டிவி நிகழ்ச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டிவி நிகழ்ச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
19/1/15
31/10/14
சீரியலுக்கு பின்னாலிருக்கும் சீரியஸான விஷயங்கள்
2
இன்றுடன் விஜய் டிவியின் மஹாபாரதம் முடிகிறது. சில மாதங்களுக்கு முன் கல்கியில் எழுதியதின் மீள் பதிவு
விஜய்
டிவி ஒளிபரப்பும் தமிழ் மஹாபாரதம் சிறுவர்கள், இளைஞர்கள்,குடும்பத்தலைவிகள், முதியோர் என அனைவரையும்
கவர்ந்திழுத்து இரவு 7மணி முதல் அரை மணி நேரம்
கட்டிப்போடுகிறது. தமிழை பள்ளியில் படிக்காத, ஆங்கிலமே அதிகம் பேசும் இளந்தலைமுறையினரையும் வசிகரிக்கிறது இந்த தொலைகாட்சி
தொடர்.
பிரமிக்கவைக்கும்
பிரமாண்டமான செட்கள், பளபளக்கும் காஸ்ட்யூம்கள்,
ஹோலி வண்ணங்கள் சற்று ஓவரான மேக்கப், ஒரே மாதிரியான சாயலில் வட இந்திய முகங்கள், பயில்வான்கள் ஸ்டையில் பாண்டவர்கள் என்று
காட்டபடும் மாறுபட்ட ஒரு தொடராக இருந்தாலும்
அதை எல்லோரையும் பார்க்க வைப்பது, அழகான தமிழ்
வசனங்களும், இனிய பாடல்களும் தான். ஸ்டார் விஜய்க்காக இதை தமிழில் டப்பிங் செய்பவர்கள் 7த் சானல் நிறுவனத்தினர். அதன் தலைவர் மாணிக்கம் நாராயணனை
தொடர்பு கொண்ட போது. ”நானும் உங்களைப்போல ரசிக்கிறேன். எங்களது திறமையான
டப்பிங் டீமின் கடைன் உழைப்பின் வெற்றி இது.
அவர்கள் பணிகளில் நான் தலயிடுவதில்லை. டீமின் தலவர் மகேஷிடம் பேசுங்களேன்”.
என்றார்.
டப்பிங் துறையை நேசிக்கும் மகேஷ் ஒரு பிரபலமான ஆடியோ என்ஞ்னியர். மொழிபெயர்ப்பு வசனங்கள்
மேற்பார்வை. டப்பிங் கலைஞர்கள் தேர்வு, அவர்களுக்ககு
பயிற்சி, ஒலிப்பதிவு போன்ற எல்லாவற்றையும் நேரடியாக செய்கிறார். இந்தியில் வசனங்கள் அருமையாக இருந்தாலும் அதை அப்படியே
மொழிபெயர்த்தால் தமிழில் அவ்வளவு சரியாக இருக்காது
என்பதால் தகுந்த தமிழ் வார்த்தைகளுடன் மாற்றி கொள்கிறோம். மொழிபெயர்ப்பு என்பதை விட தமிழாக்கம் என்பது சரியாக
இருக்கும். பாத்திரங்களுக்கு ஏற்ற குரல் தரும்
கலைஞர்களை கவனமாக தேர்வு செய்து பயிற்சி அளித்திருக்கிறோம். அவர்களும் மிகுந்த கவனத்துடன்
செய்திருக்கிறார்கள் என்கிறார்.
ஹிந்தியில்
காட்சிகளை பார்க்கும் போது எழும் கேள்விகளுக்கு உடனே பதில் வரும்படி வசன்ங்கள் அமைந்த இந்த படத்திற்கு டப்பிங்க் வசனம் எழுதுவது கடினமான
வேலை. எழுதும் வசனம் சரியாக பேசும் இடங்களில் பொருந்த வேண்டும். எல்லா மொழிகளிலும்
வார்த்தைகளின் நீளம் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால் இதற்கு வசனம் எழுதும் பாலகிருஷ்ணன்
ஒரு டெக்னிக்கை கண்டுபிடித்திருக்கிறார். அவரே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ் என்பதால் வசனங்கள்
எழுதபட்டபின் ஒவ்வொரு எபிசோடிலும் முதலில் பாத்திரங்களுக்காக அவரே அதைப் பேசி
தேவையான நீளம் சரியான நேரம் போன்றவைகளை உறுதி செய்துகொண்டு வாயசைப்புக்கு ஏற்ப வார்த்தைகளை தேர்ந்தெடுத்து வசனங்களை மாற்றி அமைக்கிறார். அதன்பின்னர் அது அச்சிடப்பட்டு
டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களுக்கு அளிக்க படுகிறது. பயிற்சிகளுக்கு பின் அவர்கள் பேசுகிறார்கள்.
