பவர்கள் நேரிடையாக செய்யாமல் அங்கைகரிக்க பட்ட ஏஜெண்ட்கள் மூலம் செய்யாலாம். அதனால்  உண்மையில்பணம் அனுப்பியது யார் என்ற தெரிய வாய்ப்பில்லை.  பணம் அனுப்ப பட்டு முடிந்தவுடன்  அனுப்பிய  அந்த நிறுவனம் மூடபட்டதாக பதிவாகிவிடும்.
நம் நாட்டின் அரசியல் வாதிகள்  தொடரும் முதலீடுகளின் புள்ளி விபரங்களை காட்டி மக்களை மகிழ்விக்கிறார்கள். கருப்பு பணத்தின் சொந்த கார்கள் தங்கள் பணம் பத்திரமாக தாய் நாட்டில் பாதுகாப்பாக புது வடிவம் பெற்றதை கண்டு மகிழ்கிறார்கள். எல்லாம் சரி? எப்படி வெளிநாட்டுக்கு இந்த கருப்பு பணத்தை அனுப்பு முடிகிறது என்கிறீர்களா? உலகிலேயே இதற்காக மிக பாதுகாப்பான ”ஹவாலா” முறையை கண்டுபிடித்து சிறப்பாக செயல் படுத்தும் சமார்த்தியசாலிகள் இந்தியர்கள் தான். கொடுக்கபடும் உள் நாட்டு பணத்திற்கு ஈடாக வெளிநாட்டு பணம் உங்கள் வெளிநாட்டு கணக்கில் வரவு வைக்க மிக பெரிய அளவில் சில நிறுவனங்கள், அன்னிய நாட்டு வங்கிகிளைகளுடன் இயங்கிகொண்டிருக்கின்றன.  இவர்கள் கையாண்ட பணத்தின் அளவு பிரமிக்கவைப்பவை.  சில நடவடிக்கைகள கண்டு பிடிக்கபட்டபின்னரும் ( காண்க HSBC வங்கி- ஆழம் ஜனவரி  இதழ்)  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க படாத விஷயம் இது.

இம்மாதிரி பணபதுக்கலில் நேரிடையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக  கட்சி பேதமின்றி எல்லா அரசியல் கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதால் எந்த அரசு வந்தாலும் இது முழுவதுமாக ஒழிக்கபட வழியில்லை என்று ஒரு கருத்தும் இருக்கிறது. 





19/3/14

தெலிங்கானா மலர்ந்தது.


ஆழம்  மார்ச் மாத இதழில் எழுதியது.


New post on ஆழம்

தெலங்கானா மலர்ந்தது

by ரமணன்
இந்திய நாடாளுமன்றம் இதுவரை சந்திக்காத சில அபூர்வமான காட்சிகளுக்குப் பின்னர் ஒரு வழியாகப் 29வது மாநிலமாக தெலங்கானா பிறந்துவிட்டது.  ஐம்பது ஆண்டு கால விவாதங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிறகு தெலங்கானா பிரச்னை ஒரு முடிவை நோக்கி நகர்ந்திருக்கிறது. துயரங்களையும் கசப்புகளையும் கொண்டு வராத பிரிவினை ஏதேனும் வரலாற்றில் பதிவாகியுள்ளதா என்ன? தெலங்கானாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
இந்திய அரசியல் களத்தில் இதற்கு முன் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன, புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் தெலங்கானா அவற்றில் இருந்து வேறுபடுகிறது. பதிவாகியுள்ளபடி 904 மரணங்கள் தெலங்கானாவுக்காக நிகழ்ந்துள்ளன. 100 கோடிக்கும் மேல் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. மூன்று புதிய கட்சிகள் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தின. வேறு எந்த மாநிலப் பிரச்னையின்போதும் இவ்வாறு நிகழவில்லை.
ஒரு புதிய மாநிலம் சட்டபூர்வமாக பிறப்பது என்பது  ஒரு சரித்திர நிகழ்வு. ஆனால் தெலங்கானா நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அழிக்கமுடியாத ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியபிறகே உதயமாகியிருக்கிறது. ஆந்திரப் பிரசேம் மறுச்சீரமைப்பு மசோதா உருவான கதை கிட்டத்தட்ட போர்க்களத்தை நினைவுபடுத்துகிறது. 13 பிப்ரவரி 2013 அன்று தெலங்கானா தொடர்பான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது இரு அவைகளிலும் கூச்சலும் குழப்பமும் எழுந்தது. ஆந்திரப் பிரிவினையைத் தடுக்க முயன்ற ஒரு காங்கிரஸ் எம்.பி கையோடு கொண்டு வந்திருந்த மிளகு ஸ்ப்ரேயை அடித்தார். சிலரிடம் கத்தி இருந்தது. மசோதாவை வாசிக்கவிடாமல், விவாதங்களை நடத்தவிடாமல் இவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களும் அமர்க்களங்களும் சபாநாயகர் மீராகுமார் சொன்னதைப் போல் வெட்கித் தலை குனிய வைக்கக்கூடியவை.
ஒரு கோரிக்கையாக இருந்த தெலங்கானா பின்னர் சட்டமாக உருவான தருணங்களில் தொலைக்காட்சி காமிராக்கள் இயங்கவில்லை. இதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று சொல்லப்பட்டாலும் இதனை பலர் ஏற்கத் தயாராக இல்லை. இதற்கிடையில், மிளகு தூவிய விஜயவாடா தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் லகடபதி ராஜகோபால் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தெலங்கானா மசோதாவுக்கு எதிராக சீமாந்திரா உறுப்பினர்கள் நீண்ட காலமாக கட்சி வித்தியாசமின்றி குரல் கொடுத்து வருவதாக இவர் கூறியிருக்கிறார்.
தெலங்கானாவின் மற்றொரு முக்கிய அம்சம் இது. நீண்ட கால போராட்டத்துக்குப் பிறகு தெலங்கானாவை ஆந்திராவில் இருந்து பிரித்தெடுப்பதற்கு காங்கிரஸ் ஒப்புதல் கொடுத்திருந்தாலும் இன்னமும் கட்சிக்கு உள்ளேயே இந்த முடிவுக்கு முழுமையான ஒப்புதல் கிடைக்கவில்லை. உச்சகட்டமாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆந்திர முதல்வரே இந்த முடிவை எதிர்த்து ராஜிநாமா செய்திருக்கிறார். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான பாஜக இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. விசித்திரம்தான், இல்லையா?
காலச்சுவடுகள்
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போதே தெலங்கானா தனி மாநில கோரிக்கை உயிர் பெற்றுவிட்டது. 1946 தொடங்கி 1951 வரை ஹைதராபாத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன்  நடைபெற்ற விவசாயிகள் எழுச்சி இந்தியாவின் பார்வையை தெலங்கானாவை நோக்கி திருப்பியது. மத்திய அரசாங்கம் ராணுவத்தை அனுப்பி இந்த எழுச்சியை அடக்கியது. தெலுங்கு மொழி ஆந்திர மக்களை ஒன்றிணைக்கும், பிரிவினை கோஷத்தைக் காலப்போக்கில் அடக்கிவிடும் என்று பலர் நினைத்தாலும் அன்றைய பிரதமர் நேரு தெலங்கானாவின் இயல்பை நன்றாகவே அறிந்திருந்தார். விவாகரத்து உரிமை பெற்ற திருமணம் என்றே ஆந்திராவுடனான தெலங்கானாவின் இணைப்பை 1956ல் அவர் வர்ணித்தார்.
இருந்தும் அடுத்தடுத்து அமைந்த அரசாங்கங்கள் தெலங்கானா கோரிக்கையைப் புறந்தள்ளி அதனை ஒரு பிரிவினைவாதக் கோஷமாகவே கண்டனர். 2004ல் வலுவான அரசியல் பிரச்னையாக தெலங்கானா எழுந்தபோது, காங்கிரஸ் தனித் தெலங்கானா தருவதாக தேர்தல் பிரசாரத்தில் வாக்களித்தது. ஆனால் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும் வசதியாக இந்த வாக்குறுதியை மறந்துவிட்டது. அல்லது, வெறுமனே காலம் தாழ்த்திவிட்டது.
இனியும் அது சாத்தியமில்லை என்னும் விதமாக ஆந்திராவில் தெலங்கானாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பெரும் போராட்ட அலைகளும் ஆர்ப்பாட்டங்களும் எழுந்தபோது முடிவு எடுத்தே தீரவேண்டிய கட்டாயத்துக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. வேறு வழியின்றி, தனித்தெலங்கானாவை காங்கிரஸ் ஆதரிக்கவேண்டி வந்தது.  ஜூலை 2013ல் காங்கிரஸ் பிரிவினைக்கு ஆதரவாக முடிவெடுத்தது. அக்டோபர் 2013ல் மந்திரிசபை கூட்டத்தில் இது முடிவாக, டிசம்பரில் வரைவு மசோதா தயாரானது. கூடவே புதிய பிரச்னையும் தொடங்கியது.
ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மரணத்துக்குப் பின்னர் அவரது மகன் ஜெகன் விரும்பியபடி அவரை முதல்வராக்காமல் கிரண்குமார் ரெட்டியைத் தேர்ந்தெடுத்து முதல்வராக்கினார் சோனியா காந்தி. தெலங்கானா பிரிந்தால் காங்கிரஸ் செல்வாக்கு பறிபோகும் என்று கருதிய கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் மேலிடம் சொல்வதைக் கேட்க மறுத்தார். அதனால் மத்திய அரசின் வரைவு மசோதாவை மாநிலத்தின் சட்டசபையில் நிறைவேற்றாமல் திருப்பியனுப்பினார்.
அவரைப் பதவி நீக்கம் செய்து மற்றொரு முதல்வரை நியமித்து அவர்மூலம் மசோதாவை நிறைவேற்ற மத்திய காங்கிரஸ் தலைமையால் முடியவில்லை. கட்சிக்குள் பிளவைத் தவிர்க்கவே பொறுமை காத்தோம் என்று பேட்டியளித்தார் ப. சிதம்பரம். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்கமுடியாமல் போகவே, பிளவு பயத்தையும் மீறி மசோதாவில் உறுதியாக நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. மசோதாவை நேரடியாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவந்தது.
காரணங்கள், கணக்குகள்
ஏன் இந்த அவசரம்? ஒன்றுதான். வாக்கு வங்கி அரசியல். மசோதாவைக் கொண்டுவராமல் முன்னர் நாள்களைக் கடத்தியதற்கும், தாமதமாகக் கொண்டுவந்ததற்கும், ஆதரித்தற்கும், எதிர்த்ததற்கும், பின்னர் வலுவாக ஆதரித்ததற்கும்கூட வாக்கு வங்கிதான் காரணம். எதை எப்போது செய்தால் ஆதரவு கிடைக்கும், எதைச் செய்தால் கிடைக்காது என்னும் கணக்குதான் இங்கே காங்கிரஸுக்கு முக்கியம்.