இந்த முறையில் ரீ டேக், எடிட்டிங் போன்ற வேலைகளை குறைவதால் நேரம் வீணாவதில்லை என்கிறார்.
இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக டப்பிங் படங்கள், தொடர்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருப்பவர். இந்த தொடரில் இவர் தத்துவங்களை எளிமையாக்கி கவிதை
நடையில் வசனங்களாக மெருகேற்றி தருவதால், தொடரைப்பார்க்கும் போது இது டப்பிங் செய்யபட்ட
தொடர், நடிப்பவர்களின் நடிப்புதிறன் அவர்களின் பாத்திர பொருத்தம் போன்ற எண்ணங்களை எழாமல்
செய்கிறது.
ஹிந்தி
தொடரில் வரும் அதே இசையை பயன்படுத்தி கொண்டு
மெட்டுக்கு களுக்கு ஏற்ப தமிழ் பாடல்களை அமைக்கிறார்கள். பாடல்களையும் பாலகிருஷ்ணனே எழுதுகிறார். வரிகளிலும், வார்த்தைகளிலும் அவருள் ஒளிந்திருக்கும் கவிஞர் தெரிகிறார்., எங்களது டீமில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட குரல்கலைஞர்களின் ஆர்வமான, அர்ப்பணிப்பான உழைப்பின் வெற்றி இது .
சகுனி, கிருஷ்ணன் போன்ற பாத்திரங்களின் நடிப்புக்கு உயிர் கொடுத்திருப்பது இவர்களின்
குரல் என்கிறார். மகேஷ்..பல ஆண்டுகளுக்கு முன் என் டி டிவிக்காக ராமாயணத்தை தமிழாக்கியதும்
இவர்தலமையிலான டீம்தான்
இதிகாசங்களின்
மீதுள்ள பாசத்தினால் மூத்த தலைமுறையினர் மட்டும் ரசித்து கொண்டிருந்த இம்மாதிரி தொடர்களை அடுத்த தலமுறையினரையும்
ரசிக்கவைக்கும் விஜய் டிவிக்கும் 7த் சானலுக்கும் ஹாட்ஸ் ஆஃப்.
28/7/14
கடைசிக்கோடு பேசபட்டிருக்கிறது.
இன்று
மதியம் ஒரு போன் “ என்
பெயர் நடராஜன் பள்ளித்தலமையாசிரியர். ஊட்டியிலிருந்து பேசுகிறேன், உங்கள்
கடைசிகோடு புத்தகம் படித்து கடந்த இரண்டு
நாட்களாக அதன் தாக்கத்தில் இருக்கிறேன்.
அருமையான புத்தகம்,
நேற்று வகுப்பில் மாணவர்களுக்கு
இந்திய மேப்பை காட்டி அது
பற்றி பேசினேன்” என்றார். எழுதுபவனுக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்?
சந்தோஷமான
அதிர்ச்சி. கடந்த வாரம் சன்
டிவியில் ”வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில்
ராஜாவும் பாரதிபாஸ்கரும் கடைசிக்கோடு புத்தகத்தை விமர்சித்திருக்கிறார்கள். அதைப்பார்த்த உடனே திரு நாடராஜன், ராஜாவை தொடர்பு
கொண்டு கவிதாவெளீயிடு என்பதை அறிந்து பிரசுரத்தினை தொடர்பு
கொண்டு புத்தகம் வாங்கி படித்து பின் எனக்கு போன் செய்திருக்கிறார். அந்த நிகழ்ச்சிபற்றி எனக்கு தெரியாதால் நான் அன்று பார்க்கவில்லை. இன்றுதான் யூ டுபில் பார்த்தேன்
.
அந்த விமர்சனத்தை இங்கே கிளிக் செய்து யூ டூயூபில் பார்க்கலாம்
.
அந்த விமர்சனத்தை இங்கே கிளிக் செய்து யூ டூயூபில் பார்க்கலாம்
31/5/14
மயக்கும் மஹாபாரதம்
மாலை
7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற
சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ஆபரணங்களின் பிரமாண்டம் கட்டிபோட, திரைக்கதையோ
படு சுவாரசியம். சகுனியும், திரெளபதியும் ரசிகர்களை கட்டிப் போடுகிறார்கள் முன்பு வந்த
ராமனந்த சாகரின் ராமாயணத்துக்கு பின்னர் தமிழ் ஆடியன்ஸ்களிடம் சூப்பர் ஹிட் இந்த மஹாபாரதம்தான்.