இப்படி அவசரக்கோலத்தில் தெலங்கானா பிரச்னையைத் ‘தீர்த்து வைத்ததில்’ யாருக்கு என்ன லாபம்?
சற்று ஆழ்ந்து ஆராய்ந்தால், நமது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றுமே இந்த விளையாட்டில் கணக்குப் போட்டு ஈடுபட்டிருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும் பெரிய மாநிலம் ஆந்திரா. ஆனால் தெலங்கானாவுக்கு எதிரானவர்களும் ஆதரவாளர்களும் அதில் கிட்டத்தட்ட சரிசமமாகப் பிரிந்து கிடக்கிறார்கள்.  மொத்தமுள்ள 42 எம்.பி சீட்டுகளில் 31 காங்கிரஸ் வசமிருக்கிறது. அதில் 17 தெலங்கானா பகுதியிலும் 19 சீமாந்திராவிலும் இருக்கிறது. ஆக எப்படி முடிவெடுத்தாலும் ஒரு பகுதியை இழக்க நேரிடும்.
காங்கிரஸ் வேறு கணக்கு போட்டது. தெலங்கானாவை அறிவித்தால் அதற்காகப் போராடும் சந்திரசேகர் ராவ் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துவிடுவதாக முன்பு கூறியிருந்தார். காங்கிரசுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலை கிளம்பியிருக்கும் இந்த நேரத்தில் ஆந்திராவை முற்றிலும் இழந்துவிடுவோம் என்னும் அச்சத்தில் சந்திரசேகர் ராவின் டிஎஸ்ஆர் கட்சியின் (தெலங்கானா ராஷ்டிர சமிதி) ஆதரவுடன் 17 எம்.பி சீட்டுகளைத் தக்கவைத்துக்கொள்ள கணக்குப்போட்டது காங்கிரஸ். தெலங்கானா எதிர்ப்பு சீட்டுகளை இழக்க நேரிட்டாலும் இதை வைத்து சரிகட்டிவிடலாம் அல்லவா? சந்திரசேகர் ராவுக்கு ஆதரவு அளித்து அவரை முதல்வராக்கிவிட்டு பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் அவரது கட்சியை இணைத்துவிடலாம் அல்லவா?
காங்கிரஸ் எதைச் செய்தாலும் எதிர்க்கும் பாஜக ஏன் தெலங்கானா மசோதாவை ஆதரித்தது? அவர்கள் போட்ட கணக்கு இது. காங்கிரஸ் தெலங்கானா மசோதாவைக் கொண்டுவராமல் காலம் தாழ்த்தும் என்று நினைத்து வந்த பாஜக, தெலங்கானாவை எதிர்க்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவைப் பெற முயற்சி செய்தது. சந்திரபாபு நாயுடு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவும் செய்தார். தெலங்கானாவில் பெரும் வியாபார,தொழில் முதலீடுகள் செய்துள்ள சீமாந்திரா பகுதியினரின் ஆதரவு அவருக்குக் கிடைக்க சந்திரபாபு உதவுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிந்ததும் அவர்களைக் கடந்துசெல்லவும் முடிவெடுக்கப்பட்டது. பாஜக கூட்டணி பற்றி சந்திரபாபு நாயுடுவின் சமீபத்திய கருத்து இது. ‘தெலங்கானா விவகாரத்தில் பாஜக சரியான வாதங்களை முன்வைக்கவில்லை, இருப்பினும் கூட்டணி விவகாரங்களை உணர்ச்சிவசப்பட்டு முடிவு செய்து விட முடியாது.‘
காங்கிரஸின் கணக்கு வேறு மாதிரி திரும்பவே பாஜக விழித்துக்கொண்டது. காங்கிரஸ் முன்வைக்கும் தெலங்கானா மசோதாவை ஆதரிக்க மறுத்தால் அதையே காரணமாகச் சுட்டிக்காட்டி பழி போடப்படும் என்று பாஜக அஞ்சியது. தெலங்கானாவை ஆதரிக்க காங்கிரஸையும் சேர்த்து ஆதரிக்க முடிவு செய்தது. நாங்கள் ஆரம்பம் முதலே, அதாவது ஜன் சங் காலம் முதலே தெலங்கானா தனியாக இருப்பதையே விரும்பினோம் என்று தங்கள் ஆதரவுக்கு நியாயமும் கற்பித்தனர். மற்றொரு பக்கம் காங்கிரஸையும் தாக்கியது. காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாகவும் தேர்தல் ஆதாயம் தேடுவதாகவும் குற்றம் சுமத்தியது. எங்கள் தயவு இல்லாவிட்டால் மசோதா நிறைவேறியிருக்காது என்றும் சொல்லிக்கொண்டது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தலைவர் ஜெகனின் கணக்கு வேறு மாதிரியானது. என்னதான் ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காகப் போராடினாலும் உண்ணாவிரதம் இருந்தாலும் பிரிவினை தவிர்க்கமுடியாதது என்பது அவருக்குத் தெரியும். அவருடைய இலக்கு ஹைதராபாத் சட்டமன்ற முதல்வர் நாற்காலி. தெலங்கானா பிரிந்தாலும் சீமாந்திராவின் முதல்வராகும் வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்பது அவர் விருப்பம். இதற்கிடையில், தெலங்கானா மசோதாவை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளனர்.
மற்றொரு பக்கம், ரெட்டி பிரிவினர்களின் ஆதிக்கத்தில் இருந்து காங்கிரஸ் நழுவிக்கொண்டிருக்கிறது.
காங்கிரஸிலிருந்து பிரிந்துவரும் கிரண்குமார் ரெட்டி, தெலுங்கு தேசத்துடன் அணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்து வெல்ல முயற்சி செய்து வருகிறது.
இப்படி எல்லோரும் அவரவருக்குத் தோதான கணக்குகள் நிறைவேற காத்திருக்கிறார்கள். நம்முடைய அணுகுமுறையே சரியானது என்று ஒவ்வொருவரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கணக்கு யார் போட்டாலும், அதைச் சரிபார்த்து மதிப்பெண் போடப்போகிறவர்கள் மக்கள்தான்.
இனி என்ன?
  • அதிகாரபூர்வமாக ஆந்திரப் பிரவினை ஏப்ரல்&மே மக்களவைத் தேர்தல் முடிந்தபிறகே நடைபெறும். சரியான தேதியை மத்திய அரசு குறிக்கவேண்டும்.
  • மக்களவைத் தேர்தலும் ஆந்திர சட்டமன்றத் தேர்தலும் முன்பு நிகழ்ந்ததைப் போலவே நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
  • கிரண்குமார் ரெட்டியின் ராஜிநாமா ஏற்கப்பட்டு விட்டது என்றாலும் புதிய அரசு அமையும்வரை பொறுப்பில் நீடிக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஆனால் தற்போதைய நிலவரப்படி, ஆந்திராவில் ஆளுநர் ஆட்சியே அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
  • தெலங்கானா சாத்தியமானதைத் தொடர்ந்து நாட்டில் பிற மாநிலக் கோரிக்கைகள் வலுவடையும் என்னும் எதிர்பார்ப்பும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. 
  •  தெலங்கானா ஒரு பார்வை
  • பரப்பளவு 1.14 லட்சம் சதுர கிலோ மீட்டர்.
  • மக்கள் தொகை 3.5 கோடி (ஹைதராபாத் சேர்த்து).
  • மாவட்டங்கள் : அடிலாபாத், நிஜாமாபாத், கரிம்நகர், மேடக், வாரங்கல், ரங்காரெட்டி, கம்மம், நலகோண்டா, மஹபுக்நகர், ஹைதராபாத்.
  • தெலுங்கு, உருது ஆகியவை முக்கிய மொழிகள். சில பகுதிகளில் மராத்தியும் கன்னடாவும் பேசப்படுகின்றன.
  • இரும்பு, கரி உள்ளிட்ட இயற்கை வளங்கள் உள்ளன. மத்திய அரசும் ஆந்திர அரசும் இணைந்து நடத்தும் சிங்கரேனி கொலைரீஸ் இப்பகுதியிலுள்ள முக்கியப் பெரிய நிறுவனமாகும்.
  • புதிய மாநிலத்தின் முக்கியப் பிரச்னையாக மின்சாரம் இருக்கப்போகிறது என்கிறார்கள்.
  • கோதாவரி, கிருஷ்ணா இரண்டும் முக்கிய ஆறுகள். எண்ணற்ற பல ஏரிகளும் உள்ளன.
  • நக்ஸல் நடவடிக்கைகளின் களமாக இருந்த பகுதி.
ரமணன் | March 19, 2014 at 11:21 am | URL: http://wp.me/p2eZn6-ZX
Comment    See all comments
Unsubscribe to no longer receive posts from ஆழம்.
Change your email settings at Manage Subscriptions.
Trouble clicking? Copy and paste this URL into your browser:
http://www.aazham.in/?p=3841


14/2/14

மன்மோகன் சிங்

New post on ஆழம்

மன்மோகன் சிங் பாவங்களும் சிலுவைகளும்

by ரமணன்
பிரதமர் கனவு இல்லாத ஓர் அரசியல்வாதியைச் சுட்டிக்காட்டச் சொன்னால் நாம் திணறவேண்டியிருக்கும். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தொடங்கி சிறையில் இருக்கும் அந்தப் பழம்பெரும் அரசியல்வாதி வரை அனைவரும் பிரதமர் பதவியையே குறிவைத்து கனவு கண்டு வருகிறார்கள். ஒரே விதிவிலக்கு அந்தப் பதவியில் ஏற்கெனவே அமர்ந்திருக்கும் மன்மோகன் சிங். சமீபத்திய ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியுற்றதால் கலைந்துவிட்ட கனவல்ல இது. மாறாக, தொடக்கம் முதலே மன்மோகன் சிங் பதவியாசை இல்லாதவராகவே இருந்திருக்கிறார். இருந்தும் அவருடைய விருப்பத்துக்கு மாறாக சூழ்நிலைகள் அவரை இந்த  அளவுக்கு உயர்த்தியிருக்கின்றன. மீண்டும்,  அவர் விருப்பத்துக்கு மாறாக அதே சூழ்நிலைகள் அவரை இப்போது படுகுழியிலும் தள்ளியிருக்கின்றன. இதற்கு ஒருவகையில் அவரும்கூட காரணம். இந்திய அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு சிக்கலான, விநோதமான கதை அவருடையது.
1991ல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி நரசிம்ம ராவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அப்போது மன்மோகன் சிங் அரசியல் களத்திலேயே இல்லை. இருந்தும் அவரைச் சென்று சந்தித்து, பிரதமர் உங்களை நிதியமைச்சராக நியமிக்க விரும்புகிறார், தயாராக இருங்கள் என்று காபினட் செயலர் சொல்லியிருக்கிறார். மன்மோகன் சிங் இதை நம்பவில்லை. மறுநாள்  நரசிம்ம ராவ் நேரடியாக மன்மோகனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நேற்று ஏன் என்னைச் சந்திக்க நீங்கள் வரவில்லை? மதியம் அசோகா ஹாலுக்கு வந்துவிடுங்கள். பதவியேற்புக்குத் தயாராகிவிடுங்கள். அப்போதும் மன்மோகன் சிங்குக்குப் புரியவில்லை. எதற்காக இந்தத் திடீர் அழைப்பு? எதற்காகப் பதவி நியமனம்? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே நிதித்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யப்படுகிறார் மன்மோகன் சிங்.
தான் அரசியல்வாதியான கதையை 2005ல் பிபிசிக்கு விவரித்தபோது அவர் இதனைப் பகிர்ந்துகொண்டார். ஓர் அரசியல்வாதியாக இல்லாமல் இருந்தும் நேரடியாக நிதியமைச்சராக மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்கமுடியும். அவருடைய கூர்மையான அறிவுத் திறன்.
மிக எளிமையான குடும்பப் பின்னணி அவருடையது. பள்ளியிலிருந்தே எல்லா வகுப்பிலும் முதல் மாணவர். அதனால் கிடைத்த ஸ்காலர்ஷிப்புகள் வாயிலாக கல்லூரியில் இணைந்தார். பிஏ பல்கலைக்கழக முதல் மாணவனாக தங்கப் பதக்கம் வாங்கியதால் எம்ஏ படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கும் ஒரு தங்கப் பதக்கம் வாங்கியதால் லண்டன் கேம்பிரிட்ஜில் முழு ஸ்காலர்ஷிப்புடன் இடம் கிடைத்தது. அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று இந்தியா திரும்பினார். தனது மாநிலமான பஞ்சாபில் ஒரு கல்லூரியில் இணைந்தார். இதுதான் அவருடைய கனவு.
மூன்றாண்டு பேராசிரியர் பணிக்குப் பின்னர், மேற்கொண்டு படிக்கும் உந்துதலில் மன்மோகன் 1960ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பில் இணைந்தார். அதையும் வெற்றிகரமாக முடித்து இந்தியா திரும்பி டெல்லியில் தன் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். லண்டனிலுள்ள  கேம்பிரிட்ஜ் பேராசிரியரின் சிபாரிசால் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான யுஎன்டிஏசிடியில் ஆய்வுப் பணி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பணியைத் திறம்படச் செய்துவந்த சமயத்தில் எல்.என். மிஸ்ரா என்ற மத்திய அமைச்சரை அவர் அடிக்கடி சந்தித்து வந்தார். மன்மோகனின் திறமையைக் கூர்ந்து கவனித்த அவர் தன் அமைச்சரவைக்கு ஆலோசகராக வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
அப்பொதெல்லாம் அரசாங்க ஆலோசகர் என்பது இன்றுபோல செயலாளருக்கு நிகரான பொறுப்பல்ல. ஆனாலும் ஆய்வுகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மன்மோகன் இந்த அழைப்பை ஏற்றார்.  அரசியல்வாதியாக இல்லாமலேயே பின்னாளில் அமைச்சரானதைப்போல ஐஏஎஸ் அதிகாரியாக இல்லாமலேயே அதிகாரிகள் வர்க்கத்தில் அவர் அன்று நுழைந்தார். தொடர்ந்து பல அமைச்சகங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றி பலருடைய கவனத்தை ஈர்த்தார்.
ஒரு கட்டத்தில் நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அவருக்கு உயர்வு கிடைக்கிறது. 1976ல் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்படுகிறார். இது அவருடைய வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய திருப்பம். நாட்டின் பொருளாதார நிலைமை சீராகவில்லை, அதை சரிசெய்ய மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று துணிச்சலுடன் அரசுக்குச் சொன்ன முதல் ரிசர்வ் வங்கி கவர்னர் இவரே. அதனாலேயே அந்த வழிமுறைகளை அரசுக்கு அதிகாரபூர்வமாகச் சொல்ல திட்ட கமிஷனின் உதவித் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி நிதியமைச்சர், பிரதமர் ஆகியோரிடம் நெருக்கத்தை வளர்க்க உதவியது.
அதே சமயம், இந்தியா கிட்டத்தட்ட திவாலாகிக்கொண்டிருக்கிறது என்று அறிவிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் மன்மோகன் சிங். பொறுப்புக்கு வந்தவுடனேயே மிக மோசமான ஒரு செய்தியை அறிவிக்கவேண்டிய நிர்பந்தம். மிகப் பெரிய அடிப்படை மாற்றங்களைக் கொள்கையளவில் கொண்டுவந்தாலொழிய மீள்வது சிரமம் என்பதே மன்மோகன் சிங்கின் ஆலோசனையாக இருந்தது. அதை அவர் தயங்காமல் நரசிம்ம ராவிடம் பகிர்ந்துகொண்டார். நரசிம்ம ராவும் தயாராகவே இருந்தார். தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமான உரிமை மன்மோகனுக்கு வழங்கப்பட்டது.
சுதந்தர இந்தியா சந்தித்த மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சியை மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். உலகமே பார்த்து வியந்த ஒரு விஷயம் இது.  வெளி நாடுகளிலிருந்து, பன்னாட்டு நிதி ஆணையங்களில் இருந்து கடன் பெறமுடியாத பரிதாபகரமான நிலையில் இருந்த இந்தியா ஐந்தே ஆண்டுகளில் முதலீட்டுக்கான ஒரு நல்ல களமாக மாறிப்போனது. காரணம், மன்மோகன் சிங்.
பொருளாதாரம் மளமளவென்று வளரத் தொடங்கியது. இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு உலக வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது என்னும் நிலைக்குப் பன்னாட்டு நிறுவனங்கள் தள்ளப்பட்டன. இந்தியாவைப் பொருட்படுத்தியே தீரவேண்டிய அவசியத்துக்கு வல்லரசுகள் வந்து சேர்ந்த காரணம், மன்மோகன் சிங்.
ஆனால் இதை அடைய உள்நாட்டில் அவர் பல எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டியிருந்தது. பல்வேறு சந்தேகங்களை அவர் கடக்கவேண்டியிருந்தது. பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மீண்டும் அமர்ந்ததற்குக் காரணமாக இருந்தார் மன்மோகன் சிங். அன்று மீடியாவின் டார்லிங் அவர்தான்.
எந்த மீடியா அவரை உச்சத்தில் ஏற்றி வைத்து அழகு பார்த்ததோ அதே மீடியா இன்று அவரை எள்ளி நகையாடிக்கொண்டிருக்கிறது. அவரது முழுமுற்றான வீழ்ச்சியை எதிர்நோக்கி ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறது. எந்தப் பொருளாதாரப் புரட்சியை அமைதியாக அவர் அரங்கேற்றினாரோ அந்தப் புரட்சியின் நோக்கங்கள் இன்று கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. மன்மோகனின் அமைதியான அணுகுமுறை அன்று பாராட்டப்பட்டது. இன்று  அவருடைய அமைதி கேலி செய்யப்படுகிறது. அதிகம் சாதிக்காத பிரதமர் என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதுகிறது வாஷிங்டன் போஸ்ட்.
ஏன் ஏற்பட்டது இந்த நிலைமை? ஆழ்ந்து நோக்கினால் மூன்று காரணங்கள் தெளிவாகப் புலப்படும்.
1) தேசமல்ல, கட்சியே பிரதானம்!
இதற்கு இன்னொரு பெயர் அதர்மம். காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி தன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள எதையும் செய்யத் தயாராக இருந்தது. தேசத்தின் நலன் முக்கியமா அல்லது ஆட்சியில் நீடிப்பது முக்கியமா என்னும் கேள்வியை காங்கிரஸ் எழுப்பியதாகவே தெரியவில்லை. அதற்கான விடையை அது தெளிவாகவே அறிந்திருந்தது. கூட்டணி கட்சிகளின் பேரங்கள் அனைத்துக்கும் செவிகொடுத்தது. இதற்கெல்லாம் காரணம் கட்சியின் தலைவர் சோனியா காந்திதான் என்று ஒருவர் சொல்லிவிடலாம். ஆனால் அமைதியாக இருந்து அனைத்தையும் அனுமதித்த ஒரே காரணத்துக்காக மன்மேகன் சிங்கும் இதற்கு காரணமாகிறார் என்பதை மறுக்கமுடியாது.
இந்தியாவின் பிரதமராக அல்லாமல், கட்சியின் காவலராகவே மன்மோகன் சிங் கடந்த இரு ஆட்சிக்காலத்திலும் செயல்பட்டிருக்கிறார். தேசத்தின் குரலைவிட தன் கட்சித் தலைவரின் குரல் அவருக்கு முக்கியமாகப் பட்டிருக்கிறது. தேசத்தின் தேவைகளைவிட கட்சியின் தேவைகள் முக்கியமாகிவிட்டன. அந்த வகையில் மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றத் தவறிவிட்டார். அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவந்த நிலையிலும்கூட மன்மோகன் சிங் கட்சியைக் காக்கும் நடவடிக்கையில்தான் ஈடுபட்டார். தேசத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் அல்ல.
2)நாற்காலியை விடமாட்டேன்!
அவரை மிகக் கடுமையாக விமரிசிப்பவர்களும்கூட மன்மோகன் சிங்கை ஊழல் கறை படியாதவர் என்று ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். நிலம், பூமி, காற்று என்று தொடங்கி பஞ்ச பூதங்களிலும் காங்கிரஸ் ஊழல்கள் பல செய்தபோதும் தனிப்பட்ட முறையில் குற்றமற்றவராகவே மன்மோகன் சிங் பலரால் பார்க்கப்படுகிறார். இது ஆச்சரியம்தான். அதே சமயம், கட்சியின் தவறுகளுக்குத் தார்மிக அளவிலாவது பொறுப்பேற்று அவர் ஏன் ராஜிநாமா செய்யவில்லை என்னும் கேள்வியை எழுப்பாதவர்களே இல்லை.
ஏன் கட்சி மேலிடத்தை எதிர்த்து ஒருவார்த்தைகூட அவரால் பேசமுடியவில்லை? தன்னளவில் சுத்தமாக இருந்தும் களங்கப்பட்டுப்போன தன் கட்சியை ஏன் அவரால் எதிர்க்கமுடியவில்லை? அவர் ஒரு பலிகடாவாக மாற்றப்பட்டுவிட்டாரா? அல்லது தானாகவே முன்வந்து இந்தப் பதவியையும் அவர் ஏற்றுக்கொண்டுவிட்டாரா?
இரண்டாவதுதான் சரி என்று தோன்றுகிறது. காங்கிரஸும் குறிப்பாக சோனியா காந்தியும் தனக்கு அளித்த மரியாதைகளையும் அங்கீகாரங்களையும் அவர் இன்னமும் மறக்கவில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்னும் உணர்வை அவரால் உதறித் தள்ளமுடியவில்லை. தனக்குக் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை, கட்சியை மீட்டெடுக்கவேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார். இன்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார் போலும்.
3)தலைமைத்துவம்
அறிவாற்றல்மிக்க பொருளாதார நிபுணர்தான் என்றபோதும் தேசத்தைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் தனிச்சிறப்பான இயல்புகள் மன்மோகன் சிங்கிடம் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கட்சியின் தவறுகளை அவரால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. தவறிழைத்த அமைச்சர்களைக் கேள்வி கேட்க இயலவில்லை. தறிகெட்டு ஓடும் நிர்வாகத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அமைச்சரவை கூடி எடுத்த முடிவொன்றை கட்சியின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒருவர் கிழித்தெறிந்து பேசியபோதும்கூட மன்மோகன் சிங் அமைதியே காத்திருக்கிறார். இதை அவருடைய மாண்பாகவும் நல்லியல்பாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்றபோதும், ஒரு தலைவராக அவருடைய தோல்வி பளிச்சென்று புலப்படுவதை அவராலும் தடுக்கமுடியவில்லை.
1999ல் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் நின்று போட்டியிட்டு தோற்றார் மன்மோகன் சிங். அப்போது தேர்தல் செலவுக்காக குஷ்வந்த் சிங்கிடம் அவர் கடன் வாங்கியிருக்கிறார். அதை மறுநாளே தன்னிடம் கொண்டு வந்து கொடுத்த மன்மோகன் சிங்கை ஆச்சரியமான மனிதன் என்று அழைக்கிறார் மன்மோகன் சிங். இத்தகைய பல அபூர்வமான விஷயங்களைப் பலர் அவரிடம் கண்டடைந்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
அரசியல் களத்தில் மன்மோகன் சிங் அபூர்வமானவர் என்பதில் மாற்று கருத்தில்லை. இருந்தும் அவர் இன்று வருத்தப்பட்டு சுமக்கும் பாரங்கள் தனிப்பட்ட முறையில் அவரை அழுத்திக்கொண்டிருக்கின்றன, கீழே கீழே பிடித்து இழுத்துக்கொண்டிருக்கின்றன.
நடப்பு அரசியல்வாதிகளோ ஊடகமோ எதிர்க்கட்சிகளோ அல்ல, வரலாறு என்னை மதிப்பிடும் என்று சமீபத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறார் மன்மோகன் சிங். உண்மைதான். கால ஓட்டத்தில் அவர்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் தூசுகள் உதிர்ந்துபோகக்கூடும். அவர் செய்தவை அல்லது செய்யத் தவறியவை மன்னிக்கப்படலாம். ஆனால் அவருடைய சாதனைகள், குறிப்பாகப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அவர் பெயரை உயர்த்திப் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. அப்போது அவர் புத்துயிர் பெறுவார்.
ரமணன் | February 13, 2014 at 2:50 pm | URL: http://wp.me/p2eZn6-Zr