பிரமிக்கவைக்கும்
பிரமாண்டமான செட்கள், பளபளக்கும் காஸ்ட்யூம்கள்,
ஹோலி வண்ணங்கள் சற்று ஓவரான மேக்கப், ஒரே மாதிரியான வட இந்திய சாயலில் எல்லா முகங்கள்,
பயில்வான்கள் ஸ்டையில் பாண்டவர்கள் என்று காட்டபடும்
மாறுபட்ட ஒரு தொடராக இருந்தாலும் அதை எல்லோரையும் பார்க்க வைப்பது, அதன் அழகான தமிழ் வசனங்களும், இனிய பாடல்களும் தான்.
ஸ்டார் விஜய்க்காக இதை தமிழில் டப்பிங் செய்பவர்கள்
7த் சானல் நிறுவனத்தினர். அதன் தலைவர் மாணிக்கம்
நாராயணனை தொடர்பு கொண்ட போது
. ”நானும் உங்களைப்போல ரசிக்கிறேன். எங்களது திறமையான
டப்பிங் டீமின் கடின உழைப்பின் வெற்றி இது.
அவர்கள் பணிகளில் நான் தலையிடுவதில்லை. டீமின் தலவர் மகேஷிடம் பேசுங்களேன்”.
என்றார்.
டப்பிங் துறையை நேசிக்கும் மகேஷ் ஒரு பிரபலமான ஆடியோ என்ஞ்னியர். மொழிபெயர்ப்பு வசனங்கள்
மேற்பார்வை. டப்பிங் கலைஞர்கள் தேர்வு, அவர்களுக்ககு
பயிற்சி, ஒலிப்பதிவு போன்ற எல்லாவற்றையும் நேரடியாக செய்கிறார். இந்தியில் வசனங்கள் அருமையாக இருந்தாலும் அதை அப்படியே
மொழிபெயர்த்தால் தமிழில் அவ்வளவு சரியாக இருக்காது
என்பதால் தகுந்த தமிழ் வார்த்தைகளுடன் மாற்றி கொள்கிறோம். மொழிபெயர்ப்பு என்பதை விட தமிழாக்கம் என்று சொல்லுவது
சரியாக இருக்கும். பாத்திரங்களுக்கு ஏற்ற குரல்
தரும் கலைஞர்களை கவனமாக தேர்வு செய்து பயிற்சி அளித்திருக்கிறோம் டீமில் 60 பேராம்!.
அவர்களும் மிகுந்த கவனத்துடன் செய்திருக்கிறார்கள் என்கிறார்.தலைப்பைச் சேருங்கள் |
ஹிந்தியில்
காட்சிகளை பார்க்கும் போது எழும் கேள்விகளுக்கு உடனே பதில் வரும்படி வசனங்கள் அமைந்த இந்த படத்திற்கு டப்பிங்க் வசனம் எழுதுவது கடினமான
வேலை. எழுதும் வசனம் சரியாக பேசும் இடங்களில் பொருந்த வேண்டும். எல்லா மொழிகளிலும்
வார்த்தைகளின் நீளம் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால் இதற்கு வசனம் எழுதும் பாலகிருஷ்ணன்
ஒரு டெக்னிக்கை கண்டுபிடித்திருக்கிறார். அவரே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ் என்பதால் வசனங்கள்
எழுதபட்டபின் ஒவ்வொரு எபிசோடிலும் முதலில் எல்லா பாத்திரங்களுக்காகவும் அவரே அதைப் பேசி
தேவையான நீளம் சரியான நேரம் போன்றவைகளை உறுதி செய்துகொண்டு வாயசைப்புக்கு ஏற்ப வார்த்தைகளை தேர்ந்தெடுத்து வசனங்களை மாற்றி அமைக்கிறார். அதன்பின்னர் அது அச்சிடப்பட்டு
டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களுக்கு அளிக்க படுகிறது. பயிற்சிகளுக்கு பின் அவர்கள் பேசுகிறார்கள்.