20/10/12

எத்தனை நாள்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே?


ஆழம் கிழக்கு பதிப்பகத்திலிருந்து வெளிவரும்  கடந்த 8 மாதங்களாக வரும் மாதபத்திரிகை. சீரியஸான விஷயங்களை மட்டும் பேசும் இதில் கடந்த மாதத்தில் எழுதிய கட்டுரை இது.



சஹாராவின் சாதனை 

 

இது வரை எந்த இந்திய வியாபார நிறுவனமும் இப்படிப்பட்ட நெருக்கடியை இதுவரை சந்தித்ததில்லை. எந்த நிறுவனத்துக்கு எதிராகவும் இப்படிப்பட்ட அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இதுவரை வழங்கியதுமில்லை. வர்த்தக உலகம் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்த இந்த வழக்கின் முடிவில் அருமையான தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது. சிறு முதலீட்டாளர்களுக்கு இதன் மூலம் நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.இந்திய நிதி, சட்டம் மற்றும் நீதித்துறைகளின் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது

தீர்ப்பால் பாதிக்கப்பட்ட நிறுவனம் சஹாரா குரூப். 90 நாட்களில்  24 ஆயிரம் கோடியை முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்பதுதான் அந்த அதிரடி தீர்ப்பு. ஆடிப் போயிருக்கிறது சஹாரா குரூப். அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி கிராம மக்களிடம் வசூல் செய்த பணத்தையெல்லாம் வட்டியுடன் திருப்பிக் கொடுக்க சகாரா ரியல் எஸ்டேட், சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய இரண்டும் திருப்பி கொடுக்க வேண்டிய தொகை இருபத்து நாலாயிரம் கோடி + 15 சதவீத வட்டியுடன் தரவேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவின் மிகப்பெரிய குழும நிறுவனமான சஹாராவின் இரு கம்பெனிகளுக்கு ஏற்பட்டுள்ளது..


ஏன் இப்படி ஒரு தீர்ப்பு? எனபது பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளும் முன்னால் சஹாரா குழுமத்தை பற்றியும் அவர்கள் செயல்படும் முறையை பற்றியும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.  சஹரா இந்தியா பரிவார் என  விளமபரபடுத்திக்கொள்ளும் இந்த குழுமம் கடந்த 20 ஆண்டுகளில் தொடாத துறை எதுவும் இல்லை. மின்சாரம் முதல் மீடியாவரை பல துறைகளில் கால் பதித்திருக்கும் இவர்கள் இந்திய கிரிகெட், ஹாக்கி விளையாட்டுகளின் பிரதான ஸ்பான்ஸ்ர்கள். இந்திய கார்பெரேட் பாஷையில் குழுமம் (GROUP) என்றால் பிரதானமாக இருக்கும் ஒரு லிமிடட் கம்பெனியின் முதலீடுகளோ அல்லது அதன் இயக்குநர்கள்  பங்குபெற்றிருக்கும் மற்ற துறைகளில் ஈடுபட்டிருக்கும் பிற கம்பெனிகளின் கூட்டமைப்பு என்று பொருள். ஆனால் சஹாரா பரிவார் குழுமம் என அவர்கள் அழைத்துகொள்வதில்  பார்ட்டனர்ஷிப், ப்ரொப்பரைட்டர்ஷிப், தனிநபர்களின் கூட்டமைப்பு  டிரஸ்ட் எல்லாம் சேர்ந்து இருக்கிறது..பரிவார் என்ற சொல்லுக்கு குடும்பம் என பொருள்.எங்களூடையது இந்தியாவின் மிகப்பெரிய குடும்பம் என்ற அவர்களின் விளம்பரங்களில் ‘குருப்” என்ற சொல்லை பயன்படுத்துவதால் பொதுமக்களிடம்  இது மிகபெரிய பளிக் லிமிடெட் நிறுவங்களின் கூட்டமைப்பு என்ற தோற்றத்தை உருவாக்கி யிருந்தனர்.  இந்திய கம்பெனி சட்டபடி பதிவு செய்யபட்ட  பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் ஆண்டுதோறும் தங்கள் பாலன்ஸ் ஷிட்டை வெளியிட்டு அதை ரிஜிஸ்டிரார் ஆப் கம்பெனியில் பதிவு செய்ய வேண்டும். இதை விரும்புவர்கள் எவரும் பார்வையிடலாம்.  ஆனால் நேரிடியாக பொதுமக்களிடம் பங்குகளை விற்காமல்  ஒருசில முதலீட்டாளர்களே கம்பெனியின் எல்லா பங்குகளை வாங்கியிருந்தால் அது பிரைவேட் ”பிளேஸ்மெண்ட்ட்” என்ற வகையான முதலீட்டில் பப்ளிக் லிமிட்டெட் கம்பெனியாகிவிடும். இவைகள் கம்பெனிகள் சட்டபடி பப்ளிக் லிமிட்டட் கம்பெனியாக அறியபட்டாலும் அதன் கணக்குகளை கம்பெனி ரிஜிஸ்ட்ராரிடம்  ஆண்டுதோறும் சம்ரபிக்க வேண்டிய அவசியமில்லை என்ற விலக்கைப் பெற்றவை.  இந்த விதியை (ஓட்டையை?) செம்மையாக பயன்படுத்திகொண்டது ஸஹாரா. அவர்களுடைய குழுமத்தின் கம்பெனிகளில் பல  இந்த வகை கம்பெனிகள் தான்.,  அதனால் எந்த நிறுவனத்தின் கணக்குகள், வருடந்திர பாலன்ஸ்ஷிட்கள் எதுவும் பொது மக்கள் அறியமுடியாத ரகசியமாக்கபட்டது.  ஸஹாரா என்ற பெயருக்கு வங்காள மொழியில் “அறியபடாதது” (unknown) என்று பொருள்.  ஸஹாராவின் மூதலீடுகள், அதன் பின்னால் இருப்பவர்கள் எல்லாமே “ஸ்ஹாரா” தான். இதன் அதிபராக அறியப்படும் சுப்ரதோர ராயின் செல்வாக்கு மிக அபரிமிதமானது. வளர்ச்சி பிரமிக்கதக்கது. ஸகாரா குடும்பத்தின்  “மேனஜிங் ஓர்க்கர்” என தன்னை அழைத்துகொள்ளும் இவர் 30 ஆண்டுகளுக்கு முன்  ஒரு லாம்ரட்ரா ஸ்கூட்டரில் உ.பி கிராமஙகளில் சுற்றி சுற்றி சிட்பண்ட்க்காக பணம் வசூலித்தவர்,  தொடர்ந்து ரியல் எஸ்டேட் ப்ரோக்கராக உயர்ந்தவர் இன்று இன்று அமெரிக்காவிலும்




ஐரோப்பாவிலும் மாபெரும் ஓட்டல்களை வாங்கிப் போடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். சகாரா குரூப் இன்று இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில்  ஒன்று. மும்பை அருகே புனேயில் இந்த குரூப் அமைத்து வரும் ஆம்பி வேலி சிட்டி என்ற திட்டத்தின் மதிப்பு மட்டுமே 40 ஆயிரம் கோடிக்கு மேல். இதுபோல் நாடு முழுவதும் 64 நகரங்களில் 4,378 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு ரியல் எஸ்டேட் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஸஹாராவின் மொத்த சொத்துமதிப்பு 10,000 கோடிகளுக்கு மேல் என்று இந்தியா டுடே பேட்டியில் சுப்ரதோரா ராய் சொல்லியிருக்கிறார். ஆனால் ஓவ்வொரு புதுதிட்தத்திற்கும் எப்படி இவ்வளவு பணம் கொட்டுகிறது என்பது புரியாத புதிர்.
இந்திய தொழிற்துறையில்  மிக சாதாரண நிலையில் துவங்கி சிகரங்களை தொட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடன் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி, பங்குதாரர்களின் வளர்ச்சி, வெளிப்படையான நிதிநிலை ஆண்ட அறிக்கை  போன்றவை எல்லாம்  இருக்கும். ஸகாரவின் விஷயத்தில் இவை எதுவுமே கிடையாது. அடிக்கடி தேசத்தின் அத்தனை பேப்பர்களிலும் ஆர்பாட்டமான  புதிய திட்டங்களின் முழுபக்க விளம்பரங்கள் வரும்  இவரின் செல்வாக்குக்கு ஒரு உதாரணம் 2004ஆம் ஆண்டு  நடந்த இவருடைய மகன்களின் திருமணம். உலகின் ஆடம்பர திருமணங்களின்   வரிசையில் இன்று வரை முதலிடத்திலிருக்கிறது. 128 மில்லியன் டாலர்(1 மில்லியன் = 10 லட்சம்)செலவில் நடந்த அந்த திருமணத்தில்  அத்துனை மாநில முதல்வர்களும், மத்திய அமைச்சர்களும் அன்றைய பிரதமர் வாஜ்பய்யும் பங்கு பெற்றிருந்தனர். இந்தியாவின் மிக சக்தி வாய்ந்த முதல் 10 மனிதர்களில் ஒருவராக இடம் பெற்றவர்  சுப்ர்தோரா ராய். இவர் நிறுவனத்தினர் தங்கள் வெற்றிக்காக சாம, தான் பேத, தண்டத்தில் இறங்கி சாதிப்பவர்கள். திரு ஆப்பிரஹாம் செபியின் மூத்த உறுப்பினர். நேர்மையான அதிகாரி. கடந்த ஆண்டு  இவர்கள் குழுமத்தின் மீது அவர் அறிக்கை கொடுத்த போது,  பிரதமருக்கு தனக்கும் தனது அதிகாரிக்கும் நிதித்துறையின் வருமான அதிகாரிகள் தேவையில்லாமல் தனக்கு ஒரு நோட்டிஸ் அனுப்பி பிரச்சனை செய்வதை ரகசிய கடிதமாக எழுதியிருக்கிறார். வழக்கமாக ஒய்வு பெறும் ஒராண்டுக்குமுன் நியமிக்கபடும் அந்த பதவியிலிருப்பவர்களுக்கு பதவி நீடிப்பு தரப்படும். ஆனால் அவருக்கு வழங்கபடவில்லை. அந்த  அளவிற்கு சர்வ வல்லமை   வாய்ந்த குழுமம் இது.