இந்த முறையில் ரீ டேக், எடிட்டிங் போன்ற வேலைகளை குறைவதால் நேரம் வீணாவதில்லை என்கிறார்
இவர்
25 ஆண்டுகளுக்கு மேலாக டப்பிங் படங்கள், தொடர்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருப்பவர். இந்த தொடரில் இவர் தத்துவங்களை எளிமையாக்கி கவிதை
நடையில் வசனங்களாக மெருகேற்றி தருவதால், தொடரைப்பார்க்கும் போது இது டப்பிங் செய்யபட்ட
தொடர், நடிப்பவர்களின் நடிப்புதிறன் அவர்களின் பாத்திர பொருத்தம் போன்ற எண்ணங்களை எழாமல்
செய்கிறது.ஒரு டப்பிங் படத்தின் வெற்றிக்கு வசனம்,இசைக்கு அடுத்தபடியான முக்கியமான
விஷயம். மிக்ஸிங் என்கிற டெக்னிகல் சமாசாரம். ஒரிஜினலில் இருப்பதை போலவே இருக்க வேண்டும்,
அதை இந்த தொடருக்கு பிரமாதமாக செய்து கொண்டிருப்பவர் மணிகண்டன். மொதத்தில்
ஒரு கவுரவர்கள் படையே இதன் உருவாக்கத்திற்கு உழைக்கிறது.
ஹிந்தி
தொடரில் வரும் அதே இசையை பயன்படுத்தி கொண்டு
மெட்டுக்கு களுக்கு ஏற்ப தமிழ் பாடல்களை அமைக்கிறார்கள். பாடல்களையும் பாலகிருஷ்ணனே எழுதுகிறார். வரிகளிலும், வார்த்தைகளிலும் அவருள் ஒளிந்திருக்கும் கவிஞர் தெரிகிறார்., எங்களது டீமில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட குரல்கலைஞர்களின் ஆர்வமான, அர்ப்பணிப்பான உழைப்பின் வெற்றி இது .
சகுனி, கிருஷ்ணன் போன்ற பாத்திரங்களின் நடிப்புக்கு உயிர் கொடுத்திருப்பது இவர்களின்
குரல் என்கிறார். மகேஷ்..பல ஆண்டுகளுக்கு முன் என் டி டிவிக்காக ராமாயணத்தை தமிழாக்கியதும்
இவர்தலமையிலான டீம்தான்
இதிகாசங்களின்
மீதுள்ள பாசத்தினால் மூத்த தலைமுறையினர் மட்டும் ரசித்து கொண்டிருந்த இம்மாதிரி தொடர்களை அடுத்த தலமுறையினரையும்
ரசிக்கவைக்கும் விஜய் டிவிக்கும் 7த் சானலுக்கும் ஹாட்ஸ் ஆஃப்.
16/3/14
10/2/14
உரையாடல்
ஈஷா வின் இணைய தளத்திலிருந்து
சத்குரு அவர்களுடனான “புதிய தலைமுறை” இதழின் ஆசிரியர் திரு. மாலன் அவர்களின் சந்திப்பு “ஞானியின் பார்வையில்” என்ற தலைப்பில் நேற்று (பிப் 8) நடைபெற்றது. சென்னை கீழ்பாக்கம் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி – பவன் ஆடிடோரியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 1200 பேர் கலந்து கொண்டனர். அரசியலிலிருந்து, ஆன்மீகம், எதிர்கால இந்தியா போன்ற பல தலைப்புகளிலும் திரு. மாலன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சத்குரு அளித்த பதில்கள் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது.
(இந்த உரையாடலின் பதிவுகளை …ஈஷா வின்/மாலனின் face book லும் காணலாம்.ஓளிப்பதிவு செய்யபட்டிருக்கும் இது விரைவில் சின்னத்திரையில் வரும் )
“இன்றைய நிகழ்ச்சியில் உள்நிலையிலிருந்து உலகம் வரையில், காடுகள் தொடங்கி கடவுள் வரையில், தேகம் தொடங்கி தேசத்தின் விஸ்தாரம் வரையில், பல கேள்விகள் கேட்டார் திரு. மாலன். அத்தனை கேள்விகளுக்கும் தனது தீர்க்கமான பதில்களால் பார்வையாளர்களை நாற்காலியோடு கட்டிப்போட்டார் சத்குரு. நெஞ்சை அள்ளும் மற்றொரு அருமையான உரையாடல் நிகழ்ச்சியில் இணைவோம்.
நிகழ்ச்சியில் மிகுந்த சிறப்புடன் பங்குபெற்ற திரு. மாலன் அவர்களுக்கு உள்ளம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்”.
-மரபின் முத்தையா
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)