 இப்போது என்ன பிரச்சனை?
இந்தியாவில்  பொதுமக்கள் வங்கிகள், மீயூட்சுவல் பண்ட், போன்றவற்றில் சேமிப்பது போலவே NBFC எனப்படும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் மூலமும் சேமிக்கலாம். இவைகள் வங்கிகளைவிட அதிக வட்டி தரும். இத்தைகைய முதலீடுகளைப்பெற்ற இந்த NBFC க்கள் அவற்றை அதிக லாபம் தரும் நிறுவங்களில் முதலீடு செய்து சம்பாதிக்கும். இது அரசால் அனுமதிக்க பட்ட ஒன்று. NBFC துவக்க மத்திய அரசின் கம்பெனித்துறையின் அனுமதி மட்டும் போதும். ஆனால் கம்பெனிகளில் முதலீட்டை கண்காணிக்கும் SBEI  இதை கண்காணிப்பதில்லை. இதன் செயல்பாட்டை கண்காணிக்க தனி அமைப்பு எதுவும் இல்லை.  ரிஸ்க் முழுவதும் முதலீடு செய்யும் மக்களின் பொறுப்பு. ஸ்ஹாராவின்  குழுமத்திலிருக்கும் இந்தியா ஃபைனான்ஷியல் கார்பொரேஷன் லிமிடெட் என்னும் NBFC, கடந்த பல ஆண்டுகளாக இப்படி டெப்பாஸிட்களை மக்களிடம் பெற்று வந்தது. கடந்த வருடம் (2011) ஜுலை மாதம் ஸஹார வெளியிட்ட ஒரு முழுபக்க விளம்பரம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த விளமபரத்தில் தங்கள் நிறுவனம் அதுவரை மக்களிடம் பெற்ற டெப்பாஸிட்கள் 73000 கோடி என்று அறிவித்திருந்ததது. கடந்த ஆண்டு 500கோடிக்கு விஜய் மல்லையாவுடன் சேர்ந்து ஃபோர்ஸ் ஒன் என்ற சர்வதேச ரேஸ்கார் நிறுவனத்தை வாங்கியது, 3500 கோடிகளில் இன்கிலாந்திலும், அமெரிக்காவிலும்   ஹோட்டல்களை வாங்கியிருந்தது. 
 2004ல் UPA அரசு பதவியேற்ற பின்  அரசின் முத்த அதிகாரியாக இருந்து பின்னர் ஒரு மாநில கவரனராக பதவிவகித்தவர் தந்த ரகசிய அறிக்கையில் நிறுவனத்தால் திரட்டப்பட்ட பணத்தின் பெரும்பகுதி கருப்பு பணமாக இருக்குமோ என்ற சந்தேத்தையும் அவை அரசியல் வாதிகளடையாதாகவும் இருக்கலாம் எனற சந்தேகத்தையும் எழுப்பியிருந்தது.
இந்நிறுவனத்தை ஆராய்ந்த ரிசர்வ் வங்கியின் விசேஷ ஆடிட் டீம் , இந்த  NBFCநிதி நிறுவனம் நிதியை எம்மாதிரி நிர்வகிக்கவேண்டும் என்ற விதிமுறைகளை  பின்பற்றவில்லை. யார் யார் வைப்பு நிதி அளித்துள்ளார்கள் என்பது பற்றிய தகவல்களை சரியாக வைத்திருக்கவில்லை என்பதை கண்டுபிடித்தது. மூதலீடு செய்தவர்களின் பணம். பாதுகாப்பாக இருப்பதற்காக RBI  இனி புதிய டெப்பாஸிட்கள் ஏற்க கூடாது, வாங்கிய வற்றை  7 ஆண்டுகளுக்குள் திருப்பி கொடுத்து விடவேண்டும் அதன் பின் கம்பெனியை முடிவிட வேண்டும் என உத்தரவிட்டது.  இதை மக்களின் நன்மையை கருதி பொது அறிவிப்பாக விளம்பரமாகவே வெளியிட்டது.  RBI யின் ஆணையை எதிர்த்து  சுப்ரீம் போர்ட்வரை வழக்காடி தோற்ற பின் “மக்களின் நம்பிக்கையை பெற்ற எங்களுக்கு இது பெரிய விஷயமில்லை  என்று அறிவித்து, கடந்த ஆண்டு  (4 ஆண்டுகளுக்குள்)  20,000க்கோடிக்கும் மேல் முழுவதுமாக திருப்பி தந்துவிட்டதாகவும் அறிவித்தது.. உண்மையா? எப்படி  இது முடிந்தது ? என ஆராய்ந்ததில் ஸஹாரா நிறுவனம் அந்த பணத்தையும் அதற்கும் மேலும் வேறு  ஒரு புதிய வழியில்  பொதுமக்களிடமிருந்தே பெற்றிப்பதாக சொல்லபட்ட விஷயம் வெளிவந்தது. மூதலீட்டாளார்களுக்கு திருப்பி தர வேண்டிய கட்டத்தில் புதிய மூதலீட்டு திட்டத்தை அறிவித்து அதில் கிடைக்கும் பணத்தினால் திருப்பி கொடுப்பதற்கு பொன்ஸி திட்டம் என பெயர் (Ponzi scheme.) இது அமெரிக்கா, இங்கிலாந்தைப்போல இங்கே கடுமையான குற்றமில்லை என்றாலும் செபியின் விதிகள் இதை அனுமதிக்கவில்லை.
அப்படியானால் ஸஹாரா செய்தது தவறா?
மிகப்பெரியதவறு என்றும் நிச்சியம்இல்லை என்றும் வாதாட இந்திய கம்பெனிசட்டம், செபிவிதிமுறைகள், கம்பெனிநீர்வாக அமைச்சகத்தின் குழப்பமான ஆணைகள் இருதர்ப்பினருக்கும் உதவுகின்றன. சுருக்கமாக சொல்வதானால், சட்டதின் ஓட்டைகளை  சாமர்த்தியமாக, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் புத்திசாலிகளுக்கும், தமாதமானாலும் தங்களுடைய விதிகளின் கிழேயே நடவடிக்கை எடுத்து நிகழபோகும் வீபரிதத்தை தடுத்து உணமையை வெளிக்கொண்டு வரதுடிக்கும் நிர்வாக அமைப்புகளுக்குமான போர் இது.
ஒரு லிமிட்டெட் கம்பெனி தங்களுக்கு தேவையான நிதி ஆதாரத்தை பங்கு சந்தை, வங்கிகடன்கள், நிதி நிறுவனகடன்கள்  இவற்றின் மூலம் பெருக்கி கொள்ள கம்பெனி சட்டவிதிகள் அனுமதிக்கின்றன. இதில் ஒன்று கம்பெனியின் கடன் பத்திரங்கள். கம்பெனிகளில் ஷேர்கள்  என்பது அவற்றில் பொதுமக்கள் செய்யும் முதலீடு. டெபனச்சர்கள் எனபது கம்பெனியால் குறிபிட்ட காலத்திற்கு விற்கபடும் கடன் பத்திரம். இதற்கு வட்டி உண்டு.முதிர்ச்சி அடைந்த உடன் திருப்பிதரும் உத்திரவாதமும் உண்டு. இந்த டெபன்ச்சர்களில் பல வகைகள். வட்டியுடன், வட்டிஇல்லாமல்,  விரும்பினால் கம்பெனியின் பங்குகளாளாக மாற்றிக்கொள்ள கூடிய, வாய்ப்புடன், ( optional convertible debentures) அல்லது  அப்படி மாற்றாமல் போட்ட பணத்தை திருப்பிபெற இப்படி பல. இம்மாதிரி பொதும்களிடம் பணம் வசூலிக்க SEBIயிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால்  . சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்பொரேஷன், சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மெண்ட் கார்பொரேஷன் என்ற இரண்டு நிறுவனங்கள் அவர்களின் அனுமதியை பெறாமலேயே  பத்திரங்களை வெளியிட்டு  விற்றன.  சேகரித்த பணம் எவ்வளவு தெரியுமா? 24 ஆயிரம் கோடிகள்  !  2..3 கோடி மக்களிடம் திரட்டியது.வாங்கியவர்களில் பலர்  உ பி, பிஹார் மாநில கிராம மக்கள் நிச்சியம் இது எதோ மோசடி என சந்திக்கித்த செபி  விசாரணையை  துவக்கியது. நாங்கள்  செபியின் கட்டுபாட்டுக்குள் வர மாட்டோம். இது பிரைவேட் பிளேஸ்மெண்ட் முதலீட்டு நிறுவனம் என ஸஹாரா வாதிட்டது. 50 பேருக்கு மேல் முதலீடு செய்திருக்கும் எந்த நிறுவனமும் எங்கள் கண்காணிப்பின் கீழ் என்ற விதிமுறையை சுட்டிகாட்டியது செபி. ,வழக்குகள்,  தீர்ப்பாயங்கள் மேல்முறையீட்டு ஆணையங்கள்,  கம்பெனி விவகார அமைச்சகத்தின் சட்டமேதைகளின் விளக்கங்கள். , உயர் நீதிமன்ற மேல்முறையீடுகள் என பலகட்டங்களை தாண்டி உச்சநீதிமன்றத்தில் வந்து நின்றது வழக்கு. அந்த வழக்கில்தான்  இந்த அதிரடி தீர்ப்பு வந்துள்ளது. முதலீட்டாளர்களிடம் வசூலிக்கப்பட்ட அத்தனை பணத்தையும் 15 சதவீத வட்டியுடன் 90 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும். அடையாளம் காணப்படாத முதலீட்டாளர்களின் பணத்தை மத்திய அரசின் கணக்கில் சேர்க்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு காரணம், இதில் 2.3 கோடி முதலீட்டாளர்களும் உண்மையானவர்களா அல்லது சஹாராவே போலியாக முதலீட்டாளர்கள் என்ற பெயரில் தனது கருப்புப் பணத்தையே வெள்ளையாக்க முதலீடு செய்ததா? என்ற எழுப்பட்ட சந்தேகத்தை நீதிமன்றம் நம்பியதுதான் . அதனால்தான்  வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே 11 லட்சம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டோம் என சஹாரா அதிரடியாக சொன்னபோது, அந்த முதலீட்டாளர்களின் விவரத்தையும் 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.  என சொல்லியிருந்தது அப்படி தாக்கல் செய்யபட்ட ஆவணங்களில் சிலவற்றை  மாதிரி சோதனை செய்ததில் கலாவதி என்பவரிடம் வசூலித்த16000ஐதிருப்பிக் கொடுத்ததாகக கூறியிருந்தது. அதில் முகவரியாக எஸ்.கே. நகர், .பி. எனக் கொடுக்கப்பட்டிருந்தது. தந்தை பெயர் என்ன, கணவன் பெயர் என்ன, வீட்டு டோர் நம்பர் என்ன என எந்த விவரமும் இல்லை. இதை எப்படி நம்ப முடியும்? ஒரு பெட்டிக் கடைக்காரர் கூட முக்கிய விவரங்களை வைத்திருப்பார். ஆனால் இவ்வளவு பெரிய நிறுவனம் இப்படி ஒரு முகவரியை கொடுத்திருக்கிறது என சஹாரா குரூப் தாக்கல் செய்த முதலீட்டாளர்கள் தொடர்பான ஆவணங்களில் போதுமான விவரம் இல்லை என்பதால்  கடுமையாக சாடியுள்ளது நீதிமன்றம். முன்னாள் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி,என் அகர்வால் முதலீட்டார்களுக்கு  பணம் திருப்பி தரும் பணியை கண்காணிப்பார் என்றும்  நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். முதலீட்டாளர்கள் குறித்த முழு விவரத்தையும் செபி அமைப்பிடம் சஹாரா நிறுவனம் தர வேண்டும் என்றும், அதைத் தராவிட்டால் சஹாராவின் சொத்துக்களை செபி நிறுவனம் கைப்பற்றி, ஏலம் விடலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
 இந்த வழக்கில் செபி சார்பில் அரசின் சீனியர் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாதது ஆச்சரியம். சஹாரா பிரபல சட்ட மேதைகளான சோலி சொரப்ஜி, ஃபாலி எஸ்.நாரிமன் உள்ளிட்ட படையை முன்னிறுத்தியது. மூத்த சென்னை வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் செபியின் சார்பில் ஆஜராகி மேற்படி மேதைகள் சகாராவின் நலன் காக்க முன்வைத்த புதுப்புது சட்ட விளக்கங்களை ஒவ்வொன்றாக தகர்த்தார். கம்பெனி சட்ட வழக்கறிஞர்களும் சட்டம் பயிலும் மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய  வாதங்கள் இவை.

 தீர்ப்பு வெளியான இரண்டாம் நாள் நாட்டின் எல்லா தினசரிகளிலும் ஸஹாரா  ஒரு முழு பக்க விளம்பரம் வெளியிட்டது. அதில்
கடந்த 8 ஆண்டுகளாகவே இதுபோல் பல்வேறு அமைப்புகள் சகாரா குழுமத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. முதலீட்டாளர்களிடம் நாங்கள் வசூலிக்கும் டெபாசிட்டும் முதலீடுகளும் போலியானது என்றும் பினாமி பணம் என்றும் கருப்பு பணம் என்றும் கூறி வருகின்றன. அரசியல்வாதிகள் ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை நாங்கள் பெறுகிறோம் என்றும் புகார் கூறுகிறார்கள். இது எதுவும் உண்மையில்லை  ஒரு பைசா கூட பினாமி பணம் கிடையாது. முடிந்தால் பினாமி பணம் என நிரூபியுங்கள் என சவால் விடுகிறோம். கடந்த 33 ஆண்டுகளாக நாங்கள் வசூலித்த பணம் அத்தனையும் 12 கோடி முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்டதுதான். அத்தனைக்கும் ரசீது வைத்திருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறது.
அத்தனை பணத்தையும் 3 மாதங்களுக்குள் திருப்பிக் கொடுப்பது என்பது சகாரா குழுமத்துக்கு ஒரு பிரச்னையாக இருக்காது. சில சொத்துக்களை விற்றாலே போதும், தேவையான பணத்தை திரட்டி விட முடியும். மேலும் ஏற்கனவே 11 லட்சம் பேருக்கு பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது சகாரா. மீதம் கொடுக்க வேண்டிய தொகை17,657கோடிதான் என்றும் கூறியிருக்கிறது.
அடுத்த கட்டம்
 அதைக்கொடுத்துவிடுவார்களா? அல்லது எதாவது புது திட்டம் வைத்திருக்கிறார்களா?  வங்க மொழி ஸஹாரா (அறியபடாதாது unknown ) தான்.
அப்படி கொடுக்கபட்டால்  உண்மையான முதலீட்டாளர்களுக்கு பணம் போய் சேர்ந்து விடும்.பினாமி பணம் என்றால்  அந்தப் பணம் அரசுக் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். இதுபோன்ற அதிரடித் தீர்ப்பு வெளியாவது இதுவே முதன்முறை, வெளிவந்திருக்கும் இந்த அதிரடி தீர்ப்பை வழிகாட்டதலாக ஏற்று உயர் நீதிமன்றங்கள் செயல் பட்டால் நாட்டில் பினாமிவரவு செலவுகள் மெல்ல ஒழியும் வாய்ப்புகள் அதிகம். என்றாலும் நமக்கு
சில கேள்விகள்1
v  சகாரா குரூப் ஒரே இரவிலா இத்தனை ஆயிரம் கோடியை திரட்டியது?  24ஆயிரம் கோடியை  சகாராவின் 10 லட்சம் ஏஜெண்டுகள் பம்பரமாய் சுழன்று பணம் திரட்டும் வரை செபி என்ன செய்து கொண்டிருந்தது. எத்தனை பத்திரிகைகளில் எவ்வளவு விளம்பரம் வந்தது. அப்போதெல்லாம் அதைப் பார்க்காமல் செபி தூங்கிக் கொண்டிருந்ததா?

v  குறிப்பிட்ட கெடுவுக்குள் ஸஹாரா பணத்தை திருப்பி கொடுத்தாக கணக்கு, ரசீது எல்லாம் காட்டிவிட்டால் விஷயம் ஒய்ந்து விடுமா? இவர்களை இனி மக்களிடம் எந்த வகையிலும்  பணமே வாங்ககூடாது என ஏன் தடை செய்யப்படவில்லை.?
v  இந்த  “பரிவாரின்” மற்ற அங்கங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க  மத்திய அரசின் கண்காணிப்பு அமைப்புகள்  ஏன் முடுக்கபடவில்லை. உச்சநீதி மன்றம் சொல்வதற்காக காத்திருக்கிறார்களா?
v  ஸஹாராவின் பினாமி சொத்துகளுக்கும் முதலீடுகளுக்கும் .உ.பி இன்னாள், முன்னாள் முதல்வர்களுக்கும் அவர்களின் நிழல்களுக்கும், பாலிவுட் சக்கரவர்த்திகளுக்கும்  சம்பந்தம் இருப்பதால் இதில் அரசியலுமிருக்கிறது 2014 தேர்தலில் அவர்களை மடக்க இதை ஒரு ஆயுதமாக்குகிறார்கள்  மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியினர் என்று சுற்றி கொண்டிருக்கிறகும் ஒரு செய்தி. உண்மையாக இருக்குமா?